ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கு அரசுத் தேர்வா?!

ஆண்டைகளுக்கு நம்பிள்ளைகளை

 அடிமைகளாக்கி அனுப்ப    
ஐந்தாம்வகுப்பில் அரசுத் தேர்வா?!

---நா.முத்துநிலவன்---

அரசு ஆணை வந்துவிட்டது! 5, 8ஆம் வகுப்பு தமிழ்நாட்டு மாணவர்கள் அரசுப் பொதுத்தேர்வு எழுதத் தயாராக வேண்டுமாம்! தமிழ்நாடு அரசுத் தேர்வுகள்இயக்குநரின் (ந.க.எண்-077171/எச்-1/2019 நாள்-28.11.2019) அனைத்துப் பள்ளிகள் மற்றும் ஊடகங்களுக்கு வந்துவிட்டது. “ஏற்கெனவே வாய் கோணலாம், இதுல கொட்டாவி வேறயா” எனும் பழமொழிதான் எனது நினைவிற்கு வருகிறது! இந்தக் கொடுமை உலகில் எங்காவது உண்டா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எனது பங்கேற்பு, காண அழைப்பு



சென்னை எழும்பூர்
எத்திராஜ் கல்லூரியில்
25-11-2019 திங்களன்று, 
பிற்பகல் 1.30மணிக்கு நடக்கவுள்ள,
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்
கலைஞர் தொலைக்காட்சியில்
கடந்த ஓராண்டாக நடத்திவந்த

“பேச்சுத் திருவிழா”

நிகழ்வின் முதலாம் ஆண்டுவிழா!
இறுதிப்போட்டி போட்டிநடுவர்களாக 
 கவிஞர் நந்தலாலாவும்
நானும்,
பங்கேற்கிறோம்.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்!
வாய்ப்புள்ள சென்னை நண்பர்கள்
அவசியம் வருக!

நியூஸ்-18 தொலைக்காட்சியில் எங்கள் பட்டிமன்றம் காண வருக


அன்பினிய 
நண்பர்களுக்கு 
வணக்கம்.

நெடுநாள் கழித்து,
நியூஸ்-18 தொலைக்காட்சியில் 
ஒரு பட்டிமன்ற நிகழ்வை 
நேற்று(16-11-2019) மாலை 
முடித்து, இப்போதுதான் வீடு வந்திருக்கிறேன். 
             

கம்பனுக்கு, ஸ்ரீராமன் விண்ணப்பம்


கவிதை - நா.முத்துநிலவன்

கம்பா கவியரசே! – என்
கதையெழுதித் தந்தவனே!
உம்பாடு தேவலைப்பா – இப்ப,
என்பாடு திண்டாட்டம்

மனிதர்களாய் வாழ்ந்தவரில் - நல்ல
மனசோடு வாழ்ந்தவரை
புனிதர்களாய்ப் போற்றுகிறார் – கோவில்
பூசையெல்லாம் நடத்துகிறார்!

நானும் அப்படித்தான் – நபிகள்
நாயகமும் அப்படித்தான்!
வாழும் வழிதேடி – தத்தம்
வழிகண்டார் வழிபட்டார்

இப்ப என் பெயராலே – மசூதிய
இடிங்கிறாக, அடிங்கிறாக
அப்படியா நான்சொன்னேன் –என்
அருங்கவியே பதில்சொல்லு!

சகமனிதர் இன்பதுன்பம்- கூடச்
சார்ந்திருக்கும் மனிதருடன்
பகிர்ந்துகொள்ள வேணுமல்லோ! –இது
பாமரனும் செய்வதல்லோ!

சகோதரத் துவமிருந்தால்
சங்கடங்கள் ஏதப்பா?
இதைத்தானே என்கதையில்
எடுத்தெடுத்து நீசொன்னே?

“குகனொடும் ஐவரானோம்  
முன்பு, பின் குன்றுசூழ்வான்
மகனொடும் அறுவரானோம்
நின்னொடும் எழுவரானோம்”

என்று நான் வேடனொடு
குரங்கினமும், அசுரர்களும்
ஒன்றுதான் மனிதநேய
உணர்விருந்தால் என்றுசொன்னேன்

அனுமனின் உளம்போன்ற
அன்புள்ளம் என்கோவில்
மனிதரிடை அன்பிருந்தால்
மட்டுமே நான்மகிழ்வேன்

என்நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
எடுத்துக் கொடுத்தவன்நான்
என்கோவில் கட்டுதற்கா - மசூதியை
இடியென்று நான்சொல்வேன்?

