புதிர் – போட்டி – விடை என்ன?

இணையத்தில் வந்த புதிர் என்று 
நண்பர் அக்ரி.ஷாஜகான் அவர்கள்     
பின்வரும் ஒரு புதிரை காண்செவிக்குழுவில் 
அனுப்பியிருந்தார்.

நான் உட்பட பலரும் கலந்துகொண்டோம்.

நீங்களும் கலந்துகொண்டு விடை சொல்ல வரலாம்…

சரியான விடை சொல்வோர் அனைவர்க்கும்,
வெளிவரவிருக்கும் எனது புதிய நூல்கள் இரண்டில் அவர்கள் விரும்பும் ஒரு நூலை என் செலவில் (இந்தியாவுக்குள்) அனுப்பி வைப்பேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓரிரு நாள் வரை விடைதருவோரின் கருத்துகளை                  உடனடியாக வெளியிட்டு, சரியான விடையை நான்  வெளியிடாமல் காத்திருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

பி.கு.-
வரவிருக்கும் எனது புதிய நூல்கள்  
(1)  ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி…
(2)  புதிய கல்வி, நீட் தேர்வு யாருக்காக?
இவை முறையே எனது 7,8ஆம் நூல்கள்!

வலை நண்பர்களுக்கு, மற்றுமோர் இனிய செய்தி-

இந்த நூல் இரண்டும் எனது வலைப்பக்கக் கட்டுரைகளின் தொகுப்பே என்பதோடு, இவை இரண்டிற்கும் எனது முன்னுரை ஏதுமில்லை, அந்தந்தக் கட்டுரைகளுக்கு எனது வலைப்பக்கத்தில் நண்பர்கள் இட்ட பின்னூட்டங்களில் ஒன்றே முன்னுரையாகத் தொகுத்து கட்டுரைகளுக்கு முன்னதாகத் தரப்பட்டுள்ளது என்பதை முன்னோட்டமாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்....

சரி இப்ப போட்டிக்குப் போவோமா?  
இதோ அந்தப்  புதிர்…

உங்கள் விடைகளுக்காகக் காத்திருக்கிறேன், 
அப்படியே நமது வலைப்பக்கத்தின் புதிய வடிவம் பற்றிய நண்பர்கள் கருத்தறியவும் காத்திருக்கிறேன்... நன்றி வணக்கம்.
(ஒரே ஒரு நிபந்தனை-
ஏற்கெனவே கணினித் தமிழ்ச்சங்க காண்செவிக்குழுவில் இருப்போர் தாமறிந்த விடையை எழுத வேண்டாம்)

28 கருத்துகள்:

 1. முதலில் நிரம்புவது நான்காம் நம்பர் "கப்"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா தங்கள் விடை தவறு
   கடைசியில் கீழுள்ள எனது விளக்கத்தைப் பார்க்க வேண்டுகிறேன். கலந்துகொண்டு கருத்துச் சொன்னதற்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 2. புதிய தோற்றம் அருமையான உள்ளது ஐயா
  வலைப் பூ என்ற நிலையினைக் கடந்து, இணைய இதழ் போன்ற தோற்றத்தில் உள்ளது ஐயா
  வலையின் முகப்பில் உள்ள தங்களது படத்தினை இன்னும் அகலமாக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. யோசிக்கனுமா?! ஐ ம் பிச்சிக்குறேன்

  பதிலளிநீக்கு
 4. ஒன்பதாம் கப்புதான் முதலில் நிரம்பும் நான்கும் ஏழும் நிரம்பவே நிரம்பாது அதற்கான வழி அடைத்து இருக்கிறது ஐந்தாம் கப் நிரம்ப வேண்டுமானால் அதற்கு வரும் காபி இரண்டாவது கப்பில் முக்கால் பகுதிக்கு மேல் நிரம்ப வேண்டும் ஆனால் ஒன்பதாவது கப்பிற்கு பாதி நிரைந்தால் போதும் அதனால் முதலில் நிரம்புவது ஒன்பதாம் கப். அதனால் பரிசு எனக்குதான் பர்ஸ்ட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 9-ம் நம்பர் சரிதான் தமிழரே இப்பொழுதுதான் கணினியில் பார்த்தேன்.

