உலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு
உலகப் புத்தக தின விழா - காணொலி இணைப்பு

உலகப் புத்தகதின விழாப் பேச்சு –பாகம்-1
நா.முத்துநிலவன்
ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்
பெரியார் மணியம்மை பொறியியற்கல்லூரி - வல்லம்
காணொலி இணைப்பு –

33 நிமிடம்

000000000000000000000000000000000000


உலகப் புத்தகதின விழாப் பேச்சு –பாகம்-2
நா.முத்துநிலவன்
ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்
பெரியார் மணியம்மை பொறியியற்கல்லூரி - வல்லம்
காணொலி இணைப்பு –

22 நிமிடம்
-------------------------------------------

இளைஞர் படை இப்படித்தான் செயல்படணும்!


கூடுநூலகத்தைத் திறந்து வைத்து நான் பேசியது!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலிருந்தாலும் தஞ்சை மாவட்ட எல்லையிலிருக்கும்      இடையாத்தி (வ) கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில்,  முன்னாள் மாணவர்களும், சிங்கப்பூரில் வாழும் இடையாத்தி இளைஞர்களும் சேர்ந்து, இளந்தென்றல் சமூகநல அமைப்பு, அய்யனார் சமூகநல அமைப்பு உதவியோடு, “கூடு” எனும் பெயரில் கிராமப் பொதுநூலகம் ஒன்றை அமைத்துள்ளனர். அரசுகள் கிராம முன்னேற்றத்திற்கு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டே ஆயிரத்தெட்டு சடங்கு சம்பிரதாயங்களைச் சொல்லி பலவற்றையும் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது, இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் ஊர் முன்னேற்றத்திற்கு எதையும் செய்ய முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் இடையாத்தியின் இளைஞர் படையினர்!

50பேர் உடல்தானம்! 80பேர் கண்தானம்! வீதி50 விழாத் தொகுப்பு


புதுக்கோட்டை வீதி-50 விழாவில் ஒப்புதல் தந்தனர்
“வீதி50 விழாமலர்” வளரும் தலைமுறை
பெற்றுக்கொண்டது
      புதுக்கோட்டைவருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில், காலஞ்சென்ற கவிஞர் வைகறை, தமிழாசிரியர் குருநா சுந்தரம் ஆகியோர் நினைவரங்கில் கடந்த ஞாயிறன்று நடந்த வீதி-50” பொன்விழாவில், 50பேர் உடல்தானம் 80பேர் கண்தானம் செய்ய ஒப்புதல் படிவம் வழங்கினார்கள்.

நீட் தேர்வெழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்க்கு உதவ தமிழக அரசு செய்யவேண்டியதென்ன?

எனக்குத் தோன்றும் அவசர யோசனைகள்-

 
(1)  
தமிழக அரசு, அனைத்து ஊடகங்கள் வழியாகவும் வெளிமாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் செல்லும் அனைத்து மாவட்ட மாணவர்களும் உடனடியாக அந்தந்த மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ளச் செய்ய வேண்டும்
(2)
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்றிரவே, கேரளா செல்லும் மாணவர்ளுக்கு வாகன ஏற்பாடு செய்து தரவேண்டும். ராஜஸ்தான் செல்லும் மாணவர்களை இன்றிரவே கிளம்பி நாளை காலைக்குள் சென்னை சென்று சேர வாகன ஏற்பாடு செய்து தரவேண்டும்

(3) சென்னை வந்து சேரும் மாணவர்களை தமிழக அரசு ஏற்பாட்டில், மதியம் ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்து நாளை இரவுக்குள் ராஜஸ்தான் சென்று சேரச் செய்ய வேண்டும். (பண உதவி செய்தால் கூட இனி விமானச் சீட்டு எடுக்க தனியாரால் இயலாது)

இது ஒன்றுதான் உடனடியாகச் செய்யவேண்டியது
தமிழக அரசு செய்யுமா? 

--நா.முத்துநிலவன். 04-05-2018 மதியம் 1.50