“மெய்த்திருப்பதம் மேவென்ற போதிலும்,
இத்திருத் துறந்து ஏகென்ற போதிலும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகம்…”
உடையவன் நானென்றால், நீ
உரைத்தது மெய்தானென்றால்
உடையென்றா நான்சொல்வேன், அட
உயர்கவியே பதில் சொல்லு!
 -------------------------------------------------------------------------
( 1992ஆம் ஆண்டு நான் எழுதிய இக்கவிதையும் இடம்பெற்ற எனது “புதியமரபுகள்” கவிதைத் தொகுப்பு, மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்தில், எம்ஏ தமிழ்வகுப்புக்கு 1995முதல், 15ஆண்டுக்கும் மேலாகப் பாடநூலாக இருந்தது குறித்து மகிழ்கிறேன், ஆனால், இந்தக் கவிதை இன்றும் பொருந்துவது குறித்து வருந்துகிறேன் - நா.முத்துநிலவன் )

* வணக்கம் தமிழ்நாடு! (நவம்பர்-1,1956 தமிழ்மாநிலம் பிறந்தநாள் - சிறப்புக்கட்டுரை)

வணக்கம் தமிழ்நாடு! 
----நா.முத்துநிலவன்---


மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. கருத்துப் பகிர்வுக்காகவே மொழி தோன்றினாலும், அதுவே அந்தந்த மொழியைப் பேசுவோரின் பண்பாடு, தேசிய இன அடையாளமாகவும் பரிணமித்தது. மனித சமூக முன்னேற்றத்திலிருந்து மொழியைப் பிரித்துப் பார்க்க முடியாது! மொழிவழி மாநில வரலாறு இன்றும் முக்கியமாகிறது!
ஆங்கிலேயர் வருவதற்கு முந்திய, இந்தியப்பகுதியில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தாய்மொழிகளும் அவற்றின் கிளைமொழிகளும் பேசப்பட்டன
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியா வங்கம், மும்பை, மதராஸ் ஆக மூன்றே மாநிலமாகத்தான் இருந்தது. மற்ற இன்றைய மாநிலங்கள் அனைத்தும் இவற்றோடு பிணைக்கப்பட்டிருந்தன. ஐதராபாத் நிஜாம், திருவிதாங்கூர் புதுக்கோட்டை போலும் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பகுதிகள்  ஆங்கிலேயர் ஆட்சியை ஏற்றுக்கொண்ட சுதந்திர நாடுகளாக இருந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்த தென்னிந்திய நிலப்பகுதி,  மதராஸ் ராஜதானி (மெட்ராஸ் ஸ்டேட்) என்ற ஒரே மாநிலமாக இருந்தது, இந்தியா விடுதலை பெற்ற ஒன்பது ஆண்டுகள் வரையும் இது தொடர்ந்தது. உண்மையில் இந்தநிலப் பகுதிதான் பழந்தமிழர் வாழ்ந்ததொல்காப்பியப் பாயிரத்தில் சொல்லப்பட்ட- “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகுஎன்பதும் நினைக்கத் தக்கது!
1920களின்மதராஸ் ராஜதானிசட்டசபையில் ஆங்கிலேமே அலுவல் மொழி! நான்கு மொழிப் பிரதிநிதிகள் இருந்த சபையின் செயல்பாடு ஆங்கில மொழியிலேயே நடந்தது. 1930களின் திரைப்பட நாயகன் தமிழில் பேச, நாயகி தெலுங்கில் பாடுவார்! வடமேற்கே குஜராத் மொழி பேசுவோர் மராட்டிமொழியாருடன் வாழ்ந்து வந்தனர். பல மொழி பேசுவோரைக் கொண்ட ஒரே மாநிலங்கள் இப்படிப் பல இருந்தன
1947இல் இந்தியா விடுதலை அடைந்தததைத் தொடர்ந்து, 1950இல்  குடியரசானதும், மொழிவழி மாநிலம் அமைக்கக் கோரி போராட்டங்கள் எழுந்தன.

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் -தொகுப்பு



கணிணியும், அதைத் தொடர்ந்து வந்த இணையதளமும், அவற்றின் பல்வேறு பயன்பாடுகளும், அலைபேசி மற்றும் அதன் பயன்பாடுகளும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாய்ச்சல் வேகத்தில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.  இணையதளம் மற்றும் அலைபேசியின் செயல்பாடுகள் துவக்கத்தில் ஆங்கில மொழியிலேயே அமைந்தன.  அவற்றின் பயன் பெருகப் பெருக அதன் செயல்பாடுகள் இதர உலக மொழிகளிலும் அமைந்தன.     வணிகத்தின் தவிர்க்க முடியாத பெருக்கம் உலக மொழிகளை கணிணி, இணையதள, அலைபேசிப் பயன்பாடுகளில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று சொல்வது எளிது.  நடைமுறையில் அது எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தவர்கள் சிலரே.  தமிழ் எழுத்துரு மற்றும் தமிழில் கணிணி விசைப் பலகை வருவதற்கே சில ஆண்டுகள் பிடித்தன.  இணையதளத் தகவல்கள் தமிழில் அமைய வேண்டும் எனப் பலரும் ஆசைப்பட்டனர்.  அரசு, பல்கலைக்கழகங்கள், தமிழ் மொழி நிறுவனங்கள், பன்னாட்டு தமிழார்வலர்களின் அயராத முயற்சியினால் இன்று இணையதளம் மற்றும் அலைபேசிச் செயல்பாடுகளில் தமிழ் மொழி பெரிதும் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியுள்ளது.  கூகுள் தேடுதல் இயந்திரம், விக்கிபீடியா போன்ற மிக முக்கிய இணையதள பயன்பாடுகள் தமிழ் மொழியிலும் மிளிரத் துவங்கியுள்ளன.

புதுக்கோட்டையில் துவக்கப்பட்ட கணிணித் தமிழ் சங்கம் இத்தகைய முயற்சியில் பெரிதும் ஈடுபட்டு வருகிறது.  தமிழ் மொழியில் இணையதள செயல்பாடுகள் அதிகரித்திட விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்வுகளை நடத்தி வருகிறது.  அக்டோபர் 12, 13 தேதிகளில் இணைய தமிழ் பயிற்சி முகாம் ஒன்றினை புதுக்கோட்டையில் நடத்தியது.  பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த நூறுக்கு மேற்பட்ட இணையதள உபயோகிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது!




சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கூகுள்படிவ வழிப் பதிவுசெய்தோர், செல்பேசிக் குரல்வழிப் பதிவுசெய்தோர் என,  இதுவரை சுமார் 100பேர் பதிவு செய்துள்ளனர். எவ்வாறாயினும் வழக்கம்போல முன்பதிவு செய்யாமலேஉரிமையுடன்- வந்துநிற்கும் நண்பர்கள் ஒரு 25 பேராவது இருக்கும் என நினைக்கிறேன். (நாளை தெரியும் பாருங்களேன்!?!)

என்ன தைரியம் உங்களுக்கு? HOW DARE YOU?



ஐந்துநிமிடப் பேச்சில் உலகத் தலைவர்களைக் கலங்க வைத்த சிறுமி ரீட்டா தன்பெர்க்கின் சத்திய ஆவேசம்!   
மெல்லிய குரலில் ஆரம்பித்த அவரது உரை, காகிதத்தில் எழுதி வைத்திருந்ததைப்  படிக்க படிக்க ஓங்கி ஒலித்து கோபத்திலும், உணர்ச்சிக் கொந்தளிப்புமாக மாறியது. அவர் பேசுவது தனக்காக இல்லை, தன் நாட்டுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவும்தான் என்று அந்தக் குரலின் நடுக்கம் உணர்த்தியது. இந்தப் பெரிய முன்னெடுப்பை இளம் வயதில் எடுத்துள்ள கிரேடா துன்பர்க் யார்? அவருக்கு என்ன வேண்டும்

இணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்

கணினித் தமிழ்ச் சங்கம் 
        வீதி கலை இலக்கியக் களம்                  
இணைந்து நடத்தும்
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் -(4)-2019”
நாள் - அக்டோபர்-12,13, (சனி,ஞாயிறு) 2019
இடம்: ஜே.ஜே.கல்லூரி, புதுக்கோட்டை 

முன்பதிவு செய்தல் பயிற்சி ஏற்பாட்டுக்கு மிகவும் அவசியம்
(கடைசி நேரத்தில் அலையெனத் திரண்டு வந்து, கூட்ட அரங்கம் மற்றும் கணினிஇணைப்பு, உணவு ஏற்பாடுகளில் சிக்கல் செய்யாமல் இருக்கவே இந்த வேண்டுகோள்)
mgeetha122@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9443193293, , 9659247363 ஆகிய புலன எண்களுக்குப் பின்வரும் விவரங்களை   உடன் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்