முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு! வருக! வருக!


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14ஆவது மாநிலமாநாடு, வரும் 21.6.2018மாலை கலைப்பேரணியுடன் தொடங்கி 24ஆம்தேதிவரை –மூன்று நாள்- புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

உங்களுக்கான 
அழைப்பிதழ்

கீழ்
உள்ளது –
இத்தோடு, மாநாட்டுக்கென ஒரு தனி காணொலி அலைவரிசையும் தொடங்கப்பட்டுள்ளது. (யூட்யூப் தொலைக்காட்சி) 

மாநாட்டுச் செய்திகளோடு, மாநாட்டின் முக்கியத்துவம் பற்றிய தமிழ்நாட்டுக் கலை-இலக்கிய வாதிகளின் கருத்தைக் காணொலியாக அறியவுமே இந்த ஏற்பாடு 

நண்பர்கள் பார்த்துக் கருத்துச் சொல்வதோடு, மற்றவர்க்கும் சொல்லி இதனைப் பரவலாக்க் கொண்டுசெல்லவும் முக்கியமாக சமூகவலைத்தளம் அனைத்திலும் பகிரவும் அன்புடன் வேண்டுகிறேன்.


இதில் –சப்ஸ்கிரைப் செய்து- இணைந்தவர்கள் பின்னூட்டத்தில் எனக்கும் தெரிவித்தால் மகிழ்வு இரட்டிப்பாகும்! 


செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
இதோ இணைப்பு -

உங்களுக்கான அழைப்பிதழ் இதோ உள்ளது –
18 கருத்துகள்:

 1. மாநாடு சிறக்க வாழ்த்துகள் அப்பா. யூடியூப் இல் இனைந்துவட்டேன்

  பதிலளிநீக்கு
 2. தங்கள் தமிழ்த் தொண்டு மென்மேலும் சிறக்க வேண்டும். உலகெங்கும் போற்ற நல்வாழ்த்துக்கள்.. நன்றி..

  பதிலளிநீக்கு
 3. நல்ல செய்தி.மூன்று நாட்களும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
  விழாவில் என்றாவது ஒருநாள் சுமார் ஒரு மணிநேரம் வாய்ப்பளித்தால்
  எனது Power Point Presentation ல்
  1. தென் துருவம் -ஒரு அதிசய உலகம்.
  2.சரித்திரம் படைக்கத்த தயாராகும் சன்னாநல்லூர்.
  3.எண்ணத்தளவே வாழ்க்கை
  4.இராணுவப்பணி -ஒரு அற்புத வாழ்க்கை அனுபவம்
  ஆகியவற்றுள் ஏதாவது ஒரு தலையிப்பில் சுமார் 50 புகைப்படங்களுடன்
  உரை நிகழ்த்த விரும்புகிறேன்.
  முன்கூட்டியே தெரிவித்தால் அதற்க்கானத் தயாரிப்புகளுடன் வருவேன்.
  எனது வலைப்பக்கம்.
  colonelpaaganesanvsm.com
  pavadaiganesan.com
  pavadaiganesan.blogspot.com
  cell;9444063794,9884060671

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். இம்மாநாட்டு நிகழ்ச்சி நிரலை மீண்டும் பார்க்க வேண்டுகிறேன். மாநில மாநாடு, 2018தொடக்கத்திலிருந்து நடத்தப்பட்ட மாவட்ட மாநாடுகளில் – மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 20,000 உறுப்பினர்களிலிருந்து- தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 700 பிரதிநிதிகளுக்காகத் திட்டமிடப்பட்டது. இதை மாற்றவோ, இடையில் நுழைக்கவோ இயலாது.
   ஆனால், இம்மாநாட்டோடு கலை-இலக்கிய-சமூகப் பணிகள் முடிந்துவிட வில்லையே! தொடர்ந்து பல்வேறு தளங்களில், களங்களில் நடக்கும்.
   தங்களின் பணிகளை, ஏதாவதொரு மாவட்ட, கிளை நிகழ்வுகளில் நடத்தி அதை மாநிலம் முழுவதும் கொண்டுபோவதே அமைப்பின் நடைமுறை.
   எனவே தவறாக நினைக்காமல், தங்கள் அருகிலிருக்கும் தமுஎகச கிளை ஏதாவதொன்றில் இதனை முதலில் நடத்த முயலுங்கள். வாழ்த்துகள்.

   நீக்கு
  2. நன்றி ஐயா .
   அப்படியே செய்வேன்.

   நீக்கு
 4. நல்ல செய்தி.நான் பங்கு கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. மாநாடு சிறக்க வாழ்த்துகள் ஐயா. யூடியூப் இல் இனைந்துவட்டேன்

  பதிலளிநீக்கு
 6. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.யூ டியூப்பில் நானும் இணைந்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. புதுச்சேரியில் நடக்கவுள்ள தமுஎகச 14ஆவது மாநில மாநாடு “சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம்” கருதுகோள்களை வென்றெடுக்க மனதார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. பின்னூட்டமிட்ட, தமுஎகச வலைக்காட்சியில் இணைந்துகொண்ட இனிய தோழர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும். பணிகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 9. இனிய தோழர் முத்து நிலவன் அவர்களுக்கு, வணக்கம். த.மு.எ.க.ச. 14ஆம் மாநாட்டு அழைப்பிதழை தங்கள் வலைத்தளத்தில் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஜூன் 21 காலை மா நாட்டு அரங்கில் சந்திப்போம்.
  தோழமை வாழ்த்துக்களுடன்,
  செ. நடேசன்

  பதிலளிநீக்கு
 10. மாநாடு சிறக்க வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. சிறப்பு. விழா சிறப்புற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. தமு எ ச க .மாநில மாநாடு சிறக்க அன்பான வாழ்த்துகள். சந்திப்போம் ... அன்புடன் ,ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் ,கோவை .

  பதிலளிநீக்கு