மோடி-லேடி-டாடி பஞ்ச் டயலாக் எப்புடீ?

ஒவ்வொரு தேர்தலிலும் சில வாசகங்கள் வாக்காளர்களுக்கு தேர்தல் பஞ்ச்-டயலாக் கிடைக்கும்... நம் தேர்தல்,
ஜனநாயகத் திருவிழால்ல? அப்படித்தானே இருக்கும்?

1984- தேர்தல், இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டு, எம்.ஜி.ஆர். அமெரிக்க புருக்ளீன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவம் முடிந்து பேசமுடியாமலிருந்த நேரம்... மத்திய-மாநில அரசுகளுக்கான தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி தேர்தலைச் சந்தித்த போது, மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்ட தேர்தல் பஞ்ச்-டயலாக் இது
“தாயில்லாப் புள்ளைக்கு 
 ஒரு ஓட்டு,(ராஜிவ் காந்தியாம்) 
 வாயில்லாப் புள்ளைக்கு 
 ஒரு ஓட்டு“ (எம்.ஜி.ஆராம்)


அதன் பிறகு எத்தனையோ தேர்தல்கள் நடந்தபோதும் அந்த பஞ்ச் அளவிற்கு வேறு வசனங்கள் எனக்கு நினைவிலில்லை.
இப்போது நெடுநாள் கழித்து, தேர்தல் பஞ்ச் டயலாக்கை அம்மா ஆரம்பித்து வைக்க, அதை தளபதி முடித்து வைத்திருக்கிறார்.
ஆமாம். தனது “நீண்டநாள் நண்பர்“ மோடியோடு மோதாமலே 40சீட்டும் கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தவருக்கு, இனி அவரை எதிர்க்காமல் சரிவராது என்பது புரிந்து போனது அவருடைய பதவியேற்புக்கு இவர் குஜராத்துக்குப் போனது என்ன? இவருடைய பதவியேற்புக்கு அவர் தமிழ்நாட்டுக்கு விருந்தினராக வந்திருந்தது என்ன... என்ன...என்ன...? அதெல்லாம்.. போயே போச்சு...இட்ஸ் கான்! அரசியல்ல இதெல்லாம் சகஜம்ல?

இப்ப தேர்தல் பிரச்சாரத்திற்கு இங்கு வந்த அவர் “இந்தியாவிலேயே தலைசிறந்த நிர்வாகி நான்தான்என்று முழங்கினார்! (ரஜினியேஏஏ...ஏ சர்டிபிகேட் குடுத்துட்டார்ல இனி என்ன? அவர் தாசில்தாருக்கும் மேல சூப்பர் கலெக்டருல்ல?) 

பெண்சிங்கம் விடுமா? பிறாண்டி விட்டது மேடையில் –
 “சிறந்த நிர்வாகி
 அந்த மோடி அல்ல,
 இந்த லேடிதான்என்று புள்ளிவிவரங்களை அள்ளிவீசினார்... 

நமக்கும் அம்மா சொன்னது சரிதானே என்று தோன்றியது. 
என்னபெரிய மோடி? நம்ம அம்மாவை விடவா? என்றோம்!

பார்த்தார் நம் தளபதி ஸ்டாலின். அவரும் தன் பங்குக்கு அம்மாவைக் குறிவைத்தே அசராமல் பேசிவந்தவருல்ல...?
அம்மா தன் தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம் இந்தமுறை மக்களைப் பார்த்து, “கலைஞரின் குடும்ப அரசியலுக்குப் பாடம் புகட்டவேண்டும்... 
செய்வீர்களா? நீங்கள்
செய்வீர்களா? என்று கேட்டு மக்களிடம் “செய்வோம்“ என்னும் பதிலைப் பெற்றார். இதைப் பார்த்த ஸ்டாலின் ஜெ.கொடுத்த வாக்குறுதிகளை “செய்தீர்களா? நீங்கள் செய்தீர்களா?என்று கேட்டு வந்தார்.! இப்போது, “மோடி-லேடிஎதுகை மோனை டயலாக்கையும் தன் பங்கிற்குத் திருப்பிப் போட்டிருக்கிறார் –
“சிறந்த நிர்வாகி 
 மோடியுமல்ல, லேடியுமல்ல 
 என் டாடிதான்என்று போட்டாரே ஒரு போடு!

இது எப்படி இருக்கு? 
ஞ்ச் டயலாக் சூப்பர்ஸ்டார்தான் இதற்கு 
தில் சொல்லணும். 

இந்த மாதிரி நேரத்தில் வழக்கம்போல இமயமலைக்கோ வெளிநாட்டுக்கோ போய்விடக் கூடியவர் இந்தமுறை ஏனோ தெரியவில்லை , போகவே இல்லை!!

மொத்தத்துல இந்தத் தேர்தல்ல 
பஞ்ச்-டயலாக் கிடைச்சுடுச்சுல்ல??!!

என்ஜாய்... தமிழர்காள்! என்ஜாய்!
----------------------------------

10 கருத்துகள்:

  1. சினிமா போன்றே அரசியலிலும் பஞ்ச் டயலாக் பிரசித்தம் பெற்று வருகிறது. மோடி லேடி டாடி என்று ஸ்டாலின் முடித்துவைத்ததுதான் அருமை!. நல்லதொரு பதிவு அய்யா!.

    பதிலளிநீக்கு
  2. நம்ம பொழப்பு நாளைக்கு சிரிப்பாய் சிரிக்கப் போகுதுன்னு சூசகமா எல்லோரும் நம்மை சிரிக்க வைக்குறாங்களோ!?

    பதிலளிநீக்கு
  3. அம்மாவின் அந்த பன்ச் டயலாக்கை கேட்டவுடன் அட்ரா அட்ரா டி.அர். இனி வி.அர்.ஸ் வாங்கிக்கவேண்டியது என்று நான் ஆர்ப்பரிக்க, கணினியில் மூழ்கியிருந்த கஸ்தூரி குழம்பி போனது செம செம காமெடி. நல்ல என்டர்டைன்மென்ட் போங்க!1

    பதிலளிநீக்கு
  4. தலைவர்களோட பன்ச் டயலாக் எல்லாம் மக்கள பஞ்சராக்க பாக்குதே..உஷாரா இருந்தா நல்லது..நடக்குமா?

    உங்க பன்ச் //என்ஜாய்... தமிழர்காள்!// அருமை ஐயா :)

    பதிலளிநீக்கு
  5. இவங்க பஞ்ச் டயலாக்கை நம்பி ஓட்டை போட்டோமுன்னா நாம தெருக்கோடியிலதான் நிக்கனும்! இது எப்படி?!

    பதிலளிநீக்கு
  6. ஸ்டாலின் பஞ்ச் அருமை, ( பஞ்ச் மட்டும் தான்)

    பதிலளிநீக்கு