I A S- தேர்வு எழுத, சில அடிப்படைப் புரிதல்கள்....


பொதுஅறிவு என்பது,
தேர்வு நேரத்தில் விற்கும் “ஜி.கே.புக்“ படிப்பதால் மட்டும் வந்துவிடாது. அப்படிப் படிப்பது அலுப்பாகவே இருக்கும்.
பொதுஅறிவுஎன்பது, 
பல்வேறு துறைசார் அறிவுச் செய்திகளின் தொகுப்பு, மனப்பாடப் பகுதிபோலப் படித்து மனப்பாடம் செய்யவும் முடியாது.  

இதற்கு உரிய வழி -- 

எந்தத் தேர்வை எழுத முடிவெடுக்கிறோமோ அந்தத் தேர்வுக்குக் குறைந்தது 2,3ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து செய்தித்தாள் படித்துக் குறிப்பெடுப்பதும், தொலைக்காட்சிச் செய்திகளைக் கவனித்து வருவதும், தேர்வு எழுதப்போகும் துறை சார்ந்த முதன்மை மந்றும் துணை நூல்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதுமே ஆகும்.
இணையத்தைப் பயன்படுத்துவது  பேருதவியாக அமையும்.
இந்தச் சுயமுயற்சியோடு, சரியானபடி வழிகாட்டக் கூடிய பயிற்சி வகுப்புகளைத் தேடிப்பிடித்துச் சேர்ந்து பயில்வதும் உதவக் கூடும். (இதில் பணம் பிடுங்கும் பயிற்சி வகுப்புகளே அதிகம். தொண்டுள்ளம் கொண்டு நடக்கும் பயிற்சிகளைப் பயன்படுத்துவது அவரவர் சமர்த்து)
ஆனால், மேற்கண்ட வழிகளில் சுயமுயற்சி இல்லாதவர்கள், பயிற்சி வகுப்புக்குப் போவதால் மட்டும் தேர்ச்சிபெற முடியாது
அதற்கும்மேல் “மனோரமா-இயர்புக்“ போலும் ஆண்டுத் தொகுப்புகளைப் படிப்பதும் உதவும்.
அடிப்படை உதாரணமாக-
தமது மகளை () மகனை இந்திய ஆட்சிப்பணி (IAS) தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், அவரிடம் சிறு வயது முதலே, மாவட்ட ஆட்சித்தலைவர் பணியின் ஆளுமை குறித்து –அவரறியாமலே- கொஞ்சம் கொஞ்சமாக அறியவைத்து, மாவட்ட ஆட்சியரின் பணிச்சிறப்பை நேரடியாக உணரச்செய்து, அதன்பால் ஈர்ப்புவரச் செய்து, அதன்பின் அந்தத் தேர்வைப் பற்றிக் கூறி அந்த நோக்கில் தயாரிக்கத் தொடங்கி குழந்தையின் சுயமுயற்சியைத் தொடங்கி வைக்க வேண்டும். பிறகு தானாக எல்லாம் நடக்கும்.
தன்னார்வமில்லாத எந்த வெளி முயற்சியும் வெற்றிபெறாது என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்வது முக்கியம். பிள்ளைகளுக்கு ஆர்வமற்ற துறையில் நெட்டித் தள்ளி, சும்மா படி படி என்றால், அது படிப்புத் தோல்வியில் மட்டுமல்ல, வாழ்க்கைத் தோல்வியிலும் கொண்டுபோய் விடும் என்பதைப் பெற்றோர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இறுதித் தேர்வின் போது நண்பர்கள் சேர்ந்து (GROUP STUDY) படிக்க --
எந்தஎந்த செய்தித்தாளைத் தொடர்ந்து படிக்க வேண்டும்? அதே செய்தி பற்றிய மாற்றுக் கருத்து என்ன என்று விவாதிக்கலாம்.
பத்திரிகைத் தலையங்கத்தைப் பயன்படுத்துவது எப்படி? இதற்கும் மாற்று ஏதும் இருக்கிறதா? என்பதை விவாதிக்கலாம்
ஆசிரியப் பயிற்சித்தேர்விற்குத் தயாராக விரும்புவோர், அந்தந்தப் பாட வல்லுநர்களிடம் கேட்டும் பயிற்சி பெறலாம்.
டிஇட்டி தேர்வு எனில், கட்டாயமாக 6முதல் 12வகுப்பு வரையான புத்தகங்களை –இரவல்-வாங்கி வைத்துக் கொண்டு, அந்தந்தப் பாட ஆசிரியர்களிடம் கேட்டும் ஐயம் களையலாம். (இதைத்தான் பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்கள் நடத்திக் காசு பார்க்கின்றன. தமிழகத் தேர்வுத் துறையே பயிற்சியையும் இலவசமாக நடத்தலாம்)

