கேட்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது.. “பிரபல நகைச்சுவை எல்லாம் வேதனையை மறைத்துக் கொள்ளும் மறுவடிவம்தான்” என்கிறார்களே?.
சார்லி சாப்ளின் தனது
நகைச்சுவை பற்றிச் சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது “ஒரு சாதாரண மனிதர் வழுக்கி விழுந்தால் நமக்குச் சிரிப்பு வராது;
ஆனால், அதிகத் தற்பெருமை கொண்ட ஒரு பணக்கார மனிதர் வழுக்கி
விழும்போது நகைச்சுவை பிறக்கிறது”
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்
கடந்த 2026 மே மாதம், டெல்லி உயர் நீதிமன்றம் தனக்கு 'மூத்த வழக்கறிஞர்' அந்தஸ்து வழங்க தாமதம் செய்வதாகக் கூறி
வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கைத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது
இந்த
விசாரணையின் போது, சமூக வலைதளங்களில் நீதித்துறைக்கு
எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய தலைமை நீதிபதி, "சமூகத்தில் அமைப்பைத் தாக்கும் சில ஒட்டுண்ணிகள் உள்ளனர்.
அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, அவர்கள் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளைப் போல மாறி
அடிப்படை கட்டமைப்பை தாக்கத் தொடங்குகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
இக்கருத்து நாடு
முழுவதும் உள்ள இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதனையடுத்து, தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டதாகவும்,
போலியான பட்டங்களைப் பயன்படுத்தி
நீதித்துறையைத் தாக்குபவர்களை மட்டுமே தான் அவ்வாறு குறிப்பிட்ட தாகவும் தலைமை நீதிபதி சூர்யா காந்த் பின்னர் விளக்கம் அளித்தார்
இச்சம்பவத்தைத்
தொடர்ந்து, இளைஞர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு
செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி Cockroach Janta Party (CJP) என்ற பெயரில் வேடிக்கையான ஓர் இயக்கத்தைத் தொடங்கினார் இளைஞர் ஒருவர் – அது என்ன?
கரப்பான் பூச்சி
ஜனதா கட்சியின் இணையதளத்தில் அதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பற்றிய தகவல்
கொடுக்கப்பட்டுள்ளது, அவரது
பெயர் அபிஜித் தீப்கே.
![]() |
"கரப்பான் பூச்சி" நிறுவனர் - அபிஜித் தீப்கே |
"இது எனக்குள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது, அதனால்தான் எக்ஸ் தளத்தில் எனது கருத்தைப் பதிவிட்டேன். 'அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?' என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு 'ஜென் ஸி'
மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து
ஆச்சரியமான பதில்கள் வந்தன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க
வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்."
"இளைஞர்களின் இந்த பதில்கள் தான், 'கரப்பான் பூச்சி
ஜனதா கட்சி' என்ற பெயரில் ஆன்லைனில் நையாண்டி அரசியல்
அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை எனக்குக் கொடுத்தது. 'எங்களை நீங்கள் கரப்பான் பூச்சி என்று அழைக்கிறீர்கள் என்றால், சரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியையே உருவாக்கலாம்'
என்று முடிவு செய்தோம்.
இந்தக் கட்சியில் சேருவதற்கு சில தகுதிகளையும் நான்
நிர்ணயித்தேன். அவை என்னவென்றால்:
- தலைமை
நீதிபதி கூறியது போல் சோம்பேறியாக இருக்க வேண்டும்.
- வேலை
இல்லாதவராக இருக்க வேண்டும்.
- தலைமை
நீதிபதி குறிப்பிட்டது போல, நீங்கள் எப்போதும் ஆன்லைனிலேயே
நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும்."
"சுருக்கமாகச் சொன்னால், இளைஞர்களை இழிவுபடுத்தும்
விதமாக இந்தியத் தலைமை நீதிபதி பயன்படுத்திய ஒவ்வோர் இழிவான கருத்துகளையும்,
நாங்கள் இந்தக் கட்சிக்கான உறுப்பினர் தகுதியாக வைத்துவிட்டோம்.
உறுப்பினர் பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரங்களிலேயே இதற்கு
பிரமாண்டமான வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலான மக்கள் அனைவரும் இதற்குப்
பதிலளிக்கத் தொடங்கியதோடு, தங்களை உறுப்பினர்களாகவும் பதிவு
செய்துகொள்ளத் தொடங்கினர்."
"அதன் பிறகு, இது வெறும் நகைச்சுவையோ நையாண்டியோ
மட்டுமல்ல, அதைவிடப் பெரிதாக மாறப்போகிறது என்பதை
உணர்ந்தோம். மக்கள் மத்தியில் ஒருவித விரக்தி மனப்பான்மை மேலோங்கியிருந்தது. உடனே
நாங்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கி, கட்சியின் தேர்தல்
அறிக்கையையும் வெளியிட்டோம்.
இன்ஸ்டாகிராமில் எங்களுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான
பின்தொடர்பவர்கள் (எண்ணிக்கை தற்போது 4 மில்லியனைத்
தாண்டிவிட்டது) கிடைத்துள்ளனர், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின்
உறுப்பினர்களாகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்திய அரசியலில் நீண்ட
காலத்திற்குப் பிறகு நடந்துள்ள ஒரு அபூர்வமான நிகழ்வு இதுவாகும்." நன்றி - https://www.bbc.com/tamil/articles/ckgpy80v394o
சரி. இந்த கரப்பான் பூச்சிகள்
இன்று (20-7-2026) என்ன செய்தார்கள்?
நீட் தேர்வு
முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக
வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று
நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியை நடத்தினர்
இன்றைய போராட்டத்தின் முக்கியத்
தகவல்கள்:
· நாடாளுமன்ற முற்றுகை: நீட் முறைகேடுகளைக் கண்டித்து ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி கட்சியினர் பேரணியாகச் செல்ல முயன்றனர்
போலீஸ் தடியடி: காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முற்பட்டனர்.
மெட்ரோ நிலையங்கள் மூடல்: பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜிவ் சோக்,
ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செயலகம் உள்ளிட்ட 5 முக்கிய மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து,
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரப்பான் பூச்சி
ஜனதா கட்சியினரை ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது
சரி, யார் இந்த சோனம் வாங்சுக்? அவர் இதில் எப்படி வந்தார்?
சோனம் வாங்சுக் (Sonam
Wangchuk) இந்தியாவின் லடாக்
பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற பொறியாளர், கல்வியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
இவர் தற்போது (ஜூலை 2026) நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு
விவகாரங்களுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு
வருவதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்
சோனம் வாங்சுக் - உண்ணா நிலையில் |
யார் இந்த சோனம் வாங்சுக்?
·
ஆரம்பகால
வாழ்க்கை:
1966 ஆம் ஆண்டு லடாக்கின்
உலேடோக்போ கிராமத்தில் பிறந்தார். கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் 9 வயது வரை பள்ளிக்குச்
செல்லாமல்,
தனது தாயாரிடமே கல்வி
கற்றார்.
·
கல்வி
மற்றும் சவால்: பின்னர் எந்திரப் பொறியியல் (B.Tech) படித்தார். தந்தையின்
விருப்பத்திற்கு மாறாக இந்த படிப்பைத் தேர்வு செய்ததால், தந்தை கல்விச் செலவை
ஏற்க மறுத்தார். இதனால் மாணவர்களுக்குப் பாடம்
நடத்தி,
அந்த வருமானத்தில்
சொந்தமாகப் படித்து முடித்தார்.
·
கல்வி
சீர்திருத்தம்: லடாக் மாணவர்களின்
கல்வித் தரத்தை உயர்த்த 1988 இல் 'செக்மால்' (SECMOL) என்ற மாற்று கல்வி
இயக்கத்தை நிறுவினார். இதன் மூலம் லடாக்கில் 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதத்தை 5%-லிருந்து 75% ஆக உயர்த்திக்
காட்டினார்
·
கண்டுபிடிப்புகள்:
இமயமலைப் பகுதியில்
நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க "பனி ஸ்தூபி" (Ice Stupa) என்ற செயற்கைப் பனியாறு
தொழில்நுட்பத்தை உருவாக்கினார். மேலும், புதைபடிவ எரிபொருட்கள் (Fossil fuels) இல்லாமல் சூரிய
சக்தியில் இயங்கும் சூழல் நட்பு கட்டிடங்களையும் வடிவமைத்துள்ளார்.
· விருதுகள் மற்றும் சினிமாப் புகழ்: இவரது சிறந்த சமூகப் பணிகளுக்காக 2018 ஆம் ஆண்டு ஆசியாவின் மிக உயரிய விருதான ராமன் மகசேசே விருது (Ramon Magsaysay Award) இவருக்கு வழங்கப்பட்டது. பாலிவுட்டின் புகழ்பெற்ற '3 இடியட்ஸ்' (தமிழில், இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அன்று நடித்த 'நண்பன்') திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் நடித்த 'புன்சுக் வாங்சுக்' என்ற முதன்மைக் கதாபாத்திரம் இவரை ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பரவலாக அறியப்படுகிறது (ஆனால் இந்தத் தகவலை ஆமிர்கான் மறுத்திருக்கிறார் என்பது தனித்தகவல்.)
·
லடாக் மக்களின் உரிமைகள் மற்றும்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பலமுறை போராடிய சோனம் வாங்சுக், தற்போதைய கல்விப் போராட்டத்தில் நுழைந்ததற்கான காரணங்கள்:
·
நீட்
தேர்வு முறைகேடுகள்: இந்தியாவில் அண்மையில் நடந்த மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET)
நுழைவுத் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் உயர்கல்விப் போட்டித் தேர்வுகளில் நிகழ்ந்த
குளறுபடிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின
·
உண்ணாவிரதப் போராட்டம்: மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த
இளைஞர் இயக்கத்திற்கு ஆதரவாக, கல்வியாளரான சோனம் வாங்சுக்
களமிறங்கினார். ஜூன் 28 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் வெறும்
உப்பும் தண்ணீரும் மட்டுமே அருந்தி கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத்
தொடங்கினார்
·
தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் மற்றும்
கல்வி முறையில் முறையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே
இப்போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கையாகும்
·
(தகவல்களுக்கு நன்றி – கூகுள் மற்றும் செ.நு. (ஏஐ)
20 நாட்களைக் கடந்த இந்த தீவிர உண்ணாவிரதப் போராட்டத்தால் அவரது
உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சுமார் 9 கிலோ வரை உடல் எடை குறைந்தது. இதனால், ஜூலை 18 அன்று காவல்துறையினர் அவரை
வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவரது
இப்போராட்டத்திற்குப் பல்வேறு மாணவர் அமைப்புகளும், சிபிஎம், ஆம்ஆத்மி உள்ளிட்ட
அரசியல் கட்சியினரும் விவசாய சங்கங்களும், சபானஆஸ்மி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரைத்துறையினரும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்
இன்றைய டெல்லி நிலவரம் குறித்த தி இந்து தகவல் :
நாளை என்ன? என்று
இந்தியா கவலையோடு கவனிக்கிறது.
-----------------------------------------------------------------------
