நம் வீட்டுக்கு வந்த “ஞானாலயா“

நம் வீட்டில் “ஞானாலயா” அய்யா
பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
------------------------------------------------
புதுக்கோட்டையின் தற்காலப் புகழுக்குக் காரணங்களில் ஒன்று “ஞானாலயாநூலகம் என்பது படித்தவர்கள் –மன்னிக்கவும்- படிக்கின்றவர் அனைவரும் அறிந்ததே.
  நம் பதிவர் விழா முடிந்த ஒருவாரம் கழித்து, அண்டனூர் சுரா அவர்களின் “திற“ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. 
(இடமிருந்து)நூலாசிரியரின் ஆசிரியர் திருப்பதி, கவிஞர் தங்கம்மூர்த்தி, பின்னால் ஞானாலயா அய்யா, நூல்பிரதி பெறுபவர் சுசிலா (புதுகையின் புகழ்பெற்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தோழர்  முத்துக்குமரன் அவர்களின் துணைவியார்), நூல்பிரதியை வெளியிடும் நா(ன்).மு., மற்றொரு பிரதியை பெற்றுக்கொள்ளும் எழுத்தாளர் சந்திரகாந்தன், வெளியிடுபவர் கலைஇலக்கிய பெருமன்றப் பொதுச்செயலர் முனைவர் இரா.காமராசு. அவரை அடுத்து, நூலாசிரியர் அண்டனூர் சுரா, பின்னால் மாவட்டச் செயலர் இரா.ஜீவானந்தம், வலது கடைசியில் கஇபெம மா.தலைவர் அஜாய்கோஷ்  உள்ளனர்.
  அந்த விழாவின் பொழுதே, என்னருகில் இருந்த ஞானாலயா அய்யா  திரு பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், “செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வருகிறேன், வீட்ல இருப்பீங்கல்ல..?என்று கேட்கவும், நான், “அய்யா நீங்க ஏன் அலையணும்? நானே வருவேன் எப்ப வர? சொல்லுங்க?என்று சொல்லியும் கூட, சொன்னது போலவே செவ்வாய்க்கிழமை காலையில் வீடுதேடி மாடியேறி வந்து நின்றுவிட்டார்!

பதிவர் திருவிழா - படங்கள் (6) பதிவர்களின் சுயஅறிமுகப் படங்கள்

பதிவர் திருவிழாவில் முகம்காட்டிய
நம் அன்பிற்குரிய
பதிவர்... பதிவர்கள்... மேலும் பதிவர்கள்...

புகழ்பெற்ற பதிவர் ஜாக்கி சேகர்
 'பிருந்தாவனமும் நொந்த குமரனும்' 

(426)

(450)

(451)

(458)

(459)

(469)

(473)

(474)

(492)

(496)

(513)

சிவ சக்தி. அன்பே சிவம்
 http://sivasakth.blogspot.in/

புகழ்பெற்ற பதிவர் கோவை-எழில் 
 "நிகழ் காலம் " 

கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை - தேசமெங்கும் எதிர்ப்பலை

 அன்றுமுதல் இன்றுவரை
         ஆதிக்கச் சக்திகளின்
ஆட்டம் அடங்கவில்லை! - அவர்தம்
        ஆசையும் நிறைவேறவில்லை! 

 அது என்றைக்கும் நிறைவேறாது!

“காலம் அறிந்து கூவும் சேவலை
        கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
  கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும்
        கணக்காய்க் கூவும் தவறாது!” -  
-- ப .கோ.
---------------------------------------------

கன்னட எழுத்தாளர்
மக்கள் நெஞ்சில் என்றும் வாழும் கல்புர்கி
-------------------------------------------------------------
ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பதிவர்விழாப் படங்கள் (5) போட்டியில் வென்று பரிசுபெற்றோர் படங்கள்

தமிழ்-இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து,
புதுக்கோட்டைப் பதிவர் திருவிழா 2015 நடத்திய 

உலகளாவிய மின்-இலக்கியப் 
போட்டிகள்-பரிசளிப்பு
பரிசுபெற்ற படைப்பாளிகளுக்கு
உரிய ரொக்கப் பரிசுத்தொகையுடன்

தமிழ்க்களஞ்சியம் இணையம் 

(http://www.tamilkalanchiyam.com) 

வழங்கும் வெற்றிக் கேடயத்தை வழங்குபவர்-
சென்னை தமிழ்-இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர்
திருமிகு முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள்

