ஷாருக் கானுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?!?!

 “பெரியகூடை”யோடு 
காய்கறி விற்கிறார் ஷாருக்கான்!

இந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்!
பார்க்காமல் இருக்க முடியாத அளவுக்கு,
அனைத்துத் தொலைக்காட்சிகளிலும்
வந்துகொண்டிருக்கிறது இந்த விளம்பரம்!

(பெண்களைக் கவர ஷாருக், ஆண்களைக் கவர இளம்பெண்!
அடடா.. என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா…!)

ஷாருக்கான் வாங்குகிறார்… அப்ப நீங்க?
என்று கேட்கிறது இன்னொரு விளம்பரம்!


பெங்களூருவைச் தலைமையிடமாக கொண்ட இந்த
பெரிய கூடை (“பிக் பேஸ்கட்”) எனும் “நேரலை விற்பனை” நிறுவனம், காய்கறி, வீடுகளுக்குத் தேவையான பலசரக்கு பொருட்களை 
வீட்டுக்கே தரும் விற்பனையைச் செய்து வருகிறது.

பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், மற்றும் புனே நகரங்களில் இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தது. இந்நிறுவனத்தின் சென்னை கிளையில், "பிராண்டட் பொருட்கள் தவிர உள்ளூர் அளவிலான லோக்கல் பிராண்டுகளும் கிடைக்குமாம். மேலும் ஆன்லைன் மூலமாகவும், ஆப்ஸ் மூலமாகவும் ஆர்டர்கள் கொடுக்க முடியும்"
என்கிறார் இதன் முதலாளியான ஹரி மேனன்.

அப்படியானால்...

“கீர.. கீர..” எனும் கிழவியின் குரல் இனி நம் வீதிகளில் கேட்காதோ? அடப் பாவிகளா?
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து
சத்தற்ற, கெமிக்கல் கலந்த காய்கறி விற்பனை வழியாக
இப்போது கிராமத்துக் கிழவிகளைக் கூட
வாழவிடாத இவர்களை என்னென்பது?
------------------------------------------------------------------------------------
இதையும் பாருங்க..


இதற்கு நல்ல நடிகர் என்று பேரெடுத்த
ஷாருக் கான் துணைபோவது நியாயம்தானா?

8 கருத்துகள்:

  1. உள்ளூர் வியாபாரத்தை நசுக்கத்தான் இந்த வியாபாரிகள் வந்துவிட்டார்கள். அவர்களின் பிழைப்பே இதுதான் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. அநேகமாக ஷாருக்கான் இதில் ஒரு பங்குதாரராகவும்இருக்க வாய்ப்பிருக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
  3. விவசாயத்தையும் கார்பொரேட் நிறுவனங்கள் விட்டு வைக்காது போலிருக்கிறது. நம் மக்களும் கண்ணாடிப் பெட்டி காய்கறிகளையும் செயற்கைப் பசுமையயும்தானே நம்புவார்கள். ஆர்கானிக் என்ற பெயரில் ஏமாற்றுவதும் நடக்கிறது

    பதிலளிநீக்கு
  4. ஜெயக்குமார் ஐயா சொன்னது போல ஷாருக்கானுக்கும் பங்கு இருக்கும்... கிழவிகளைத்தான் ரிலையன்ஸ் பிரஸ் கொஞ்சம் ஒழித்து விட்டதே... இனி இவர்களும்... இயற்கை காய்கறிகளை சாப்பிட முடியாது போல...

    பதிலளிநீக்கு
  5. இப்போதைக்கு இது மேல்தட்டு மக்களை மட்டுமே வசீகரிக்கும் வியாபாரம். நம் மக்களுக்கு அண்ணாச்சி கடையில் அல்லது சூப்பர் மார்க்கெட்டில் கண்ணால் கண்டு வாங்குவதே திருப்த்தியளிக்கும். அதனால் இப்போதைக்கு பிரச்சனையில்லை. ஆனால் வருங்காலம் இத்தகைய இணைய வர்த்தகத்திற்குத்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. அண்ணாச்சிகளும் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்றால்தான் இனி தாக்குப்பிடிக்க முடியும். அதைவிட்டு அவர்களுக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் என்று நடத்திக் கொண்டிருந்தால் ஒன்றும் பயனிருக்காது.

    கோனிகா பிலிம் வருடத்திற்கு 1000 கோடி லாபம் பார்த்துக்கொண்டிருந்த நிறுவனம். டிஜிட்டல் கேமரா வந்தவுடன் கம்பெனியே இழுத்து மூடப்பட்டது. வணிகம், தொழில் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறாவிட்டால் இழப்பு நமக்குத்தான். அவர்கள் வேண்டுமானால் 'பெரிய கூடை'யாக இருக்கட்டும். நாம் இணையத்தில் ஒரு 'சின்ன கூடை'யாக இருப்போம்.

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான்... பார்க்கப் போனால், இப்போது அண்ணாச்சிக் கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் கூட ஏன் நடை பாதிகளில் கூட ஒரு சில வண்டிகளில் வரும் காய்கள் இப்படிப்பட்டவைதான். கிராமங்களில் மட்டுமே தோட்டத்துக் காய்களைப் பார்க்க முடியும். இனி நாம் நமது வீடுகளில் தொட்டிகளிலேனும் வளர்க்க வேண்டியய்துதான்.

    நான் வாங்கும் காய்களைப் பல வருடங்களாக அதாவது மருந்து தெளிக்கப்படுகிறது என்று தெரிந்து கொண்டதிலிருந்து செய்வது இதுதான்...

    வாங்கும் காய் பழங்களை நன்றாகக் கழுவி விட்டு உப்பு நீரில் போட்டு வைத்துவிடுவேன். மஞ்சள் கிழங்குகளையும் அதனுடன் போட்டு வைத்து விட்டு ஒரு மணி நேரம் போட்டு வைத்து மீண்டும் நன்றாகக் கழிவிய பிறகே சமையலுக்கு பயன் படுத்துகிறேன்.

    காய்களில் இடையே பூச்சி அரித்திருந்த காய்கள் கண்டால் நிச்சயமாக வாங்குவேன். காலிஃப்ளவரில் பூச்சிகள் இருந்தால் வாங்குவேன். கீரை இலைகள் ஓட்டை இருந்தால் வாங்கிவிடுவேன். இவை எல்லாம் மருந்து தெளிக்கப்படவில்லை என்பதால். ஆனால் போகிற போக்கும் அது ஆன்லைனோ அண்ணாச்சியோ, விஷம் கலக்காத கலப்படம் இல்லாத பொருட்கள் கிடைக்க வேண்டும். எதிர்காலம் பயத்தைத்தான் விளைவிக்கிறது. ஏழைகள் பாடு திண்டாட்டம் அதும் நம் நாடு இன்னும் ஏழை நாடுதான்

    இப்போதும் சந்தையில் தான் வாங்குகிறேன். பாட்டிகளிடம் தான் பெரும்பாலும் வாங்குவது. பேரம் பேசுவதும் இல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அடுத்த தலைமுறையை நினைத்தால் பெரும் கவலை அடைகிறது மனம்.ஒவ்வொரு வேளையும் பாக்கெட்டைப் பிரித்துத் தான் சாப்பிடும் நிலை வரும்.

    பதிலளிநீக்கு
  8. எதையும் விற்பார்கள் - அவர்களுக்கு காசு கிடைத்தால்.... இதில் ஷாருக் கான் விதிவிலக்கல்ல...

    கரந்தை ஜெயக்குமார் ஐயா சொன்னது போலிருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

    பதிலளிநீக்கு