சும்மா மருத்துவம், பொறியியல் என்றே ஓடாமல், தெளிவாக முடிவெடுத்து, ஏதாவது ஒரு கலைக்கல்லூரியில் ஆர்வமான படிப்பில் அல்லது வேளாண்படிப்பில் சேர்ந்து, ஒரு பட்டத்துடன் I.A.S பயிற்சியும் முயற்சியும் செய்தால் வெற்றி நிச்சயம்! 

விக்கி பீடியா -தகவல் தளம் 
http://en.wikipedia.org/wiki/Main_Page
(இந்த இணைப்பு தமிழிலும் கிடைக்கும்)

எந்த ஐயத்தையும் களையக் கூடிய தளம்  -- 
http://www.ssivf.com/

அன்றாடச் செய்திகளைப் பிறகும் தொகுக்க -
http://video.puthiyathalaimurai.tv/

இலக்கிய நூல்கள் இலவச இணைய நூலகம் -
    http://www.tamilvu.org/library/libindex.htm
  
சமகாலத்தகவல்கள்தொகுப்பு http://www.currentaffairs4examz.com/2014/05/pasa-exam-2014-tamil-nadu-circle.html

இவ்விணைப்புகள் தமிழில்கிடைக்கும் அரியவாய்ப்பு. தேர்வுக்காக மட்டுமின்றி பொதுவாகவே அவ்வப்போது பார்க்கத் தவறியோர், பிறகும் பார்க்கும் வாயப்பினை வழங்கும் இந்தப் புதிய தலைமுறையின் இணையச்செய்தித் தொகுப்பு, அவரவர்க்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் பார்வையில் தரும். (எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்.. உங்கள் பொறுப்பு.)
------------------------------------------
எனது சொந்த வேலையாகப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் போனபோது, சில நண்பர்களின் அறைகளில் நுழைந்து வெளிவர, புதியவர் சிலர் “அய்யா வாங்கய்யாஎன வரவேற்றனர். சில ஆண்டுகளின் முன், அரசு ஊழியர் சங்கமும், பட்டதாரி ஆசிரியர் கழகமும் சேர்ந்து நடத்திய அரசுப்பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பயின்று தேர்வானதையும் சொன்னார்கள். அதில் பொதுத்தமிழ் மற்றும் இலக்கண வகுப்புகளை நான் நடத்தியிருந்தேன்!
அவர்களில் சிலர், தம் குழந்தைகளை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எப்படித் தயார் செய்யலாம் என்று கேட்டபோது நான் சொன்ன சில ஆலோசனைகளையே விரிவுபடுத்தி இங்கு எழுதியிருக்கிறேன்.
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வலை நட்பும்! 

15 கருத்துகள்:

 1. என் மகள் கேட்ட விபரங்களை அழகாக கொடுத்துள்ளீர்கள். பாதுகாத்து வைத்துக் கொள்கின்றேன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மிகத் தேவையான பகிர்வு,நன்றி சார்

  பதிலளிநீக்கு
 3. அனைத்திலும் சிறந்தது GROUP STUDY...

  நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 4. மிகவும் தேவையான ஒரு பதிவு. முதலில் பெற்றோர்கள் அனைவரும் இந்த பதிவை படிக்க வேண்டும்.

