இணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்

கணினித் தமிழ்ச் சங்கம் 
        வீதி கலை இலக்கியக் களம்                  
இணைந்து நடத்தும்
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் -(4)-2019”
நாள் - அக்டோபர்-12,13, (சனி,ஞாயிறு) 2019
இடம்: ஜே.ஜே.கல்லூரி, புதுக்கோட்டை 

முன்பதிவு செய்தல் பயிற்சி ஏற்பாட்டுக்கு மிகவும் அவசியம்
(கடைசி நேரத்தில் அலையெனத் திரண்டு வந்து, கூட்ட அரங்கம் மற்றும் கணினிஇணைப்பு, உணவு ஏற்பாடுகளில் சிக்கல் செய்யாமல் இருக்கவே இந்த வேண்டுகோள்)
mgeetha122@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9443193293, , 9659247363 ஆகிய புலன எண்களுக்குப் பின்வரும் விவரங்களை   உடன் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அழைப்பிதழ்இந்தப் பயிற்சி முகாம் பற்றிய முன் விவரங்களுக்கு

நமது முந்திய 3பயிற்சி முகாம் பற்றி அறிய
வருவோர் முன்பதிவு செய்தல் அவசியம் -
தொடர்புக்கான செல்பேசி எண்கள்
நா.முத்துநிலவன்-94431 93293,     மு.கீதா-96592 47363
------------------------------------------
ஒரு பல்கலைக்கழகமோ, ஒரு கல்லூரியோ செய்யவேண்டிய பணியிது. 
நமது கணினித் தமிழ்ச்சங்கத்தின் 
தன்னார்வ நண்பர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிச் செய்கிறார்கள்

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் பங்குபெற அழைப்புபுதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம்
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் –(4)- 2019
2019, அக்டோபர் 12,13 (இரண்டாம் சனி, ஞாயிறு)
---------------------------------
மதுரை நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து, சுமார் 4கி.மீ. தொலைவில் உள்ள ஜெ.ஜெ.கல்லூரியில் நடக்கவுள்ளது.

 (ஜெ.ஜ.கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை)

பயிற்சியில் கலந்துகொள்ள வருவோர், பின் வரும் விவரங்களுடன் தொகை செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

(1)   பெயர், ஊர்
(2)   செல்பேசி (வாட்சாப்) எண்
(3)   மின்னஞ்சல் முகவரி (இருந்தால் குறிப்பிடலாம் இல்லையெனில் முகாமில் உருவாக்கித் தரப்படும்)
(4)   கீழ்க்காணும் வங்கிக்கணக்கில் பயிற்சிக்கான நன்கொடை ரூ200 (மாணவரெனில் ரூ.100மட்டும்) செலுத்திய விவரம்

(ஒரு கல்விநிறுவனத்திற்கு மாணவர் இருவர் மட்டும்)

முகாமிற்கு வர இயலாதவர்கள், இணையத் தமிழ்வளர்க்கும் எமது முயற்சிகளுக்குத் தங்களால் இயலும் நன்கொடை தருவதும்   அன்புடன் வரவேற்கப்படுகிறது.
(12-10-19 இரவு தங்குவதற்கான ஏற்பாடுபற்றியும் தெரிவிக்கப்படும்)
----------------------------------------------------------- 
(நூறு பேருக்குத்தான் இடம் என்பதாலும்,
விருந்தினர், வல்லுநர், ஒருங்கிணைப்புக்குழுவினர் என சுமார்25பேர் வருவதாலும், முந்திப் பதிவுசெய்யும் 75பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்! எனவே விரைவில் பதிவு செய்ய வேண்டுகிறோம்)

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” வருக! வருக!!கணினித் தமிழ்ச் சங்கம், புதுக்கோட்டை
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினி கொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்