தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன?இந்த 10நிமிடக் குறும்படத்தைப் பாருங்கள்


எண்ணம்-எழுத்து-இயக்கம் – பாலு மணிவண்ணன்.

தயாரிப்பு – எம்.துரைப்பாண்டியன்

இசை – ஆதிஷ் உத்ரியன்

ஒளிப்பதிவு – கே.வி.மணி

படத்தொகுப்பு – ஜெ.சுரேந்திர குமார்

ஒலிப்பதிவு – ஏ.கஜபதி

நடித்த கலைஞர்கள் –
அஜீஸ், ரேவதிமணி, ஆர்.கலைச்செல்வி, சைமன்

காணொலி இணைப்பு-

சூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி!

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என்று இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 6 சீசனுக்கான இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாடு அரங்கத்தில் இன்று மாலை நடந்து முடிந்தது.

இறுதிப் போட்டியில் அனிருத், மாளவிகா, ரக்‌ஷிதா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் இசைக்கலைஞர் செந்தில் கணேஷ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்!
 

அய்யா காமராசர் பிறந்தநாள் !

புதுக்கோட்டை – ஜூலை,16
      தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த காமராசர் விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், எதிரிகளைப் பழிவாங்கும் அரசியல் உலகில் வித்தியாசமானவர் காமராசர், அவர், தன் கட்சிக்குள் தன்னை எதிர்த்து நின்று தோற்றுப் போனவர்களைத் தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புக் கொடுத்த அரசியல் நாகரிக முன்னோடி என்று பெருந்தலைவர் காமராசருக்குப் புகழாரம் சூட்டினார்.

உணர்ச்சிமிகு விதைக்‘கலாம்’-150ஆவது வாரவிழா!

    புதுக்கோட்டை நகரில் செயல்பட்டுவரும் “விதைக்கலாம்“அமைப்பின் 150ஆவது வாரவிழா, நேற்றுமுன்தினம் 08-07-2018–ஞாயிறு- மாலை, புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்பாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நடந்தது.
இந்திய இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ.அப்துல்கலாம் மறைவை ஒட்டி, அவர்பெயரால் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற எண்ணிய இளைஞர்கள் “விதைக்கலாம்” என்றொரு அமைப்பைத் தொடங்கி, வாரந்தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் அரியபணியைச் செய்து வருகிறார்கள். அதன் 150ஆவது விழாவில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆசிரியர் ஸ்ரீமலையப்பன் வரவேற்றுப் பேசினார். நாகபாலாஜி நன்றியுரை நல்கினார்