அருகில் இருப்போர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா அவர்கள்,
விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர்
திருமிகு அ.இரவிசங்கர் அவர்கள்,
புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநரும்
கோவைமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருமான
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
---------------
அருகில் நமது “வலைச்சித்தர்“
திண்டுக்கல் பொன்.தனபாலன் அவர்கள்,
நமது விழாக்குழு நண்பர்கள்

பதிவர் விழாப்படங்கள் (4) கவிதை-ஓவியங்கள்

எடுத்த கவிதைகள் எல்லாம்
ஓவியமாக எழுதப்படவில்லை,
எழுதிய ஓவியங்களெல்லாம்
இங்கே இடப்படவும் இல்லை
-------------------------------------------------------------
பற்பல பணிகள்-இடர்ப்பாடுகளிடையே 
கவிதைகளைத் தொகுத்துத் தந்த
நமது விழாக்குழுவினர்
கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன்,
கவிஞர் வைகறை, கவிஞர் மு.கீதா  இவர்களோடு,
இவற்றை வரைவதில் 
ஓவியர்களை ஒருங்கிணைத்த கவிஞர்.ஸ்டாலின் சரவணன், 
ஓவியர் எஸ்.ஏ.கருப்பையா
சு.மதியழகன், ஆர்.நீலா ஆகிய நம்
விழாக்குழுவினர்க்கு நன்றி.
வரைந்தளித்த ஓவியர்கள் 
செல்வநாயகம், கருப்பையா, கண்ணன்,  ராமன், அன்புராஜ், சேரன்,
விஜய், நாகராஜ், ரவி  மற்றும்
எஸ்.ஏ.கருப்பையா 
ஆகியோரின் கலைக் கைகளுக்கு 
நன்றி! நன்றி!!  நன்றி!!!
--------------------------------------------------------------- 
(இவர்களில் விழாவில் இருந்தோரை அழைத்து மேடையிலேயே மரியாதை செய்தோம்)

அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே!

ஓவியப் போட்டியில் பரிசுபெற்ற ஓவியம்  
(ரா. மதுமிதா, 4-ம் வகுப்பு, கோவை)
மா மனிதர் அப்துல் கலாம் குறித்து
தி இந்துதமிழ் நாளிதழ்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடத்திய 
ஓவிய - கட்டுரைப்போட்டிகளைத் தொடர்ந்து
தற்போது -
9,10-ஆம்  வகுப்புகளுக்கு கட்டுரைப் போட்டியையும்,
11,12-ஆம் வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டியையும்
நடத்துகிறது.
அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே!
தங்கள் பள்ளிப் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்கேற்று,
பரிசுகளை வென்றிட ஆவன செய்யுங்கள்.
கட்டுரைகளை மொத்தமாக தொகுத்து
மு.முருகேசன்,
சீனியர் சப் -எடிட்டர்,
தி இந்து - தமிழ் நாளிதழ்,
கஸ்தூரி பில்டிங்,
124, வாலாஜா சாலை,
சென்னை - 600 002.
செல்; 74013 29364.
மின்னஞ்சல் : murugesan.m@thehindutamil.co.in
- எனும் முகவரிக்கு
வரும் அக்டோபர் -30-ம் தேதிக்குள் 
அனுப்பி வையுங்கள்.
----------------------------------------------------
இயலும் வரை 
இதனை நம் நண்பர்கள்
தமது முகநூல், கூகுள்+, சுட்டுரைகளில்
மற்றும் தத்தம் வலைப்பக்கங்களில்
பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி - நா.முத்துநிலவன்.
இணைப்பில் பார்க்க -

விழாப் படங்கள் (3) – புகழ்பெற்ற, மூத்த மற்றும் இளைய பதிவர்களின் சுய அறிமுகப் படங்கள்


தொழில்நுட்பப் பதிவர் திருமிகு மதுமதி அவர்கள்

திருமிகு அர்ச்சுணன் நாராயணன் அவர்கள்
“விழாப்புரவலர்” கர்னல் கணேசன் அவர்கள்

அகக்கண்ணால் அற்புதம் படைக்கும் 
பதிவர் திருப்பதி மகேஷ் அவர்கள்

“நாளை விடியும்” இதழாசிரியரும் 
பதிவருமான திருச்சி அரசெழிலன் அவர்கள்

பதிவர் மணவை ஜேம்ஸ் அவர்கள்
---------------------------------------------------------------- 
இனிவருவோர்.. திருக்குறளை விடவும் 
சுருக்கமாக சுயஅறிமுகம் செய்த நம் பதிவர்கள்