  "//சும்மா மருத்துவம், பொறியியல் என்றே ஓடாமல், தெளிவாக முடிவெடுத்து, ஏதாவதொரு கலைக்கல்லூரியில் ஆர்வமான இளங்கலைத் தேர்வு அல்லது வேளாண்படிப்பில் சேர்ந்து, ஒரு பட்டத்துடன் முயற்சியும் பயிற்சியும் செய்தால் I.A.S நிச்சயம்!
  //"

  உண்மை. இப்பொழுது எங்கு திரும்பினாலும் பொறியியல் கல்லூரி தான் கண்ணில் தென்படுகிறது. ஏதோ ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பதற்கு, இந்த மாதிரி திட்டமிட்டு படிப்பது எவ்வளவு நல்லது என்று சொல்லிவிட்டீர்கள்.
  மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. இந்த இணைப்பைச் சேமித்துக் கொள்கிறேன்..மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. அண்ணா எனக்கு தெரிந்த ஆசிரியர் தம்பதியின் மகள் புத்தக நாட்டம் உள்ளவள். அவளது ஆசையே ஐ.ஏ.ஸ் தான் . ஆனால் அவள் பெற்றோர் இப்படி கண்டதையும் படித்தால் மார்க் எப்படி வாங்குவாய் என அவளுக்கு அட்வைஸ் மழை பொழிகிறார்கள். மேலும் ஐ,ஏ.ஸ். எல்லாம் கஷ்டம் டா எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை நீ டாக்டர் ஆகணும்டா என அவளை திசைதிருப்பி விட்டு எல்லோரிடமும் அதை பெருமையாய் அதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பானுள்ள தகவல் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விர்ச்சுவல் கீ போர்ட் உபயோகிக்கவும்.
   நீங்கள் தமிழில் உள்ளீடு செய்ய எந்த முறையை பயன்படுத்துகிறீர்கள் என்று சொன்னால் விளக்கமாக சொல்ல முடியும். பொதுவாக திரையின் வலது கீழ் மூலையில் கீபோர்ட் போன்ற அமைப்பு தெரியும், அதில் எழுத்துக்கள் இருக்கும் அதை க்ளிக் செய்து எழுத்துக்களை இணைக்கலாம்

   நீக்கு
 7. என் கீ போர்டில் ஒய் சரியாக வேலை செய்யவில்லை . அதனால் பல நேரம் தவறுதலாக கமென்ட் வந்துவிடுகிறது . பாருங்க பயனுள்ள என்பது தவறாய் வந்துவிட்டது.மன்னிக்கவும். பயனுள்ள பதிவு அண்ணா!

  பதிலளிநீக்கு
 8. பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ஐஏஎஸ் கனவு மனதில் நிரம்பி வழிந்தால்தான் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு அத்தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் -என்பதைப் பெற்றோரகள் புரிந்து கொள்ள வைத்தீர்கள். நன்றி .

  பதிலளிநீக்கு
 9. //பிள்ளைகளுக்கு ஆர்வமற்ற துறையில் நெட்டித் தள்ளி, சும்மா படி படி என்றால், அது படிப்புத் தோல்வியில் மட்டுமல்ல, வாழ்க்கைத் தோல்வியிலும் கொண்டுபோய் விடும் என்பதைப் பெற்றோர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.//

  இது ஐஏஎஸ்-க்கும் பொருந்தும்ங்க..

  எங்க ஊருல ஒரு பயல டெல்லிக்கு அனுப்பி ஐஏஎஸ் க்கு ரெடி பண்ணினாக..பையனும் ரத்தத்த வேர்வையா சிந்தி ஒழச்சான் ..பாவம் அவனுக்கு கைகூடல..எல்லா சான்சும் முடிஞ்சது ..திரும்பிட்டான்..சேக்காளிகலெல்லாம் வேலை, தொழில், குடும்பம்னு செட்டில் ஆயிட்டானுக ..எடுத்தான் ஒரு பெரிய பாறாங்கல்ல ..தலைக்கு மேல தூக்கிகிட்டு வெரட்டுரான்? யாரை ? அப்பனாத்தாள ...."நீங்க பெருமைக்கு பன்னி மேய்க்க ஐஏஎஸ் படிக்க வெக்குறேன்னு என்ன ஒழிச்சுபுட்டீங்கலெடா-ன்னு" .

  பதிலளிநீக்கு
 10. மிகவும் உபயோகமான பதிவு ஐயா! ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது சிறுவயதிலிருந்தே என் கனவு, பார்க்கலாம்..

  பதிலளிநீக்கு
 11. போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ள குறிப்புகள் .நிறைய பேருக்கு நிச்சயம் உதவும்

  பதிலளிநீக்கு
 12. ஐயா வணக்கம்!
  என்மகளுக்காக நான் தேடிக்கொண்டிருந்த விபரங்கள் குறித்துக்கொண்டேன்நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 13. மிகவும் தேவையான பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு