எங்கள் பட்டிமன்ற ஒளிப்பதிவு நன்றி-யூ-ட்யூப்


கடந்த 14-04-2015 அன்று 
காலை 9.00-10.30மணிக்கு 
கலைஞர் தொலைக்காட்சி 
ஒளிபரப்பிய எங்கள் பட்டிமன்றத்தைக் காண 
அனைவரையும் 
அன்புடன் அழைக்கிறேன்.


நன்றி – 
(1)நமது வலைச்சித்தர் 
திண்டுக்கல் தனபாலன்அய்யா 
(2) துபையிலிருக்கும் 
என்மகள் அ.மு.வால்கா,
(2) அபுதாபியிலிருக்கும் 
என்மகன் அ.மு.நெருடா,

(மூவருமே ஒரே நாளில் இந்த யூ-ட்யூப் இணைப்பை எனக்கு அனுப்பியிருந்தார்கள் இவர்களுக்கும், இவர்களுக்கு முன்பே இதனை யூ-ட்யூபில் இணைத்த 'அந்த' முகம்தெரியாத அன்பர்க்கும் எனது நன்றிகள்..)

(ஒருமணி நேரம், 20நிமிடம் ஓடக்கூடிய,
அறுவர் வாதிட்ட பட்டிமன்றத்தில் 
எனது பேச்சு 11ஆம் நிமிடத்தில் தொடங்கி 
19ஆம் நிமிடத்தில் நிறைவடைகிறது)

-தலைப்பு-
நிறைவான மகிழ்வைத் தருவது
வாழ்ந்த பழமையா?   
வரும் புதுமையா?
-நடுவர்-
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி

வாழ்ந்த பழமையே!
புதுக்கோட்டைநா.முத்துநிலவன்,
விழுப்புரம்  வல்லபராசு
சுல்தானா பர்வீன் நெல்லை

வரும் புதுமையே!
சென்னை விஜயகுமார்
கோவை தனபால்
லின்சி ஃப்ளோரா கோவை
------------------ 
முழுமையாகப் பார்த்துவிட்டு 
கருத்துச் சொல்லுமாறு
நண்பர்களை 
அன்புடன் அழைக்கிறேன்.

இணைப்பிற்குச் செல்ல-
எனது 9நிமிடப் பேச்சு மட்டும் -
http://youtu.be/enuDgt5z2C0

முழுப்பட்டிமன்றம் ஒன்றரைமணிநேரம் -
https://www.youtube.com/watch?v=MbQ7IExubDA
திரு லியோனி அவர்கள் உள்ளிட்டு, மற்ற பேச்சாளர்களின் கருத்துகள் அவரவர் சொந்தக் கருத்துகள். என் கருத்தும் மற்றவர் கருத்தும் மாறுபடலாம், அதுதானே பட்டிமன்றம்?
----------------------------------

8 கருத்துகள்:

 1. Pattimandram 2015 Tamil New Year Special 14-04-2015 பார்த்து ரசித்தேன்.

  வாழ்ந்த பழமையே என்று அணியில் சிறப்பாக பேசிய நண்பர் நா. முத்து நிலவன், சகோதரி சுல்தானா பர்வீன் மற்றும் கவிஞர் வல்லபராசு அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
  கில்லர்ஜி.

  நேற்றே நெருடா அனுப்பி பார்த்து விட்டேன் நண்பரே
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பர் கில்லர்ஜி. நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லி மிரட்டிவிட்டீர்கள்...! நான் சித்திரை முதல்நாளைத் தமிழ்வருடப்பிறப்பாக ஏற்பதில்லை எனினும் உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 2. நன்றி ஐயா
  தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்கின்றேன்
  தம 2

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.

  நிச்சயம் பார்க்கிறேன்.. ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன். நீங்கள் அழைத்தபோது என்னால் பேச இயலவிலலை ஒரு கூட்டத்தில் இருந்தேன். மன்னிக்கவும். தங்கள் அன்பிற்கு நன்றி ரூபன்.

   நீக்கு
 4. சிறப்பான பட்டிமன்றம். நீங்கள் கொடுத்த யூடியூப் இணைப்பின் வழியே தஙகு தடையின்றி முழுமையாக ரசித்தேன். இதற்கு முதலில் எனது நன்றி.

  நீங்கள் முற்போக்கு எழுத்தாளர்; புரட்சி, புதுமையை ஆதரிக்கும் இடதுசாரி கொள்கை உடையவர். உங்களுக்கு தரப்பட்டதோ பழமையை ஆதரிக்கும் தலைப்பு. கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு நன்றாகவே ஆணித்தரமான கருத்துக்களை வைத்தீர்கள். உங்களுக்குள்ளும் ஒரு T.M.S ஒளிந்து இருக்கிறார். கம்பன் தமிழும் கணினித் தமிழும் கண்ட நீங்கள், ஆலயமணி படத்தில் வரும் பாடல்வரிகளை (“கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?) அருமையாகப் பாடி அசத்தி விட்டீர்கள். (லியோனியின் கூட்டங்களுக்கு அடிக்கடி சென்றதன் தாக்கம்).

  அன்றைய பட்டிமன்ற பேச்சாளர்களில் லியோனிக்கு அடுத்து அதிகம் கைதட்டல்களைப் பெற்றவர், எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர், நெல்லை மாணவி சுல்தானா பர்வீன் அவர்கள் என்பது எனது கருத்து. அவருக்கு உங்களது வலைத்தளம் வழியே எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  த.ம.6

  பதிலளிநீக்கு