தடைசெய்யப்பட வேண்டிய கேவலமான விளம்பரம்


தடைசெய்யப்பட வேண்டிய கேவலமான
விளம்பரம்
இந்த விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா...?

''INDIAN MEN WANTED   FOR MY BOAT PARTY''  

இது என்ன இப்படி ஒரு கேவலமான விளம்பரம் என்று
என் மகள்தான் முதலில் கவனித்துச் சொன்னாள்...

AXE  என்னும் வெளிநாட்டு செண்ட்டுக்கான
இந்திய விளம்பரம்தான் இது... 

எனது காதல் கடிதம்… நிறைவுப்பகுதி

எனது காதல் கடிதம்  நிறைவுப்பகுதி

இவ்வாறே வந்த பிற
                         இலக்கியங்கள் கலை வடிவில்
ஒவ்வொன்றாய் நஞ்சமுதை
                         உள்ளத்தில் ஏற்றியதால்                    -76

தாமே அறியாமல்
                        தமிழ்ப் பெண் நான் என அடங்கித்
தேமே என வாழ்ந்தார்
                         தெய்வாம்சம் அடைந்தாராம்!           -77

பத்தினியும் கன்னியும்
                         பரத்தையும் விதவையும்
முத்தமிழில் பெண்ணுக்கே!
                         ஆண்பால்சொல் இதற்கில்லை!      -78

சிந்தித்துப் பார்த்தால்தான்
                         சிங்காரச் சொல் இவற்றுள்
வந்திருக்கும் பெண்ணடிமை
                         வரலாற்றுக் கதை புரியும்!               -79

தம் மனைவி இழந்தவாக்குத்
                        தமிழிலே பெயரில்லை!
கம்மனாட்டி சொல் எல்லாம்
                        பொம்மனாட்டிக்குத் தானே?         -80

சொல்லின் வரலாறு
                        சொல்லும் வரலாற்றில்
வல்லார் அடிமைசெய்த
                        வரலாறும் புலனாகும்!                     -81

சிந்தனைகள் மென்மேலும்
                         சிவந்துவரும் என்தோழீ!
இந்தக் கொடுமைகளை
                         இல்லாமல் நாம் ஒழிப்போம்!          -82


அழகைவிடவும் பெண்ணுக்கு அறிவே தேவை!

இப்போது சொல்கண்ணே!
                         ஏன் உன்னை அழகியாக
இப்பாவ லன் நெஞ்சில்
                         எண்ணாமல், உன்னறிவை                  -83

இன்னுமின்னும் வளர்க்கவே
                         எண்ணுகிறான் புரிகிறதா?
மண்ணில் வளர்ந்துவந்த
                         மனிதப் பெருங்குலத்தில்                    -84

சரிபாதி அடிமைகளாய்
                        சமையலறைக் குள்ளேயே
கரியாகிப் போவதா?
                        கண்ணே! நாம் சிந்திப்போம்!         -85

சுரண்டலை ஒழிப்பதற்கு
                         சூளுரைக்கும் நாம், நமது
உரிமையை உணர்ந்து, பிறர்
                         உரிமைக்கும் மதிப்பளிப்போம்            -86

உழைப்புக்கும் மனித மன
                        உணர்வுக்கும் சரியான
மதிப்பைப் பெறும்வகையில்
                        மக்களை ஓரணியில்                                -87

திரட்டிடத் தோழியரும்
                        தேவை! மிக மிகத் தேவை!
இரட்டைக் குழல் வேட்டாய்
                        எழுவோம்! இணைந்தெழுவோம்!        -88


அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம் வா!

மனித உணர்வுகளை
                        மழுங்கடித்துக் கதைபேசும்
முனிவர்களின் வரிசையிலும்
                        முத்து நிலவனில்லை!                     -89

எல்லாரை யும்போல
                        இல்லறத்தில் இணைந்தின்ப
எல்லையைக் காணுதற்கும்
                        எல்லையிலா ஆசைஉண்டு!                -90

ஆனால் நம் காதல்
                        அடுத்தவர்கள் கேடுகெட்டுப்
போனால் நமக்கென்ன
                        போகம்தான் பெரிதென்னும்                  -91

எண்ணத்தை வளர்த்துவிட
                        இடந்தருமேல் அதைவிட நாம்
பன்றிபோல் வாழலாம் -
                        பன்றிக்கும் கூட்டமுண்டே!                   -92

சமுதாயக் கொடுமைகளை
                        சற்றும் நினைக்காமல்
நமது இன்பம் ஒன்றையே
                        நாடுவது வாழ்க்கையென்றால்       -93