   நீக்கு
  2. அய்யா தங்கள் விடை தவறு
   கடைசியில் கீழுள்ள எனது விளக்கத்தைப் பார்க்க வேண்டுகிறேன். கலந்துகொண்டு கருத்துச் சொன்னதற்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 5. புதிய டெம்லேட் பக்கம் நன்றாக இருக்கிறது ஆனால் டெம்பிலேட்டில் உள்ள மெனு ஏதும் வேலை செய்யவில்லை. ரைட் சைடு மார்ஜின் பெரிதாக இருக்கிறது அதனால் பதிவுகள் இடும் இடம் அகலத்தில் சிறியதாக இருக்கிறது அதனால் எந்த சிறிய பதிவு இட்டாலும் அது பார்ப்பதற்கு மிக நீளமாக இருப்பது போல தோன்றும், நட்பு வட்டம் பக்கம் பார்வைகள் அதே ஏரியாவில் மேல் பக்கம் வர வேண்டும் அதற்கு அடுத்தாக Blog Archive வர வேண்டும் அதுதான் வலைத்தளத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு நல்ல இம்ப்ரஷன் தரும் அது போல உங்களை பாலோ செய்யவிரும்பவர்களின் கண்ணில் அது பட்டு உடனடியாக இணைய வாய்ப்பு உண்டு. அது போல உலகம் சுழல்வது தேவையா என்று பார்த்து கொள்ளுங்கள் அது போல உள்ள கெட்ஜெட்கள் இருந்தால் பக்கம் லோடாக சிறிது நேரம் ஆகும்... நெட் ஸ்பீடு கம்மியாக உள்ள இடங்களில் லோடாக நேரம் பிடிக்கும் அதனால் சில பேர் படிக்காமல் வேறு தளம் செல்ல வாய்ப்பு உண்டு. இதெல்லாம புதிதாக வருபவர்களுக்காகத்தான் ஆனால் உங்களை தெரிந்தவர்கள் எவ்வளவு நேரம் ஆனாலும் அந்த பகுதி லோட் ஆகி படித்துவிட்டுதான் செல்லுவார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் விரிவான ஆலோசனைகளுக்கு நன்றி கலந்த வணக்கம் நண்பரே! இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். விரைவில் நீங்கள் சொன்ன குறைகளைச் சரிசெய்து இன்னும் மேம்படுத்துவேன். நன்றி

   நீக்கு
 6. பேனரில் உங்கள் படம் முன்னால் நிளமாக இருந்தது நன்றாக இருந்தது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் மீதி காலியாக இருக்கும் இடத்தில் விளம்பரம் ஏதும் கிடைத்தால் அங்கு வைக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரமா? யாரை எப்படி அணுகுவது?
   அந்த ட்ரிக் தெரிந்திருந்தால் இன்னும் நான் முன்னேறியிருக்க மாட்டேனா?

