குறுகத் தெறித்த ஐக்கூ குரல்!

(மு.முருகேஷ் எழுதிய  விரல்நுனியில்  வானம்’  ஐக்கூ கவிதை நூலுக்கு நான் எழுதிய முன்னுரை)
     ---------------------
(படம் - கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி)
---------------------------------

பூத்த வேங்கை வியன்சினை ஏறி        
 மயிலினம் அகவும் நாடன்        
 நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே! -- 
இதுதொல்காப்பியம்நன்னூல்இலக்கணப் புத்தகங்களி;ல் செந்தொடைக்கு எடுத்துக் காட்டப்படும் ஒரு செய்யுள்.  அதாவது எதுகை மோனை எதுவும் இல்லாமல்ஒரு செய்யுள் இருக்கலாம் எனும் இரண்டாயிரம் ஆண்டுக்காலக் கவிதை ஜனநாயகத்துக்கான’ ஒரு முன்னோடி!

 இலக்கிய வகைகளிலேயே சுருக்கமானது. எளிதில் யாரும் மேற்கோள் காட்ட நினைவில் நிற்கும் சுருக்க வடிவம் கொண்டது கவிதை. அதிலும் சுருக்கானது ஹைகூ. காலகாலமாய் வந்த வாழ்க்கை மாற்றங்களோடு கவிதை மாற்றமும் நடந்தே வந்துள்ளது.
பொதுவாகஎல்லா மரபுக் கவிதைகளும்நாலடியாக வருவது ஏற்கப்பட்டிருந்த போதே மூன்றடியில் சிந்தியல் வெண்பாவும் உண்டு. இரண்டடியில் குறள் வெண்பாவும் உண்டு.

தங்கம் மூர்த்தி கவிதைகள் பற்றிய ஆய்வு நூலுக்கு நான் எழுதிய முன்னுரை - நா.முத்துநிலவன்.கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளை ஆய்வு செய்து, மதுரைப் பல்கலைக் கழகப் பேரா. முனைவர்
ரவிசங்கர்  எழுதியுள்ள நூலுக்கான எனது முன்னுரை…
-- நா.முத்துநிலவன்

        (படம் - கவிஞர் தங்கம்மூர்த்தி)
----------------------------------------------------------------------------------
தங்கத்தை உரசி… 
கவிதையை அலசி
             கவிதையில் எதைச்சொல்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் ஒருகவிஞன் வெற்றியின் முதல்படியைத் தொட்டுவிடுகிறான். அதுபோலவே தனது ஆய்வுக்குரிய பொருளைத் தெரிவு செய்வதில் ஆய்வாளரின் முதல்படி அமைந்துவிடும். அந்த வகையில், இந்த ஆய்வாளர் முனைவர் செ.ரவிசங்கர் எடுத்துக்கொண்ட பொருளிலேயே தனது முதல் வெற்றியைப் பெற்றுவிட்டார் என்பதற்காக முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 தங்கத்தை உரசிப்பார்ப்பதும் தங்கம் மூர்த்தியின் கவிதையை அலசிப் பார்ப்பதும் ஒன்றுதான். இரண்டுமே மதிப்பீடுதான் என்றாலும், உரசிப்பார்ப்பவரின் நெஞ்சையே உருக  வைக்கும் திறன் தங்கத்துக்குக் கிடையாது தங்கம் மூர்த்தியின் வரிகளுக்கு அந்த சந்தனத் திறனும் உண்டு! ‘பொன்மலர் நாற்றமுடைத்து’-என்பது போல!

அந்த வகையில் உரசிப்பார்த்து தன் மனம் முழுவதும் நெகிழ்ந்து நிறைந்து போன தங்கம் மூர்த்தியின் ‘கவிமணத்தை’ நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் முனைவர் செ.ரவிசங்கர்.

‘அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ – என்று பாரதியும், ‘கழுதை அறியுமோ கற்பூர வாசைன?’ என்று நம் படிக்காத சகோதரர்களும் சொல்லும் சொல்லின் அர்த்தத்தில் ஆழம் அதிகம்! ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்பது கவியரசின் திருவாசகம் அல்லவா?

பொதுவாகவே சுருக்கமும் தெளிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவே என்றாலும், கவிதைக்கு சொற்சுருக்கம் பெரிதும் அவசியம். பால் சுண்டச்சுண்ட சுவையேறுவதுபோல கவிதையில் சொற்கள் சுருங்கச்சுருங்க அர்த்தமும் அழகும் கூடுவது இயல்புதானே? நான் பார்த்த வரை தங்கம் மூர்த்தி தன் கவிதைகளில் எந்த இடத்திலும் அனாவசியமான சொல்லுக்கு இடமளித்ததே இல்லை! பணக்காரத் தந்தையே என்றாலும், பணத்தின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தி சிக்கனமாக வாழும் சிறந்த ஒரு தந்தையைப் போன்றவர் கவிதையைப் பொறுத்தவரை.

சிக்கனம் வேறு கருமித்தனம் வேறு! நண்பர்களுக்கு அள்ளி இறைக்கும் மனம் கொண்ட மூர்த்தி, கவிதையில் மட்டும் சிக்கனமாக இருப்பது மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம்தான்!
 எத்திசையும் புகழ்மணக்க இருக்கும்பெரும் திருக்குறளின் கவித்திறனை எடுத்துரைக்க வந்த ஒளவை, ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த’ தாகச் சொல்லுவார். கவிஞர் வைரமுத்து நமது மகாகவி பாரதியைப்பற்றிச் சொல்லும் போது, ‘சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வச்ச கவிப்புலவா’ என்பார். இருவரும் மகாகவிகள் இருவரின் கவிதைகளிலும், எந்த இடத்திலும் எந்தச் சொல்லும் அனாவசியமாக இல்லை. அதிலும் வள்ளுவர், தன் குறளின் அசைச் சொல்லில் கூட அழகு சேர்த்தவர்!

வாழும் காலத்தில் இப்படி ஒரு கவிஞர் வரமாட்டாரா என்று நான் ஏங்கிக் கிடந்த வேளையில் என் கண்முன்னே எழுந்து வளர்ந்து விளைந்து நிமிர்ந்து நிற்பவர் மூர்த்தி என்பதில் எனக்கு மிகவும் பெருமை! அதிலும், ஒன்றிரண்டு கவிதைகளில் அல்லது ஓரிரண்டு தொகுப்புகளில் ஓய்ந்து காய்ந்து தூர்ந்து துவண்டு போய்விடும் கவிஞர்களே அதிகமாகிவிட்ட இன்றைய நாள்களில்,நான்கு தொகுப்புகளைத் தாண்டியும் இன்னும் கவியரங்குகளில் கலக்கிவரும் மூர்த்தியின் ஆற்றல் அபூர்வமான ரகம்!

 இப்படி ஒரு நல்ல கவிஞரின் கவிதைகளை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்ததற்காகவே முனைவர் செ.ரவிசங்கரைப் பாராட்ட வேண்டும். பொதுவாக ஒரு தொகுப்பைப் பாடம் வைப்போர், அவர் ‘நம்மவரா’என்று ‘பல்’வகை எதிர்பார்ப்புகளோடிருப்பது இன்றைய தமிழ்ச் சூழல்! ஆனால், முன் பின் அறிமுகமில்லாமலே எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பை --1993ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை, தமது எம்.ஏ. தமிழ் மாணவர்களுக்குப் பாடம் வைத்துவிட்டு என்னைத் ‘தேடிக் கண்டுபிடித்த’ நல்ல மனசுக்காரர் முனைவர்  இரா.மோகன். அவரது பெருமைமிகு மாணவர் - அதே மதுரைப் பல்கலையில் பணியாற்றிவரும் -- முனைவர் செ. ரவிசங்கர் தமது ஆசிரியரே போல இந்தவகைப் பண்போடு இருப்பது மகிழ்ச்சிக்குரியது! எடுத்துக்கொண்ட ஆய்வை உரிய இலக்கணத்தோடு செய்திருக்கிறார்!
‘தொகுப்புமுறை அணுகுமுறை,
விளக்கமுறை அணுகுமுறை’ என இவர் செய்திருக்கும் ஆய்வு அப்படியே இலக்கண சுத்தமானதன்றி வேறென்ன?

தன் கவிதைகள் தனது மனக்குமுறல்களே அன்றி சமுதாயம் பற்றித் தனக்குக் கவலையில்லை என்பதாகக் கவிஞர் சிலர் சொல்லிக்கொள்வதுண்டு! அவர்கள் நாட்குறிப்பை மட்டும் எழுதிவிட்டுப்போகலாம் அதைக் கவிதை என்று தொகுத்து அச்சிட்டு வெளியிட்டு நம்மைச் சிரமப்படுத்த வேண்டியதே இல்லையே! ஆனால், ‘எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்’ என்ற பாரதியின் உண்மை வாரிசுகளில் ஒருவரான தங்கம் மூர்த்தி, தன் எதிரிகளிடமும் கற்றுக்கொண்டு நண்பர்களுக்குச் சொல்பவர்! முன்பின் தெரியாதவரையும் சிறுபொழுதில் நண்பராக்கிவிடும் இனியபழகுமுறை இவருடையது. இதை அப்படியே உள்வாங்கிய ஆய்வாளர் ரவி சங்கர், “ கவிஞர் தங்கம் மூர்த்தி தனது கவிதையின் கருத்துகளில் தனிமனிதனின் தாகத்தை வளர்ப்பதைவிடவும் சமுதாயத்தின் அறிவுத் தாகத்தை வளர்க்கும் விதமாகத் தனது கவிதையைப் புனைந்துள்ளார்”(பக்:80) என மதிப்பிட்டிருப்பது மிகவும் சரியானது!

பொதுவாகத் தனது தனிமனித பாதிப்புகளையும் பொதுமைப்படுத்தி, பொதுவில் வைக்கக்கூடியவாறாகத் தனது படைப்பை நாகரிகப்படுத்துவதே நல்ல படைப்பு. அந்த வகையில், தனது பாதிப்புகளை எவ்வளவு அழகாக நாகரிகமாக வெளிப்படுத்தியுள்ளார் மூர்த்தி என்பது அவரைத் தெரிந்தவர்க்கே தெரியும். ஆனால், அவரது  தனிவாழ்க்கை பற்றி ஏதும் அறியாத நிலையிலும் கூட, இதைக் கவிதையிலேயே அதைக் கண்டு பிடித்து ஆய்வை நுட்பமாக்கி விட்டார் ஆய்வாளர்! அது இவரது ஆய்வின் சிறப்பாக உள்ளது.

ஒரே ஒரு இனிப்போடு தனது பரிமாற்றத்தை முடித்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த இனிப்பு வகைகளையும் எடுத்தெடுத்துப் பரிமாறும் அன்பான மனைவியைப்போல, தங்கம் மூர்த்தியின் கவிதைகளுக்கான விளக்கத்தைத் தனது பரந்த படிப்பறிவால் பல்வேறு நூல் சான்றுகளின் வழியே விளக்குவதும் ஒருவகை விருந்தாகவே தோன்றுகிறது. ஆவ்வகையில், மூர்த்தி கவிதைகளின் நேர்த்தியை கைலாசபதி, ச.அகத்தியலிங்கம், மா.இராமலிங்கம், ச.வே.சுப்பிரமணியன். கவிஞர் பாலா, முதலானோரின் மேற்கோள்கள், கவிஞர்கள் அப்துல்ரகுமான், சிற்பி மு.மேத்தா முதலானோரின் கவிதை வரிகள் போன்ற வற்றையும் எடுத்தாண்டிருப்பது ஆய்வாளரின் படிப்பை மட்டுமல்லாமல் பண்பையும் காட்டுகிறது.

 வெறும் சொற்கூட்டங்களைக் கவிதையாக்கித் தொகுப்புகளை விற்றுத் தள்ளுவோரும், வெறும் மேற்கோள்களை ஆய்வாக்கிப் ஆய்வுப்பட்டங்களை பெற்றுக் கொள்ளுவோரும் அதிகரித்துவரும்   தமிழ்ச்சூழலில் , நல்ல தொகுப்புகளைத் தேடி எடுத்து அதை நல்ல முறையில் ஆய்வுசெய்து வெளியிட்டிருக்கும் முனைவர் செ.ரவிசங்கர் அவர்களின் பணி தொடர்ந்து ஆழமும், வீரியமும் பெற்று வளர எனது வாழ்த்துகள்.

