எங்கள் மலேசியப் பயணமும், எனது பொதிகை நேர்காணலும்

எங்கள் மலேசியப் பயணமும்,
எனது பொதிகை நேர்காணலும்

நண்பர்களே, வணக்கம்.
எனது இரண்டு நிகழ்ச்சிகளை, 
உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

(1)        02-12-2014 முதல் 19-12-2014 முடிய 
மலேசியா நாடு முழுவதும்
எங்கள் பட்டிமன்ற நிகழ்ச்சிகள்
நடைபெறவுள்ளன.

திண்டுக்கல் ஐ.லியோனி, 
திருமதி அமுதாலியோனி, 
மதுக்கூர் இராமலிங்கம், 
கோவை தனபால், சென்னை விஜயகுமார் இவர்களுடன் நானும் பேச இருக்கிறேன்.

அவன் சரி, இவன் சரி, “உவன்“ அப்டின்னா?எட்டாம்ப்பு படிச்சப்ப சுட்டெழுத்து பத்திப் படிச்சிருப்பீங்க...
 “லேய்.. அவ்வைக்கிழவி சுட்டபழமா? சுடாத பழமானு கேட்டாள்ல..? இதானாடா அது? சுட்ட எழுத்து?“னு பக்கத்துல இருந்த வாலு ஒன்னு கேட்டதும் நினைவில் இருக்குமே?

அதுதான் சுட்டெழுத்து. சுட்டஎழுத்து இல்லிங்க, சுட்டெழுத்து.. சுட்டு எழுத்து. 
ஒன்றை, சுட்டிக்காட்ட உதவும் எழுத்து!


இது மூனு வகைன்னும் நினைவிருக்கும்

அ- சேய்மைச் சுட்டு

(அந்தப்பக்கம் எட்டி இருக்குறது)

அந்தா பாரு..

அப்பிடினு காட்டுறோம்ல..

அதுதான் அவன்தான் (படர்க்கை) 

இ- அண்மைச் சுட்டு

(இந்தப்பக்கம் கிட்டக்க இருக்குறது)

இங்க பாரு

இப்பிடினு சொல்றம்ல..

இதுதான் இவன்.


சரீ...

அது என்ன உ? உந்தப் பக்கம்? உவன்?

உ என்பது சுட்டெழுத்தில் இருந்தது, இப்பஇல்ல. அதாவது வழக்கில் இல்ல.

(இலக்கணம்ங்கிறது பழைய தமிழின் நிலை. வழக்குத்தான் இன்றைய தமிழ். அதுக்காக இலக்கணம் வேணாம்னு சொல்றதும் தப்பு, இலக்கணத்தப் புடுச்சிக்கிட்டே வழக்க மறந்து நிக்கிறதும் தப்புங்க. ரெண்டுல எது ரொம்ப முக்கியம்னு கேட்டா நா வழக்கு தான்பேன்)

சரி அத உடுங்க..


சுட்டெழுத்துல உ என்கிற எழுத்துப்பத்தி..

நினைவிருக்கிறவங்க ஓடிப்போய்டுங்க.

பச்சப் புள்ளைங்க தொடந்து வாங்க. என்ன?அட அது 
ஒன்னுமில்லங்க..
அந்தப் பக்கம்,
இந்தப் பக்கம்,
உந்தப் பக்கம்.
அது என்ன
உந்தப் பக்கம்னா?

எட்டி இருக்கிறவன முகத்தைப் பாக்கமுடியல.
அது சரிதான். இவன் கிட்ட இருந்தும் முகத்தைப் பாக்க முடியலன்னா?                  
அதுதான் அதேதான்.
கிட்டயே இருந்தும் முகம்காட்டாம முதுகு காட்டி நிக்கிறவன உப்பக்கம் நிக்கிறான்னு சொல்ற வழக்கு முந்தி இருந்துச்சு.
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழாது உஞற்று பவர்“ (குறள்-620)
கடுமையான இடைவிடா முயற்சி செய்பவர் விதியையும் புறமுதுகு காணலாம், அதாவது ஓடஓட விரட்டி வெல்லலாம்னு அர்த்தம்.

இதில் மகிழ்ச்சி கலந்த வருத்தம் என்னன்னா..
இன்னமும் ஈழத்தமிழரிடையே இந்த எழுத்து வழக்கில் இருப்பதுதான்... 

இன்னும் விரிவாகப் பார்க்க -
உவன்னு போட்டு
http://ta.wiktionary.org/ பாருங்க..
படங்களுக்கு நன்றி - தினமணி.காம். மற்றும்
நம் நண்பர் -http://yarlpavanan.wordpress.com/
--------------------------------- 
நாம் தொலைத்துவிட்ட விளையாட்டுகளை நினைவூட்டி ரேவதி எழுதிய பதிவு எனக்கு இதை யோசிக்க வைத்தது. பார்க்க -http://tamizhal.blogspot.in/2014/11/blog-post.html
----------------------------------------------------------------------------------- 

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்! 
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு? 

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 
மூனுசுழி ண என்பதும் தவறு!

 இதன் பெயர் டண்ணகரம்,
 இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

ண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா 
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 
(வர்க்க எழுத்து-ன்னா, 
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 
எழுத்துப் பிழையும் குறையும். 


எப்புடீ?

ண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம். 

இதே மாதிரித்தான் கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)

இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 
நெனைக்கிறவங்க மட்டும்
தொடர்ந்து படிக்கலாம். 
(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 
அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)

தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்தது தவறு...