   நீக்கு
 7. புதிய வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. அழகியல் உணர்வினை அதில் காணமுடிகிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. நான்காம் இலக்கக் கப் முதலில் நிரம்பும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா தங்கள் விடை தவறு
   கடைசியில் கீழுள்ள எனது விளக்கத்தைப் பார்க்க வேண்டுகிறேன். கலந்துகொண்டு கருத்துச் சொன்னதற்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 9. வணக்கம் 4 என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரிக்கு வணக்கம். தங்கள் விடை தவறு
   கடைசியில் கீழுள்ள எனது விளக்கத்தைப் பார்க்க வேண்டுகிறேன். கலந்துகொண்டு கருத்துச் சொன்னதற்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 10. சரியான விடை -
  கப்-4 ஆரம்பத்திலும்,
  கப்-7 வழியிலும்,
  கப்-9 கடைசியிலும் அடைத்திருப்பதால்
  கப்-5 மட்டுமே நிரம்பும்.
  அடைத்திருக்கும் இடங்களைக் கவனிக்காமல் அவர்கள் உண்மைகள் முதல் அடியேன் வரை தவறாகவே விடைசொன்னோம்! எனினும்
  கலந்துகொண்டதே மகிழ்ச்சிதானே?
  (வாழ்க்கையிலயும் இப்படிக் கண்ணுக்குத் தெரியாத பற்பல தடைகள் இருப்பது தெரியாமல்தானே முட்டுச் சந்தில் முட்டித் திரும்பி ஓடிக்கொண்டே இருக்கிறோம்... கவனம் கவனம் கவனம்!)
  கலந்து கொண்ட நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள், தவறாக விடை சொன்னவர்க்கும் பாராட்டுகள், சரியாக சொன்ன திண்டுக்கல் தனபாலன் அய்யாவுக்கு எனது நூல் பிரதியை அன்புடன் அனுப்பிவைப்பேன்! வாழ்த்துகளும் வணக்கங்களும் அய்யா! நன்றி வணக்கம்.

  பதிலளிநீக்கு
 11. கலக்குங்க வலைச்சித்தருக்கு புதிர்ச்சித்தர்னும் பட்டம் தரலாம் போல வாழ்த்துகள் (விரைவில் புத்தகம் வந்ததும் அன்போடு அனுப்புவேன்)

  பதிலளிநீக்கு
 12. அறிவுகூர்மையை ஏற்படுத்தும் இதுபோன்ற காணொளிகளையும் கண்டு மகிழ்கிறேன்.
  அருமை,அருமை . தொடரட்டும் தங்கள் பணி

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் அண்ணா. புதிர்ப்போட்டியின் விடையை நானும் தவறாகவே கணித்தேன். வாழ்விலும் இப்படித்தான் கூர்த்த பார்வையின்றி அவசரமாக ஓடி முட்டுச்சந்தில் முட்டிக்கொள்கிறோம் என்ற உங்கள் விளக்கம் மிகவும் பொருத்தம் உங்கள் புதிய வலைப்பக்கம் நன்று. ஆனால் பதிவின் இரண்டு பக்கங்களிலும் ஏதேதோ பிரிவுகள் அடைத்துக் கொண்டு கொச்சா மொச்சாவென்று இருப்பது போல் எனக்குத் தோன்றியது. அதனால் பதிவு மிகவும் குறுகியதாக தோற்றமளிக்கிறது. பின்னூட்டத்தில் அவர்கள் உண்மைகளும் இந்தக் கருத்தைச் சொல்லியிருப்பதைக் கண்டேன். பதிவினை இன்னும் அகலமாக்கினால் வாசிப்பதற்கு வசதியாயிருக்கும் என எனக்குத் தோன்றியது. நன்றி.

  பதிலளிநீக்கு
 14. கீழ் உள்ள இணைப்பை நேரம் கிடைக்கும் போது வாசிக்க வேண்டுகிறேன் ஐயா... நன்றி...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ஐயா!
  போட்டியில் கலந்து கொள்ளக் கூடவில்லை. நான் தாமதமாகத்தான் வந்திருக்கிறேன். எனவே, தளத்தின் புதிய வடிவமைப்பைப் பற்றி மட்டும் என் சில கருத்துக்களைக் கூறலாம் எனப் பார்த்தால், அது பற்றியும் மிகச் சிறப்பாக ‘அவர்கள் உண்மைகள்’ கூறிவிட்டிருக்கிறார். இருந்தாலும், அவர் சொல்லாத சிலவற்றைப் பணிவன்புடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

  தளத்தின் இட மேல் மூலையில் சமூக வலைத்தளப் பொத்தான்கள் வைத்திருக்கிறீர்கள். ஆனால், அவற்றின் இணைப்புகள் தவறாக உள்ளன. அழுத்தினால் நாம் தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் பக்கத்துக்கே செல்கின்றன.

