தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா - அழைப்பிதழ்.

இந்த வாரம் ...

தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா - அழைப்பிதழ்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும்
நம் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டுவிழா நடத்த வேண்டும என்னும் என் விருப்பத்தை புதுக்கோட்டை-திருக்கோகர்ணம் கிளைச் செயலரும், சிறந்த கவிஞருமான சுவாதி அவர்களிடம் தெரிவித்தேன்.
(ஏனெனில், புதுக்கோட்டை நகரக் கிளையின் தலைவர் தங்கம் மூர்த்தி.. அவரிடம் எப்படி அவருக்கான பாராட்டுவிழாவை நடத்தச் சொல்ல முடியும்? எனவே அடுத்துள்ள கிளையை அணுகியது தவறல்லவே?)

கவிஞர் சுவாதியும் கவிஞர் இளங்கோவும், தங்கம் மூர்த்தி மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால்...
இதோ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...
அழைப்பிதழும்-விளம்பரப் பதாகையும் நண்பர்கள் பார்வைக்காக...

இயல்வோர் நேரில் வந்தே அவரை வாழ்த்தலாம்...

விழாவிற்கு வர இயலாதவர்கள் இந்த  வலைப்பக்கத்தின் பின்னூட்டத்திலும், முகநூல் வழியாகவும் வாழ்த்துங்கள்...
இதோ அழைப்பிதழ்
--------------------------------------------------- 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம்
திருக்கோகர்ணம் கிளை
20-09-2013 மாலை 6மணி
ஆக்ஸ்போர்ட் கேட்டரிங் கல்லூரி-யில்
கவிதைகளின் காற்று வீசப்போகும்
ஒரு மாலை
உங்களை வரவேற்கிறது....
பாட்டரசன்
பாரதி-யை
நினைத்துப்பார்ப்போம்.
விருதுக்குப் பெருமை சேர்த்த
நம்
தங்கம் மூர்த்தி-யை
கவிதைகளால்
கவுரவப்படுத்துவோம்..
முத்துநிலவனின்
முழுவுரைக்கு
செவிமடுப்போம்...
விழா
எப்போதும் போல் சிறக்க..
வேறென்ன வேண்டியிருக்கிறது?..
உங்கள் வருகையைத்தவிர.......
கரங்களுக்கு...
முன் தினம்
முழு ஓய்வு கொடுங்கள்..
அதிகமாய் தட்டவேண்டியிருக்கும்..
கவனமாய் வாருங்கள்..
நீங்களும்
கவிதைகள்
கொட்டவேண்டியிருக்கும்...
-
கிளைக்காக
அழைப்பேந்தி...
செ.சுவாதி செயலாளர்
எஸ்.இளங்கோ தலைவர்
விழாவிற்கு மேலும் ஒளியேற்ற...
பிரகதீஸ்வரன்...ரமா ராமனாதன்..ஆர்.நீலா...மதியழகன்
-------------------------------- 
இது போதுமா? இதோ வரவேற்புப் பதாகை 
------------------------- 

கவிஞர் எட்வின் உரை கேளுங்கள்..

“நோக்கும் இடமெல்லாம் நாமன்றி...” எனும் வலைப்பக்கம் வைத்துத் தரமாக எழுதிவரும் கவிஞர் எட்வின் அவர்கள் இந்தவாரம் சுட்டிவிகடன் இதழின் வழியாக வாசகர்களுடன் பேசுகிறார்..

04466802905 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு லெனின் குறித்த அவரது உரையைக் கேட்கலாம்...
அவரது உரை கேட்டு  அவரது வலைப்பக்கமும்  http://www.eraaedwin.com/ சென்று பார்த்து,
இரா.எட்வின் அவர்களிடம் பேச... 9842459759
--------------------------------------------- 

11 கருத்துகள்:

 1. பாராட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  பாராட்டு விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. கவிஞர் தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுக்கள். விழா சிறக்க வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 4. தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பாராட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துத் தெரிவித்த சே.குமார், ரூபன், கரந்தை ஜெயக்குமார், திண்டுக்கல் தனபாலன் ஆகிய நம் நண்பர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. கவிஞர் தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுக்கள். விழா சிறக்க வாழ்த்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 7. தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டு விழா இனிதே நடைபெறவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. அய்யா தங்கம் மூர்த்தி அவர்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். விழாவுக்கு ஏற்பாடு செய்ய தன் விருப்பத்தைத் தெரிவித்தத் தங்களுக்கும்,விழாவுக்காக விழி உறக்கம் மறந்துப் பணிபுரியும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள்....அவர்களுக்கும் தங்களுக்கும்..

  பதிலளிநீக்கு
 10. அய்யா என்க்கு இன்னும் பாராட்டு குவிகிறது. பாராட்டு நடத்தியதற்கு பாராட்டு. அது தான் நம் தங்கம் மூர்த்தி யின் வெற்றி

  பதிலளிநீக்கு
 11. விழா சிறக்க வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி

  பதிலளிநீக்கு