 “நீயா-நானாவிவாதத்தில், தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவருக்குத்தான் இது தெரியவில்லை, சிறப்பு விருந்தினராக வந்திருந்த கவிஞர் அ.வெண்ணிலாவுக்குமா இது தவறென்று தெரியவில்லை? மேலும் வந்திருந்த சமூகவியல் எழுத்தாளர் ஞாநி, தலித்திய ஆய்வாளர் இமையம், மனநல மருத்துவர் ஷாலினி இவர்கள் யாருமே இதுபற்றி வாய்திறக்க வில்லையா? அல்லது இவர்கள் சொல்லியும் கோபிநாத்  அதை எடுத்துக் கொள்ளவில்லையா?

பத்தாம் வகுப்பில் காதல் - கவிதை

    

    பத்து வகுப்புப் படிக்கிற போதே
                     பருவக் கோளாறு! மனம்
    குத்தும் குடையும் குறுகுறுக் கும்,வாய்
                    குழறும், தடுமாறும்! ஒரு
    பித்துப் பிடிக்கும், ரகசிய மாய்,செல்
                    பேசியும் பரிமாறும்! இது
    தொத்து வியாதி! பரம்பரை யாகத்
                    தொடர்வது தான் மகளே!

ஒரு வாசகனின் பார்வையில் - கம்பன் தமிழும் கணினித் தமிழும்

நா.முத்துநிலவனின் தோளில்
மகாகவி பாரதி நெஞ்சில் மகா.சுந்தர் 

ஓவியர் - திரு ரவிக்குமார்
"கிளிக்குப் பச்சைவண்ணம்  
தீட்ட வேண்டுமா?"
எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.
கவிஞர் 
முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை 'தேவையா
அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.?
 பல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா.? அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா?..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.!அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.

இதைப் பாருங்க கலங்க அடிக்கிறாங்க சகோதரி..

இதைப் பாருங்க
கலங்க அடிக்கிறாங்க
என் சகோதரி..

முதல் பதிலிலேயே நான் அம்பேல்...

ஒப்பனையில்லாத
உயர்ந்த கருத்துகள்.
நன்றி சகோதரி.

நிறையப் பேரு பாக்கணும்கிறதுக்காக
திருமதி ஜெயலட்சுமி அவர்களின் பதிவை
இங்கு மீளப் பதிவிடுகிறேன்.
அன்பு கூர்ந்து பார்க்க..
இணைப்பிற்குச் செல்ல...

http://jayalakshmiaeo.blogspot.in/2014/11/7.html#comment-form

கனவில் வந்த காந்தி (7)

KARANTHAI
JAYAKKUMAAR
நண்பர்களே இதற்கு நான் பொறுப்பல்ல...

இந்த தேவகோட்டைக் கொலைகாரர் (அதாங்க கில்லர்ஜி) 
ஒரு பந்தை உதைத்து தள்ளிவிட, 
அது நேரா கரந்தையில வந்து விழுந்துச்சா..
அய்யா கரந்தையார் அதை உட்ட ஒதையில 
பந்து நேரா புதுக்கோட்டைக்குப் பறந்து வந்திருச்சா... அத இப்ப நா உங்க கிட்ட தள்ளிவிடுறனுங்கோ...

KILLERGEE
இது ரெண்டையும் பார்த்திட்டு 
அப்பறம் என்னுத படிக்க வாங்க.

(அய்யோ அய்யோ.. பாவம்ங்க நீங்க)வேதாளம் விக்கிரமாதித்தன் கிட்ட கேட்ட கேள்விகள் பழசுதான்.
அதையே மாத்தி , “விஞ்ஞான விக்கிரமாதித்தன் கேள்வி-பதில்கள்“ எழுதின நம்ம ஆயிஷா நடராஜன் பாலசாகித்ய அகாதமி விருது வாங்குனார்.
நா என்னா வாங்கப் போறனோ... 
அந்த வேதாளத்துக்குத்தான் தெரியும்‘!
------------------------------------ 
கனவில் வந்த காந்தி (7)

அன்பும் பாசமும் நிறைந்தவர்கள் யார்?

“வீட்டைவிட்டு
வெளிய வந்தா
நாலும் நடக்கலாம்.
அந்த 
நாலும் தெரிஞ்சு
நடந்துகிட்டா
நல்லா 
இருக்கலாம்“ 

அது சரி...
அதுவரை 
நம்மை 
நல்லா வச்சிக்கிறது யாருங்க?
ஒரு சுவையான விவாதம்..

கலைஞர் தொலைக்காட்சிக்காக நடந்த
பொங்கல்தினச்
சிறப்புப்பட்டிமன்றம் காண
அன்புடன் அழைக்கிறேன்.

“அன்பும் பாசமும் நிறைந்தவர்கள்“
“உறவினர்களே“ –
புதுகை நா.முத்துநிலவன்,
கோவை தனபால்
“நண்பர்களே!“ –
மதுக்கூர் இராமலிங்கம்,
சென்னை இனியவன்
நடுவர் –
“நகைச்சுவைத் தென்றல்“
திண்டுக்கல் ஐ.லியோனி

ஒளிபரப்புக்கு நன்றி – 
கலைஞர் தொலைக்காட்சி
இணைப்புக்கு நன்றி -
யூ-ட்யூப், ஐங்கரன் பதிவகம்,    CineForce.com 

-------------------------------------
கடந்த 14-01-2014 “பொங்கல் விழா“அன்று 
கலைஞர் தொலைக்காட்சியில் 
ஏறத்தாழ இரண்டுமணி நேரம் 
ஓடிய பட்டிமன்றத்தில்,
எனது பேச்சு -
சரியாக 11நிமிடம் 30நொடியில்
தொடங்கி, 21நிமிடம் 10நொடியில்
நிறைவடைகிறது
-------------------------------------
இணைப்பிற்குச் செல்ல - 

----------------------------------------------------------------------