எனினும், இது தற்காலிக மாற்றமாகவே
சபாநாயகர் திரு தனபால்
முதல்வர் திரு எடப்பாடி பழநிசாமி அவர்களுக்கு
122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு
கிடைத்திருப்பதாகச் சொன்னதில்
எனக்கு நம்பிக்கையில்லை
ஒரு கணக்குப் போடுங்கள்
134 அதிமுக உறுப்பினர்கள்
(இரட்டை இலையில் வெற்றிபெற்ற
தனியரசு, கருணாஸ், அன்சாரியும் சேர்த்து)
இந்த 134இல்...
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்-11
18-2-17அன்று வாக்களிக்க வராதவர்கள்-2பேர்
(கோவை மற்றும்சென்னையைச் சேர்ந்த இருவர்)
காலஞ்சென்ற ஜெ.-1
திருப்பரங்குன்றம் காலியிடம்-1
மயிலை (முன்னாள் டிஜிபி) நட்ராஜ்,
நாகை தமிமுன் அன்சாரி இருவரும்
முடிவெடுக்காமல் இருப்பதாக
ஏற்கெனவே ஊடகங்களில் தெரிவித்தனர்
ஏற்கெனவே ஊடகங்களில் தெரிவித்தனர்
ஆக எதிர்ப்பு எத்தனை? - 17ஆகிறது!
(திமுக காங்கிரசைக் கணக்கில் சேர்க்காமலே!)
எனில் எடப்பாடி அரசுக்கு ஆதரவு?
(திமுக காங்கிரசைக் கணக்கில் சேர்க்காமலே!)
எனில் எடப்பாடி அரசுக்கு ஆதரவு?
134-17=117தான் உள்ளது!
ஆனால் நமது சட்டமன்ற
சபாநாயகர் 122 எனச் சொல்கிறார்!
இது சரியா?
என்னும் கேள்வி உள்ளது!
நாளை வழக்கு வேறு வருகிறது!
பார்க்கலாம்...
என்ன நடக்கிறதென்று!
மன்னிக்க வேண்டும் ஐயா! நான் எம் எஸ் சி (கணிதம்) படித்து நாற்பதாண்டுகளுக்கு மேல் ஆகிறது. கணக்கெல்லாம் மறந்து விட்டது. எனவே பெங்களூர் போய், அந்தக் குமாரசாமியிடம் தெரிந்து வந்து சொல்லட்டுமா?
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
அதிமுக மொத்தம் 136 எம்.எல்.ஏக்கள்.
பதிலளிநீக்குஅரசுக்கு ஆதரவாக ஓட்டுகள் 122
எதிராக ஓட்டுகள் 11
மொத்தம் 133 பேர் ஓட்டளித்தனர்.
வாக்களிக்காதவர்கள்:-
காலமான முதல்வர் செல்வி. ஜெயலலிதா - 1
கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் - 1
சபாநாயகர் - 1
(136-3)=(133-11)=122
ஆக மொத்தம் 122
சரியா...?
மிக சரி பலரும் மொத்தம் 136 என்பதை மறந்து விட்டனர் பல நேரங்களில் வாட்ஸ் ஆப் நம்மை முட்டாளாக்கி விடுகிறது.
நீக்குநீதி பதி குமாரசாமியே கணக்கில் கோட்டை விட சபாநாயகர் தப்புக் கணக்கு போட்டிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை
வழக்கு எப்படி இருக்கும் என பார்க்கலாம்...
பதிலளிநீக்குகூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்..
பதிலளிநீக்குஆழ்ந்த மொழிப்பற்றும்..சமூகப்பொறுப்பும் உங்களையும் கணக்குப் போட வைத்த அவலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
அரசியல் என்னும் பொதுச்சேவை... அதிகாரக்கனவுகளில் சிக்கி சட்டை கிழிந்து தொங்கிநிற்கிறது..
அவர்கள் கணக்கும் வழக்கும்...
எந்த பள்ளியிலும் படிக்கமுடியாதது...
சரியான பதத்தில் சொல்வதெனில்..
விளங்காது...
நாசமா போச்சு நம்ம மாநிலம்,
பதிலளிநீக்குஇதை நினைத்து சிரிப்பதா அழுவதா?
நூற்றி இருபத்திரண்டோ, நூற்றுப் பதினேழோ.... அந்த எம் எல் ஏக்களின் வாக்களிப்பது தொடர்பான மனக் கணக்கு சரியில்லை என்று தெரியும். நான் பணக் கணக்கைச் சொல்லவில்லை!
பதிலளிநீக்குதிருப்பரங்குன்றம் காலி இல்லை
பதிலளிநீக்குஇவர் குமாரசாமியை மிஞ்சி விட்டாரே
பதிலளிநீக்குஅடப்பாவிகளா இப்படியுமா கணக்கு நடத்துவது..!!!
பதிலளிநீக்குசட்டசபையில கணக்கும் பிணக்கும்
பதிலளிநீக்குகிட்டாத மழையால விவசாயம் பாழ்
பட்டுக்கெட்டது
ஓட்டுப் போட்ட மக்களே!
ஓட்டுக்கு 500ரூபாய் கொடுத்தால் பாட்டிலுக்கு..சைடுக்கு... இந்தக் கணக்கு போதும் என்று... மக்களுக்கு பூட்டப் போட்டுட்டு அவங்க கணக்க அவங்களே டாலி பண்ணிக்கிறாங்க...
பதிலளிநீக்குநம்மைப் போன்ற சாமானியர்கள், பாவப்பட்ட மக்கள் எல்லாம் இவங்க கணக்கைப் போட முடியாது அண்ணா. இவங்க கணக்கு நல்லா இருந்திருந்தா ஆட்சியே நல்லாருந்துருக்குமே...மக்களின் மனக் கணக்கில் அதிருப்தி நிலவும் வரை இவங்க என்ன கணக்கு போட்டாலும் தப்பு தப்பாகத்தான் இருக்கும். மக்களின் மனக்கணக்கைப் புரிந்து கொண்டு அதைத் தீர்த்தால் மட்டுமே சரியான கணக்கு..இல்லையென்றால் எந்த ஈக்வேஷனும் வேலைக்காவாது. தப்புக் கணக்கு தீரா கணக்கு
பதிலளிநீக்குகீதா
கணக்கு காட்டுவது என்றாலே குழப்பம்தான்
பதிலளிநீக்கு