தேசிய கல்விக் கொள்கை-2019 - நா.முத்துநிலவன் நேர்காணல்


 
வரைவு அறிக்கை
தமிழினத்தின் மீதான படையெடுப்பா?
இந்தியைப் படித்தால்தான் என்ன?
மும்மொழித் திட்டம் வந்தால் குடிமுழுகிப்போகுமா?
என்னதான் சொல்கிறது NEP-2019?
இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

தெளிவான விளக்கம் தருகிறார்
கவிஞர், கல்வியாளர் நா.முத்துநிலவன்”.
நேர்காணல் எடுத்தவர் –
எழுத்தாளர் பழ.அசோக்குமார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும்
“அதிகாலை” யூட்யூப் தொலைக்காட்சி

அன்புகூர்ந்து பாருங்கள்,
ஆசிரியர்களே, மாணவர்களே! 
கல்வியாளர்களே! சமூகஆர்வலர்களே!
அதிக அளவில் பகிருங்கள் !
இணைப்புக்கு –

தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை , கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?!கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?!
--நா.முத்துநிலவன்--
--------------------------------------------------------- 
பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற 
இரண்டாவது   நாளில் வெளியிடப் பட்ட
 தேசியக் கல்விக் கொள்கை–2019 வரைவு அறிக்கை” 
நாடு முழுவதும் 
பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது.

கிரேசி மோகனுக்கு ஒரு கட்டுரை அஞ்சலி

       
பிரபல நாடக, திரைப்பட வசன ஆசிரியர் கிரேசி மோகன் 
இன்று காலமானார் என்று செய்தி வந்து, அவரது ரசிகர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.  ஆனால்,
நான் பார்த்த கோணம் இது!-

அவர் அழகான-தமிழ்ச் செய்யுள் மரபு மாறாத வெண்பாக்களையும் எழுதுவார் என்பதை  மகிழ்ச்சியோடும் அவர் காலமானதற்கு எனது வருத்தம் தெரிவித்தும் அறிமுகம் செய்யலாம்தானே?
     

“புதிய கல்விக்கொள்கை பற்றி” மின்னஞ்சல் நான் அனுப்பிவிட்டேன், நீங்களும் அனுப்புங்கள்!


இந்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, புதிய “தேசிய கல்விக் கொள்கை – 2019, வரைவு அறிக்கை” ஒன்றை வெளியிட்டு மக்களின் கருத்தைக் கேட்டுள்ளது.  

ஏற்கெனவே 2016இல் இதேபோல தேசியக் கல்விக் கொள்கை ஒன்றை, தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியிட்டுக் கருத்துக் கேட்டிருந்தது மத்திய அரசு! தமிழில் 99 பக்கமுள்ள அறிக்கை! பழைய இணைப்பு - https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf     

அதன் மீது, பற்பல கருத்துகளைப் பலரும் தெரிவித்தனர். ஆனால் அது என்ன ஆயிற்றென்றே ஏதும் தெரிவிக்கப்படவில்லை!   அரசு ஏற்பு ஏதும் செய்யப்படாமலே அதன் சாராம்சங்கள் செயல்படுத்தப் பட்ட சாட்சி “நீட்” தேர்வுகளில் தெரிகிறது! “ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு” என்பதன் நடைமுறையன்றி நீட் தேர்வு என்பது வேறென்ன? அப்போதைய அறிக்கை பற்றிய எனது கட்டுரை - http://valarumkavithai.blogspot.com/2016/10/2016.html

ஆனால், இப்போது வந்திருக்கும் அறிக்கையை ஆங்கிலம் இந்தி என இரண்டே மொழிகளில் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு! அதுவும் வரும் 30-6-209க்குள் கருத்துத் தெரிவிக்க வேண்டுமாம்! எப்புடீ?

எனவே, இதுபற்றிய விவரங்களை அறிந்து, சரியாக நமது செயல் திட்டங்களை வகுக்க, கடந்த 02-06-2019 அன்று ஈரோட்டில் கூடிய நம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு, முதலில் பின்வரும் மின்னஞ்சலை அனைவரும் அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர், சமூகஆர்வலர், கலை-இலக்கியவாதிகள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெளிமாநில-வெளிநாட்டு தமிழ் அமைப்புகளில் செயல்படும் தமிழார்வலர்கள் என அனைவரும் –குறைந்தது ஒரு லட்சம் பேராவது – பின்வரும் மின்னஞ்சலைத் தனித்தனியாக அனுப்ப வேண்டிக் கேட்டுள்ளது.

நான் அனுப்பிவிட்டேன்.
நீங்களும் அனுப்ப வேண்டிய விவரம் இத்துடன் உள்ளது.
நீங்கள் அனுப்பிய பிரதியை உங்கள் நண்பர்கள், மற்றும் உங்கள் தொடர்பிலுள்ள உங்கள் உறவினர், பல்வேறு அமைப்பினர்க்கும் அனுப்பச்சொல்லி இதை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

அடுத்த தலைமுறையைக் காக்கக் 
கைகொடுக்க வேண்டுகிறேன். 
வணக்கம்.

-------------------- To  < nep.edu@nic.in > ---------------------------
Please consider the following three  urgent demands on the draft New Education Policy 2019:

1.The draft in 484 pages in English/ Hindi should immediately be translated into all languages listed in the 8th schedule ( Articles 344 (1) and 351 of the Indian Constitution ) and circulated for reading and  rendering comments.
This only will help people of all languages to participate in this democratic process.

2. The time limit for sending views should be extended till 30-09-2019. 
A bare  minimum of 3 months time for  the whole Nation to read the draft , which will decide the fate of our children’s education for the next ten years, is a just demand, I think.

3.As there is a strong feeling and fear that in the name of three languages policy, the Central Govt. is trying to impose Hindi on the non-Hindi state people, the draft should  categorically declare that Hindi or Any other language will not repeat NOT  be imposed on any non Hindi state people. Draft should be amended accordingly.
By
(Your Name
Etc
-------------------------------------------------------

(மின்னஞ்சல் அனுப்பிய விவரத்தை நீங்கள் விரும்பினால், எனக்கும் ஒரு பிரதி –காப்பி– போடலாம்! தேர்வில் / தெருக்கடையில் நீங்கள் “காப்பி”யை விரும்பாதவர் எனில் விட்டுவிடலாம்ங்கோ!)

மீண்டும் நன்றி வணக்கம்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை