நமது பழமொழிகள், அனுபவத்தின் சாரம்தான். சந்தேகமில்லை.
ஆனால்,
சில தவறான பழமொழிகளும் நம்மிடையே உள்ளன.
எது சரி எது தவறு என்று பிரித்துப்
பார்த்துப் புரிந்துகொள்ளத் தெரியா விட்டால் நல்ல சில முயற்சிகளும் தவறாக முடிந்துவிடக்
கூடும்.
இப்படித்தான், “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்றொரு
தவறான பழமொழி தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் உள்ளது. First
Impression is the Best Impression என்பதுதான் அது!
(ஒரு தமிழ்ப்பட நாயகன் தனுஷ், ஒருபடத்தில் “சிலபேர பார்த்தவுடனே புடிக்கும், சிலபேரைப் பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும்” என்பாரே!)
இது “முயற்சி திருவினை ஆக்கும்” எனும் நமது நல்ல குறளுக்கும்
எதிரான பழமொழியே ஆகும். அல்லது விதியை வலியுறுத்த வரும்.
இதை மாற்ற வேண்டும். பல நல்ல முயற்சிகள் தோல்வியில்
முடிவதுண்டு. அதனால் முயற்சியைக் கைவிட வேண்டாமே?
மீண்டும் மீண்டும் முயலும்போது வெற்றி நிச்சயமாக வசப்படும். இதை நான் பலமுறை மேடைகளில் சொன்னதும் உண்டு.
இதோ – அதற்கு வலுச்சேர்ப்பதுபோல இதோ சில சான்றுகள்…
Steve Jobs ஸ்டீவ் ஜாப்ஸ் |
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், 1985இல் இவர் அந்நிறுவனத்திலிருந்து அகற்றப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இணைந்தார், 2015இல் $700பில்லியன் வரவு-செலவு கொண்ட நிறுவனமாக வந்ததை உலகறியும்.
Charlie Chaplin சார்லி சாப்ளின் |
Henry Ford - ஹென்றி ஃபோர்டு |
இவரது
ஃபோர்டு மோட்டார் நிறுவனம்,
ஒரே ஆண்டுக்குள் தோல்வியடைந்து
மூடப்பட்டது. பின்னர் உலகின் புகழ்வாய்ந்த மோட்டார் தொழிலின் உலக முன்னோடியாக இவரது
அனுபவமே இவரை வளர்த்து விட்டதைத்தான் நாமறிவோமே?!
Akio Morita -அகியோ மாரிடா |
Masaru Ibuka உடன் இணைந்து, இவர் துவங்கிய
சோனி, 1946இல் தயாரித்த automatic rice cooker தோல்வியில் முடிந்தது. தற்போது பல்வேறு மின்னணுப் பொருள் தயாரிப்பு,
மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
JERRY YANG ஜெர்ரி யாங் |
யாஹூ இணையக் குழுமத்தின் இணை நிறுவனர், தலைமை நிர்வாகி. சரியான வருவாயில்லாததால்,
அவர் 2012 ல் முற்றிலும் யாஹூவை விட்டு விலகி தொழில்நுட்ப ஆலோசகராக மாறினார்.
தற்போது புகழ்பெற்ற முதலீட்டு வழிகாட்டியாக உள்ளார்.
David Neeleman டேவிட் நீல்மன் |
2007 இல் ஜெட்-ப்ளூ நிறுவனர் இலாபக்குறைவு, சேவை பிரச்சினைகளால்,
நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போது, குறைந்த கட்டணத்தால் புகழ்பெற்ற
அசு விமானக்
குழும அதிபர் இவர்.
குழும அதிபர் இவர்.
Soichiro Honda - சொகிரோ ஹோண்டா |
இன்றைய ஹோண்டா மோட்டார் நிறுவனரான சொகிரோ, முன்னர் ஒரு முறை, பொறியாளர் வேலைக்கு தகுதி இல்லாதவர் என்று டொயட்டோ மோட்டார் நிறுவனத்தால் முன்னர் நிராகரிக்கப்பட்டவர்!
Harland David Sanders டேவிட் சாண்டர்ஸ் |
தற்போது
உலகம் முழுவதும் 18,000 மையங்களைக் கொண்ட, கேஎஃப்சி நிறுவனர் கர்னல்
டேவிட் சாண்டர்ஸின் பொறித்த கோழியை பல்வேறு உணவகங்கள் நிராகரித்தன.
Michael Jordan மைக்கேல் ஜோர்டான் |
உயர்நிலைப்பள்ளி அணிக்குத் தேர்வுபெறாத மைக்கேல் ஜோர்டான், 1991, 92, 93ஆம் ஆண்டுகளில் கூடைப்பந்தில் மிகச் சிறந்த வீரராக மும்முறை தொடர் விருதுகளைக் குவித்தார்.
