தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்
புதுக்கோட்டை மாவட்டக்குழு நடத்திய
கந்தர்வன்
நினைவு சிறுகதைப் போட்டி
முடிவு அறிவிப்பு
இறுதிநாள் 25-01-2026 என்று அறிவித்திருந்தும்,
30-1-2026வரை கதைகள் வந்து
கொண்டிருந்தன!
ஆனால்
நமது போட்டி
விதிகளின்படி
அவற்றை ஏற்க
இயலவில்லை.
25-ஞாயிறு,
26-குடியரசுதினம் இரண்டு
நாளும்
அரசு விடுமுறை
என்பதால்
27-01-2026வரை கிடைக்கப்பெற்ற அஞ்சல், கூரியரில் வந்த
கதைகள் மட்டும்
ஏற்கப்பட்டன.
மின்னஞ்சலில் 25-01-26 இரவு
11.59வரை வந்த
கதைகள் மட்டுமே
ஏற்கப்பட்டன.
என்னும் தகவலையும்
தெரிவித்துக்
கொள்கிறோம்!
![]() |
| நன்றி - தினமணி நாளிதழ் 05-02-2026 -------------------------------------------------------------- |
அனுப்பி திக்கு-முக்காடச் செய்த
எழுத்தாளர் பெருமக்களுக்கும்,
கட்டம் கட்டமாகச் சிறுகதைகளைத்
தேர்வுசெய்து தந்து
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத
(விழாவில் சிறப்பிக்கப்பட உள்ள)
நடுவர் பெருமக்களுக்கும்
உரிய உதவிகளைச் செய்து தந்த
தமுஎகச பொதுச் செயலர்
எழுத்தாளர் களப்பிரன் அவர்கள்,
ஆகியோர்க்கு நன்றி நன்றி நன்றி
பிப்ரவரி - 7, சனிக்கிழமை மாலை
நகர்மன்றக் கலை-இரவில் சந்திப்போம்
வருக! வருக!!
--------------------------------------------------------
முக்கியமான ஒரு பின்குறிப்பு:
தேர்வு பெற்ற கதைகளோடு மற்றொரு சிறுகதைப் பட்டியலையும் தேர்ந்தெடுத்து, மொத்தமாக 15முதல் 20சிறுகதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளியிடும் ஒரு யோசனையும் உள்ளது.
அதில் தேர்வு பெற்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்க்குத் தகவல் தந்து ஒப்புதல் பெற்றபின் அந்தப் பணிகளை, இந்த விழாவுக்குப் பிறகு தொடங்க எண்ணம். வழிபிறக்க யோசிப்போம்.
நன்றி வணக்கம்
---------------------------------------------------------------------------
-- இவண் --
கவிஞர் தங்கம் மூர்த்தி,
கந்தர்வன் கலை-இரவு வரவேற்புக்கழுத் தலைவர்
கவிஞர் ராசி பன்னீர் செல்வம் - மாவட்டத் தலைவர்
கவிஞர் ஆலங்குடி வெள்ளைச் சாமி - மாவட்டச் செயலர்,
கவிஞர் மு.கீதா - மாவட்டப் பொருளர்
மற்றும்
தமுஎகச மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழுவினர்
புதுக்கோட்டை மாவட்டம்
------------------------------------------------------
அடுத்து நடக்க உள்ள
மாபெரும் இலக்கியத் திருவிழாவுக்குத்
தயாராகுங்கள் !
புதுக்கோட்டைத்
தமிழ்ச்சங்கம் நடத்தும்
அறமனச்செம்மல்
சீனு. சின்னப்பா நினைவாக
3ஆம் ஆண்டு
இலக்கிய விருதுகள் -2026 அறிவிப்பு :
-----------------------------------------------



எனது பள்ளி இளவல் சீனு.சின்னப்பா அவர்களின் பெயரில் விரூது வழங்குவது அவருக்குச் செலுத்தும் சிறந்த மரியாதை ஆகும்.இதற்கான ஏற்பாட்டாளர்களை நான் பாராட்டுகிறேன்
பதிலளிநீக்குவாழ்த்துகள் தோழர்
பதிலளிநீக்குஅருமை ஐயா!👌🏽👌🏽 இவ்வளவு பெருமக்களும் சேர்ந்து, இவ்வளவு நாள் உழைப்பைக் கொட்டித் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு இத்தனை சிறுகதைகள் வந்து குவிந்திருப்பதை அறியும் பொழுது தமிழின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அதிகமாகிறது. 😍🤩மனம் பூரிக்கிறது! மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குசிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!! இந்த கதைகளை படிக்க ஆவலாக உள்ளது. எங்கு, எப்போது படிக்கலாம் ஐயா?
பதிலளிநீக்கு