எனது
தொலைக்காட்சி உரை கேட்க / பார்க்க
அன்புடன் அழைக்கிறேன்!!
- உங்கள்
நா.முத்துநிலவன்
----------------------
திரைப்படங்கள் சமூகத்தை
மாற்றியிருக்கிறதா ?
ஏமாற்றியிருக்கிறதா ?
– திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம்
(கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது)
-------------------------------------
நான்
பேசியிருக்கும் தலைப்பு –
“திரைப்படங்கள்
சமூகத்தை ஏமாற்றியிருக்கின்றன“
-------------------------------------
ஒருமணி
நேரம் பத்துநிமிடம் ஓடக்கூடிய பட்டிமன்றக் காட்சியில்,
எனது
பேச்சு -
சரியாக
17நிமிடம்
50நொடியில்
தொடங்குகிறது
-------------------------------------
நன்றி - கலைஞர் தொலைக்காட்சி
நன்றி யூ-ட்யூப் இணைப்பிற்கு-
-------------------------------------
விளம்பரத்தை (ஸ்கிப்
செய்து) தாண்டி விடலாம் –
நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் தங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் இட்டால எனக்குப் பயன்படும்.
நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் தங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் இட்டால எனக்குப் பயன்படும்.
நன்றியுடன்,
–நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004.
–நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004.
ok anna!
பதிலளிநீக்குஅண்ணா
நீக்குகொஞ்சம் இதை படித்துபாருங்கள்
http://makizhnirai.blogspot.com/2014/11/thanks-to-viju-anna-and-nilavan-anna.html
ஐயா என்னுடைய கணினி மூலம் யூடியூப் ஓப்பன் ஆகவில்லை. தாங்கள் பேசிய அன்றைய தேதியை குறிப்பிட்டீர்கள் என்றால் காண வசதியாக இருக்கும். நன்றி.
பதிலளிநீக்குதிரைப்படங்கள் சமூகத்தை மாற்றியிருக்கிறதா ? ஏமாற்றியிருக்கிறதா ? - Leoni Pattimandram - Aug 29, 2014
நீக்குகலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது சகோதரி.
பார்த்துவிட்டு அவசியம் பதிலிடுங்கள்..காத்திருக்கிறேன். நன்றி
ஐயா,
பதிலளிநீக்குவணக்கம்.
முழுவதும் பார்க்கவில்லை... பிறகு பார்க்கிறேன்... உங்கள் பகுதி மட்டும் பார்த்தேன். நன்றாக பேசினீர்கள்... நிர்வாணத்தைவிட மூடநம்பிக்கை கொடியது என்று சொன்னது முற்றிலும் உண்மை ஐயா...
இச்சு இச்சு இச்சுக்கொடுன்னு பாடுவீங்கன்னு பார்த்தா... அப்படியே நிப்பாட்டிட்டீங்க... ஹா... ஹா.... அருமையான பேச்சு ஐயா...
அய்யா நிர்வாணம் கொடியதல்ல. பயன்படும் இடத்தைப் பொறுத்து, ஆபாசமாகவும் இயல்பாகவும் காணக்கூடியது. குழந்தையின் நிர்வாணத்தைவிட அழகு ஏதய்யா? அப்புறம்.. வேண்டாம். புரிந்தவர்களுக்குப் புரியட்டும். சமூகத்தில் ஆபாசத்தைவிடக் கேடுவிளைவிப்பது மூடநம்பிக்கை என்றுதான் பேசினேன். நிர்வாணம் என்று நான் பேசவில்லை.
நீக்குநான் சரியாகத்தானே பேசியிருக்கிறேன்(?) நன்றி குமார்.
ஐயா... பின்னூட்டம் இடும்போது ஆபாசம் என்ற வார்த்தை நிர்வாணம் என்றாகிவிட்டது... எனது தவறுதான் அது... உங்கள் பேச்சு அருமை ஐயா... மற்றவர்கள் பேசியதையும் கேட்டேன். காரைக்குடி கல்லூரியில் படிக்கும் சகோதரி, பின்னர் ஐயா மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பாடலெல்லாம் பாடினாரோ அமுத சுரபியா (?) இவர்களின் பேச்சை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டேன்... வெள்ளியன்று விடுமுறையில் மீண்டும் முழுவதுமாக பார்க்கிறேன்... உங்கள் பேச்சு சரியே எழுத்தில் பிழை வந்தது என் தவறே... நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு...