  தளத்தின் தலைப்புப் பட்டியில் (navigation menu) business, entertainment, parent category போன்ற உள்ளீடற்ற பிரிவுகள் நிறைய உள்ளன. இவற்றை நீக்க வேண்டும் அல்லது பொருத்தமான இணைப்புகளைக் கொண்டு மாற்றீடு (replace) செய்ய வேண்டும்.

  கடிகாரத்தின் மேல் அதன் பெயர் வர வேண்டிய இடத்தில் தங்கள் நூல்களுக்கான இணைப்பு தவறாக இடம் பெற்றுள்ளது. இதையும் சரி செய்ய வேண்டும்.

  தவிர, இடப்புறத்தின் பக்கப்பட்டியில் சில பக்கச்செயலிகளின் பெயர்கள் மிகவும் நீளமாக இருப்பதால் மிகவும் அகலமாக, பார்க்க ஒரு மாதிரியாக உள்ளன. பெயர்களைச் சுருக்கினால் அல்லது எழுத்தளவைக் குறைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

  பதிவு எண்ணிக்கை, கருத்துரை எண்ணிக்கை காட்டும் பக்கச்செயலியின் பெயர் 'Our facebook page' என உள்ளது. ஆனால், அது தங்கள் முகநூல் பக்கத்தின் எண்ணிக்கை இல்லை; தளத்தின் எண்ணிக்கைதான் என்பதால் அதையும் மாற்ற வேண்டும்.

  தளத்தின் அடிப்பகுதியில் ‘Ordered list', 'Definition list' எனத் தேவையில்லாத பெர்களில் காலிப் பகுதிகள் உள்ளன இவற்றை உரிய பக்கச் செயலிகள் (widgets) கொண்டு நிரப்பினால் அழகு!

  தளத்தின் நோக்கம் பற்றிய தங்கள் விளக்கம் 'Sample text' எனும் பெயரில் அல்லாமல் வேறு ஏதேனும் பொருத்தமான பெயரில் இருந்தால் நன்றாக இருக்கும்.

  இவை தவிர, தளத்தின் முகப்பில் உள்ள தங்கள் படத்தின் அகலத்தைக் கூட்ட வேண்டியது, பதிவு இடம்பெறும் தள நடுப்பகுதியின் அகலத்தை அதிகரிக்க வேண்டியது, வலப்புறப் பக்கப்பட்டியின் அகலத்தைக் குறைக்க வேண்டியது போன்ற மற்றவர்களின் பரிந்துரைகளை நானும் வழிமொழிகிறேன்.

  புதிய வடிவமைப்புக்கு மாறியமைக்குச் சிறுவனின் பணிவன்பான வாழ்த்துக்கள்! எனக்குத் தளத்தில் மற்ற எதையும் விடப் பின்புலம் மிகவும் பிடித்திருக்கிறது. ஏதேதோ குட்டிக் குட்டி வடிவங்களெல்லாம் இட்டு அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் அண்ணா. முன்பு உங்கள் படம் பெரிதாக இருந்ததோ? இப்போ வலது பக்கம் காலியாக இருக்கிறதே.
  இடதுப்பக்கப் பட்டி சிறியதாகவும் வலது பக்கப்பட்டி பெரியதாகவும் இருக்கிறது..பக்கப்பார்வைகள் இருவரிகளில் துண்டாகிறதே அண்ணா.
  பலநாட்கள் கழித்து வலைப்பக்கம் வருகிறேன்..நிறைய மாற்றம் :) உங்கள் தளமும் புதுப்பொழிவுடன்! வாழ்த்துகள் அண்ணா

  பதிலளிநீக்கு
 17. புதிர் போட்டி அருமை...
  புதிய வார்ப்புரு அருமை...நிறைய நோண்டல் பிடித்த வேலை என்பதால் நான் வழமையான வார்புருக்களில் தொடர்கிறேன் ...
  டி.டி இருக்க கவலையேன் ..?
  அப்புறம்
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு