எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்

எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்


எழுதுவது முக்கியம்தான். எழுதும் படைப்புகள், முடிந்தவரை எல்லாருடைய பார்வையிலும் படும்படிச் செய்வதும் முக்கியமல்லவா? அதற்கு, கணினி வலைப்பக்கமோ, அச்சு ஊடகங்களோ, காட்சி ஊடகங்களோ, மேடைப் பேச்சோ, வெளியிடும் புத்தகமோ, வாய்ப்புக் கிடைக்கும் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் அல்லவா?

நான் இப்படித்தான் செய்கிறேன்.

வலையில் எழுதுவது, முடியுமெனில், அதற்குமுன்னோ பின்னோ தினசரி-வார-மாத இதழ்களில் அவை வெளிவருமாறு –நேரமறிந்து- அனுப்புவது, அழைக்கும் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவது, அதுபற்றிய செய்திகளை வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்வது, பின்னர் அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடுவது.

வலையில் எழுதுவோர் இன்னும் பரவலாக அறியப்பட, படிக்கவும் படைக்கவும், இணையவழி அனுப்பவும் வேண்டிய சில முக்கியமான தமிழ் இணைய இதழ்கள் பற்றிய அறிமுகம் இது
இணையத்தில் தேடுபொறி வழியாக உங்கள் பெயரை இட்டுத் தேடும்போது உங்களது பெயரில் உள்ள, படைப்புகளை வெளியிட்ட இதழ்களின் இணைய முகவரிகள்தாம் முதலில் கிடைக்கும்.
எனில், உங்கள் வலைப்பக்கம் தவிரவும், இணைய இதழ்களில் நீங்கள் எழுதியிருக்க வேண்டும், அல்லது உங்களைப்பற்றிய செய்திகள் இணையத் தொடர்புள்ள இதழ்களில் வெளிவந்திருக்க வேண்டும். இந்த இதழ்களில் சில வெளிவராத படைப்புகளை மட்டுமே வெளியிடும் வழக்கமுடையன. எனவே, அப்படியான இதழ்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பி, வெளிவந்த பிறகு  வலையில் பதிவேற்றலாம்.
அந்த இணைய இதழ்களில் உங்கள் படைப்புகளைப் பொதுவாகத் தேடிப் படிக்கக்கூடிய வாசகர்கள், அதில் தரப்படும் உங்கள் வலைப்பக்க இணைப்புக்கும் வருவார்கள். அப்படியே தொடரவும் செய்வார்கள்.

அப்படி உங்களுக்கு உதவக் கூடிய இதழ்கள் சில -
http://keetru.com/ -கவிதை, கதை, கட்டுரை, தொடர் முதலான அனைத்து இலக்கியங்களும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இணைப்பில் ஏராளமான சிற்றிதழ்களும் கிடைக்கும் - படிக்கவும், எழுதவும் தொடர்பு கொள்ளவும். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளைச் செய்தித்தொகுப்பாக்கி வெளியிடவும். இது இலவசக் சேவைதான். விரும்பினால் நிதி உதவியும் செய்யலாம். செய்ய வேண்டும்.

http://www.thamizham.net/  -தமிழம் இதழில், தமிழின் அரிதான சிற்றிதழ்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சான்றோர் படங்கள், குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை என்பதோடு, தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பும் கற்றுத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://puthu.thinnai.com/ http://www.geotamil.com/pathivukalnew/ - இவை இரண்டும், கீற்றுப் போலத்தான் எனினும், அதிலுள்ள சிற்றிதழ்களின் அறிமுகம் மட்டும் இருக்காது. மற்றபடி ஏராளமான எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்வையிட முடியும். பழைய படைப்புகள் உட்பட.

-http://www.tamilauthors.com/  இந்த இணையப் பக்கத்தில் எழுத்தாளர்கள் தம்மைப் பற்றிய விவரங்களையும், எழுதிய படைப்புகளையும் பற்றி, பதிவு செய்து கொண்டால் முகவரி, தொடர்பு எண் உட்பட, உலகத் தமிழர்க்கெல்லாம் உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பும் எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியும்.

http://mathippurai.com/  இந்தத் தளம், நீங்கள் எழுதிய புத்தகத்திற்கு இலவச மதிப்புரைகளை வழங்கி பல்லாயிரம் வாசகர்களுக்கு அதைக் கொண்டு சேர்க்க உதவுகிறது. உலகளவில் அறிமுகம், விற்பனைக்கு உதவக் கூடிய இணையம் இது. இந்த இணைய இதழ் அச்சிலும் வருகிறது. விரும்புவோர் ஆண்டுச் சந்தாக் கட்டியும் வாங்கலாம்.

கல்வி தொடர்பான இணைய இதழ்கள் 
 http://ttkazhagam.blogspot.in/   http://www.kalvisolai.com/     http://www.padasalai.net/     http://www.teachertn.com/  முதலான இணையங்களில் அவ்வப்போது வரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்பான செய்திகள் கிடைக்கும். இவற்றில் பாடநூல்களை இணையவழி இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் பழைய வினா-விடைக்குறிப்புகளும் கிடைக்கும். ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்க்கான அனைத்து விவரங்களும் அவ்வப்போதே கிடைக்கும். வெளிநாட்டுத் தமிழர்க்குப் பேருதவியானது.

இந்தப் பதிவின் பின் குறிப்பாக, உங்கள் கருத்தறிந்து...அடுத்த பதிவிற்கான ஒரு முன்குறிப்பு – லட்சக்கணக்கில் விற்கிற குமுதம், விகடன், குங்குமம், ராணி போலும் இதழ்களில் வருவதைவிடவும் இலக்கியத் தரமான படைப்புகள் சிற்றிதழ்கள் எனப்படும் குறைந்த விற்பனையுள்ள இதழ்களில்தான் வருகின்றன.

தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் –ஜெயகாந்தன், சுஜாதா உட்படப் பிரபல எழுத்தாளர்கள்- பலரும் சிற்றிதழ்களில்தான் எழுத்தைத் தொடங்கினார்கள் என்பது மிகவும் முக்கியமான செய்தி. 

செம்மலர், தாமரை, கணையாழி, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், காலச்சுவடு, ஆழம், காக்கைச் சிறகினிலே, முதன்மொழி, சிந்தனையாளன், அணையா வெண்மணி, முதலானவற்றை நீங்கள் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை தவிர கல்கி, புதியதலைமுறை, கல்வி முதலான இதழ்களையும் இணையத்தில் படிக்கலாம், எழுதலாம். 

பன்னாட்டுப் பல்கலைக்கழக இணைய நூலகங்கள், மேற்கோள் மற்றும் பொன்மொழிகள், கலைக்களஞ்சியங்கள் இன்ன பிறவும் இணையத்தில் ஏராளம் உண்டு. அவை பெரும்பாலும் தெரிந்தவை என்பதால் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவில்லை. 
தேவையெனில் தருவேன்.
இவற்றின் முகவரி..? 
கேட்டால் பின்னூட்டத்தில் தருவேன்.

இவை தவிரவும் எழுத்தாளர்க்குப் பயன்படக்கூடிய இணையத் தொடர்புகள் இருந்தால், தொடர்புடைய நண்பர்கள் தெரிவித்தால் நானும் தெரிந்துகொண்டு, நன்றியுடன் தொடர்பு கொள்வேன்.

அசையும் படத்திற்கு நன்றி - கூகுளார்.

------------------------------------------- 

25 கருத்துகள்:

 1. மிகப்பயனுள்ள தகவல்கள் தோழரே, நன்றி...

  பதிலளிநீக்கு
 2. இந்த கோணத்தில் இதுவரை நான் யோசிக்க வில்லை ,அறிமுகம் செய்து கொள்ளும் அளவிற்கு என்ன கிழித்து விட்டாய் என்று மனசாட்சி கேட்கும் கேள்வியையும் என்னால் தவிர்க்க முடியலே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓரிரு வருடம் கழித்துப் பார்க்கும்போதோ அல்லது ஒரு தொகுப்பாக வைத்துப் பார்க்கும்போதோ அது சிறப்பாகத் தோன்றும் அப்போதுதான் இன்னும் எழுதவும் தோன்றும். - இதுதான் நல்ல எழுத்துக்கு நான் வைக்கும் அளவுகோல். உங்கள் படைப்புகளை உலகம் மதிக்கும் உங்களுக்கேன் இப்படி ஒரு எண்ணம்? ஜோக் எழுதுவது சாதாரணத் திறமையல்ல. அதில் சமூகக் கருத்தின் பிரதிபலிப்பையே பார்க்கலாம். நீங்கள் பகிர்ந்தும், தொகுத்தும் பாருங்கள் பிறகு தெரியும்.

   நீக்கு
 3. தொகுப்பிற்கு நன்றி சார்!

  சில தெரிந்தவை;
  மற்றும் சில அறியாதவை!
  அவைகளுடன் தொடர்புகொள்ள முனைகிறேன் சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்குச் சொல்லலாமே?
   இது என்ன ஒருவழிப்பாதையா என்ன?

