காலங்களில் அவன் வசந்தம் (கண்ணதாசன் பிறந்தநாள் கட்டுரை)


   புதுக்கோட்டையை அடுத்த ராமச்சந்திரபுரத்தில் “திருமகள்“ பத்திரிகையில் சேர்ந்தபோது, அவனுக்கு வயது பதினேழு!
  அங்கு அவனது பெயரைக் கேட்டபோது, சட்டென்று தோன்றிய ஒரு கற்பனையான புனைபெயரைச் சொல்லி வைத்தான். பின்னாளில் தமிழ்த்திரைப்படப் பாடல்உலகில் முப்பதாண்டுக் காலம் முதலிடத்தில் இருக்கப் போவது இந்தப் பெயர்தான் என்பது அந்த முத்தையாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அது நடந்தது 1944ஆம் ஆண்டில்!

எனது நூறாவது பிறந்த நாளன்று...இப்படி ஒரு கேள்வி கேட்டால்..?

தங்கை மைதிலியின் கேள்விகள் - http://makizhnirai.blogspot.com/

என் பதில்கள் - 

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
நான் இல்லாமலே, நண்பர்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நன்றி மறவாமல் இருக்கவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும். 

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
கடைசியாக..? ஏன்?  இனிமேல் சிரிக்கமாட்டேனா என்ன?   (இந்தக் கேள்வி பார்த்து)

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
விசிறிக் கொள்வதுதான் – இன்வெர்ட்டர் அவ்வளவு நேரம் வராதே!

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 
வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு என்னைவிட நன்றாக வாழ்க

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் 
எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
அவரவர் உணவை அவரவரே சம்பாதிக்கும் சுயமரியாதை வளர்ப்பதை

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் பேரப்பிள்ளை மற்றும் இளைய தலைமுறையிடம் –  வளரும் தொழில்நுட்பம் பற்றி.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
குறள்-510. அல்லது நியூட்டனின் மூன்றாம் விதி.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
உடனடியாக அல்ல, எனினும் நிச்சயமாக இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்வேன். 
(கணவரை இழந்த தோழிக்கும் இதையே சொல்வேன்)

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
படிப்பு, எழுத்து, இசை, தொலைக்காட்சி, தொலைபேசி, அடுத்த வேலையைத் திட்டமிட்டுவிட்டு நிம்மதியான தூக்கம். 
---------------------------------------------------------- 
இனி இந்தக் கேள்விகளைப் பின்வரும் வலை உறவுகளுக்கு
அன்புடன் அனுப்பித் தருகிறேன் - அவர்கள் பதில் தருக! 

கவிஞர் புதியமாதவி - http://puthiyamaadhavi.blogspot.in/
அய்யா தி.தமிழ்இளங்கோ -http://tthamizhelango.blogspot.com/
அய்யா முனைவர் பா.ஜம்புலிங்கம் - http://drbjambulingam.blogspot.in/
கவிஞர் சுவாதி - http://swthiumkavithaium.blogspot.com/
நண்பர் கரந்தை ஜெயக்குமார் - http://karanthaijayakumar.blogspot.com/
நண்பர் - வா.நேரு - http://vaanehru.blogspot.in/
நண்பர் மகா.சுந்தர் - http://mahaasundar.blogspot.in/ 
நண்பர் - ஜோசப் விஜூ- http://oomaikkanavugal.blogspot.in/
நண்பர் குருநாதசுந்தரம் - http://gurunathans.blogspot.in/
தம்பி கொ.சுப.கோபிநாத் - http://ilakkanatheral.blogspot.in/ 

(நம்  நண்பர்களில் தி.ந.முரளி, கரந்தையார், பாண்டியன் ஆகிய மூவர் ஏற்கெனவே நம் நண்பர்களின் பட்டியலில் இடம்பெற்று விட்டதால்  மீண்டும்  மாற்றியிருக்கிறேன் அவர்களும் பதில் இடலாம்.. நண்பர்கள் பட்டியல் பத்தும் பத்தாதுதானே ? )

(நட்பு வலை விரிய வழிகாட்டிய தங்கை மைதிலியைப் பாராட்டுங்க...
--அல்லது திட்டுங்க.. ஏனெனில் இதை என் பக்கம் தள்ளியவர் அவரே)
---------------------------------------------------------------------------------- 
ஏற்கெனவே பதில் தந்த நட்புறவு வலைகள் -
நண்பர் மது -கஸ்தூரி - http://www.malartharu.org/
தங்கை கிரேஸ் - http://thaenmaduratamil.blogspot.com/
தங்கை சசி - http://veesuthendral.blogspot.in/
நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் - http://unmaiyanavan.blogspot.in/

---------------------------------------------------------------------------------  
இந்த இனிய விளையாட்டை (?) தொடங்கி-மாட்டி-வைத்த 
நண்பர் மதுரைத்தமிழனுக்கு நன்றி(கர்ர்ர்ர்ர்ர்...மக்கா...)
-http://avargal-unmaigal.blogspot.com/

குழந்தைகளைச் செல்லப்பெயர் வைத்துக் கொஞ்சுங்கள்!

       குழந்தைகள் அதிகம் எதிர்பார்ப்பது, பாராட்டைத்தான். தன்னை எல்லாரும் கவனிக்க வேண்டும் என்பதைத்தான். செல்லம் கொஞ்சும் இடத்தைத்தான் அந்தக் குழந்தைகள் விரும்பும். அதை அம்மாவோ அப்பாவோ செய்யும்போது அதன் செயல்பாடு அனைத்தும் அவர்களைப் பார்த்தே அமையும்.

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!




- நா.முத்துநிலவன் -

(கடிதஇலக்கியம்)
என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு  நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.              
அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்?  என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.

தமிழ்ச்சொற்கள் காட்டும் பெண்ணடிமை வரலாறு!

     சொல்லின் பயன் என்ன?
     ஒருவரை அல்லது ஒன்றை அடையாளப்படுத்துவதுதான் சொல் எனில், தமிழில் இன்றும் புழங்கிவரும் சில சொற்களுக்கு ஆண்பால்சொல் இல்லையே ஏன்?, சில சொற்களுக்குப் பெண்பால்சொல் இல்லையே! ஏன்?
     இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில் ஒன்றுதான் –
     அது, 
பெண்களைக் கேவலப்படுத்துவதுதான்.
(கேவலம் என்பதன் விளக்கத்தைக் கடைசியில் சொல்வேன்..)

ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும்

எல்லா மொழியிலும் உயிர் என்னும் சொல் இருக்கிறது. ஆனால் எந்த மொழியிலும், அறிவியல், உயிரின் தோற்றம்-அழிவுபற்றி ஏதும் சொல்லவில்லை! 

சூப்பர் சிங்கர் ஜூனியர் – குழந்தைகள் எங்கே?

“தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்“-எனும் விளம்பரத்துடன் விஜய் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியைப் பல்லாயிரம்பேர் ரசித்துப் பார்க்கிறார்கள். நானும் விரும்பிப் பார்க்கத்தான் செய்கிறேன். அதனாலேயே அவ்வப்போது எனக்குத் தோன்றும் சந்தேகத்தை இங்குப் பதிவிடுகிறேன்.