நீக்குஆகா... நண்பர் குமார் அவர்களே! உங்களது உயர்ந்த பண்பினை எண்ணிப் பெருமைப் படுகிறேன். “பெருமை“க்குரிய குறள்-978 எனக்கு மிகவும் பிடித்த குறள்களில் ஒன்று. நீங்கள் அதை நினைவுபடுத்தி விட்டீர்கள். நலமே வாழ்க. தங்கள் நட்பு என் பெருமை!
நீக்குஅருமையான தலைப்பிலான பட்டி மன்றம். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅய்யா பாக்கலன்னு தெரியுது. பார்த்துவிடடுச் சொல்ல வேண்டுகிறேன். அப்பறம் நான் -பேசியதிலிருந்து கேள்வியா கேட்கப் போகிறேன்? நன்றி அய்யா. தங்களின் கரந்தையார் பற்றிய விக்கி பதிவு பார்த்தேன். கரந்தையாரின் மிக அழகிய படத்தைச் சேர்த்திருக்கிறீரகள். வலைப்பதிவரில் தங்களைக் கவர்ந்த நல்ல எழுத்தாளர்களின் தகவல்களையெல்லாம் விக்கியில் சேர்ர்க்கும் பணியைத் தொடரவேண்டுகிறேன். இது வேறுயாரும் செய்ய இயலாத பெரும்பணி. நன்றி அய்யா. (ஆமாம், விக்கியில் என்னைப் பற்றிய பதிவில் இன்னும் பல தகவல்களைச் சேர்க்கலாமா அ்யயா? தங்களுக்கு நேரம் இருந்தால் என்னைப் பற்றிய -உண்மையான- கூடுதல் தகவல் தரத்தயாராக இருக்கிறேன். இயலுமெனில் செய்யுங்கள்.நன்றி.
நீக்குபகிர்விற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குஇதோ பார்க்கிறேன்
நன்றி அய்யா. வாசிப்புத் தேடல் அருமை அ்யயா.(அந்தப் படங்களை எங்கே எடுத்தீர்கள் என்னும் ரகசியத்தைச் சொல்ல மாட்டீர்களா? குறிப்பாக பகத்சிங்கின் இறப்புச் சான்றிதழ்!)
நீக்குதம 2
பதிலளிநீக்குநன்றி அய்யா.
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதத்தித் தவழும் தமிழ்க்குழந்தை கைபிடித்து
இத்திக்குச் செல்லென் றியம்பினீர்! - தித்திக்கும்
உம்வலையில் என்வலைப்பூ ஊரறியத் தந்தமைக்கு
எம்முறையில் நன்றிசொல நான்?
பிடித்திருந்தால் ஊக்கம்! பிழையிருந்தால் தாக்கி
இடித்துரைக்கும் உம்பதில்கள் எங்கும்- வடிப்பதெலாம்
இன்னும் கவனமுடன் எழுத நீருரைக்கும்
கன்னலுரை கற்றேன் கனிந்து.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspsot.in
அய்யா வணக்கம்.
நீக்குவெண்பா எழுத விரைந்து பழகிவிட்டீர்
நண்பர் விஜூவுக்கே நன்றிசொல்ல வேண்டுமய்யா!
“இன்னும் கவன முடனெழுத நீருரைக்கும்“
என்னும் படியே இனிது.
வீறுரைக்கும் பாட்டு விளையுவயல் பாராட்டி
நீக்குநீரிறைக்கும் வார்த்தை நிலவறையில் - சீரில்
தளைவெட் டுவகையுளி தானாகி வெண்பாக்
களைவெட்டக் கண்டேனும் கை!
நன்றி அய்யா!
தற்பொழுதே கண்டேன் நன்றி அய்யா!
சரியான சாட்டையடி சார். கொடுக்க வேண்டும் சினிமாவிற்கு இனிமா....