   நீக்கு
 4. மிகவும் பயனுள்ள குறிப்புகள் ஐயா. பகிர்வுக்கு நன்றி. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான தகவல்களும் ஆலோசனகளும் தோழரே! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்..! உதய்! உன்னைப் போல் எழுத முயன்று தோற்று இன்னும் கற்றுக்கொண்டவன் நான். அந்த கவிதா ரகஸ்யம்... “தோற்றுப் போன பூதம்“ இன்னும் என்னை பயமுறுத்துகிறது தோழா! உங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்வூட்டுகின்றன.

   நீக்கு
 6. நான் வாசிக்கும், எழுதும் சில இணைய இதழ் முகவரிகள்:
  ----------------------------------------------------------------------------------------
  www.thinnai.com
  www.vallamai.com
  www.muthukamalam.com
  www.inmmai.com – கவிதைகள் சார்ந்து மட்டும்
  malaigal.com
  solvanam.com
  www.sirukathaigal.com – கதைகள் சார்ந்து மட்டும்
  www.lankasripoems.com
  vallinam.com.my
  www.semparuthi.com
  keetru.com
  padhaakai.com
  www.nilacharal.com
  www.tamilauthors.com
  eathuvarai.net
  eluthu.com
  http://www.atheetham.com
  www.vaarppu.com
  www.yaavarum.com
  kalaiaruvi.com
  www.nanthalaalaa.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் வார்ப்பு என்று ஒரு தளமிருந்தது. இப்போது..?
   நந்தலாலா எங்கள் ஊர்க்கவிஞர் வைகறைதான் நடத்துகிறார். தொடர நேரமின்றி இருக்கிறார். மற்றவற்றைத் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து பார்க்கிறேன்.

   நீக்கு
 7. பயனுள்ள பதிவு
  சிறந்த வழிகாட்டல்

  பதிலளிநீக்கு
 8. சிறந்த தகவல்கள் சகோ..வலைப்பூவைத்திறந்தால் படிக்க முடியாமல் விளம்பரமா வந்து தடை செய்யுதே அதை எப்படி தடுப்பது.இது எனக்கு மட்டும் தானா..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றிலும் அப்படி இல்லையே? அப்படியானவை பெரிதும் வணிகநோக்குள்ளவை. அவற்றைத் தொந்தரவு செய்யாதீர்களேன்

   நீக்கு
 9. யான் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்று நோக்கோடு தாங்கள் அளித்துள்ள ஆலோசனைகள் வரவேற்கத் தக்கவை ஐயா.பின்பற்றினால் பலன் நிச்சயம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி முரளி. இந்த அன்பினாலும் தொடர்ந்து எழுதலாம் இதைப் பெற்ற எழுத்தாளரே எதைவிடவும் தொடர்ந்து எழுதுவார் இல்லையா?

   நீக்கு
 10. குறித்து (bookmark) வைத்துக் கொண்டேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட.. வலைச்சித்தருக்குத் தெரியாத வலைகளா? இருந்தாலும் இவ்வளவு தன்னடக்கம் ஆகாது சாமி... எந்த வலைக்குள் புகுந்தாலும் அதில் உங்கள் பின்னூட்டம் ஒன்றாவது இருக்கிறதே! அது எப்புடீ?

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா
  யாவரும் அறிய வேண்டிய தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா. த.ம3

  முத்துக்கமலம் என்ற இணைய இதழ் உள்ளது. காற்றுவெளி என்னும்இதழ் உள்ளது. இதை இணையத்தில் சென்று தமிழில் தட்டச்சு செய்தால் வந்து விடும் ஐயா.
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 13. மிகவும் உபயோகமான தகவல் ஐயா! இணைப்புக்களுக்கு சென்று பார்க்கிறேன்! குறித்துக் கொள்கிறேன்! வளரும் எழுத்தாளர்களுக்கும் உதவும் வளரும் கவிதையாளாரான உங்களுக்கு மிகவும் நன்றிகள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. எழுத்தாளருக்கு உபயோகமான தகவல்களை அழகாய் கொடுத்திருக்கிறீர்கள் என்னைக் குறித்த அபிமானம் இன்னும் எனக்கே வரவில்லையாதலால் எங்கும் எதிலும் முயற்சி செய்யவே இல்லை.. இனி முயல்கிறேன்...

  பதிலளிநீக்கு
 15. பயனுள்ள கருத்துக்களைத் தொகுத்துக் கொடுத்ததோடு, நல்ல இதழ்களின் முகவரிகளையும் கொடுத்திருக்கிறீர்கள். குறித்துக்கொண்டேன். மிகவும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 16. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு