புதிர் – போட்டி – விடை என்ன?

இணையத்தில் வந்த புதிர் என்று 
நண்பர் அக்ரி.ஷாஜகான் அவர்கள்     
பின்வரும் ஒரு புதிரை காண்செவிக்குழுவில் 
அனுப்பியிருந்தார்.

நான் உட்பட பலரும் கலந்துகொண்டோம்.

நீங்களும் கலந்துகொண்டு விடை சொல்ல வரலாம்…

சரியான விடை சொல்வோர் அனைவர்க்கும்,
வெளிவரவிருக்கும் எனது புதிய நூல்கள் இரண்டில் அவர்கள் விரும்பும் ஒரு நூலை என் செலவில் (இந்தியாவுக்குள்) அனுப்பி வைப்பேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓரிரு நாள் வரை விடைதருவோரின் கருத்துகளை                  உடனடியாக வெளியிட்டு, சரியான விடையை நான்  வெளியிடாமல் காத்திருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

பி.கு.-
வரவிருக்கும் எனது புதிய நூல்கள்  
(1)  ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி…
(2)  புதிய கல்வி, நீட் தேர்வு யாருக்காக?
இவை முறையே எனது 7,8ஆம் நூல்கள்!

வலை நண்பர்களுக்கு, மற்றுமோர் இனிய செய்தி-

இந்த நூல் இரண்டும் எனது வலைப்பக்கக் கட்டுரைகளின் தொகுப்பே என்பதோடு, இவை இரண்டிற்கும் எனது முன்னுரை ஏதுமில்லை, அந்தந்தக் கட்டுரைகளுக்கு எனது வலைப்பக்கத்தில் நண்பர்கள் இட்ட பின்னூட்டங்களில் ஒன்றே முன்னுரையாகத் தொகுத்து கட்டுரைகளுக்கு முன்னதாகத் தரப்பட்டுள்ளது என்பதை முன்னோட்டமாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்....

சரி இப்ப போட்டிக்குப் போவோமா?  
இதோ அந்தப்  புதிர்…

உங்கள் விடைகளுக்காகக் காத்திருக்கிறேன், 
அப்படியே நமது வலைப்பக்கத்தின் புதிய வடிவம் பற்றிய நண்பர்கள் கருத்தறியவும் காத்திருக்கிறேன்... நன்றி வணக்கம்.
(ஒரே ஒரு நிபந்தனை-
ஏற்கெனவே கணினித் தமிழ்ச்சங்க காண்செவிக்குழுவில் இருப்போர் தாமறிந்த விடையை எழுத வேண்டாம்)

புத்தகத் திருவிழா - வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைப்பு


வணக்கம் நண்பர்களே!
நமது வலைப்பதிவர் திருவிழா நடந்து 
இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.

கடந்த ஆண்டே அடுத்த சந்திப்பு 
நடந்திருக்க வேண்டும்.

நாம் நடத்தலாம் என்று ஆலோசித்தபோது,
நமது இனிய நண்பர்களும் வலைப்பதிவர்களுமான 
வைகறையும், குருநாத சுந்தரமும்
அடுத்தடுத்து
நம்மைத் தவிக்கவிட்டுப் போன 
மனப்புண்
இன்னும் ஆறவில்லை.
-------------------------------------------  
வைகறையின் குடும்ப நல நிதிக்காக 
அள்ளிக் கொடுத்தவர்களிடமே 
மீண்டும் நிதி கேட்க மனமின்றிக் 
கடந்த ஆண்டு கடந்து விட்டது.
--------------------------------------------- 
வரும் ஆண்டாவது நாம் நடத்த வேண்டும்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்
அதற்கொரு வாய்ப்பு உள்ளது.

வாருங்கள்! வாய்ப்புள்ள வலைப்பதிவர் சந்தித்து
வலைப்பதிவர் திருவிழா நடத்துவது பற்றிப் பேசுவோம்!

நமது மதிப்பிற்குரிய
அய்யா. உ.சகாயம் அவர்கள்
அடுத்த நமது பதிவர் திருவிழாவுக்கு
வருவதாக
முன்னரே
இசைவளித்துள்ளார்கள்

நாம்தான் 
நாள், இடத்தை உறுதிசெய்து
அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

26-11-2017 ஞாயிறு பிற்பகல் 3மணிக்கு
புத்தக விழாவில் சந்திப்போம்.
(அன்று காலை 10மணிக்கு
நமது “வீதி” கூட்டமும் உள்ளது.
இதற்கும் வர வாய்ப்புள்ளவர்கள்
காலையிலேயே வந்துவிடலாம்!)

பிற்பகல் நாம் கலந்து பேசலாம்.

அப்படியே புத்தக விழாவையும் பார்த்துவிட்டு,
மாலை 6மணிக்குமேல், 
தமுஎகச மாநிலத் தலைவர்
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்
உரை கேட்கவும் வாருங்கள் என 
அன்புடன் அழைக்கிறோம்.

புதுக்கோட்டை வலைப்பதிவருடன்
தஞ்சை, திருச்சி, சிவகங்கை 
மற்றும் வாய்ப்புள்ள மற்ற மாவட்ட
வலைப்பதிவர்களும் வந்து கலந்துகொண்டு
திட்டமிட உதவ வேண்டுகிறோம்.
அன்புடன்,
கணினித் தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை
- வரும் முன் பேச அழைக்க -
நா.முத்துநிலவன் - 94431 93293,   தங்கம் மூர்த்தி - 94431 26015 
மு.கீதா - 96592 47363, இரா.ஜெயலட்சுமி – 9842179961,  
கு..திருப்பதி – 94431 84890, ராசி.பன்னீர்செல்வன் – 94867 52525,  
பொன்.. – 94422 1109, எஸ்.இளங்கோ-94431 73311,   
கி.கஸ்தூரி ரெங்கன் - 98425 28585, மகா.சுந்தர்- 99659 61478,   
ஸ்டாலின் சரவணன் – 98425 05065, ஆர்.நீலா - 8778783526,  
எஸ்.டி.பஷீர் அலி - 96262 32725, மீரா.செல்வக்குமார் - 88703 94188,  
சு.மதியழகன் - 98429 10383,  எஸ்..கருப்பையா - 94434 24017,
கா.மாலதி – 96595 84845, ஸ்ரீமலையப்பன் – 76399 72504,   
நாக.பாலாஜி  - 83445 50036, , .ரேவதி – 98945 22504
சோலச்சி – 97882 10863,  புதுகைப் புதல்வன் – 93451 26292,
பேரா.சக்திவேல்  – 99528 06070, .பாண்டியன் – 96986 21766
இந்துமதி – 96989 72930, அமிர்தா தமிழ் – 97889 94215,
நிலாபாரதி - 96595 04476, சுரேகா - 99444 73833,
ஆர்.வெள்ளைச்சாமிநாகநாதன்,  சு.துரைக்குமரன்,  

கார்த்திக்,  வீதி மீனாட்சி,  ரோஸ்லின்
----------------------------------------------------------- 
மற்றும் ஆர்வமுள்ள 
புதுகை வலைப்பதிவர்களும்,   
பிற மாவட்ட வலைநண்பர்களும்
விழாக்குழுவில் சேர்ந்து பணியாற்ற 
முன்வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம் 

புரட்சியின் நூற்றாண்டு!

உலகை அழிவிலிருந்து காப்பாற்றிய சோவியத்துப் புரட்சியின் நூற்றாண்டு!

மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திய
உண்மையான புரட்சித் தலைவர்
தோழர் வி.இ.லெனின்