படிக்கிற பழக்கம் உடையவர்!
இதில் எனக்கு மிகவும் பெருமைதான்!
இப்போது அமீரகத்தில் பணியிலிருந்துகொண்டு,
வலைப்பக்கம் தொடங்கி
முதலில் நூல்விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தவர்,
இப்போது
சிறுகதை
எழுதியிருக்கிறார்!
இதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி!
வாருங்கள் நண்பர்களே!
அவரது வலைப்பக்கம் சென்று,
கதையைப்
படித்துக் கருத்திடுவதோடு,
அந்த வலைப்பக்கத்தை கலை-இலக்கியத்தோடு தமிழ்ச்
சமூகத்திற்காக வளர்த்தெடுக்க
நல்ல ஆலோசனைகளையும் நீங்கள் வழங்கவேண்டும் என்று
அன்புடன் அழைக்கிறேன்.
இதோ அவரது வலைப்பக்கம் -
ஆங்..! அப்புறம்...
அவரது வலைப்பக்கத்தில் தொடர்வோர் (Follower) ஆகவும் சேர மறந்துவிடாதீர்கள்!
என்ன…? விடாதீர்கள்!
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” - குறள்
தோழமையுடனும், உரிமையுடனும்,
உங்கள் அன்புள்ள,
நா.முத்துநிலவன்.