மிகுந்த அன்புடன்
தோள்களில் கரம் பதித்து,
நா.முத்துநிலவன்,
மாநிலத் துணைத் தலைவர்-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
புதுக்கோட்டை-622 004
அலைபேசி:94431 93293
மின்னஞ்சல்: muthunilavanpdk@gmail.com
-------------------------------------------------------------------- 

ஆர்.நீலாவின் கவிதைத் தொகுப்பு - நா.முத்துநிலவன் முன்னுரை

மூலிகைச்செடிபோலும் மண்வாசனைக் கவிதைகள்!
(ஆலங்குடி ஆர்.நீலா எழுதிய “வீணையல்ல நான் உனக்கு” கவிதை நூலுக்கு நா.முத்துநிலவன் எழுதிய முன்னுரை)

கவிஞர் நீலாவைப் பார்ப்பதற்குமுன்,  அவரது  கிராமிய மணம்கமழும் கவிதையைத்தான் நான் முதலில் பார்த்தேன்! 1991-'92ஆம் ஆண்டுகளில், புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தில், நாடகக் குழுக்கள்- பாடல்- ஒலி நாடா- பத்திரிகைக்குப் பொறுப்பான  மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்டு வந்தபோது,  "ஊர்கூடி..."எனும் மாத இதழை (House Magazine) நடத்தி வந்தோம். அது 25,000 பிரதிகள் அச்சிடப்பட்டு மாவட்டம்முழுவதும் நடந்த அறிவொளி வகுப்புகளுக்கு, தகவல் கூறியும் உற்சாகப் படுத்தியும் வந்தது. 
  அறிவொளி ஆசிரியர்க்கான அந்தஇதழின் ஆசிரியராக, இன்றைய தமிழக அரசின் உள்துறைச் செயலராக இருக்கும் திருமதி ஷீலாராணி சுங்கத் இ.ஆ.ப., அவர்கள், புதுக்கோட்டையின் அன்றைய மாவட்ட ஆட்சியராக இருந்து எங்களை சிறப்பாக வழி நடத்திவந்தார்கள். அறிவொளி அலுவலர்களும், ஒன்றிய-உதவி ஒருங்கிணைப்பாளர்களுமே அதிகமாக எழுதிவந்த அந்த இதழுக்கு வரும் படைப்புகளை, மற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துழைப்போடும், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடும் நான்தான் தேர்வு செய்து அச்சுக்குக் கொடுப்பது வழக்கம். அப்படி வந்த  கவிதைகளில் ஒன்றுதான் 'அறிவொளி முத்தம்மா'!(000) எனும் கவிதை!
                    குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பைப்போல, பார்த்தவுடனே நெஞ்சோடுவந்து 'பச்சக்கென்று' ஒட்டிக்கொண்டது கவிதை! நான் அதை மிகவும் ரசித்துப் படித்து, மாவட்ட ஆட்சியரிடம் காட்டினேன். பாசாங்கற்ற அந்தக் கவிதையால் கவரப்பட்ட அவர்கள், ‘எழுதியது யார்?’ என்று கேட்டபோது, "ஆர். நீலா என்று மட்டும்தான் இருக்கிறது வேறுவிவரம் இல்லை" என்றதும், தனது  நாட்குறிப்பில் அதை எழுதித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டு படித்து, ரசித்து, பெண்கள் கூடும் அறிவொளி நிகழ்ச்சிகளிலெல்லாம் அதைக்கூறி, "இதை எழுதிய நீலா யார்? இங்கே இருக்கிறாரா?" என்று  கேட்டுக்கேட்டு, கடைசியாக நீலாவைக் கண்டுபிடித்து என்னிடம் கூறினார்கள். நான் 'அந்த உருவத்தை'ப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். கவிதையைப் போலவே பாசாங்கற்ற முகம், பேச்சும் அப்படியே..."இந்த மாரிக்க   சா..ர்..." எனும் நீலாவின் பேச்சு -12 வருடம்கடந்து- இப்போதும் அப்படியே இருக்கிறார்!

                 கதை, கவிதை படிப்பதிலும் எழுதுவதிலும் இயல்பாகவே ஆர்வமாக இருந்த நீலா அதன் பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு நெருக்கமானதில் ஆச்சரியமில்லை.அப்போது த.மு.எ.ச. வின் மாவட்டச்செலராகவும் இருந்த நான், புதுக்கோட்டையில் நடந்த இலக்கியக் கூட்டங்களுக்கு நீலாவை அழைப்பதும் அவரும் வந்து கலந்துகொள்வதும், ஆலங்குடியில்  தமுஎச கிளை உருவானதும் இயல்பாகவே நடந்தது. அவருடன், அவரது கணவர் எங்கள் அருமை  நண்பர் சுபி, மகன்கள் சுதாகர்-பிரபாகர் மற்றும் ஆலங்குடியின் கலை இலக்கிய நண்பர்கள் அனைவருமே அறிவொளியோடும், தமுஎச வோடும் நெருக்கமாயினர்.

                  தற்போது 7,8 ஆண்டுகளாக -அனேகமாக ஆண்டுதோறும்- நடந்துவரும் ஆலங்குடி நகர தமுஎச கலை இரவுகளில் அயிரக்கணக்கில் மக்கள் கூடுவதை அந்தப் பக்கத்தைச்சேர்ந்த அனைவரும் அறிவர். ஆலங்குடி தமுஎசவின் தற்போதைய செயலரும்' அறிவொளி' ஓவியருமான  எஸ்.ஏ.கருப்பையா, பொருளாளரும் கவிஞருமான சு.மதி, மற்றும் 'விடியல்'கலைக் குழுவினர் அனைவரும் நீலாவின் மூலமாகவே எனக்கு அறிமுகமாயினர் - எங்கள் தோழமை உறவினருமாயினர்!

                   இந்த விதமாக, எழுதுவதிலும் இயங்குவதிலும் மட்டுமல்லாமல், தலைமைதாங்குவதிலும் ஒருசேர ஆர்வம் காட்டிய நீலா,அதன்பிறகு 'அவள்விகடன்', 'மகளிர்சிந்தனை', 'செம்மலர்', இதழ்கள் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் பரிசுபெற்றுச் சிறந்தார்/வளர்ந்தார்,

               ஆனந்த விகடன்’ பவளவிழா-கவிதைப் போட்டியில் நீலாவின் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யப்பட்டன! தற்போது புதுக்கோட்டை மாவட்ட வளர் அறிவொளி இயக்கத்தில் ஆலங்குடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராகவும், அவர் குடியிருக்கும் மங்களபுரத்தை உள்ளிட்ட குப்பக்குடி ஊராட்சியின் -மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட- உறுப்பினராகவும் -தமுஎசவின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக -மாநிலக்குழு உறுப்பினராக- வளர்ந்து, இலக்கியப்பணிகளையும் வளர்த்து வருகிறார்! இதெல்லாம் யாருடைய சிபாரிசிலும் அல்ல! அவர் வளர்த்துக்கொண்ட கலை இலக்கியத் திறனுக்கும் தலைமைப் பண்புக்கும் கிடைத்த பரிசுகள்!

 "காலம் அறிந்து கூவும் சேவலை
  கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது!
  கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும்
  கணக்காய்க் கூவும் தவறாது!" எனும்  பட்டுக்கோட்டையின் கருத்து உண்மையல்லவா?  என்னைச் சந்தித்திருக்கா விட்டாலும், இவருக்கு இந்த வளர்ச்சி கிட்டியிருக்கும் - ஏனெனில் இவர் சுயமாக வளரும் மூலிகைச் செடிபோன்றவர்!

                    ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே, வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாகக் கருதப்படுகிறாள் என்பதும், இன்றைய சமூகத்தின் முரண்பாடுகளில் முக்கியமானது. உண்மையில் ஆண்களைப் போலவே (இரண்டு கைகளோடும் இரண்டு கால்களோடும் ஒரே ஒரு வயிறோடும்) பிறக்கும் பெண் எப்படி அவளே அவளுக்குச் சுமையாகிப் போகிறாள்? இந்தியாவில் -தமிழ் நாட்டில்- பெண்ணாகவும் சற்றே கருப்பாகவும் பிறந்துவிட்ட பெண் குடும்பத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கே சுமையாகிப்போகிறாள்!

                     ஆனால், தன் எதிர்பார்ப்பு உள்ளத்தளவிலோ உடலளவிலோ நிறைவேறாதபோது, அடங்காத பெண்புலிகளாகி, அந்த உணர்வுகளையும் கொட்டித்தீர்த்துவிடும் பெண்கவிகள், அண்மைக்காலமாகத் தமிழ்க் கவிதை உலகில் புயல்கிளப்பி வருவதுதான் - இதுவரை தமிழில் கேட்டிராத புதுக்குரல்! "சங்க காலத்திற்குப் பிறகு -இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து- இந்த அளவிற்குப் பெண்கள் எழுத வாய்ப்புப் பெற்றுள்ளது

                     இப்பொழுதுதான்.பெண்கள் பார்வையில் நமது வாழ்க்கை இங்கே என்னவாக இருக்கிறது என்பது இப்பொழுது அழுத்தமாக வெளிப்படுகிறது" - பேரா.பஞ்சாங்கம்  (‘புத்தகம் பேசுது’ நேர்காணல்-செப்-04) இதையே, கடந்த 2004-செப்டம்பர் 11ஆம் தேதி, இந்திய சாகித்ய அகாதெமியின் பொன்விழாவையொட்டி, திருவனந்தபுரத்தில் நடந்த, 4 தென்மாநிலங்களுக்கான கருத்தரங்கில் நான் வாசித்த கட்டுரையிலும் கூறியிருந்தேன்!
                        முன்னெப்போதையும்விடப் பெண்குரல் சற்றே உயர்ந்தும், கலையழகோடும் தமிழ்க் கலை-இலக்கியத் துறையில் தற்போது வெளிப்பட்டு வருவதற்கு, ஜனநாயக இயக்கங்கள் அடைந்துள்ள வளர்ச்சி ஒரு முக்கியமான காரணம்.
                      மும்பையிலிருந்து புதியமாதவியும், புதுவையி லிருந்து மாலதி மைத்ரியும், சென்னையிலிருந்து கனிமொழி, இளம்பிறை, தாமரையும், வந்தவாசியிலிருந்து அ.வெண்ணிலாவும், திருத்தணியிலிருந்து ப.கல்பனாவும், துவரங்குறிச்சியிலிருந்து சல்மாவும், சிவகாசியிலிருந்து திலகபாமாவும், புதுக்கோட்டை -ஆலங்குடியிலிருந்து நீலாவும் நம்பிக்கையூட்டும் வகையில் தற்போது எழுதி வரும் பெண்கவிகள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

                        இன்னும் பெரிதான இந்தப் பெரும்படையில் மிகப் பெரும்பாலோர் இளைய கவிஞர்களே என்பது மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. உலக அளவிலும் புலம்பெயர் பெண்கவிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது!
                          இந்தத்தொகுப்பில் மிகப்பல கவிதைகள் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும்  -கவிதை ஆர்வலர்- அனைவர்க்கும் நிச்சயம் பிடிக்கும்!
                          பூக்களைப் போல, சிறகு விரிக்க, மரப்பாச்சி பொம்மைக்கும், கிரகணம், பொன்பார்க்கும் படலம், அறிவொளி முத்தம்மா, விமர்சனம், நமக்கும் வேணும், ஆராரோ, வீணையல்ல, சந்தேகம், தலைமுறை சோகம், கருவறை வேதனை - ஆகியவை ஒருமுறை படித்தவுடனே நெஞ்சில் பதிந்துவிடும் ஆழம் கொண்டவை.

பூக்களைப் போல்
வண்ணங்களோடு பிறக்கவும்,
வாசனையோடு இருக்கவும்
ஆசைதான்... ஆனால்,
நல்லவற்றை இணைப்பதெனில்,
நாராக இருக்கவும் சம்மதமே!
 -எனும் கவிதையில், இவர் ஒரு இலக்கியவாதி மட்டுமல்ல, சமூக இயக்கவாதியும் கூட என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்!


சிறகு விரிக்க சிரமமா?
குரலாவது கொடு கூண்டுக்கிளியே!
அழகு மட்டுமல்ல அலகும் இருக்கே!
 --எனும் கவிதை, இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, பெண்ணியவாதியும் கூட என்பதைக் காட்டிவிடுகிறது!


' நமக்கும் வேணும்' எனும் கவிதை, இவர் கவிஞர் மட்டுமல்ல, ''மாதர், 'தம்மை' இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' என்ற பாரதி வழிவந்தவர் என்பதைக் காட்டிவிவிடுகிறது!

மரப்பாச்சி பொம்மைக்கும் 
மாராப்பு போட்ட நிலம்,
நீலவான் நிலவிற்கும்

ஆடைகட்டிப் பார்த்த மனம்,
இன்று-
அவிழ்த்துப் போடுவதுதான்

அழகாம்! ... ...   ... ...
ஆடம்பரம் பெருக

ஐ.எம்.எ•ப் உதவ
எல்லா நாயும் காலைத்தூக்க

எம் தேசமென்ன-
தெருவோர நடுகல்லா? -எனும் கவிதையில், இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, சமூக அக்கறையுள்ள சுயமரியாதையுள்ள- 'தேசபக்தர்' என்பது தெரியவருகிறது!

'தாவணியின் தலைப்பை
விளையாட்டாய் முறுக்கும்போதும்,
கோவிலுக்குப் போகும்போது 

கூடுதலாய் அலங்கரிக்கும்போதும்,
தனியாக அமர்ந்து

பாடங்களை மனனம் செய்யும்போதும்,
அவனை நினைத்தே

அவ்வளவும் செய்வதாய்
அடித்துவிட்ட தந்தையே!

நீ அடித்தபிறகுதானப்பா
அவனை நினைத்தேன்' 
- (10.11.02-‘ஆனந்த விகடன்’) கவிதையும், அதே இதழில் வந்த 'விமர்சனம்' கவிதையும், இவரது நுட்பமான பார்வைக்கு நல்ல சாட்சிகள்!


ஆராரோ ஆரிவரோ எனும் 'போஸ்ட் மாடனிசக்' கவிதை ஆச்சரியமூட்டுகிறது! :
ஆலமரத்தூளியில்
அலறும் குழந்தைக்கு
மருளும் பறவைகள்!
வரப்பில் அவன்...
நீரோவின் •பிடிலாய்
கையில் குடை!

இயலாமையில் கசியும் அமுதம்
கால் பெருவிரலில்
சொட்டச்சொட்ட...
நெல்மணிகள் ரத்தத்துளிகளாய்
சிதற, மீண்டும் மீண்டும்
அவன் கழுத்து அறுபட்டது!

'முருங்கைத் தோழி' கவிதை, நற்றிணையையும், 'முன்னம் உனது நாமம் கேட்டான்' பக்தி இலக்கியத்தையும் நினைவூட்டி இவரது வேர்களின் ஆழத்தை விளக்கும் எனில், 'மெயில் விடுதூது', கவிதையும், 'தலைமுறை சோகம்' கவிதையும் இவரது சிறகுகளின் தூரத்தை விளக்கக் கண்டு, மகிழ முடிகிறது.

 'வீணையல்ல நானுனக்கு' எனும் தலைப்புக் கவிதை மிக அருமையானது. தாய் தந்தை தம் குழந்தகளை / கணவர் தன் மனைவியை 'வழி நடத்துகிறேன்' எனும் 'ஆர்வக் கோளாறில்' செய்யும் ‘அல்செயல்கள்’ இந்தத் தலைமுறையில் ஏராளம்! இந்தப் புரிதல் இல்லாததால் நடக்கும் குடும்பச் சிக்கல்கள் சமுதாயச்சிக்கலில் கொண்டுபோய் நிறுத்தி, குடும்பமும், சமூகமும் சேர்ந்தே சீரழிவதை நாம் பார்த்து வருகிறோம். கெட்ட எண்ணத்தோடு  செய்தால், திட்டலாம், திருத்தலாம். நல்ல எண்ணத் தோடும் கெடுதல் செய்ய முடியும் என்பதற்கு இன்றைய குடும்பங்களில்தான் எத்தனை உதாரணங்கள்! இதை நுட்பமாக எடுத்து, 'பாரதியை இன்றைய நிலைக்குக் கொஞ்சம் -வார்த்தைகளால்- தள்ளிவைத்து' எழுதப்பட்ட நல்ல கவிதையை முழுவதுமாகப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

இதேபோலத்தான், 'நாணமொன்றும் அச்சமொன்றும் நாய்கட்கும் வேண்டாம்' என்று ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய போதும், பாரதி நினைக்கப்பட்டான்! ஊமையராய்க் கிடந்த  நம் நாட்டு- வீட்டு- பெண்கள்தான் எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள் என்பதை, பாரதி பார்த்தால்  'தம் குழந்தைகளின் வளர்ச்சி' கண்டு’ நிச்சயமாக பூரித்துப் போய் ஒரு கவிதை எழுதியிருப்பான் என்றே தோன்றுகிறது!

 என் சரியை மட்டுமல்ல
 என் தவறையும்
நானே செய்துகொள்கிறேன்  எனும் வரிகள் புதிய சமூகத்துக்கான விதைகள்! இவை புதிய விழுதுகளை இறக்கும், அவையும் வேர் விடும், அதிலும் புதிய விழுதுகள் எழும்... எழவேண்டும்.

ஏற்கெனவே ஒரு சிறுகதைத்தொகுதியும், ஒரு கட்டுரைத்தொகுதியும் வெளியிட்டிருந்தாலும் கவிதையைப் பொறுத்தவரை, இதுவே இவரது முதல் தொகுதி. இன்னும் இன்னும் இவர் எழுதவேண்டும், எழுதுவார்! இந்த மூலிகைச்செடியின் வாசம், ஆலங்குடி தாண்டி, தமிழகம் முழுதும் மணம்பரப்ப வேண்டும் என வாழ்த்துகிறேன்.

            தமிழ்க் கவிதையின் பழைய அடையாளங்களை மட்டுமல்ல, நவீன போக்குகளையும் நன்கு உணர்ந்து எழுதியும் இயங்கியுஇம் வரும் இவர், இன்னும் இன்னும் உயர வேண்டும் எனவாழ்த்துகிறேன். தனக்கென ஒரு தமிழ்இலக்கிய இடத்தை இவரே தேர்ந்தெடுத்து அமர்வார் என்று நம்புகிறேன். அவ்வாறே வளர / வளர்க்க எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்,
நா.முத்து நிலவன்  
2003
பி.கு.-
(000) கிட்டத்தட்ட 25ஆண்டாகப் போகிறது -
இப்போதும் நினைவைவிட்டு நீங்காத
அந்த “அறிவொளிமுத்தம்மா” கவிதை- 

முதியோர் உதவித் தொகையை

முறையாகப் பெற்றுவந்த
முத்தம்மாப் பாட்டிக்கும்
தபால்காரத் தங்கையாவுக்கும்
ஏதோ தகராறு,
என்ன பாட்டி என்று
எதார்த்தமாகக் கேட்டேன்.
“அறிவொளி முத்தம்மான்னு நா
அழகாக் கையெழுத்துப் போட்டாலும்,
கைநாட்டயே போடச் சொல்றான்டீ
கட்டையில போறவன்”!?!?! --- ஆர்.நீலா.
----------------------------------------------------------

மகாநதி திரைப்படமும் குற்றப்பின்னணி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் – நா.மு.

பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் எல்லாரையும் நெருப்பை விழுங்கியதுபோல நிலைகுலைய வைத்த அந்த “மகாநதிதிரைப்படக் காட்சியில் நான் அழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜெயகாந்தன் கதை படித்துப் பலநாள் தூக்கமில்லா இரவுகளைக் கழித்ததுபோல இந்தப் படம்பார்த்தபின் சிலநாள் தூக்கமில்லாமல் தவித்திருக்கிறேன். உங்களில் சிலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.
மகள் 12வயதுச் சிறுமி, சில கயவர்களால் கடத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டு, கொல்கொத்தா பாலியல் சந்தையில் விற்கப்பட்டு விட்டாள். பலபாடு பட்டு மீட்டு வருவான் கதையின் நாயகன் கமல். அங்கும் பாலியல் தொழில் செய்யும் அந்தச் சகோதரிகளுக்குள் இருக்கும் மனிதாபிமானம், அவர்களின் ரத்த்த்தைக் குடிக்கும் சில பெரிய மனிதர்களுக்கு இல்லையே என்று யோசிக்கவைக்கும் காட்சி வரும்.

மோடி மஸ்தான் பராக்...! எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ...!

என்னைத் தேர்ந்தெடுத்த குஜராத் எக்கேடோ கெடட்டும்...

நம்ம ஊடகங்கள் அங்க உள்ள கோளாறையெல்லாம் மறைச்சு,


பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு சொல்றதையே
இன்னும் கொஞ்சம் விரிவா -விளம்பரம் மாதிரி தெரியாம- சொல்லத் தெரிஞ்சிக்கணும்!

குஜராத்தை விட்டு வரமாட்டேன்னு சொன்னா அந்தக் கிழவனுங்க கேட்டாத்தானே?

ச்ச்சும்மா அந்த அத்துவானிக் கெழவன் வாய அடைக்க நான் செஞ்ச வித்தைங்கோ அது...
அப்படித்தான் சொன்னேன்..
.2077வரைக்கும் சாரி 2017வரைக்கும் நான் குஜராத்தின் முதல்வராக இருப்பதற்காகவே என்னை மக்கள் முதல்வராகத் தேர்வுசெய்தார்கள்னு சொன்னேன்...
அதுக்கு என்னவா? இப்ப அங்க வேறொரு மஸ்தான இன்சார்ஜா போட்டாப் போச்சு.

முந்தி இப்படித்தான் “இநதியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா”ன்னு சொன்னது இப்பஉள்ள பசங்களுக்குத் தெரிஞ்சிருக்க ஞாயமில்லதான்.
அதனால “நரேந்திராதான் இந்தியா இந்தியாதான் நரேந்திரா“ன்னு ஒரு புது கோஷம் தயார்ப் பண்ணியிருக்காங்க நம்ம பசங்க... நரேந்திரன் கிறது –இப்ப 150ஆவது ஆண்டு கொண்டாடுற விவேகானந்தரோட அசல் பேருங்கிற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? அவருதான் இப்ப நம்ப பேருல வந்து இறங்கியிருக்காருங்கோ.... எங்க எல்லாரும் ஜோரா ஒரு தடவ கைதட்டுங்கோ...

டீக்கடை பெஞ்சிலிருந்து நேரா டெல்லி செங்கோட்டை வுடு ஜூட்....
ஆமா... வர்ர தேர்தல்ல
குண்டக்க மண்டக்க ஏதாவது நடந்து
டெல்லி கொஞ்சம் தள்ளிப் போயி...
உள்ள குஜராத்தும் போச்சுன்னா...
“ஆகா...வட போச்சே!”  
அட மாப்பூ!
உள்குத்துல வச்சிட்டாங்கெடா
ஆப்பு ங்க வேண்டியதுதான்...!

சரி... இது என்ன? பழைய வழியில்லயா புதுவழி...?
பழைய வழி.. அயோத்தி தானே?
நோ நோ...
அது போன தேர்தல் வழி... அயோத்திவழி!
இது இந்த தேர்தல்... வழி கோத்ரா...வழி.
வா சகோத்ரா சாரி சகோதரா!
அமெரிக்கா போக முடியாத கடுப்புல 
ஈரோடு போயி்டாதே, திருச்சி வந்துடு!
திருச்சி அழைக்கிறது...! திரும்பிப்பாக்காம வா...!
---------------------------------------------------------------
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய பின் வரும் படைப்பு இப்பவும் எவ்வளவு பொருத்தமா இருக்குனு எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்கு... அவரு எழுதினதைப் படிச்சுப் பாருங்க... இதோ-
“கொட்டு அடித்து ஊரைக் கூட்டினான் மோடி மஸ்தான். இதோ பாருங்க, இங்கே பாருங்க..என்று எல்லோர் முன்பும்தான்   அந்தக் காரியத்தை செய்தான்.  கையிலிருந்து கூரான வாளை இன்னொரு மனிதனின் கழுத்தில் வைத்தான்.  ”ஜெய்..என உரக்கக் கூவி அறுத்தான்.   வதைபடுபவனின் கை கால்கள் துடிதுடித்தன. எந்தச் சலனமுமற்ற மோடிமஸ்தானின் முகமெங்கும் மனித ரத்தம் தெறித்து வழிந்தோடியது.  வெட்டப்பட்ட தலையை கையில் தூக்கி எல்லோருக்கும்  காட்டினான்.  முகம் பொத்தியும், பதைபதைத்தும் நின்றது கூட்டம்.

வெறி பிடித்தவனாய் சுற்றிச் சுற்றி வந்தவன் மெல்ல அடங்கினான். மீண்டும் கொட்டு அடித்து  “இதோ பாருங்க, இங்கே பாருங்கஎன்று உரக்கக் கத்திவிட்டு, தன் முகத்தை ஒரு வெள்ளைத் துண்டால் மூடி அப்படியே உட்கார்ந்தான். மயான அமைதியோடு வெறித்துப் பார்த்தது கூட்டம்.  துண்டை விலக்கியபோது  அவன் முகத்தில் ரத்தக் கறைகள் இல்லை.  சாந்தமாய் புன்னகைத்தான். ஜெய்...என ஓங்காரக் கூரலிட்டு எழுந்து கைகளை பரிசுத்தமானவனாய் விரித்தான்.  வித்தையை மெச்சி சிலர் கைதட்டினார்கள்.