பதிலளிநீக்கு“ச்சே..இப்படி இருக்கு சினிமா - இதுக்குக்
நீக்குகொடுக்கணுங்க இனிமா“ எனப் பாடிய கவிஞர் நவகவிக்குத்தான் இந்தப் பெருமை போய்ச்சேரவேண்டும் (எதுகை மோனையை எப்படி அமைத்தார் பாருங்கள்) நன்றி சகோதரி.
தெரியப்படுத்தியமைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குஅவசியம் பார்க்கிறேன்
பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் பரமாத்மாவே!
நீக்குநாளை வருகிறேன்....
பதிலளிநீக்குவாங்க வாங்க அவசரமே இல்ல.. மெதுவா, ஆனா விரிவான அலசலோடு வாங்க.. நன்றி
நீக்குபதிவிற்கு நன்றி ஐயா! அண்ணன் லியோனி அவர்களின் பட்டிமன்றத்தை மிகவும் ரசித்து பார்ப்பவன் நான். அதில் தாங்களும் சரி, தோழர் மதுக்கூர் அவர்களும் சரி, நண்பர் பாலுவும் சரி, நல்ல முறையில் நகைச்சுவையோடு தம் தம் கருத்தை எடுத்து சொல்லும் முறையை மிகவும் ரசிப்பேன்.
பதிலளிநீக்குசில வருடங்களுக்கு முன் லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் இனியவன் என்ற ஒருவர் பேச ஆரம்பித்தார். இவருடைய ஒவ்வொரு பேச்சும் மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது. நகைசுவையாக பேசுகின்றேன் என்று நினைத்து கொண்டு பெண்களை மிகவும் ஆபாசமாகவும் கேவலமாகவும் பேசிவந்தார் . இவர் இருக்கும் ஒரே காரணத்தினால், லியோனி பட்டிமன்றம் என்றவுடன் இனியவன் மேடையில் இருக்கின்றாரா என்று பார்ப்பேன், அவர் இருந்தால் அந்த பட்டிமன்றத்தையே புறக்கணித்து வந்தேன். இன்று கூட தாம் கொடுத்த இந்த தொடர்பை சொடுக்கி இனியவன் இல்லை என்றதும் உற்சாகமாக பார்க்க ஆரம்பித்தேன்.
நல்ல தலைப்பு. நடுவர் அவர்களின் பெரும்பாலான பேச்சு ஏற்கனவே அவர் பேசி கேட்டது தான் போல் இருந்தது. . இன்னும் புது விஷயங்களை சொல்லி இருக்கலாம் என்று நினைக்க தோன்றியது.
தம் பேச்சை மிகவும் ரசிப்பவன் நான் ( அதனால் தான் எங்கேயோ எப்போதோ பட்டிமன்றத்தில் வரும் என் பேச்சை உங்களுக்கு அனுப்பி தம் கருத்தை கோருவேன், அது தமக்கு நினைவிருக் கும் என்று நம்புகின்றேன்) .
அருமையான இசை ராகத்தோடு கணீரென்று பாடுவீர்களே, ஒரு பாட்டு பாடி ஆரம்பித்து இருந்தீர்கள் என்றால் இன்னும் ரசித்து இருப்பேன்.
தம் பேச்சில் என்னை கவர்ந்தது..
விதிவிலக்கு விதி ஆகாது .
ஆபாசத்தைவிட கொடுமை மூட நம்பிக்கை அல்லவா ...?
மொத்தத்தில் அட்டகாசம். நடுவரின் தீர்ப்பில் எனக்கு சம்மதம் அல்ல , இருந்தாலும் ஏற்கின்றேன்.
சில நாட்க்களுக்கு முன் அண்ணன் லியோனி அவர்கள் இங்கே அமெரிக்காவில் வந்து ஒரு பட்டிமன்றம் நடத்த ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. ஆலை இல்லாத ஊரில் இல்லுப்ப பூ சர்க்கரை போல் அதில் பேச என்னையும் அழைத்து இருந்தார்கள். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்ய பட்டது .
என்றாவது ஒரு நாள் தங்களுடன் மேடையை பகிரும் வாய்ப்பு எனக்கும் வரும் என்று காத்து கொண்டு ...
பதிவிற்கு நன்றி , மிகவும் ரசித்தேன் .
