பசுவிடம் பால்குடிக்கும் குழந்தை - புகைப்படக் கவிதை


சில கவிதைகள் மனசில் நிற்க, 
கருத்தை விஞ்சிய 
அதன் சொல்லழகே காரணமாக இருக்கும்.

சொல்லே இல்லாமல் கவிதை இருக்குமா?

இருக்குமே  என்கிறார் 
இந்தப் புகைப்படக் கலைஞர்.

புகைப்படம் எடுத்தவரைத் தெரியவில்லை.
நம் “செம்புலப்பெயல்நீரார்” போல
அவரது படைப்பால் நிற்கிறார்.

எடுத்த இடத்தை மட்டும் இட்டிருக்கிறேன்
பார்த்து மகிழ்ந்து
கருத்துரைப்பதுடன்,
இந்த 
நண்பர்களையும்
தொடரச் சொல்லுங்கள்அய்யோ யாரும் கிட்ட வராதிங்க
என் குழந்தை பால்குடிக்குது!

மாடா இருந்தா என்ன
மனுஷியா இருந்தா என்ன
தாயி தாயிதான்.
---------------------------------------------------------- 
 “சிங்கிலா” வந்த சிங்கம்
சிலுப்பிக்கிட்டு ஓடுது!
ஓ! எருமையெல்லாம்
ஒன்னாச் 
சேர்ந்துருச்சிலல...
மாட்டுக் கதையெல்லாம்
படிச்ச மனுசனுக்கு
புத்தி வரமாட்டுதே!
                               -------------------------------------------------------------------          மூக்கே சந்தேகமா இருக்கு,
சரி,
எந்தக்கண்ணு 
யாரோடது?
இத
கழுகுக் கண்கொண்டு
பார்த்துச் சொல்லுங்க
பார்ப்போம்!
----------------------------------------------------

                                    


யார்ரா அது?
நா
படம் புடிக்கிறதுக்கு முன்னாடி
என்னப் படம் புடிச்சது?
இப்படிக்கு 
நான்
-------------------------------------------------- பெண்ணை
குலவிளக்கு என்கிறார்கள்
இங்கே 
தூரம்போக தூரம்போக
வெளிச்சம் மட்டுமே
தெரிகிறது
பெண்களைத்
தெரியலயே!
நிழல்தான் மறைக்கும்,
இந்த வெளிச்சமும்
பெண்களை மறைக்கிறதே!
------------------------------------------------------------------------ 
படம் பிடித்தவரே(?) எழுதிவிட்டார்
--------------------------------------------------------- 
சரி,
ஒவ்வொரு படத்துக்கும்
நான் எழுதின மாதிரி
நீங்களும் அழகா
தோன்றுவதை 
எழுதுங்களேன்
பின்னூட்டத்தில்?

அப்படியே
இந்தப் படங்களை
எனக்கு
அறிமுகம் செய்த
நண்பர் மகா.சுந்தர் 
 http://mahaasundar.blogspot.in/ 
வலையில்
தொடர்ந்து 
எழுதச்சொல்லி
ஒரு குட்டுவைங்க!
----------------------------------------------------

அவரே சுட்டாரா?
இல்ல
அவரும் “சுட்ட“வர்தானா?
தெரியலயே(?!)

இருந்தாலும்
சுட்டுத்தந்த
இந்த
நண்பரையும்
 http://www.mukavare.com/
தொடர்ந்து எழுதச்சொலலி
எழுதுங்க 
அன்புடன்,
உங்கள்
நா.முத்துநிலவன்
நா.முத்துநிலவன்
நா.முத்துநிலவன்
நா.முத்துநிலவன்

(எதிரொலிங்கோ)
எதிரொலிங்கோ
--------------------------------------------------------------

48 கருத்துகள்:

 1. ஹா... ஹா... அனைத்தும் அசத்தல் ஐயா...

  தாய் தாய் தான் மிகவும் அருமை...

  2 புதிய தள அறிமுகத்திற்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனபாலன் அய்யா. உங்களின் புதிய முயற்சி எல்லாருக்கும் பயன்தரும் விதம் வளர வாழ்த்துகள். வந்து படிச்சுட்டு எழுதுறேன்

   நீக்கு
 2. மிக அருமையான புகைப்படங்கள்!

  பெண்களை அருகில் வைத்தால்
  அழகுப் பதுமைகளாம்!
  பெண்கள் உயரே சென்றால்
  தீபம் போன்று சுடர்விட்டு
  ஒளிரும் அழகைப்
  பார்ப்போம்! பெருமைப்படுவோம்!
  -----------------------------------------------------------------------------

  ஆ! என்னைப் போல்!
  இவர்கள்!
  குரங்கினமோ?!
  மக்கள் மந்திகளானதால்!

  ---------------------------------------------------------------
  மனிதர்களே
  எருமை மாடே!
  என்று திட்டாதீர்கள்
  நாங்கள் சோமபேறிகள்தான்!
  எங்களுக்கும் வீரம் உண்டு!
  லேட்டாக வந்தாலும்
  லேட்டஸ்டாகத்தான் வர்வோம்!

  -------------------------------------------------------------------------------------------

  அம்மா என்று அழுதாலும்
  பால் தர அம்மா இல்லை!
  ம்மா என்று அழைத்தது பசு!
  எனக்குப் பால் தரத் தானோ!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசிக் கவிதைதான் முதலில் வந்திருக்கவேண்டும். இடத்திலும் தரத்திலும் இதுதான் உங்கள் கவிதையில் என்பார்வையில் முதலிடம் நன்றி மற்றும் பாராட்டுகள் அய்யா.

   நீக்கு
 3. அருமையான படங்கள்! முதல் படம் மிகவும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. பசுவிடம் பால் குடிக்கும் குழந்தை
  "என் அழகு கெடுமென்று நான் நினைக்கவில்லை
  உன் பசி தீரக் குடி குழந்தாய்"

  குரங்கு..
  "மரத்துக்கு மரம் தாவுறோம்
  இதப் பாக்க மாட்டோமா"

  பெண்கள்
  "பெண்கள் ஒளி(கல்வி)யேற்றினால்
  மண்ணுலகம் ஒளிமயம்
  உங்கள் ஒளியைத் தூண்டுங்கள்
  எங்கும் ஒளியால் நிரப்புங்கள்"

  நன்றி ஐயா..எதிரொலி நல்லாக் கேட்டுச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1.நீங்கள் சிறந்த தமிழ்த்தாய்,
   2.நீங்கள் விஜய் ரசிகர்,
   3.உங்களிடம் சுயகல்வி அதிகம்.
   எப்படி நம்ம சாதகக் கணிப்பு?
   நன்றிம்மா.நன்றிம்..நன்றி..(உங்களின் கடேசி வரிக்கு)

   நீக்கு
  2. ஹாஹா..இரண்டாவது விசயம் எப்படி கண்டுபிடிச்சீங்க :) ஆனால் அது ஒரு காலம் ஐயா..இப்போ இல்லை. நல்ல சாதகக் கணிப்பு.

   நீக்கு
  3. எவ்வளவோ கண்டுபிடிக்கிறோம்... இதக் கண்டுபிடிக்க மாட்டமாம்மா? (இதுக்குள்ள இருக்கு குறிப்பு) இப்ப இல்லன்னா, நல்ல விவரமா ஆயிட்டீங்கன்னு அர்த்தம். சரியா?

   நீக்கு
 5. நீங்களே இவ்வளவு அருமையாக எழுதிவிட்டப்பிறகு
  நாங்கள் என்ன எழுதுவது...

  அனைத்தும் அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கம்பன் மாதிரி எழுதினதுக்குத்தான் நீங்கள்
   வள்ளுவர் மாதிரி எழுதிட்டீங்களே!

   நீக்கு
 6. படங்கள் அனத்தும் மிகவும் அருமை ஐயா! அதற்கு அளித்த விளக்கங்களும் தான்!!!!!! எடுத்தவருக்கும் , எடுத்து பிரசுரித்தவர்க்கும், அறிமுகம் செய்த உங்களுக்கு வாழ்த்துகள்!!!! ஐயா!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடுத்தவருக்கும் , எடுத்து பிரசுரித்தவர்க்கும், அறிமுகம் செய்த என்னோடு, பாராட்டிய உங்களுக்கும் என்று சேர்த்துக்கொள்வோம்

