“கக்கூஸ்” – ஆவணப் படம் தந்த அதிர்ச்சி!


பீ வருது” என்று நம் குழந்தை சொல்லக்கூட நாம் அனுமதிப்பதில்லை. அதுக்கு, “ஆய்” அல்லது மராட்டி மொழியிலிருந்து வந்த, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் “கக்கா” என்று தான் சொல்லப் பழக்கிவிடுகிறோம்! (கக்கன் எனும் நம் தமிழகத் தலைவர் ஒருவரின் பெயர் இதிலிருந்து வந்ததுதான் என்றும் ஒரு குறிப்புண்டு!)
அல்லது தமிழிலக்கணம் சொல்லும் “இடக்கரடக்கல்” முறைப்படி “ரெண்டு” என்று ஒரு எண்ணின் பெயரைச் சம்பந்தமில்லாமல் வைத்து நாம் மட்டும் நாகரிகமாகிவிடுகிறோம்! 
ஒன்னுக்கு- மூத்திரம், ரெண்டுக்கு – பீ என்று “நாகரிகமாக” சொல்லப் பழக்கியிருக்கிறோம்தானே?

என்ன அசிங்கமாப் போகுதேன்னு பாக்குறீங்களா?

ஓரிரு நிமிடம் படிக்கவே முடியாம மூக்கப் பொத்திக்கிறீங்களே.........?

அதுவும் நம்ம குழந்தையோட கழிவையே சொல்லத் தயங்குறோமே? அள்ளத் தயங்க மாட்டமா?

ஆனால்...
ஊரார் பீயெல்லாம் அள்ளும் ஒரு மனிதக் கூட்டம் நம்மைச் சுற்றிச் செத்துச் செத்துப் பிழைக்கிறதே அதுபற்றி யாராவது யோசித்தோமா?

இத்தனைக்கும் “மனிதக் கழிவை மனிதனே எடுக்கும், சுமக்கும்” இந்த அசிங்கத்தைச் சட்ட ரீதியாகத் தடுத்துவிட்டதாகப் பீற்றல்வேறு!

அந்தச் சின்னப் பெண் திவ்யாபாரதி (வயது-25!)
ஓர்ஆவணப்படம் எடுத்திருக்கிறார்-

படத்தின் பெயர் “கக்கூஸ்”! 

என்ன அதிர்ச்சியா? அருவெறுப்பா?

ஒன்றரை மணிநேரம் 
நம்மை முடியைப் பிடித்திழுத்துச் 
சப்சப்பென்று அறைந்து தள்ளி 
மூச்சுத் திணர வைத்து விடுகிறார்!

இப்படி என்னை 

உலுக்கிய படத்தை 

இதுவரை நான் பார்த்ததில்லை!

சென்னையில் மின்னூல் முகாம் - அழைப்பிதழ்

சென்னை நண்பர்கள் வருக!
சுற்றுவட்டாரத்திலுள்ள வலை எழுத்தாளர்
நண்பர்கள் அவசியம் வருக!

“கமல்” போலக் கவிதை எழுதியது யாராயிருக்கும்?

“புன்னகை மன்னன்” -சாப்ளின் கமல்
எனது வலைப்பக்கத்தின்
முந்திய “கமல் கவிதை” பதிவை வெளியிட்ட பிறகு,
நண்பர் திண்டுக்கல் தனபாலன் உள்ளிட்ட நம் நண்பர்கள்
இதை அவர் எழுதவில்லை என்று
மறுத்ததாக தினமலர் வெளியிட்டிருக்கும்
செய்தி இணைப்பைத் தந்திருக்கிறார்கள்

இன்றைய தமிழக அரசியல் குறித்த கமல் கவிதை!சிங்கமில்லாக் காடு
****************************


செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது

உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!

சபாநாயகர் கணக்கு (122) சரிதானா? ஒரு சந்தேகம்!

நமது வலைப்பக்கக் கணக்கு
மாறிவிட்டது! பார்க்க -
http://valarumkavithai.blogspot.com/2017/02/12.html

எனினும், இது தற்காலிக மாற்றமாகவே
எனக்குப் படுகிறது.

சென்னை மின்னூல் முகாம் சந்திப்பு – இடமும் பொழுதும்

அன்பினிய வலை-உறவுகளுக்கு, வணக்கம்.
முக்கியமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் வலைநண்பர்கள், அதிலும் முக்கியமாக எழுத்தாளராயிருக்கும் வலைநண்பர்கள் 
அவசியம் வரவேண்டுகிறேன்...

ஸ்டாலினும் ஏமாற்றிவிட்டார்!

தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் –நடந்த- கூத்துகளைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த மக்களுக்கு, ஸ்டாலின் தான் சரியான மாற்றுத் தருவார் எனும் நம்பிக்கை நேற்றுவரை இருந்தது!

இன்று அந்த நம்பிக்கையில் தானே மண்ணை அள்ளிப் போட்டு 
கிழி்ந்த சட்டையோடு பேட்டிகொடுக்கிறார் ஸ்டாலின்!

குமாரசாமி நட்ட ஈடு குடுப்பாரா?

அவரு பாட்டுக்குத் தப்புத்தப்பாக் கணக்கப் போட்டு, 
குற்றவாளிகளை விடுதலை செஞ்சுட்டுப் போய்ட்டாரு!
அதுனால நடந்தது என்ன?