கீழே ஒரு தலையும், முண்டமும் தனித்தனியாகத் தரையில்  கிடந்தன. கைதட்டியவர்களின் உள்ளங்கைகளில் ரத்தம் அப்பியிருந்தது
--------------------------------------------------------------
இதற்கு அப்போதே பின்னூட்டமிட்டிருந்த
எழுத்தாளர் எஸ.வி.வேணுகோபாலன் சொன்னது இது -

அருமை மாதவ்..
வேறு வார்த்தைகள் இல்லை...

வேண்டுமானால் இப்படி சேர்த்துக் கொள்ளலாம்..

அவர்கள் கைதட்டிக் கொண்டிருந்த போது மஸ்தான்
மேலும் பேசலானான்:

வெட்டுண்டவனின் வலியையோ, அவனது தீனக் குரலையோ
நான் கேட்கவில்லை என்று எப்படி அவர்கள் சொல்ல முடியும்...
அவரவர்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என்பதை நான் இப்போதும் உரக்க முழங்குகிறேன்.. சொல்லப் போனால், இம்மாதிரி சமயங்களில், நீதியை எனது
கொலைக் கருவிகள் மூலமே நான் வழங்குவது வழக்கம்..

இப்போது, கை தட்டியவர்கள் அப்படியே உணர்ச்சிப் பெருக்கால்
கதறி அழுது கொண்டே குரல் எழுப்பினார்கள்: மஸ்தானை பிரதம ஸ்தானத்தில் ஏற்றி வை, சீக்கிரம்..

எஸ் வி வேணுகோபாலன்
-----------------------------------------------------------
ஞானிகள் மட்டுமல்ல
சிலநேரம் சமூக விஞ்ஞானிகளும் கூட
பின்னர் நடப்பதை முன்னதாகவே
முன்கூட்டியே சொல்லிவிடுகிறார்கள்.

நமக்கு இரண்டு வேண்டுகோள்கள்-
1.எழுத்தாளர் மாதவராஜ் தன் மௌனம் கலைந்து 
மீண்டும் எழுதத் தொடங்க வேண்டும்!
2.எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் 
ஒரு வலைப்பக்கம் தொடங்கி
தன் எழுத்துகள் அனைத்தையும் 
எல்லாரும் தொடர்ந்து படிக்கத் தரவேண்டும்
-----------------------------------  

தாய் மொழியைப் புறக்கணித்து அன்னிய மொழியைக் கற்கிறோம்


First Published : 24 September 2013 02:37 AM IST
தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு, அன்னிய மொழியைக் கற்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா. முத்துநிலவன்.
பட்டுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற பாரதி விழாவில் மேலும் அவர் பேசியது:
உலகச் செம்மொழிகளில் பழமை வாய்ந்த தமிழ் மொழியும் ஒன்று. ஆனால் சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அன்னிய மொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். மொழி வழிக்கல்வி பிரச்னையில் சிக்கித் தவிக்கிறோம். தாய்மொழியை புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தில் கல்வி கற்பதை காணும் போது என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்றார் அவர்.
விழாவுக்கு பட்டுக்கோட்டை பாரதி இயக்கத் தலைவர் புலவர் அ.த. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
கௌரவத் தலைவர் மருத்துவர் மு. செல்லப்பன், தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் ஞானதிரவியம், கவிஞர்கள் வல்லம் தாஜூபால், சௌ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் இலக்கிய மன்ற நிர்வாகி நா. ராஜமோகன் வரவேற்றார். பட்டுக்கோட்டை பாரதி இயக்கச் செயலர் சிவ. தங்கையன் நன்றி கூறினார்.

நன்றி 

http://dinamani.com/edition_trichy/tanjore/2013/09/24/

குறிப்பு-

எனது முழுப் பேச்சையும் விடியோப் பதிவாக்கி உள்ளுர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்த நண்பர் சிவ.தங்கையன் அதை நமது வலையேற்றத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அதுவரை மிகவும் ஈர்த்த பாரதியின் பாடலை விடியோவாக்கியிருக்கும் -யாரென்று தெரியாத நண்பர்களுக்கு நன்றி சொல்லி -அந்தப் பாடலைப் பார்ப்போம் -

நன்றிக் குறிப்பு-

http://www.youtube.com/watch?v=M1J9eCusFTQ

------------------------------------------------------- 

பட்டுக்கோட்டை பாரதிவிழாவுக்கு வருக!

பட்டுக்கோட்டையில் பாரதிவிழா!
22-09-2013-ஞாயிற்றுக் கிழமை மாலை பட்டுக்கோட்டையில் நடைபெறும் “பாரதி இயக்கம்” நடத்தும், பாரதிநினைவுநாள் கருத்தரங்கில் சிறப்புரையாற்ற என்னை அழைத்திருக்கிறார் பட்டுக்கோட்டையின் புகழ்பெற்ற ஓவியரும் விமர்சகரும் --தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் அதிகாரியுமான- சிவ.தங்கையன்.

பட்டுக்கோட்டை மற்றும் அருகில் இருக்கும் நமது வலையுலக நண்பர்கள், முகநூல் நண்பர்கள் வருக!

எனவே திங்களன்றுபுதியன காண்போம்...

