இவருக்கு வாக்களியுங்கள்

“இந்தியருக்கு இப்போது
வாயெல்லாம் பல்
பல்லெல்லாம் சொத்தை”
ஆகிவிடாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
(நன்றி கவிஞர் கந்தர்வன்)
 கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுபவரா?
அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்.
லஞ்சம் மேலிருந்து வருகிறது என்பதை அறிந்த நல்லவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
உலகநாடுகளுடன் இந்தியரை முன்னேறும் திட்டமுள்ளவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
மதம் கடந்த மனிதநேயம் உள்ளவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
மேலேமேலே போனாலும் மக்கள் தொடர்பை மதிப்பவரா?
அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
தன் சக நண்பர்களையும் மதித்துக் கருத்துக் கேட்பவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
இந்தியா ஏழை நாடல்ல, ஏழைகளின் நாடு என்பதை உணர்ந்தவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் சமம் என்பவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
வெளிநாட்டில் இருக்கும் இந்தியருக்கும் கௌரவம் தரக் கூடியவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
இந்தியரின் பிரச்சினை புரிந்து செயல்படுபவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
இலவசங்களால் அன்றி தொலைதூரத் திட்டங்கள் உள்ளவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
கவர்ச்சிகளால் அல்ல, அறிவியல் பார்வையுடன் செயல்படுபவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்
மக்கள் விரும்புவதை அல்ல, 
மக்களுக்குத் தேவையானதைச் செய்பவரா?
     அவருக்கு  (அ) அவர்சார்ந்த கட்சிக்கு வாக்களியுங்கள்

---- என்ன?
அப்படி யாரும் இல்லையே என்றால்,
நோட்டாவுக்கு வாக்களியுங்கள்.
ஆனால்,
     வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டது.
தீர விசாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
     உங்கள் தொகுதியின்
ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றியும்
செய்திகளைச் சேகரியுங்கள்.
அவசரப் படாமல்,
-நான் சொல்வது உட்பட-
அவன் சொல்கிறான் இவன் சொல்கிறான்
என்பதற்காக முடிவெடுக்காமல்,
தெளிவாக முடிவெடுங்கள்,
திறமும் அறமும் உள்ளவர்க்கே
வாக்களியுங்கள்.
     “குணம்நாடி, குற்றமும் நாடி அவற்றுள்
     மிகைநாடி மிக்க கொளல்“ – குறள் – 504

     “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்“
     நாம் நினைத்தால் மாற்ற முடியும் என்பதே புதிய மெய்!
------------------------------------ 

19 கருத்துகள்:

 1. எல்லாம் சரி நோட்டாவுக்கு வாக்களித்து ஒரு பயனும் இல்லையே...

  பதிலளிநீக்கு
 2. எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும், நோட்டாவின் அவசியத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று காட்ட வேண்டிய இடங்களும் இருக்கும் சகோதரி. அது அந்தந்தத் தொகுதி வேட்பாளரையும், கட்சிகளையும் பொறுத்தது... நோட்டாவின் அவசியம் - மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அரசியல்கட்சிகளுக்கு உணர்த்தக்கூடிய விதம்தான்...

  பதிலளிநீக்கு
 3. நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லுறத சொல்லிப்புட்டேன்,
   ..........செய்யுறத செஞ்சிடுங்க,
   நல்லதுன்னா கேட்டுக்கங்க.
   .........இல்லையின்னா விட்டுடுங்க -
   சொன்னது நம்ம பட்டுக்கோட்டைதான் நன்றி நண்பரே.

   நீக்கு
 4. தேர்தல் காலத்தில் தேவையான பதிவு. பல முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. முடிவெடுத்தபின் யோசித்துப் பலனில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “எண்ணி வழங்குக வாக்கை வழங்கிப்பின்
   எண்ணுவம் என்பது இழுக்கு“ நம்ம தெருக்குரலுங்க அய்யா! நன்றி

   நீக்கு
 5. ஐயா நீங்கள் சொல்வது போல் மக்கள் முன்பை விட தெளிவடைந்து விட்டார்கள் எனபது உண்மை தான் கிராமங்களில்...

  நகரங்களில் தான் __________

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகர மக்கள் தான் நகராாாாாாா மக்களாயிருக்கிறார்கள்.
   (இது எங்கள் சங்கப் பொன்மொழி. கிராமத்திலிருந்தும் தூரத்திலிருந்தும் வந்து கருத்தைச் சொல்வார்கள். நகர மக்கள்தான் நகரா மக்களாக (அ) நரக மக்களாக... நன்றி அய்யா

   நீக்கு
 6. முன்ன மாதிரி நோட்டா போடுரவுங்களோட முடிவு இப்போ எல்லோருக்கும் தெரிவதில்லை ! பூத் ல போய் 49 ௦ அப்டின்னு சொன்ன எல்லாரும் திரும்பி பார்பாங்களே னு இனி யாரும் தயங்கவும் வேண்டாம். சரியாய் சொன்னீர்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலமுறை அலசிப்பார்த்து, உரசிப்பார்த்து, சரியான வேட்பாளரைத் தேர்வு செய்யவும் அப்படி யாருமே இல்லை என்று தெரிந்தால் நோட்டாவில் வாக்களிக்கவும் ஒரு தெகிரியம் வரணும்ல பா!

   நீக்கு
  2. எனக்கு (கூகுள் பிளஸ் இல்) ஒரு வாக்களித்த உனக்கு நன்றிப்பா

   நீக்கு
 7. ஆம் ஐயா நோட்டாவின் விழிப்புணர்வு அவசியம். கடந்த தேர்தலில் நமது தொகுதியின் அதிருப்தியை வெளிப்படுத்த அது தானே பயன்பட்டது(49 ஓ).( நாடாளுமன்ற தொகுதி நீக்கம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது அந்தக் கோரிக்கையை (நமது தொகுதியில்) ஒரு வேட்பாளர் ஏற்றுச் செயல்படுவதாக அறிவித்திருக்கிறார். செய்தித்தாள் பார்த்தீர்களா ஜெயசீலன்? கவனிக்கவும்...

   நீக்கு
  2. அமாம் ஐயா பார்த்தேன்! பார்ப்போம் நல்லது நடக்கிறதா என்று!

   நீக்கு
 8. எல்லாம் சரி நோட்டாவுக்கு வாக்களித்து ஒரு பயனும் இல்லையே...

  ஒரு தொகுதியில் மிக அதிக அளவு நோட்டாவுக்கு விழுந்தால் அடுத்த முறை கட்சி பயந்த நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வைக்கும் மந்திர பட்டன் அது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனடியாக நோட்டாவுக்குப் போடுங்கள் எனறு நான் சொல்லவிலலை ஜோதிஜி! இடம்பார்த்து, தமிழ்நாட்டின் 39தொகுதிகளில் ஒருசிலவற்றிலாவது அதன் தேவை இருக்கும் என்று நம்பியே இதை எழுதினேன்... நன்றி அய்யா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. அடடா இதை ஏன் அறிவுரைன்னு எடுத்துக்கணும்? கட்சிகள்தான் தமக்கு வாக்களிக்கச் சொல்லலிப் பரப்புரை செய்யணுமா? நாமும் “இந்தியா“வுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கேக்கலாமில்ல? அதுதான்

   நீக்கு
 10. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று அன்று சொன்னார்கள். ஆனால் என்று எங்கோ ஒருவன் தான் துஷ்டனாய் இருந்தான். ஆனால் இன்று..?

  பதிலளிநீக்கு