மின்னூல் முகாமில் நூறு நூல்கள் வழங்கப்பட்டன!

தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
2014இல்தொடங்கிவைத்த,
கணினித் தமிழ்ச்சங்கத்தின் பயணத்தில்
2015 வலைப்பதிவர் திருவிழா
ஒருபெரும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி!
அதோடு,
ஆண்டுதோறும் 
இணையத் தமிழ்ப்பயிற்சியும் தந்துவருகிறோம்!
இதோ-
புதியதொரு மைல்கல்!
மின்னூலாக்க முகாம்!
----------------------------------------------------------------------
புதுக்கோட்டை  மாரீஸ் விடுதி உள்ளரங்கில், 18-01-2017 புதன்கிழமை மாலை, புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய மின்னூல் வழிகாட்டு முகாம் சிறப்பாக நடந்துமுடிந்தது.
தமிழ்ப் படைப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்ப்பது மின்னூலே என்பதால், வலைப்பக்கத்தில் படைப்பிலக்கியம் எழுதிவரும் எழுத்தாளர்கள் மின்னூலாக்கிப் பயன்பெற முகாம் நடத்தப்பட்டது. இதில், பெங்களுருவிலிருந்து செயல் பட்டுவரும் புஸ்தகா(www.pustaka.co.in)மின்னூல் நிறுவனம் கலந்துகொண்டு நேரடிக் காட்சி விளக்கம் தந்ததோடு, நூலாசிரியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விடைதந்தது மன நிறைவளித்தது.
திரு பத்மநாபன் அவர்களின் உரைமுனைவர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களின்
பவர் பாயிண்ட்  வழி,  உரை விளக்கம்
பின்னர், நூலாசிரியர்கள் புஸ்தகா நிறுவனத்துடன் தமது ஒப்பந்தப் படிவத்தைப் பரிமாறிக்கொண்டதோடு, அங்கேயே சுமார் நூறு நூல்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

      மின்னூலாக்க முகாமில், ஒருங்கிணைப்பாளர் நா.முத்து நிலவன், தாமெழுதிய 5 நூல்களை வழங்கியதோடு கணினித் தமிழ்ச்சங்க வெளியீடாக வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்ட “உலகத் தமிழ்வலைப்பதிவர் கையேடு” நூலும் மின்னூலாக்கத்திற்குத் தரப்பட்டதாகத் தெரிவித்தார்.
நா.முத்துநிலவன், ( நூல் 3 , நேரடி மின்னூல்-2)

கவிஞர் தங்கம் மூர்த்தி ( 5 நூல்கள்)
கவிஞர் மு.கீதா (4நூல்கள்)

முனைவர் மு.பழனியப்பன்  (3நூல்கள்)

தவத்திரு தயானந்த சந்திரசேகரன் (7நூல்கள்)

முனைவர் அ.செல்வராசு (7நூல்கள்)

கவிஞர் எஸ்.இளங்கோ (3நூல்கள்)

கரந்தை ஜெயக்குமார் (5நூல்கள்) 

கவிஞர் ஆர்.நீலா (4நூல்கள்)

பாவலர் பொன்.கருப்பையா (3நூல்கள்)
கவிஞர் சு.மதியழகன்

மதுரைப் பதிவர் எஸ்.பி.செந்தில்குமார்

வள்ளலார் பதிப்பகம் (10நூல்கள்)
புதுக்கோட்டைப் படைப்பாளிகளான கவிஞர்தங்கம் மூர்த்தி, தயானந்த சந்திரசேகரன், மரு.ஜெயராமன், செம்பை மணவாளன், ஆர்.நீலா, பொன்.கருப்பையா, வி.கே.கஸ்தூரிநாதன், கவிஞர்கள் மீரா.செல்வக்குமார், எஸ்.இளங்கோ, சுவாதி, சு.மதியழகன், மு.கீதா, சச்சின், முருகபாரதி, சோலச்சி, முருகதாஸ், பேராசிரியர்கள் முனைவர் மு.பழனியப்பன், முனைவர் அ.செல்வராசு, முனைவர்.நெடுஞ்செழியன், பெரும்புலவர் செகந்நாதன்,  மற்றும் மதுரை தமிழ்வலைப்பதிவர் எழுத்தாளர் எஸ்.பி.செந்தில்குமார், தஞ்சை வலைப்பதிவர் கரந்தை ஜெயக்குமார், அய்யாறு புகழேந்தி, திருச்சி வி.சி.வில்வம், உள்ளிட்ட 40 எழுத்தாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்க் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், நாடக மற்றும் சமூக-இலக்கிய ஆய்வு நூல்கள் மின்னூல் வடிவில் மாற்ற புஸ்தகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, நூல்கள் மற்றும் ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டதாக முத்துநிலவன் தெரிவித்தார்.
பெங்களுரிலிருந்து முகாமின் கருத்தாளர்களாகக் கலந்து கொண்ட புஸ்தகா (www.pustaka.co.in) மின்னூல் நிறுவன கட்டுப்பாட்டு இயக்குநர் திரு பத்மநாபன் பேசும்போது, ஜெயகாந்தன், புவியரசு, விக்கிரமன், இந்திரா பார்த்தசாரதி,  சிவசங்கரி, ஆண்டாள் பிரியதர்ஷினி, பாரதிபாஸ்கர், இந்திரா சௌந்தர்ராஜன், உள்ளிட்ட சுமார் 1200 தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்களைத் தமது நிறுவனம் அச்சுநூல் வடிவிலிருந்து,  மின்னூலாக்கி உலகத்தமிழர்கள் படிக்கத் தந்திருப்பதாகத் தெரிவித்தார். 
வைரமுத்து, அசோகமித்திரன் ஆகியோரின் சில நூல்கள் இலவச மின்னூலாகக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முகாமில் பவர்-பாயிண்ட் வழியாக, மின்திரையுடன் கூடிய விளக்கம் தந்து, “புஸ்தகா” தொழில்நுட்பக் குழுத் தலைவர் முனைவர் ராஜேஷ் தேவதாஸ் பேசும்போது, “நவீன தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மின்னூல் வழியாக, ஆசியா தவிரவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா முதலான அனைத்துக்  கண்டங்களிலும் உள்ள சுமார்  120 நாடுகளில் வாங்கப்பட்டும், வாடகைக்கு எடுக்கப்பட்டும் படிக்கப்படுவதாகத் தெரிவித்ததோடு, தமிழ் எழுத்தாளர் அனைவரும் தமது படைப்புகள், “சென்றிடுவீர் எட்டுத் திக்கும்” என்ற பாரதியின் கனவு நினைவாக மின்னூல் வடிவம் பெறுவது அவசியம்” என்றும் குறிப்பிட்டார்.
முகாமில் புதுக்கோட்டை மாவட்டம் தாண்டியும், திருச்சி, தஞ்சை, மதுரையிலிருந்தும் தமிழ் வலைப்பக்க எழுத்தாளர்கள் கலந்துகொண்டு, தமது நூல்களை மின்னூலாக்க ஒப்பந்தம் செய்து நூல்களையும் தந்தது குறிப்பிடத் தக்கது.
முகாமில் தரப்பட்ட படைப்பாளிகளின் நூல்கள் படிப்படியாக –மூன்று மாத காலத்திற்குள்-- மின்னூலாக மாற்றி இணையத்தில் ஏற்றப்படும் என்றும் அதன் பின், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இவற்றை விலைகொடுத்து வாங்கியும், வாடகைக்கு எடுத்துப் படிக்கவும் முடியும் என்று முகாமில் தெரிவிக்கப்பட்டது. 
முகாமுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் மு.கீதா, கவிஞர் மீரா.செல்வக்குமார், முனைவர் மகா.சுந்தர் உள்ளிட்ட புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச் சங்கத்தினர் செய்திருந்தனர்.
பின்குறிப்பு –
உலகெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், 
உள்நாட்டில் இருந்தால் நூல்களை அனுப்பி மின்னூலாக்கலாம்.
அச்சு நூல்வெளியிடாமலே 
நேரடியாக மின்னூலாக்க விரும்புவோரும், வெளிநாட்டிலிருப்போரும் 
மின்னஞ்சல் வழித் தொடர்புகொள்ளலாம்.

மின்னஞ்சல் நன்றி -
 செய்தியாளர் திரு மோகன்ராம்,
புகைப்படங்கள் - “டீலக்ஸ்” ஞானசேகரன், புதுக்கோட்டை
தினமணி இணையத்தில்...

40 கருத்துகள்:


 1. தமிழ் பதிப்பக உலகின் மாபெரும் மாற்றத்தின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி உள்ளது.

  பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார் நலமா? உங்களின் வழிகாட்டலில் நான் கட்டமைவு செய்து தங்களின் குழுமம் வெளியிட்ட என் இரு மின்னூலுக்காக கலந்துரையாடிய நிகழ்வுகள் நினைவில் வந்து போகிறது.

   நீக்கு
  2. இந்நிகழ்வில் பங்கெடுத்த, நிகழ்ச்சியை நடத்திய முத்து நிலவன் அய்யா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

   நீக்கு
 2. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் முற்காலத்து மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு இணையாக சேவை புரிவது கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்.

  பதிலளிநீக்கு
 3. முத்துநிலவன் அவர்களே, தாங்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாமலா போகும்? வாழ்த்துக்கள்.
  -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 4. நல்ல முயற்சி. நானும் என் சில நூல்களை அவர்களிடம் தந்திருக்கிறேன். இணைவோம் இணையத்தில்..
  சுப்ரபாரதிபாரதிமணியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா... மகிழ்ச்சி
   நண்பர் சுப்ரபாரதி மணியன் அவர்களே! நலமா?
   அவசியம் அப்டேட் ஆகவேண்டிய நேரமிது! வருக!

   நீக்கு
 5. மாபெரும் முயற்சி ஐயா
  இவ்விழாவில் தங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்வு கொண்டேன் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் நூல்களைத் தந்ததில் மகிழ்கிறேன். இணைந்தே இணையத்தில் பயணிப்போம்! நன்றி

   நீக்கு
 6. பதில்கள்
  1. அய்யா வணக்கம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி. என்னை இணையத்தின் பால் ஈர்த்ததே தங்களின் “இணையம் கற்போம்” நூல்தானே அய்யா! ஒரு வகையில் இந்த முயற்சிகளின் தொடக்கப் புள்ளி தாங்கள்தான் என்பதை என்றும் மறவேன். நன்றி

   நீக்கு
 7. சிறப்பான தொடக்கம் ஐயா. பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, வணக்கம். நைநிடால் மின்னூல்தானே?
   டெல்லியிலும் ஒரு மின்னூலாக்க முகாம் நடத்த வரலாமா?

   நீக்கு
 8. வர இயலவில்லையே என வருத்தப் படுகிறேன்... இருந்தாலும் மீரா.செல்வகுமார் ஐயாவிடம் விவரமறிந்தேன்...

  வலைப்பதிவில் இதற்கான அடுத்த தொழிற்நுட்ப பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே? ஏன்? வந்திருந்தால் மகிழ்ந்திருப்போம். பரவாயில்லை... இதுபற்றி எழுதுங்கள் அய்யா

   நீக்கு
 9. காலத்திற்கேற்ற முயற்சி. கலந்து கொள்ள இயலாமல் போனதில் வருத்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள்தான் முன்னோடி மின்னூலாசிரியராயிற்றே! அடுத்த நூலையும் ஆக்கிவிடுங்கள். (ஆமா.. எப்பத்தான் புதுக்கோட்டை வருவீர்கள்?)

   நீக்கு
 10. தகவலுக்கு நன்றி! உலகப் பதிவர் கையேடு வேண்டும் எப்படி பெறுவது... தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்..நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா...விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். வந்ததும் தெரிவிக்கிறேன். அவசியம், நன்றி

   நீக்கு
 11. மகிழ்ச்சி ஐயா. கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வராமல் போனது பெரிதல்ல. உங்கள் கவிதைகளை தராமல் போனது தான் பெரிய வருத்தம். மின்னஞ்சல் வழியாகவே அனுப்பிவிடுங்கள் (உங்களுக்கான ஒப்பந்தப் படிவம் என்னிடம் உள்ளது, உதய்வழி பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்)

   நீக்கு
 12. மகிழ்வான நிகழ்ச்சி.மகிழ்ச்சியான பதிவு. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, உங்களின் ஒருபொருள் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கலாமே? முயற்சி செய்யுங்கள். நன்றி. (என்றாலும் தங்களைக் காணாமல் எங்கள் குழு ஏங்கியது!)

   நீக்கு
 13. அய்யா தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் எழுதுங்கள் இன்னும் சிறப்பாக எழுதுங்கள் கவிஞரே! அதுதான் உண்மையான நன்றி!

   நீக்கு
 14. முகாமில் கலந்து கொண்டது மனநிறைவைத் தருகிறது அய்யா! தங்களால் எனது படைப்புகள் மின் நூல் என்ற புதிய அவதாரம் எடுக்கிறது. தங்களுக்கும் தங்களின் அயராத முயற்சிக்கும், புதுக்கோட்டை அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் இல்லாவிட்டாலும் -சிறு தாமதத்துடன்- தங்கள் நூல் மின்னூலாகியிருக்கும். தங்கள் நூல்களின் சிறப்பு அப்படி! எங்கள் வழியாக வந்தது நாங்கள்செய்த பேறு அய்யா! தொடருங்கள்! நன்றி

   நீக்கு
 15. வணக்கம் அண்ணா. நேரில் கலந்து கொள்ள முடியாததில் வருத்தமே. ஆனாலும் உங்கள் வழிகாட்டுதல் மூலம் நானும் என் ஆக்கங்களை மின்னூலாக்குகிறேன் என்பதில் மகிழ்ச்சி. மீண்டும் நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
 16. பிரமாதம் அண்ணா..நம் தமிழ் நூட்கள் உலமெல்லாம்!!
  நானும் அனுப்புகிறேன். நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் அனுப்பவும். நண்பர்கள் விசு, ஆல்ஃபி, மற்றும் மதுரைத் தமிழனிடமும் சொல்லவும்.

   நீக்கு
 17. அருமை அப்பா.நல்ல முயற்சி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. பதில்கள்
  1. வணக்கம் தமிழ்! அடுத்த சந்திப்பு சென்னையில் தான்! பாரதிபுத்தகாலயம் திரு நாகராஜன் பேசினார். பாரதி புத்தகாலயமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து சென்னையில் “மின்னூல் வழிகாட்டு முகாம்” விரைவில் நடத்துவோம்

   நீக்கு
 19. நல்ல முயற்சி.கலந்துகொள்ளமுடியாத வருத்தங்களுடன் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்திருந்தால் உங்களுக்கும் நூலாசிரியராகும் ஆவல் மிகுந்திருக்கும். இதுதான் என் ஆவல்!

   நீக்கு