Steven Spielberg - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் |
ஈ.ட்டி, ஜாஸ், ஜூராசிக் பார்க் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்த உலகப் புகழ் இயக்குநர், அமெரிக்காவின்
தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகம் இவரது அரங்கம், திரைப்படம், மற்றும் தொலைக்காட்சிப்
படிப்புக்கான விண்ணப்பத்தை மூன்றுமுறை நிராகரித்தது பழைய கதை!
----------------------------------------------------------
இப்பச் சொல்லுங்க,
முயற்சி திருவினையாக்கும் என்பது சரியா?
முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது சரியா?
முயற்சி தோல்வியடையலாம்,
மீண்டும் முயல்வது வெற்றியைத் தரும்
என்பதுதானே சரி?
என்பதுதானே சரி?
ஆங்...அது!
---------------------------------------------------------
இந்தப் படங்களுடன் கூடிய இத்தகவலை
ஆங்கிலத்தில் அனுப்பி உதவிய
மாநிலங்களவை உறுப்பினர்
தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்களுக்கு
நன்றியும், மொழிபெயர்ப்பில் உடனிருந்த
கூகுளார்க்கு வணக்கமும்.
(தவறிருந்தால் மன்னிக்க வேண்டாம், சுட்டிக்காட்டினால் தி்ருத்திக்கொள்ளலாம். இதுவும் ஒரு முயற்சிதானே?)
------------------------------------------------------
முயற்சி திருவினையாக்கும்...
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் ஐயா...
அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குமைக்கேல் ஜோர்டன் - இந்தியக் கூடைப்பந்தட்டத்தின் மிகச் சிறந்த வீரர் - இவர் அமெரிக்கக் கூடைப் பந்தாட்ட வீரர்.
எனக்கும் படத்தைப் போடும்போது இந்தச் சந்தேகம் வந்தது நண்பரே! மண்டேலாவோட மச்சான் மாதிரி இருக்காரே..இவர் எப்படி இங்கன்னு? சரிதான். மாற்றிவிடுகிறேன் நன்றி
நீக்குஅருமையான தகவல்கள். மறைந்த ஹோண்டா தலைவர் பற்றியும் போர்ட்டு தகவல்களை தவிர மற்றவை நான் அறிந்திராதவை.
பதிலளிநீக்குதனுஷ் ஏன் இங்கே வந்தார்? அவரும் சாதனையாளர் என்று தமிழர்கள் நம்பிவிட போகிறார்கள்.
அருமையான தொகுப்பு ஐயா. மொழிபெயர்ப்பில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவை போன்ற பல பதிவுகளை ஆங்கிலத்தில் படித்தாலும் பகிர நேரம் கிடைக்கவில்லை. வித்தியாசமான தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமாற்றி யோசித்தமைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமுயற்சி திருவினையாக்கும் என்பதே சரி.
பதிலளிநீக்குகே.எஃப்.சி-யின் தயாரிப்பாளரான கார்னல் பலமுறை தோல்வி அடைந்தார் ஆம் அவரது 65-வது வயதின் முயற்சியில் தான் கே.எஃப்.சி வெற்றி அடைந்தது ஐயா.
நேரம் பயனுள்ளதாகவும் ஒரு தூண்டுதலாகவும் அமைந்தது நன்றி ஐயா.
முயற்சி திருவினையாக்கும்
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி
அருமையான பதிவு தகவல்கள்! வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே அறிஞர்கள் பலரும் இடைவிடாத முயற்சியால்தான் ராபர்ட் ப்ரூஸ் கதைதான் நினைவுக்கு வருகிறது அதன் அடிப்படைதான்...நல்லதொரு சிந்தனை!!!
பதிலளிநீக்குஅருமை ஐயா! புதிய உதாரண மனிதர்களை காட்டியது அருமை.
பதிலளிநீக்கு"சிலரை பாக்க பாக்கத் தான் புடிக்கும்" என்ற தற்கால திரைப்பட வசனத்தை காலத்திற்கேற்ப சுட்டிக் காட்டியது தங்களுக்கே மட்டுமே வரும்.. எங்கிருந்தாலும் நல்ல விஷயங்கள் உங்கள் கண்ணில் பட்டுவிடுவதும அதை உரிய நேரத்தில் சொல்வதும் தங்களின் தனிச் சிறப்பு ஐயா!
தெயவத்தால் ஆகாதெனினும்.....
பதிலளிநீக்குமெய் வருத்தக் கூலி தரும்.
உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றி எனும் மாளிகையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்.