   நீக்கு
 7. எக்கோ எச்காகோ !! சூப்பர்!!!
  1.இதுதான் அசல் ஆவின் பால்!
  2.நம்புங்க! அவங்க துரத்தலைங்க follow பண்றாங்க!
  3.இவர் ஒரு நாட்டுப்பற்றுள்ள அமெரிக்கன், பாருங்க தேசியப்பறவையை கூடவே வச்சுருக்கார்!
  4.சுட்டாதை சுட்டுடாங்களே!
  5.புத்தனின் அன்பாய் புவியெல்லாம் வெளிச்சம்!
  6.சரி ப்ரீயா வுடு பத்துநிமிசத்தில பெய்ண்ட் உதுந்துரும் ! பத்து நாளால் ரோடே உதுந்துரும்!
  என்ன அண்ணா பாஸ் பண்ணிட்டேனா?
  மகா சார் வந்து கணினி ஜோதியில் ஐக்கியமாகுங்கள்!!!! போட்டோஸ் அசத்தல்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்னப்பா எச்காகோ? சூப்ரபு மாதிரியா? (இந்தக் காலத்துப் புள்ளைங்க பாஷையை எந்த டிக்ஷனரில பாத்தாப் புரியும்னு கொஞ்சம் சொன்னா உனக்குப் பெரிய புண்ணியமாப் போகும்) நா நாலுவரிக் “கவி“விருத்தத்தில் சொன்னத நீ நறுக்-னு ஐக்கூ மாதிரி கமெண்ட்லயே நொறுக்கிட்டியே! என்னது பாஸா...? நா எப்பவும் என் பிள்ளைகளிடம் தோத்துப் போறத விரும்புவேன். இப்ப என் தங்கையிடமும்... நன்றிடா.

   நீக்கு
  2. எக்கச்சக்கம் ங்கோ அப்டிங்கிறத சுருக்கிசொன்னேன்!
   அண்ணா நம் சின்ன பாப்பாவிடம் குறுஞ்செய்தி அனுப்பிப்பழகுங்கள் ! நான் என் தம்பியிடமும், நம் மாணவச்செல்வங்களிடமும் கற்றுக்கொள்கிறேன். எழுத்து இளமையா இருக்கும்ல!!!:)))) மற்றபடி குழந்தையை மெச்சும் தாயின் பாராட்டுக்களுக்கு நன்றி அண்ணா !!

   நீக்கு
  3. ஒரு ரகசியத்த உனக்கு மட்டும் சொல்றேன் - எனக்கு வரும் கணினிச் சந்தேகங்களைத் தீர்க்கும் ஆசிரியர் இருவர் - ஒருவர், கஸ்தூரி, அடுத்தவர் என் மகள்(இவளுக்குக் கணினி தெரிந்த அளவுக்கு வலைப்பக்கம் தெரியாது, ஆனால், என் செல்பேசியில் திருக்குறள், பாரதியார்கவிதை எல்லாம் வைத்து எல்லாரையும் மிரட்டிக்கொண்டிருக்க கற்றுத்தந்தவள் அவள்தான். பிள்ளைகளிடம் கற்று்க்கொள்ளும் சுகத்தை ஏன் பல பெற்றோர்கள் இழந்துவிடுகிறார்களோ தெரியவில்லை. நீயும் என் மகள் போலும் ஓர் இளைய தங்கைதானே?அதுதான்.

   நீக்கு
 8. ஐயா வணக்கம்வெள்ளை நிறத்தண்ணீர் குடித்து, வெறுத்துப்போனது, குழந்தை... !கறந்தால் தானே கலப்படம் கறக்காமல் சுரக்கட்டும் குடிக்கிறேன். தாய் தராத பால் .ஆ........என்றதும் அந்த ஆ தந்தது.

  பதிலளிநீக்கு
 9. சிங்கமே! ஆனாலும் , பல எருமைகளின்கைகளில்....பங்கமே..........

  பதிலளிநீக்கு
 10. இருக்கிற இடத்தில் இருப்பதே இந்தக்கண்ணுக்கு தெரியலியே.............! இந்தக்கண்ணு, எந்தக்கண்ணுன்னு எப்படிய்யா? சொல்றது.

  பதிலளிநீக்கு
 11. எனக்கு இந்த படத்தப்பார்த்த உடனே, சட்டுன்னுஞாபகம் வந்தது வடிவேல் காமெடிதான் "இந்த குரங்கு பொம்மை என்ன விலை? அது பொம்மைஇல்லை கண்ணாடி.. ஓ..... நம்மதானா அது.............

  பதிலளிநீக்கு
 12. கண்ணுக்குஎட்டாமல் காத தூரம் சென்றாலும் கடுதாசி போட்டேனும் callசெய்து அழைத்தேனும், நம்குலம் தழைத்திடவே , தொடர்போடு இருப்பாள் எப்பொழுதும்.

  பதிலளிநீக்கு
 13. சுட்டுப்போட்டதை சுட்டுத்தந்தது சூப்பர். நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா (தனித்தனிக் கருத்தாப் போட்டதையே நம் துளசிதரன், கிரேஸ், மைதிலி மாதிரி ஒன்னாத் தொகுத்துத் தந்திருக்கலாம்ல? (நமக்கு எண்ணிக்கையும் முக்கியம்தான் ஆனால்.. கருத்து அதைவிடவும் முக்கியம்ல?)

