முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் அறிமுகமாகும் Mr.“நோட்டா”வின் சின்னம்
என்ன தெரியுமா?
என்ன தெரியுமா?
“அட.. அவருக்கும் தனிச்சின்னம் இருக்கா?” என்று கேட்டால்... உங்களின்
மனு, போட்டியில் கலந்துகொள்ளாமலே நிராகரிக்கப்பட்டு விடலாம்..
சரி போனா போகுது... இப்பத்தானே இந்தியத் தேர்தல் ஆணையம்
அறிவிச்சிருக்கு என்பதால்... கொஞ்சம் யோசிக்க நேரம் கொடுப்போம்..
ஒரு க்ளு – நோட்டாவுக்கு உரிய சின்னம்
“கூகுள்“ தேடுபொறியில் இன்னும் ஏற்றப்படவில்லை
நோட்டாவுக்குப் போடச் சொல்லலீங்க...
தகுதியான வேட்பாளர் இல்லாத தொகுதிகளில்
பயன்படுத்தத் தயங்காதீங்க... அதுக்குத் தாங்க..
----------
பெரிய பெரிய
கட்சித்தலைவர்களுக்கே தெரியாத கேள்வியை
எங்கிட்ட கேட்கிறீங்க''ன்னு கேக்கக் கூடாது.
எங்கிட்ட கேட்கிறீங்க''ன்னு கேக்கக் கூடாது.
தலைவர்களுக்குத்
தெரிந்தாலும்
தெரியாவிட்டாலும்,
நட்டப் படுவதென்னவோ
நாம்தானே இந்தியரே?
நாம தான் தெரிஞ்சு வச்சிருக்கணும் இல்லியா?
படிக்கத் தெரிஞ்ச நமக்கு NOTA ன்னு
ஆங்கிலத்தில் இருப்பதைப் படித்து
சின்னத்தையும் கவனித்து
போடுவதில் பிரச்சினை இல்லைதான்...
(மேலே கண்ட யாருக்கும்
என் வாக்கு இல்லைனு
தமிழிலும் இருக்கலாம்)
ஆங்கிலத்தில் இருப்பதைப் படித்து
சின்னத்தையும் கவனித்து
போடுவதில் பிரச்சினை இல்லைதான்...
(மேலே கண்ட யாருக்கும்
என் வாக்கு இல்லைனு
தமிழிலும் இருக்கலாம்)
ஆனா,
எழுதப்படிக்கத் தெரியாதவங்க
நிறைஞ்ச நாடு நம்ம நாடு.
நிறைஞ்ச நாடு நம்ம நாடு.
தெரியாதவங்களுக்குச் சொல்றதுக்காக
நாமதான் அவசியம்
தெரிஞ்சி வச்சிருக்கணும்
தெரிஞ்சி வச்சிருக்கணும்
இல்லிங்களா?
அதுதான்...
தெரிஞ்சவுங்க உடனே பின்னூட்டத்துல
ஒரு கருத்தப் போடுங்க பார்ப்போம்...
ஒரு கருத்தப் போடுங்க பார்ப்போம்...
தெரியாதவுங்க தெரியலன்னும் போடலாம்...
சும்மா ஒரு “இது“
தானே?!!?
--விடை - 24மணிநேரம்
கழித்து--
----------------------------------
கீழ் நோக்கிய பெறவிரல்???
பதிலளிநீக்குஇல்லை மகனே! அடுத்த பதிவைப் பார்
நீக்குசரியாத் தெரிலையே..'thumbs down' symbol?
பதிலளிநீக்குஇல்லைம்மா... அடுத்த பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.
நீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குஇது என்னானு எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு இதுக்கு சொல்றேன் தலைகீழாய் கட்டை விரல் காண்பிக்கும் சின்னம் வரலாம் என்று பேசப்பட்டது ஆனால் தற்போது நடைபெற போகும் தேர்தலில் பயன்படுத்தப் போவதாக தெரியவில்லை ஐயா. நீங்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.
இல்லை நண்பா... அடுத்த எனது பதிவைப் பார்க்க..
நீக்குஎனது இனிய நண்பர் ராம்குமாரின் பதிவு பலருக்கும் மிகவும் உதவும்...
பதிலளிநீக்குhttp://www.sivakasikaran.com/2014/03/nota-49o.html
நன்றி ஐயா...
நன்றி நண்பரே, பார்த்தேன்... உடன்பாடில்லை எனினும் அவரது கருத்துகளை மதித்துப் பின்னூட்டமிட்டு, தொடரவும் செய்கிறேன் அறிமுகத்திற்கு நன்றி
நீக்குஆஹா! விகடன்ல படிச்சேனே??????
பதிலளிநீக்குநீங்களே சொல்லிடுங்க இந்தமுறை நினைவு வச்சுகிறேன்:))
படிச்சு மறந்திட்டியா? சரி விடுப்பா.. அடுத்த பதிவைப் பாரு இல்லன்னா அந்த விகடனையாவது எடுத்துப் பாரு. இது கிடக்கட்டும்... உனது அடுத்த சிறுகதையை அல்லது நல்ல கவிதையை எதிர்பார்க்கிறேன்பா.எப்ப உனபதிவுல எழுதப் போறே?
நீக்குகீழ் நோக்கிய பெருவிரல் என்று நினைவு. எது எப்படியோ, யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று சிந்திப்பதற்கு முன்பாக நோட்டாவைப் பற்றி அதிகம் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் அய்யா. அதுதானே நம் நோக்கமே?
நீக்குஜனநாயகத் தவறுகளைக் குறைக்கும் ஒரு வழியென்றே எனக்குப் படுகிறது... நல்லது நடக்க நாமும் யோசிக்கணும்ல?
நான் என்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் ஓட்டளித்திருக்கிறேன். அதுவும் சீட்டில் ஓட்டளித்தது தான். அதனால் எனக்கு இந்த கருவியை உபயோகிப்பது பற்றியெல்லாம் தெரியாது.
பதிலளிநீக்கு"
நான் யாருக்கும் ஓட்டளிக்க மாட்டேன்" என்று சொல்வது தான் NOTA வாக இருக்கும் என்று கொஞ்சம் சந்தேகம் இருந்தது. டிடி. அவர்களின் கருத்து அது தான் என்று சொல்லிவிட்டது.
அதற்கும் மேல் கொஞ்சம் இருப்பதாகப் படுகிறது நண்பரே! “இதில்யாருக்கும் என் வாக்கு இல்லை, வேற யாராவது இருக்காங்களா?”னு தேடத் துவங்கும் ஒரு மாற்று வரட்டும்.
நீக்குNOTA னா தெரியும் அதற்கொரு சின்னம் இருப்பதுதெரியாது.
பதிலளிநீக்குவேணுன்னா நான் நாளைக்கு சொல்லட்டா...........? நன்றி ஐயா.
ஏப்ரல் 24இல் வாக்களித்தபின் சொல்லிவிடலாம்தான்...
நீக்கு(ஆனாலும் ரொம்ப குறும்புங்க டீச்சர் நீங்க...
பாவம் உங்க பசங்க எப்படித்தான் சமாளிக்கிறாய்ங்களோ?!)
கீழ் நோக்கிய பெருவிரல் என்று நினைக்கிறேன் ஐயா... உங்கள் விடையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...
பதிலளிநீக்குஅடுத்த பதிவில் தெரிந்திருப்பீர்கள்... ஆமா... என்ஆர்ஐ வாக்களிக்க ஏதும் ஏற்பாடு உண்டுங்களா? விசாரிச்சீங்களா?
நீக்கு