 விழாக்குழுக் கவிஞர் செல்வாவின் செல்லமகளும் 
இளைய பதிவருமான ராகசூர்யா அவர்கள்-----------------------------------------------------------

இனி வருவோரைப் பார்த்துப் பாராட்டுங்கள்
சென்னை மதுரை பதிவர் சந்திப்புகளில் தொடங்கிய
நேரலை ஒளிபரப்பை 
“உலக வலைக்காட்சிகளில் முதன்முறையாக”
நிறைவாகச் செய்துமுடித்த
புதுகை விழாவின் இளைய நண்பர்கள் இவர்கள்தாம்!
விழாக்குழுப் பதிவர் “மது“ கஸ்தூரி ரெங்கன் 

புதுக்கோட்டை 'UK INFOTECH-UK கார்த்தி 

புதுக்கோட்டை 'UK INFOTECH'முகுந்தன்


  “புதுகை வலைச்சித்தர்" ஸ்ரீமலையப்பன்

புதுக்கோட்டை நாக.பாலாஜி 

 புதுக்கோட்டை 'UK INFOTECH' – லீலா 

 புதுக்கோட்டை'UK INFOTECH' – புனிதா 
--------------------------------------------- 


இதே குழுவினர் ஞாயிறுதோறும் திட்டமிட்டுச் சென்று
மரக்கன்றுகளை நட்டு-வளர்க்க ஏற்பாடு செய்துவரும்
“விதை-கலாம்” குழுவினர் விழா வளாகத்தில்
மரக்கன்று நடுதலோடுதான் நமது விழா தொடங்கியது!
இந்த இளையவர்தம் உயர் பணி தொடர 
உங்கள் இதய வாழ்த்தும் ஆதரவும் தேவை
பார்க்க - 
http://vithaikkalam.blogspot.in/
--------------------------------------------- 

அடுத்த முயற்சி, பயிற்சியும் மின்னூல் வெளியீடும்!

விழா முடிந்தது, சரி. 
அடுத்த வேலையைப் பார்ப்போமா
இரண்டு வேலைகள் இருக்கின்றன!!
(விழாப்பற்றிய செய்திகளைப் பகிரும், வரவு-செலவு பார்க்கும் வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கட்டுமே?)

பதிவர் விழாப் படங்கள் (2) - பிரபல பதிவர்கள் (1)

 புலவர் குரல் அய்யா திருமிகு இராமாநுசம் அவர்கள்

 வலைச்சரம் அய்யா திருமிகு சீனா (எ) சிதம்பரம் அவர்கள்

திருமிகு முனைவர் பழனி கந்தசாமி அவர்கள்

திருமிகு உமையாள் காயத்ரி அவர்கள்

திருமிகு “வாத்தியார்” பாலகணேஷ் அவர்கள் 

திருமிகு ஜி.எம்.பி. அவர்கள்

எழுத்தாளர் திருமிகு ஜோதிஜி அவர்கள் 

திருமிகு  “ஜோக்காளி” பகவான்ஜி அவர்கள்

திருமிகு வேலூர் இராமன் அவர்கள் 

திருமிகு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

திருமிகு புதுகை அப்துல் (எ) அப்துல்லா அவர்கள்

திருமிகு மதுமதி அவர்கள்

திருமிகு தமிழ்இளங்கோ அவர்கள்


திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
---------------------------------------------------------
“புதுகைப் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்தது”
என்று யாரேனும் சொன்னால்,
அதற்குக் காரணம்... 
சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், விருதாளர்களுடன்
மேற்காணும் சான்றோர்களான 
நமது மதிப்பிற்குரிய
பிரபல / மூத்த பதிவர்களின்
வருகைக்கு முக்கியப் பங்குண்டு என்பதை
விழாக்குழுவினர் பெருமையுடனும்
நன்றியுடனும் தெரிவித்து மகிழ்கிறோம்.

இந்த நட்பும் தோழமையும் தொடரட்டும்.
இதே பட்டியல் இ்ன்னும் உண்டு... தொடர்வோம்

------------------------------------------------------------------