   நீக்கு
 14. எல்லா படங்களுமே இணையத்தில் வலம் வந்தவை போல தான் தெரிகிறது...எல்லாமே அருமை - படங்களும், வர்ணனையும் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா என் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுத்தது மட்டுமே என் வேலை இதையும் குறிப்பிட்டிருந்தேனே? நன்றி நண்பரே

   நீக்கு
 15. படங்களும்
  வரிகளும் அருமையோ அருமை
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது எங்க இருந்தாலும் பறந்துபோய் ரசிக்கிறதும், பாராட்டுறதும், மத்தவங்களுக்கும் சொல்லிப் பாராட்டவைப்பதும் தானே நம்ம வேலை? நன்றி அய்யா

   நீக்கு
 16. சிறந்த பகிர்வு
  தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா.
   உங்கள் இணையத் தொகுப்பில் நம் வலைப்பக்கம் சேரவில்லையே அய்யா? நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குத் தனியே மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறேன் -muthunilavanpdk@gmail.com

   நீக்கு
 17. கவிதைகள் காட்சியாகி -
  கண்களை நிறைக்கின்றன..
  இனிய பகிர்வுக்கு நன்றி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழரே.
   உங்கள் வலைப்பதிவில் பக்தி பிரதானமாக உள்ளதே!
   உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர்.
   அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில்.
   நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.
   தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.
   படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
   நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
   நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
   படமாடக் கோயில் பகவற்கு அஃது ஆமே
   http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04115l1.htm
   இது என் கருத்து, தாங்கள் ஏற்கவேண்டும் என்று அவசியமில்லை. இருந்தாலும் சொல்லவேண்டுவது என் கடமை

   நீக்கு
  2. எனக்கும் அவரது தளத்திலும், ரூபிகா மேடம் தளத்திலும் கருத்திட ஆசை ,ஆனா எப்டி சொல்லுறதுன்னு தெரியலை ! நான் நினைத்ததை நீங்க உங்க பாணில தெளிவா சொல்லிடீங்க அண்ணா! துறை அய்யா தான் முதன்முதலா என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார்!

   நீக்கு
 18. பதில்கள்
  1. நன்றி தோழரே! தங்கள் வலையின் http://mabaclicks.blogspot.in/
   இந்த ஒரு படத்துக்கு எதுவும் ஈடாகாது பார்த்து வியந்து மகிழ்ந்தேன் - நல்லது, தொடர்க தொடர்வேன், தொடர்வோம்

   நீக்கு
 19. படங்களும் படங்களுக்கான உங்கள் கருத்துகளும் அருமை! பின்னூட்டத்திலும் எல்லோரும் கலக்கி இருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே, நண்பர்களின் கருத்துகள் மிகவும் முக்கியம். உங்களின் “நான் ரசித்த பாடல்” வலையில் இசைஇணைப்புடன் நல்ல பாடல்களை அந்தந்த படம்-இசையமைத்தவர்-பாடியவர் விவரம் உட்படத் தந்திருப்பது, பின்னாளில் பெரிய ஆவணமாகும் ஆனால், முக்கியமாக அதை எழுதியவர் பெயரை எழுத விட்டுவிட்டீர்களே நண்பா! அதையும் சேருங்கள்! நன்றி.

   நீக்கு
 20. ஆஹா அழகான படமும் வரிகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு வேறு வரியேதும் தோனலியா கவிஞரே? நம் நட்புக் கவிஞர்கள் கலக்கியிருக்காங்க பாருங்க.. “புகைப்படக் கவிதைப் போட்டி” ஒன்னு நடத்தலாம் போல! (நடத்திடுவமா?)

   நீக்கு
 21. வணக்கம் சகோதரரே !
  அருமையான படம். குழந்தைகளுக்கு இப்போ எல்லாம் ரொம்ப புத்திங்க கலப்படப் பாலை குடித்து களைத்துப்போய் கலப்படம் இல்லாமல் எப்படி குடிக்கலாம் என்று ஐடியா பண்ணி இருக்கே.
  ஆனாலும் அந்தப் பசு மறுக்காமல் மனிதக் குழந்தை என்று வேறுபாட்டின்றி தன் குழந்தை என்றே எண்ணி ஊட்டுகிறதே உண்மையில் அற்புதம். நன்றி ! வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்மா... அதுதான், அந்தப்படம் பார்த்தவுடன் பச்சக்னு மனசுல ஒட்டிக்கிச்சு... அதைப் பகிர்ந்துக்கிட்டேன்... நன்றிம்மா.

   நீக்கு