“விதைக்கலாம்” அமைப்பின் 150ஆவது வார விழா! அழைப்பிதழ்!

அண்ணல் அப்துல் கலாம் பெயரில் புதுக்கோட்டையின் 20இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாராவாரமும் ஏதாவது ஓரிடத்தைத் தேர்வு செய்து, மரக்கன்றுகளைக் கொண்டு போய் நட்டுவளர்க்கும் பணியைச் செய்துவரும் செய்தியை முன்பே தெரிவித்திருந்த நினைவிருக்கும்.

இதோ இப்போது…
விதைக்கலாம்” அமைப்பின்
150ஆவது வார விழா!
புதுக்கோட்டையில் நடக்கவுள்ளது.

தமுஎகச 14ஆவது மாநில மாநாடு! உணர்ச்சியும்! எழுச்சியும்!!


புதுச்சேரியில் ஒரு புதிய பண்பாட்டுத் திருவிழா!

      இந்திய நாடு முழுவதும்இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்என்றுஅவசரநிலைஇருள் கவிழ்ந்திருந்த 1975இல், அந்த இருளைக் கிழித்தெழுந்த சிறு பொறியாய் எழுந்ததுதான், அன்றைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்! இப்போது தமுஎகச என்கின்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்!
இன்றும் அப்படியொரு சூழல்தான் நிலவுகிறது! எழுத்தும், கருத்தும் என்ன சொல்கிறதோ அதற்கு உரிய பதிலை நேர்மையாகச் சொல்ல முடியாத நவீன அவசரக்காரர்கள், எதார்த்தத்தை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனை அசிங்கப்படுத்தினர், ஓர் ஆய்வுக்கருத்தை எடுத்தாண்டதற்கு, கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை இணையப் பக்கத்திலிருந்து மறைத்ததோடு, மேடைகளிலும் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்தினர், எங்கள் சுவாசத்தைச் சுரண்டாதே என்று போராடிய வர்களின் வாயில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன! தமிழகத்தின் உரிமை கல்வி, மொழி, அரசியல் எனப் பலவகையிலும் கேள்விக்கு உள்ளாகிய இந்தக் கந்தகச் சூழலில்தான் புதுச்சேரி மண்ணில் தமுஎகசவின் 14ஆவது மாநில மாநாடு எழுச்சியோடும் உணர்ச்சியோடும் நடந்து முடிந்துள்ளது!

உடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி!

இந்த மாதத்தில், அடுத்தடுத்து சில நல்ல நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு வந்தாலும், அண்மையில் கோவை ஆயுள்காப்பீட்டுக் கழகப் பெண்கள் மாநாடு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது!
கடந்த 09-6-2018 அன்று கோவையில் நடந்த அந்த நிகழ்ச்சி எனக்கு மறக்கமுடியாமல் நினைவில் நின்று போனதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று – கடந்த ஆண்டு, தமிழகத்தையே உலுக்கும்படியாக “ஆணவக் கொலை”க்கு ஆளான உடுமலை சங்கர் எனும் வீரஇளைஞனின் காதல் மனைவி கவுசல்யா இந்த நிகழ்வில் என்னோடு கலந்துகொண்டது.  இரண்டாவது மற்றும் மிக முக்கியமான காரணம், அவர் பேசும்போது கேட்ட ஒரு கேள்வியும் அதற்குக் கிடைத்த பதிலும் பின்னர் அவர் அதற்குச் சொன்ன விளக்கமும் மறக்க முடியாதபடி ஆகிவிட்டது.

முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு! வருக! வருக!


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14ஆவது மாநிலமாநாடு, வரும் 21.6.2018மாலை கலைப்பேரணியுடன் தொடங்கி 24ஆம்தேதிவரை –மூன்று நாள்- புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

உங்களுக்கான 
அழைப்பிதழ்

கீழ்
உள்ளது –

பாலியல் குற்றச்சாட்டில் 2018நோபல் விருது!


19 ஏப்ரல்,2018 அன்று ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அகாடமிக்கு எதிரில் 
திரண்ட பெருங்கூட்டம், முக்கியமாக பெண்கள்!
முன்னாள் நிரந்தர செயலாளர் சாரா டானிசுக்கு ஆதரவாகத் திரண்டனர் 


நோபல்பரிசு, 2018ஆம் ஆண்டு இலக்கியப் பிரிவில் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது வியப்பளித்தது!
 
(நம் ஊர் வைரமுத்து அதற்கான வழியாகத்தானே இந்திய அளவிலான “ஞானபீட” விருதுக்கு அடிபோட்டுக்கொண்டிருந்தார்? அதற்கான முயற்சியைத்தான் ஆண்டாள் வந்து கெடுத்துவிட்டது தனிக்கதை..!)

ஏனிந்த ஏமாற்றம் என்று தகவல்
திரட்டித் தேடினால்…
அதில் பல பிரச்சினைகள் வெளியே வருகின்றன..

ஸ்வீடிஷ் அகாடமி இலக்கியத்திற்கான நோபல் பரிசை இந்த ஆண்டு வழங்காது என்று கூறியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு, நிதி முறைகேடு பின்னணியில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வருகிறது!
விரிவான தகவல்களுக்கு – இணைப்பிற்குச் செல்க –