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணி நண்பர் விசு அவர்களே! இனியவன் பாணி அது.
நீக்குநான் எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை என் கருத்தைச் சொல்லவே பயன்படுத்துவேன். அதில் பொருத்தமான பாட்டும், கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து, சொல்லவரும் கருத்திற்கு வலுச்சேர்க்கப் பயன்படுத்துவேன். தோட்டத்தில் பாதி கிணறு எனக்கு வராது. எனவே அடுத்தவர் பாணியில் நான் குறுக்கிடுவதில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் தனிப்பட்ட முறையில் சொல்வதுண்டு.
திரு லியோனி அவர்களின் பெருந்தன்மை என்னவெனில் என்ன பேசப்போகிறாம் என்பது பற்றி எந்தக்கேள்வியும் கேட்காமல் பேச்சாளர்களைச் சுதந்திரமாகப் பேசவிட்டுவிடுவார்.
பேச்சாளர் நன்றாகப பேசிப் பேர்வாங்குவதை விரும்பாத நடுவர்கள் –தான்மட்டுமே பெயர்வாங்கவேண்டும் என்று செயல்படும் நடுவர்கள்- பலருண்டு. ஆனால் திரு.லியோனி அப்படியல்ல... பேச்சாளர்களை நன்றாகப்பேசவிட்டு அதன்பிறகு அவர் அதற்கும்மேல் பேசி அந்தமேடையிலேயே ஜெயிப்பார். அதுதான் திரு லியோனியின் பலம்! அந்த அவரது தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமான இந்தப் போட்டி அனேகமாக எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு மேடைகளிலும் நடந்திருக்கிறது நிகழ்ச்சி அமைப்பாளர்களுககே தெரியாது! ஆனால் நாங்கள் ரசிப்போம். திரு லியோனி பெரிய ரசிகர். திரு மதுக்கூரின் நகைச்சுவையை வயிறுகுலுங்க அவர் ரசிப்பதை நீங்களும் பலமுறை பார்த்திருக்கலாம்.
இதனால்தான் கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக அவரது குழுவில் அணித்தலைவராக 10நாடுகளுக்குமேல் போய், தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 5000 கூட்டங்களுக்கும் மேல் அவருடன் இணைந்தும், தனிப்பேச்சாகவும் நான் பேசியிருக்கிறேன். (அடுத்த மாதம் மலேசியா போகிறோம்- 20நாள் நிகழ்ச்சிகள்...!)
பேச்சு ஒரு நல்ல் கலை, அதில் நாம் நினைத்தால் பார்வையாளர்களைத் தரம்உயர்த்தவும் முடியும், தரமிறங்கி கருத்துகளை மறந்து வெறும் கைத்தட்டல்களில் மயங்கிப் பெயர் பெறவும் முடியும். நோக்கத்தைப் பொறுத்துத் தானே பெயரும் பேச்சும் அமையும்!?
சொல்லவரும் நல்லசெய்திதான் சாப்பாடு, நகைச்சுவை ஊறுகாய் போல சைட்-டிஷ்தான். அதையே சாப்பாடாக நினைத்துப் பரிமாறும் பேச்சாளர்களை நாம்என்ன செய்ய முடியும். பார்வையாளர்களிலும் இந்த வகை உண்டுதானே? அதுதான் பெரும்பான்மை! அதுதான் சிக்கல். அவரவர்க்கும் பிடித்த்தைச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நான் எனக்குப் பிடித்த நல்லதைத்தான் பரிமாறுவேன். (குழந்தைக்கு என்ன தெரியும்? தாய்க்கல்லவா தெரிந்திருக்க வேண்டும்?)
உங்கள் மனம் திறந்த ரசனைக்கும் மகிழ்வான கருத்திற்கும் நன்றி நண்பா.
உங்கள் தளத்திலேயே காணொளியை இணைக்கலாம் ஐயா...
பதிலளிநீக்குஅதுதானுங்களே தெரிய மாட்டுது!??
நீக்குதெரிஞ்சா இணைச்சிருக்க மாட்டனா?
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.
(எப்ப வர்ரீங்க அடுத் வகுப்புக்கு?)
