இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது!




சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கூகுள்படிவ வழிப் பதிவுசெய்தோர், செல்பேசிக் குரல்வழிப் பதிவுசெய்தோர் என,  இதுவரை சுமார் 100பேர் பதிவு செய்துள்ளனர். எவ்வாறாயினும் வழக்கம்போல முன்பதிவு செய்யாமலேஉரிமையுடன்- வந்துநிற்கும் நண்பர்கள் ஒரு 25 பேராவது இருக்கும் என நினைக்கிறேன். (நாளை தெரியும் பாருங்களேன்!?!)

இணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்

கணினித் தமிழ்ச் சங்கம் 
        வீதி கலை இலக்கியக் களம்                  
இணைந்து நடத்தும்
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் -(4)-2019”
நாள் - அக்டோபர்-12,13, (சனி,ஞாயிறு) 2019
இடம்: ஜே.ஜே.கல்லூரி, புதுக்கோட்டை 

முன்பதிவு செய்தல் பயிற்சி ஏற்பாட்டுக்கு மிகவும் அவசியம்
(கடைசி நேரத்தில் அலையெனத் திரண்டு வந்து, கூட்ட அரங்கம் மற்றும் கணினிஇணைப்பு, உணவு ஏற்பாடுகளில் சிக்கல் செய்யாமல் இருக்கவே இந்த வேண்டுகோள்)
mgeetha122@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9443193293, , 9659247363 ஆகிய புலன எண்களுக்குப் பின்வரும் விவரங்களை   உடன் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” வருக! வருக!!



கணினித் தமிழ்ச் சங்கம், புதுக்கோட்டை
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினி கொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் –2016 - நிகழ்ச்சி நிரல்

18-12-2016 ஞாயிறு அன்று  புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஒருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் அழைப்பிதழ் இதோ-

வருவோர் கவனத்திற்கு -

இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களுடன்
இணையத் தமிழ்ப்பயிற்சி அமைப்புக் குழுவினர்.

கலந்துகொண்டு பயன்பெற்ற வலை நண்பர்களின் ஒரு பகுதியினர்

வாய்மொழிப் பாடம் முடிந்து செய்முறைப் பயிற்சி

முதல்நாள் கணினித்தமிழின் “அரிச்சுவடி” வகுப்பைத் தொடங்கி நடத்திய
சிவகங்கை முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்http://manidal.blogspot.in/ 

விக்கிப்பீடியாவில் தமிழ் எழுதுவது எப்படி?
பிரின்சு என்னாரெசுப் பெரியார்http://princenrsama.blogspot.in
இவர் தன் அருமைச் சகோதரர் பெரியார் சாக்ரடீசு அவர்களின் அகால மரணம் நிகழ்ந்த ஒருவாரத்தில் வந்து கலந்துகொ்ண்டது அனைவரையும் நெகிழ வைத்தது 

“மூங்கில் காற்று“  தி.ந.முரளிதரன் -http://tnmurali.blogspot.com/ 
“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
இருவரும் இணைந்து கலக்கிய வகுப்பில்...
----------------------------------------------------------------------------------------------- 


வகுப்பின்போது வலைப்பக்கம் உருவாக்கியவர்கள் மற்றும் ஏற்கெனவே வலைப்பக்கம் இருந்தும் செயல்படுத்தாமல் இருந்து, இந்த வகுப்பின் பின் புதிய வடிவமைப்போடும், இணைப்புகளோடும் எழுதத் தொடங்கியவர்கள் எனும் இரண்டு பட்டியல் இவை -
பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் - http://inithuinithu.blogspot.in/
தமிழறிஞர் ஜோசப் விஜூ - http://oomaikkanavugal.blogspot.in/
ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் - http://stalinsaravanan.blogspot.in/
தமிழாசிரியர்  பானுமதி - http://nithimathi.blogspot.in/
தமிழாசிரியர்  பிரியதர்ஷினி - http://thamizhyazhini.blogspot.in/
தமிழாசிரியர் ரேவதி - http://tamizhal.blogspot.in/2014/05/blog-post.html
தமிழாசிரியர் மகா.சுந்தர் - http://mahaasundar.blogspot.in/ 
உ.தொ.க.அலுவலர் ஜெயா – http://jayalakshmiaeo.blogspot.in/ 

தலைமை ஆசிரியர் மாலதி - http://malathik886.blogspot.in/
பாவலர் பொன்.க. - http://pudugaimanimandram.blogspot.in/
சர்மா அச்சக நண்பர் குமார் - http://pudugaismkumar.blogspot.in/
நமது அய்யா முனைவர் நா.அ.மு - http://nadainamathu.blogspot.com/
கவிஞர் மு.கீதா - http://velunatchiyar.blogspot.in/
தமிழாசிரியர் அ.பாண்டியன் - http://pandianpandi.blogspot.com/
ஆங்கில ஆசிரியர் கஸ்தூரி - http://www.malartharu.org/
எழுத்தாளர் ராசி.பன்னீர்செல்வன் - http://rasipanneerselvan.blogspot.in/
கவிஞர் சுவாதி - http://swthiumkavithaium.blogspot.com/
--------------------------------------------- 
இரண்டுநாளும் கலந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய 
திருச்சி தி.தமிழ் இளங்கோ - http://tthamizhelango.blogspot.com/  
கரந்தை ஜெயக்குமார் - http://karanthaijayakumar.blogspot.in/
இந்த வகுப்பில் விக்கிபீடியாவில்...எழுதக்கற்று்க்கொண்ட அய்யா முனைவர் பா.ஜம்புலிங்கம் -http://drbjambulingam.blogspot.in/   - 
ஆகியோர்க்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
நமது கணினித்தமிழ்ப்பயணம் தொடரட்டும் நண்பர்களே!

வந்து வகுப்பெடுத்துக் கணினித் தமிழறிவை வழங்கியதோடு,  அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட நம் கணித்தமிழ் ஆசான்கள் -
                                                   
                                                  முனைவர் மு.பழனியப்பன்  - 
                                                                                  http://manidal.blogspot.in/ 

“மூங்கில்காற்று“ தி.ந.முரளிதரன் - 

“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 

பிரின்சு என்னாரெசுப் பெரியார் - 

புதுக்கோட்டை சர்மா அச்சகம் வாசு - http://easytype.in/   
ஆகியோர்க்கு நன்றி சொல்லப் போவதிலலை, 
இன்னும் எழும் சந்தேகங்கள் மற்றும் புதியவர்களுடன், 
அடுத்த வகுப்பில் சந்தித்து வணங்குவோம்.. அவ்வளவே!
ஆனால், தனித்தனியாக ஒருவருக்கு ஒருநாள் முழுவதும், ஆர்வமும் தேவையும் உள்ளவர்க்கு மட்டும் அது பத்துப்பேராயினும்... 
கூடுதலாக இருந்தால் அடுத்த 10பேர் அடுத்த பட்டியலில்... 
பத்துப்பேரை பத்துக் கணினியுடன் ஒரே ஆசிரியரிடம் 
குறைந்தது 5மணிநேரம் விட்டுவிடுவதுதான் சரி. 
அதுவும் விரைவில் நடக்கும்.
இதற்காக வழிகாட்டிய எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன், இடத்துடன் கணினி இணைப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ததோடு, இரண்டுநாளும் இரண்டுவேளை தேநீர்,வடை மற்றும் நம் விருந்தினர்க்கு அன்பான அருமையான மதிய உணவும் தந்த வெங்கடேஸ்வரா கல்விக்குழும  நிர்வாகிகளுக்கும், முதல்வர், கணினி விரிவுரையாளர் கற்பூரசுந்தரபாண்டியன், 
என்னுடன் உழைத்த நண்பர்கள், 
வெளியிலிருந்தும் வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட 
வலையுலக நண்பர்களுக்கு நன்றி, வணக்கம்.
இணைய வகுப்பு அனுபவத்தை  எழுதியிருக்கும் நண்பர்கள் அ.பாண்டியன், மு.கீதா,கஸ்தூரியுடன், திருச்சி தமிழ்இளங்கோ அவர்களுக்கும், வகுப்பும் எடுத்து-பதிவும் தொடுத்த செ்ன்னை தி.ந.முரளிதரன் அய்யாவுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
------------------------------------------------------------- 
முக்கியமான பின்குறிப்பு -
இந்த இணைய வகுப்பின் இடையில், முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “புதுக்கோட்டையில் ராசராசப் பெருவழித்தடம்” எனும் அரிய வரலாற்றுத் தகவல் கிடைத்தது. அதனை “தினமணி” 25-05-2014 ஞாயிறு “கொண்டாட்டம்” பகுதியில் முழுவதுமாகப் படிக்கலாம்.
அந்த இணைப்பு - http://epaper.dinamani.com/276425/Kondattam/25052014#page/1/1
---------------------------------------------------------------
(புகைப்படங்கள் - 
மு.கீதா, கஸ்தூரி, டீலக்ஸ் சேகர், 
மற்றும் திருச்சி தி. தமிழ்இளங்கோ.)

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - 2014 - புதுக்கோட்டை



வணக்கம். புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ப் பயிற்சி முகாம் ஒன்றைக் கடந்த அக்டோபர் 05,06, 2013  தேதிகளில்   நடத்தினோம். அதில் பெண் ஆசிரியர் 17பேர் உட்பட மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர். 
பயிலரங்கில் உந்தப்பெற்ற பலர், வலைப்பக்கம் மற்றும் முகநூல் தொடங்கி எழுதியும் வருகின்றனர். மேலும் இணையப்  பயிற்சிபெற ஆர்வமுடன் இருக்கும் பலரும் அதுபற்றிக் கேட்டுக் கொண்டே இருப்பதால், அடுத்த பயிற்சிப் பட்டறை இதோ...

“இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்” -2013 செய்திச் சுருக்கம்

இலக்கியம் எழுதும் ஆசிரியர்களுக்கான கணினித்தமிழ்ப் பயிலரங்கம்


(படத்தில் நம் கரந்தை ஜெயக்குமார், இரா.எட்வின்முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன், கல்லூரித் தாளாளர்கள்- கவிஞர் கதிரேசன், குமாரசாமி, கல்லூரி முதல்வர் ஆகியோர்)

புதுக்கோட்டை - கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழில் கதை-கவிதை-கட்டுரை எழுதும் பல்வேறு ஆசிரியர்களுக்கான கணினித்தமிழ்ப் பயிலரங்கம் அக்.5,6 சனி-ஞாயிறு இரண்டுநாட்கள் நடந்தது. கல்லூரித் தாளாளர் கவிஞர் கதிரேசன் தலைமையேற்றார். கவிஞர்தங்கம்மூர்த்தி, தாளாளர்கள் பி.எஸ்.கருப்பையா, குமாரசாமி, கல்லூரி முதல்வர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.