அம்மா விடுதலை வேண்டி -அவுங்க உயிரோட இருந்தப்ப- எத்தனை கோயிலுல எத்தனை காவடி? எத்தனை பால்குடம்? எத்தனை அன்னதானம்? எத்தனை எத்தனை வேண்டுதல் சாமியெல்லாம் திணறிப்போச்சே! அட அவுங்க உடம்பு முடியாமக் கிடந்தப்ப கூட அவ்ளோ இல்லிங்க!!
குன்காவால முதல்வர் மாற்றம்! குமாரசாமியால திரும்பவும் முதல்வர்! திரும்பவும் மாற்றம்… அந்தம்மாவும் போயிச்சேந்துட்டாங்க அப்பறம்… அவரு பாவம் ரெண்டு தடவ ருசி கண்டதால சின்னம்மா சொன்னதைக் கேட்காம அவராப் போயி அம்மா ஆன்மாவக் கேட்டு.. சின்னம்மா எம்எல்ஏங்களக் கடத்திக் கொண்டுபோயி ஒருவாரம் தீனி போட்டு எவ்ளோ செலவு?
திரும்பவும் தேர்தல் வருமா இல்ல தேர்தல் செலவ விடக் கூடுதலாச் செலவுபண்ணி ராஜினாமாக் கடிதத்தை மறுபடி திரும்பிவாங்கி.. திரும்பி முதல்வரா வந்து… அடப் போங்கப்பா! (ரிசாட் செலவு மட்டுமில்லிங்க ஓட்டுக்கே காசு குடுத்தவுங்க ரேட்டு என்னவாயிருக்கும் சின்னம்மா?!)
அதுனால என்ன ஆச்சு? பலஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு நட்டம்!
 (ஊழலில அடிச்சதச் சொல்லலீங்க.. தேர்தல் செலவு..
எல்லாம்தான் எந்தக் கணக்கு?)
இதயெல்லாம்குமாரசாமி குடுப்பாரா?

சசிகலாவுக்குத் தண்டனை –தமிழக அரசியல் இனி என்னாகும்? 12குறிப்புகள்

உச்சநீதி மன்றத் தீர்ப்பு இன்று -14-2-2017-காலை வந்துவிட்டது.
(*)சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருக்கும் தலா 4ஆண்டுச் சிறை, பத்துக்கோடி அபராதம் எனும் கர்நாடக நீதிபதி மைக்கேல் குன்கா தீர்ப்பை வழிமொழிந்திருக்கிறது!
(*)கணக்கில் குளறுபடி செய்த குமாரசாமியின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது, நம்பிக்கையைத் தக்கவைக்கிறது!
(*)மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவு!
தீர்ப்பால், தமிழக அரசியல் விளைவுகள் எப்படியிருக்கும்

ஐந்து லட்சம் தந்த நட்புக்கு நன்றி !

நேற்று முதல்நாள் பதிவிடும்போது பார்த்தேன் – ஐந்துலட்சம் பார்வையாளர்களை நெருங்கியிருந்தது!

தமிழன் என்று சொல்லடா! தலைகுனிந்து நில்லடா!

மாணவர்கள் காப்பாற்றிய தமிழ்ப் பண்பாட்டை, மந்திரிகள் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள்!!

ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?”
ஆமா… அது இப்ப ரொம்ப முக்கியம்! 

ஜனவரி 18முதல் 22வரை லட்சக்கணக்கில் திரண்டு மாணவர்களும் மாணவியரும், இளைஞர்களும் பெற்றோர்களும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள்! தமிழகம் மகிழ்ந்து நெகிழ்ந்து போனது!

ஒரு போராட்டத்தை -பண்பாட்டுப் போராட்டத்தை- எப்படி நடத்த வேண்டும் என்று பெரியவர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போனார்கள் இளையவர்கள்! ஆனாலும் பெரிசுகள் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை! (அந்த மேலோர்(?) சொன்னதை மறந்தார்!)

சென்னையில் மின்னூல் முகாம்!

நண்பர்களுக்கு வணக்கம்.
புதுக்கோட்டையில் நடந்த மின்னூல் வழிகாட்டு முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் மின்னூலாக்க வழங்கப்பட்டதை அறிவீர்கள்.  

“புஸ்தகா” நிறுவன இணையத்தில் பார்க்க -

இதை அறிந்த வெளியூரில் இருக்கும் எழுத்தாளர்களும் இதுவரை நூல்வெளியிடாத பதிவர்களும் இதுபற்றி ஆவலுடன் கேட்டறிந்து, பெங்களுரு புஸ்தகா நிறுவன நண்பர்களைத் தொடர்புகொண்டு நூல்களை அனுப்பி வருகின்றனர். நல்லது.

சென்னையிலிருக்கும் வலைநண்பர்கள், எழுத்தாளர்கள், மற்றும் பதிப்பக நண்பர்கள் சென்னையிலேயே இதுபற்றிய நிகழ்வை நடத்த வேண்டினர். அதற்காக, வரும் 25-02-2017 சனிக்கிழமை மாலை 6மணிமுதல் 8மணிவரை (புதுக்கோட்டை போலவே) சென்னை தி.நகரில் நடத்தி, நூல்களைப்பெற புஸ்தகா முன்வந்திருக்கிறது.