சொத்தோடும் சுகத்தோடும்
                        சுற்றத்தின் வாழ்த்தோடும்
பத்தோடும் பதினொன்றாய்
                        வாழ்வதுதான் வாழ்க்கையென்றால் -94

அந்த வாழ்க்கையைநாம்
                        அமைப்பதிலே அர்த்தமில்லை!
நொந்தோர் நுகத்தடியை
                        நொறுக்குவதே பயன்வாழ்க்கை!    -95

இன்பம் பெறவிழையும்
                        எண்ணம் தலையெடுத்தால்
உன்னைநான் அழைப்பதுபோல்,
                        என்னை நீ அழைக்கலாம்!                     -96

ஆ!அதுநம் பெண்மைக்கு
                        அடக்கமில்லாப் பண்பு என
யாதும்ஓர் சட்டமில்லை!
                        யார்நான்? உன் தோழன் அன்றோ?     -97

இயலும் வகைஉழைத்தே
                        எல்லாத் தேவையிலும்
அயலையும் எண்ணிடுவோம்
                        அனைவருமே சமம்என்போம்!           -98

ஒன்றேநாம் என்றேநாம்
                        தனிஉடமை இனிஉடைய
ஒன்றுபட்ட நம்வாழ்வால்
                        ஒருவரை மற்றொருவர்                    -99

நின்று தூண்டுவோம்!
                        நெஞ்சில் எழுச்சிமிக
உன்றன் இதழ் முத்தம்
                        ஒன்றெனக்குத்  தா! தோழீ !          -100
               

                    ------------------------------------ ( நிறைந்தது ?  )-------------------------------  
படத்துக்கு நன்றி - http://www.bharatmoms.com/

எனது காதல் கடிதம் - பகுதி -3

  எனது காதல் கடிதம் - பகுதி-3

  
                         
                        (முதலிரண்டு பகுதிகளைப் பார்க்காதவரகள் இணைப்புக்குச் செலல -
                                      முதல் பகுதி -http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post_26.html
                                              இரண்டாம்பகுதி - http://valarumkavithai.blogspot.in/2014/04/2.html  

           எவனுக்குப் பிள்ளையை
                                    எவள் பெற்றால் என்ன? – அவள்
தவறாமல் எனக்கு இன்பம்
                                    தருகின்றாள் அதுபோதும்!’                     -51

என்றிருந்த காலத்தின்
                                    பின்வந்த கோலமே
இன்றிருக்கும் பெண்ணடிமை
                                    எழுந்துவந்த அலங்கோலம்!                  -52

நாம் படித்த 'அரிச்சந்திரன் கதை' சரியான கதை தானா?


நாம்  படித்த 'அரிச்சந்திரன் கதை' சரியான கதை தானா?

உண்மையே பேச வேண்டும அதைத்தான் நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றக்கருத்து இருக்காது. 
ஆனால், 
அதற்கு, காலகாலமாக 
நாம் சொல்லிவரும் 
“அரிச்சந்திர மகாராஜா கதை“ சரியானதுதானா என்னும் சந்தேகம் எனக்கு நீண்ட நாளாகவே உண்டு.


கண்ணகி பத்தினித் தெய்வம் ஆனதெப்படி?


     

கற்புக்கரசி என்று சொன்னால் பலநூறு ஆண்டுகளாகத் தமிழர் நெஞ்சில் பதிந்து கிடக்கும் பெயர்  கண்ணகி என்பதுதான். 

அதிலும் ஒருபடி மேலே போய், எத்தனையோ பத்தினிகள் இருந்தாலும் கண்ணகியை மட்டும் “பத்தினித் தெய்வம்“ என்றே சொல்லும் வழக்கும் தமிழில் உண்டு. இது ஏன்?


எனது காதல் கடிதம் - பகுதி-2


அது மட்டும் இல்ல கண்ணு!
                அவனவனும் காதலிய
இதமாக நினைக்கிறதும்
                எடுத்தெடுத்துப் பேசுறதும்            -26

தப்பில்ல! ஆனாலும்
                தன் பேச்சில் அவள்அறிவை         
ஒப்பாமஉயர்த்தாம
                ‘ஓகோன்னு அழகைமட்டும்         - 27

புகழ்ந்துவந்தா என்னாகும்?
                புத்தியெல்லாம் மண்ணாகும்!
அழகிமட்டும் இல்லடிநீ
                அறிவாளி யும்தானே?              -28

சொன்னாக் கூட போதும்இப்ப!
                ‘சுர்ருன்னு பேச்சுவரும்!
என்னா நினைக்கிற நீ?
                “எல்லாம் சரி தாங்க,                                       -29

கற்பும் - கதைகளும்