வகுப்புகளை ஏற்பாடு செய்யும் நான் பலநேரம் ஏற்பாட்டு வேலைகளால் நான் முழுமையாக உட்கார்ந்து கற்க முடியாமல் போய்விடுகிறதே அய்யா!?)
ஐயா திரு தமிழ் வாசியின் தளத்திற்கு சென்று யூ டியுப் டவுன் லோடர் மென்பொருள் பத்து கொடுத்திருக்கிறார். அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தரவிறக்கி உங்கள் கணிணியில் பதிவேற்றிக்கொள்ளுங்கள்! பின்னர் யூ டியுபில் உங்கள் பட்டிமன்ற உரையாடல் யூ.ஆர் எல்லை காப்பி பண்ணி டவுண்லோடரை சொடுக்கி அதில் யூ- ஆர் எல் என்பதில் கொடுங்கள் வீடியோ டவுன் லோடு ஆகிவிடும். பின்னர் பதிவிடும்போது இன்செர்ட் வீடியோ ஆப்ஷனை பயன் படுத்தி காணொளியை பதிவிடலாம்! எனக்குத் தெரிந்த வரையில் சொல்லியிருக்கிறேன்! எதற்கும் தனபாலன் சாரை தொடர்புகொள்ளவும்! வீடியோ பார்த்துவிட்டு வருகிறேன்! நன்றி!
நீக்குமுயற்சி செய்கிறேன் அய்யா.
நீக்குவலைச்சித்தரை ரொம்பநாளாகக் காணாமல் தேடிக்கொண்டு தமிழ்வலைப்பதிவர் உலகமே தடுமாறித்திரிகிறதே! ஏன்..?
நன்றி சுரேஷ் அய்யா. முயன்று பார்க்கிறேன். பார்க்கலாம்..
ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் மாற்றம் என்ற தலைப்பில் பேசியிருந்தால் நான் இந்தக் காணொளியை பார்த்திருக்கவே மாட்டேன் என்பதை ஒளிவு மறைவின்றி சொல்லிக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு“திரைப்படங்கள் சமூகத்தை ஏமாற்றியிருக்கின்றன“
இதில் எமக்கு முழுமையான உடன்பாடு உண்டு காரணம் சினிமா தாங்கள் சொல்லியிருப்பது போல 99 சதவீதம் தவறுகளைத்தான் சொல்கின்றன என்றைக்கு மனைவி, வயதுக்கு வந்த மகளுடன், தியேட்டரில் உட்கார்ந்து சங்கோஜப்படாமல் ஒரு சினிமா காணும் நிலை வருகிறதோ அதுவரை நான் சினிமாவுக்கு எதிர் புறமானவனே இதில் கடைசிவரை உறுதியாக இருப்பேன் நீங்கள் சொல்வதுபோல எப்பவாவது தவறு செய்தால் பரவாயில்லை 99 சதவீதம் திரைப்படங்கள் தவறானதையே நமக்கு சுட்டிக் காட்டுகின்றன,,,,
ஆனாலும் இதற்க்கு காரணகர்த்தா யார் ? நாம்தானே...
ஏமாந்து விட்டு ஏமாற்றுகிறான் என்பவன் ஏமாளி மட்டுமல்ல முட்டாளும்கூட
வலிமையான திரைப்படங்கள் தவறு செய்தால் ? ஒரு சமூகமே புதைக்கப்பட்டு விடும் ஸூப்பரான கருத்து.
மனிதனின் நடைமுறை வாழ்வில் 99 சதவீதம் மனிதர்கள் வில்லன்களே...
ஆபாசத்தை விடவும் அசிங்கமானது மூடநம்பிக்கை 100 சதவீதம் உண்மை உண்மை
இன்றைக்கு ஆடு போலீஸ் ஸ்டேஷன் போனால் மறுநாள் காவலர்கள் வீட்டில் பிரியாணிதான் இதில் சந்தேகமென்ன ?
ஐயா சந்தேகம் ஆதலால் கேட்கிறேன் பாம்பு பால் குடிச்சா செத்து போகுமா ?
ஆனால் ? நான் பால் குடித்து பார்த்ததில்லை காலம் காலமாய் சொல்லக்கேள்வி.