அது வரை... நேற்று நடந்த “தேசிய கவி பாரதி நினைவுநாள் விழா மற்றும் தேசிய விருது பெற்ற கவி தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா” படம் ஒன்றைச் செய்தியுடன்  ஏற்றிவிட்டுச் செல்கிறேன்...
--------------------------------------------------------- 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் திருக்கோகர் ணம் கிளை சார்பில் மகா கவி பாரதியார் விழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்திக்கு பாராட்டு விழா, கவியரங் கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆக்ஸ் போர்டு கேட்டரிங் கல்லூரி யில் நடைபெற்ற இவ்விழா விற்கு கிளைத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகித்தார். செயலாளர் செ. சுவாதி வரவேற்றார். தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் தங்கம் மூர்த்திக்கு நினைவுப் பரிசு வழங்கி கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார்.தமுஎகச மாவட்டச் செயலாளர் ரமா ராம நாதன், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.நீலா, மாவட் டப் பொருளாளர் சு.மதியழ கன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர்கள் கஸ்தூரிநாதன், கீதா, ஸ்டாலின் சரவணன், சிவா, மேகலைவா ணன், பீர்முகமது உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். பாவலர் பொன்.க., மீனா சுந்தர் ஆகியோர் விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினர். கவிஞர் தங்கம் மூர்த்தி ஏற்புரை வழங்கினார். கிளைப் பொருளாளர் மகா.சுந்தர் நன்றி கூறினார். தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கம்பன் கழகச் செயலர் இரா.சம்பத்குமார், தமிழாசிரியர் கழகத் தலைவர் திருப்பதி, செயலாளர் குருநாதசுந்தரம், இணைச்செயலர் முனைவர் துரைக்குமரன், டீம் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சலீம், அறிவியல் இயக்கம்  பாலகிருஷ்ணன், பி.எஸ்.கே.கருப்பையா, ஆக்ஸ்போர்டு சுரேஷ், கலைஇலக்கியப் பெருமன்றம் செம்பை மணவாளன், மீரா.செல்வகுமார், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாபு, பாவேந்தர் பள்ளி ஆர்.எஸ். காசிநாதன், நண்பர்கள் சங்கம் முத்துச்சாமி, ஆசிரியர்கள் முனைவர் அய்யாவு, எம்.எஸ்.ஆர்.ரவி, ஓவியர் புகழேந்தி, கலையரசி, “ஆனந்தஜோதி” மீரா சுந்தர், “பார்வை” இசைப்பள்ளி உறரிமோகன், கவிஞர் சுரேஷ்மான்யா, கவிராஜன் அறக்கட்டளை முருகபாரதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

  
படத்தில் -இடமிருந்து-தமுஎகச மாவட்டப் பொருளாளர் சு.மதி, திருக்கோகர்ணம் கிளைத்தலைவர் கவிஞர் எஸ்.இளங்கோ, நா.முத்துநிலவன், விருதுபெறும் கவிஞர்-தேசிய நல்லாசிரியர்-தங்கம் மூர்த்தி, திருமதிஅஞ்சலிமூர்த்தி, திருக்கோகர்ணம் தமுஎகச செயலர் கவிஞர் சுவாதி, மாவட்டச் செயலர் கவிஞர் ரமா.ராமநாதன் ஆகியோர்.

நன்றி - https://www.facebook.com/subramanian.ramakrishnan.3
“தீக்கதிர்” நாளிதழ் 22-09-2013 (மதுரைப் பதிப்பு),
“தினமணி”நாளிதழ் 23-09-2013 (திருச்சிப் பதிப்பு)
------------------------------------------------- 
மீண்டும் சுவையான தகவல்களோடு ”இந்தவாரம்...”பகுதியில் திங்கள் மாலை சந்திப்போம்... 

தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா - அழைப்பிதழ்.

இந்த வாரம் ...

தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா - அழைப்பிதழ்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும்
நம் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டுவிழா நடத்த வேண்டும என்னும் என் விருப்பத்தை புதுக்கோட்டை-திருக்கோகர்ணம் கிளைச் செயலரும், சிறந்த கவிஞருமான சுவாதி அவர்களிடம் தெரிவித்தேன்.
(ஏனெனில், புதுக்கோட்டை நகரக் கிளையின் தலைவர் தங்கம் மூர்த்தி.. அவரிடம் எப்படி அவருக்கான பாராட்டுவிழாவை நடத்தச் சொல்ல முடியும்? எனவே அடுத்துள்ள கிளையை அணுகியது தவறல்லவே?)

கவிஞர் சுவாதியும் கவிஞர் இளங்கோவும், தங்கம் மூர்த்தி மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால்...
இதோ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...
அழைப்பிதழும்-விளம்பரப் பதாகையும் நண்பர்கள் பார்வைக்காக...

இயல்வோர் நேரில் வந்தே அவரை வாழ்த்தலாம்...

விழாவிற்கு வர இயலாதவர்கள் இந்த  வலைப்பக்கத்தின் பின்னூட்டத்திலும், முகநூல் வழியாகவும் வாழ்த்துங்கள்...
இதோ அழைப்பிதழ்
--------------------------------------------------- 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம்
திருக்கோகர்ணம் கிளை
20-09-2013 மாலை 6மணி
ஆக்ஸ்போர்ட் கேட்டரிங் கல்லூரி-யில்
கவிதைகளின் காற்று வீசப்போகும்
ஒரு மாலை
உங்களை வரவேற்கிறது....
பாட்டரசன்
பாரதி-யை
நினைத்துப்பார்ப்போம்.
விருதுக்குப் பெருமை சேர்த்த
நம்
தங்கம் மூர்த்தி-யை
கவிதைகளால்
கவுரவப்படுத்துவோம்..
முத்துநிலவனின்
முழுவுரைக்கு
செவிமடுப்போம்...
விழா
எப்போதும் போல் சிறக்க..
வேறென்ன வேண்டியிருக்கிறது?..
உங்கள் வருகையைத்தவிர.......
கரங்களுக்கு...
முன் தினம்
முழு ஓய்வு கொடுங்கள்..
அதிகமாய் தட்டவேண்டியிருக்கும்..
கவனமாய் வாருங்கள்..
நீங்களும்
கவிதைகள்
கொட்டவேண்டியிருக்கும்...
-
கிளைக்காக
அழைப்பேந்தி...
செ.சுவாதி செயலாளர்
எஸ்.இளங்கோ தலைவர்
விழாவிற்கு மேலும் ஒளியேற்ற...
பிரகதீஸ்வரன்...ரமா ராமனாதன்..ஆர்.நீலா...மதியழகன்
-------------------------------- 
இது போதுமா? இதோ வரவேற்புப் பதாகை 
------------------------- 

கவிஞர் எட்வின் உரை கேளுங்கள்..

“நோக்கும் இடமெல்லாம் நாமன்றி...” எனும் வலைப்பக்கம் வைத்துத் தரமாக எழுதிவரும் கவிஞர் எட்வின் அவர்கள் இந்தவாரம் சுட்டிவிகடன் இதழின் வழியாக வாசகர்களுடன் பேசுகிறார்..

04466802905 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு லெனின் குறித்த அவரது உரையைக் கேட்கலாம்...
அவரது உரை கேட்டு  அவரது வலைப்பக்கமும்  http://www.eraaedwin.com/ சென்று பார்த்து,
இரா.எட்வின் அவர்களிடம் பேச... 9842459759
---------------------------------------------