தங்களை பாராட்டுவது என்பது எமக்கு தேவையில்லாத விசயம் காரணம்
மெர்க்குரி லைட்டுக்கு மெழுவர்த்தி பிடித்தவன் போல ஆகிவிடுவேனே..
ஆதலால் தங்களது பேச்சை ரசித்தேன், ரசித்தேன் தேன்.
எனது பதிவு தற்போது ‘’விளம்பரம் என்ற விழும்பாரம்’’
நன்றி.
உண்மையை உள்ளபடி சொல்ல நினைக்கும் உண்மையானவன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
“ஐயா சந்தேகம் ஆதலால் கேட்கிறேன் பாம்பு பால் குடிச்சா செத்து போகுமா ? ஆனால் ? நான் பால் குடித்து பார்த்ததில்லை காலம் காலமாய் சொல்லக்கேள்வி“ - உண்மைதான் அய்யா. அதன் உடல் அமைப்பு அப்படி என்கிறார்கள். ஆனால், உளவியலன்றி வேறு அடிப்படையில்லாத கடவுள் நம்பிக்கை காலகாலமாக உலகெங்கும் இருப்பதுபோல இதுவும் தமிழகத்தில் நம்பப் படுகிற ஒன்றுதான். மற்றபடி அறிவியல் விளக்கம் சொல்ல எனக்குத் தெரியவில்லை. தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி கொலைகாரரே! (உங்கபேர் தமிழில்...!)
நீக்குஅன்புள்ள கவிஞர் முத்துநிலவன் அய்யா,
பதிலளிநீக்குவணக்கம். திரைப்படங்கள் சமூகத்தை மாற்றியிருக்கிறதா? ஏமாற்றியிருக்கிறதா? பட்டிமன்றத்தை மீண்டும் பார்க்கின்ற வாய்ப்பைத் தந்த்தற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல் லியோனி அய்யாவின் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தை இரசித்துப் பார்த்து மகிழ்ந்தேன். அறிமுகப் பேச்சாளராக பேசிய செல்வி. சர்மிளா & செல்வி. அமுதசுரபி இருவருக்கம் வாழ்த்துகள்.
திரைப்படங்கள் சமூகத்தை மாற்றியிருக்கிறது பேராசியர் அன்பு நன்றாகப் பேசினார். மதுக்கூர் இராமலிங்கம் அவர்களும் அணிக்கு வலுவூட்ட நன்றாக பேசினார்கள். கிராமத்துகாரர்கள் பார்த்து இரசித்துக்கொண்டிருந்த சினிமாவைப் பாரதிராஜா அவர்கள் கிராமத்தையே சினிமாவில் கொண்டுவரவில்லையா? வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை, நீர்ப்பறவை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற நல்ல படங்கள் நல்ல கருத்தைச் சொல்லவில்லையா? தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் பாடல் ‘நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?
...கண்பட்டதால் உந்தன் மேனியிலே...புண்பட்டதோ அதை யார் அறிவார்....?’ பேரறிஞர் அண்ணாவுக்காக கவிஞயரசர் கண்ணதாசன் பாடிய பாடலை...அந்தப் படத்தின் சூழலோடு இயைந்து எழுதியிருந்ததைப் பாடிக்காட்டி அசத்தினார்.
திரைப்படங்கள் சமூகத்தை ஏமாற்றியிருக்கிறது என்று தாங்களும், அமுதசுரபி & கோவை தனபால் அவர்களும் மிகவும் நன்றாகப் பேசிப் பட்டிமன்றத்தைச் சிறக்கச் செய்தீர்கள்.
பேரறிஞர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் ‘தணிக்கை இல்லாமல் நான்கு திரைப்படத்தை எடுக்க அனுமதி தாருங்கள்... சமுதாயத்தையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்று திரைப்படத்தின் வலிமையைக் கூறியதையும்கூறி, மேலும் திரைப்படம் தவறு செய்தால் சமூகம் புதைக்கப்படும்...தலைமுறையே தவறிப்போகும் என்று நல்ல கருத்தைச் சொன்னீர்கள். திரைப்படம் நல்ல கலை ஊடகம்தான்...ஆனால் திரைக்கலைஞர்கள் அதை என்ன செய்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி? அவர்களுக்கு ஒரு சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்!
ஆபாசத்தைவிட மூடநம்பிக்கை அபாயமானது என்று உண்மையை உரக்கச் சொன்னீர்கள். பாம்பு, குரங்கு, ஆடு போன்றவற்றை திரைப்படத்தில் காட்டிப் பாமரர்களை மூடத்தனத்தில் மூழ்கடிக்கலாமா?
திரைப்படத்தில்தான் எத்தனை வில்லன்கள்..? நிஜ வாழ்க்கையில் கதாநாயன்களே இரசிகர்களுக்கு வில்லன்களாக மாறிவிடுகிறார்கள். கட்டவுட்டுக்குப் பாலாமிஷேகம் செய்து கீழே விழுந்து சமீபத்தில் ஓர் இரசிகன் இறக்கவில்லையா?
பாரதிதாசனின் பாடலை மேற்கோள் காட்டிப் பேசியது அருமை. இப்படிச் சொல்லாம் என்று எண்ணுகிறேன் திரைப்படத்தில்...90(99) விழுக்காடு தவறும்... 10(1) விழுக்காடு நல்லது இருக்கிறன்றன. நல்ல தரமான பேச்சையா தங்களின் பேச்சு.
அமுதசுரபியின் பாட்டுடன் கூடிய பேச்சும் நடுவரின் பேச்சுடன் கூடிய பாட்டும் கலைகட்டியது. கேவை தனபால் நன்றாகப் பேசினார்.
நடுவரின் தீர்ப்பு அப்படித்தானே இருக்கும்...! நல்ல படியாக...!!
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
அய்யா,
நீக்குவணக்கம்.
உங்களின் பேச்சை மட்டும்தான் கேட்டேன்.
முழுவதும் இன்றிரவு பார்த்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.
மணவையாரின் விமர்சனமும் களை கட்டுகிறதே!
மீண்டும் வருகிறேன்.
நம்மிடையே நடந்த தொலைபேசி உரையாடலைப் பகிர்ந்திருக்கிறேன்.
பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்
நன்றி
நண்பர் மணவையார் அவர்களுக்கு....
நீக்குநடுவரின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் இதில் எமக்கு உடன் பாடில்லை.
இதுதான் தீர்ப்பு என்பது குழுவினர் அனைவருக்குமே தெரியும் 80 வேறுவிசயம்
ஆனால் திரைத்துறை என்பது மிகப்பெரிய பணபலம் மட்டுமல்ல அரசியல் பலமும் படைத்த யானை அதை எதிர்க்க முடியாது என்பதின் காரணமே இந்ததீர்ப்பு இது அனைவரும் அறிந்ததே...
ஆனால் தீர்ப்பில் எமக்கு கருத்து வேறுபாடு உண்டே....
நெற்றிக்கண் திறப்பிணும் குற்றம் குற்றமே...
கில்லர்ஜி
எங்கள் பேச்சைவிட, வார்த்தைக்கு வார்த்தை கவனித்துச் சொன்ன “களைகட்டிய விமர்சனத்தை“ நானும் ரசித்தேன்.
நீக்குநன்றி மணவையாரே, நன்றி விஜூ. (புலவர்அய்யா இராமாநுசரின் தளத்தில் உங்கள் வெண்பா வகுப்புப் பற்றிப ்பின்னூட்டமிட்டிருக்கிறேன். அவர்கள் பெரிய புலவர். 80வயது தாண்டிய மூத்த பதிவர்) நீங்களும் பார்க்க.நன்றி
பாரத்தேன் படித்தேன். பதிவிலேயே பின்னூட்டமும் இட்டேன். தங்கள் பாவளர்க்கும் பணி தொடர்க! வணக்கம்.
நீக்குஅன்புள்ள நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம். இதுதான் தீர்ப்பு என்பது குழுவினர் அனைவருக்குமே தெரியும் என்பது உண்மைதான். திரைப்படம் ஒரு நல்ல கலை ஊடகம் என்ற கருத்துக்கு இருவேறு கருத்துக்கு இடம்இல்லை.
கத்தி யார் கையில் இருக்கிறது? மருத்துவரிடமா...? கொலைகாரர்கள் இடமா? அதைப் பொருத்துத்தானே பயன்பாடு!
பயிர் வளரும் போது களையும் சேர்ந்தே வளரும், ஆனால் பயிரைவிட களைகள் அதிகாகி விட்டது என்பதுதான் கவலை.
எம்.ஜி.ஆர். ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் கழைக்கூத்தாடியாக மிருகங்களோடு சர்க்கஸ்காரக..‘.ஓடிஓடி உழைக்கனும்...’என்று ஆடிப்பாடி நடித்திருப்பார்.. வாழ்நாள் முழுவதும் நன்றாக நடித்துச் சென்றவர்.
கோவை தனபால் பேசும் போது அருமையாகக் குறிப்பிட்டார். மூடநம்பிக்கைக்கு எதிரா தந்தை பெரியார் செய்யாததை, தீண்டாமைக் கொடுமைக்கெதிரா அண்ணல் அம்பேத்கர் செய்யாததை, கல்விக்கண் திறக்க கர்மவீரர் காமராசர் செய்ததைவிட...திரைப்படங்கள் என்ன சமுதாய மாற்றத்திற்காக செய்து விட்டன என்று கேட்டதில் நியாயம் இருக்கிறது அல்லவா?
‘தீர்ப்பில் தங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு....உடன்படவில்லை’ என்பது தங்களின் கருத்தாக இருந்தாலும்...பெரும்பாலும் எதிர்மறையாக தீர்ப்பு தரப்படுவதில்லை என்பதுதானே நிதர்சனம்!
நன்றி.
திரு, மணவையார் அவர்களுக்கு,,,
நீக்குதிரைப்படத்தின் இன்றைய சூழலைத்தான் நான் குற்றம் சுமத்துகிறேன்.
கத்தி யார் கையில் இருக்கிறது ? மருத்துவரிடமா...? கொலைகாரர்கள் இடமா ?
இதையே நானும் கேட்கிறேன் இன்று கொலைகாரன் கையில்தானே இருக்கிறது எடுத்துக்கொடுத்த்து யார் ? பார்வையாளராக கண்ணிருந்தும், குருடராக, வாயிருந்தும் ஊமையாக, காதிருந்தும் செவிடராக பார்த்துக்கொண்டே.................. மட்டும் இருக்கும் நாம்தானே, ஏனெனில் இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால் ? செறைக்கிறவன் ஒழுங்கா செறைப்பான் நாமதான் எல்லாவற்றையும் பார்த்தோமே, பார்க்கிறோமே, பார்ப்போமே, மேலே நான் கலக்கல் மன்னனுக்கு சொன்னதுபோல் என்றைக்கு மனைவி, வயதுக்கு வந்த மகளுடன், தியேட்டரில் உட்கார்ந்து சங்கோஜப்படாமல் ஒரு சினிமா காணும் நிலை வருகிறதோ அதுவரை நான் சினிமாவுக்கு எதிர் புறமானவனே இதில் கடைசிவரை உறுதியாக இருப்பேன்
பண்டைகால பெருங்கொண்ட மனிதர்களின் பொழுதுபோக்கிற்க்காக கூத்தாடிகளால் உருவாக்கப்பட்டு பின்னாளில் கலை வடிவம் பெற்று வளந்தது நாடக கலை.
மொத்தத்தில் அது ஒரு பொழுபோக்கு அம்சமே,,,,
ஆனால் இன்று ?
அப்படி நினைத்திருந்தால் கூத்தாடிகள் இன்று ஆசி ஆளமுடிந்திருக்காது,
சமீபத்திய எமது பதிவு நெஞ்சு பொறுக்குதில்லையே பாருங்கள் அவர்களைத்தான் சாடியிருக்கிறேன்.
சினிமா என்பது ஒருகலை அந்தக்கலை, கொலை செய்யப்பட்டு பலஆண்டுகளாகி விட்டது இதற்க்கு அவர்கள் மட்டும் காரணமல்ல சமூக அங்கத்தினரான நாமே பொருப்பாளி.
அதே அன்புடன் தங்களின் நண்பன்
கில்லர்ஜி.