பதிவர் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழ் தேவைதானா? மதுரைத் தமிழன் கேள்விக்கு எமது பதில்.

இக்கேள்வியை, பதிவர் பலரும் விழாக்குழுவினரிடம் தொடர்ந்து கேட்பதால் இந்தப்பதிவு அவசியமாகிறது.

அதுவும் நம் இனிய நண்பர், விழா அறிவிப்பு வந்தது முதலே உண்மையான அக்கறையோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிவரும் மதுரைத் தமிழன்
(http://avargal-unmaigal.blogspot.com/2015/09/tamil-bloggers-meet-2015.html)  அவர்களும் இதே கேள்வியைக் கேட்டிருப்பதால இந்தக் கேள்வி அழுத்தம் பெறுகிறது.

நமது தெளிவான பதில்- 
தேவைதான் என்பதே. காரணம் வருமாறு-
தமிழ்ப் பதிவர்கள் எண்ணிக்கை சுமாராக 18,000 என்கிறார் இதுதொடர்பாக ஆய்வுகள் பலசெய்திருக்கும் திரு.நீச்சல்காரன் http://www.neechalkaran.com/me

இது உண்மையாக இருக்கலாம். ஆனால், உண்மையில் தொடர்ந்து –மாதம் ஓரிரு பதிவு- எழுதுவோர் எண்ணிக்கை வெறும் ஆயிரத்திற்குள் தான் இருக்கும் என்பது எனது கருத்து. இதற்குத் தமிழ்மணம் திரட்டியில் வரும் பதிவுகளே சான்றாகின்றன.அதன்வரிசை 900க்குள்தானே?

எனில், நமது நோக்கம் பதிவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதும், பதிவுகளின் சமூக நோக்கை உயர்த்துவதும், இலக்கியப் பார்வையை விசாலப்படுத்துவதும்,  பதிவுகளின் பொதுவான தரத்தை உயர்த்துவதும் தானே? 

ஆமெனில், இன்னும் ஏராளமான இளைஞர்களைப் பதிவுலகிற்குள் கொண்டுவர  வேண்டுமல்லவா? அதற்கு நம்மிடம் ஏதாவது திட்டமுள்ளதா?

அப்படிக் கொண்டுவர பதிவர் விழாவுக்கு, பதிவர் அல்லாதாரை அழைப்பதும், பதிவுலகத்தை மற்றவர்க்கு அறிமுகப் படுத்துவதும் அவசியமல்லவா? 

நாமென்ன நினைக்கிறோம்- பதிவர் விழாவுக்குப் பதிவர்கள் தானே வரப்போகிறார்கள்,  அச்சிதழ் எதற்கு? மின்னஞ்சல் வழியிலான அழைப்பிதழ் போதாதா? 

நான் கேட்கிறேன்.- 
பதிவர்கள் உலகம் மட்டும் அறியும்படி பதிவர் விழா நடந்தால் மற்றவர் எப்போது எப்படி பதிவராவது?

அண்மையில் நான் சந்தித்த ஒரு செய்தியாளர் ஒரு செய்தி சொன்னார்-
தமிழக அரசு, அரசு அலுவலர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சித் தலைவர்கள் அனைவரையும் மக்கள் எளிதில் தொடர்புகொள்ள உதவியாக அனைவர்க்கும் தொடர்பு மின்னஞ்சல் தந்திருப்பதைப் பற்றி ஒரு முக்கியமான மாவட்டத் தலைவரைக் கேட்டபோது, “அப்படியா? இதுவரை யாருக்கும் எனக்கு இந்த மெயில் ஐடியைக் கொண்டுவந்து தரலையே? யாருக்கிட்ட கேட்கிறது?” என்றாராம்! இது கிண்டல் அல்ல! தமிழக நிலை இதுதான்.

அரசு முயற்சிசெய்தால்கூட, அதைப் புரிந்துகொள்ளாத, அதுபற்றிய அக்கறையில்லாத, மின்னஞ்சல் தொடர்பின் பலம் அறியாத, அதுபற்றிய அறிமுகமும் இல்லாத, பல லட்சம்  படித்தோரைத் தொட்டுத் தொடர நாம் என்னதான் செய்யப் போகிறோம்? இதுபோலும் விழாக்களை அவர்கள் அறியும் போதுதானே அது சாத்தியமாகும்?

ஆக, நமக்கான விழா எனினும் இணைய உலகம் பற்றி அறியாத பலலட்சம் மக்கள் வாழும் நாட்டில், அவர்கள் எல்லாரும் வராவிட்டாலும், அவர்களில் ஒரு பகுதியினராவது இதுபற்றி அறிந்து கொள்ளத்தான், அழைப்பிதழ் அச்சிட்டு அவர்களிடம் தரவேண்டியதுள்ளது.

அப்படியானால், நம் பதிவர்களுக்கு அச்சிட்ட அழைப்பு எதற்காக அனுப்ப வேண்டும்? எனும் கேள்வி நியாயமானதுதான்.

ஓர் அழைப்பிதழ் 10ரூபாய் செலவில் 500 அழைப்பிதழ் அச்சிட்டோம். அதில் நம் பதிவர் சுமார் 50பேருக்குள்தான் அனுப்பியிருக்கிறோம். அவர்கள், நம் மூத்த, சென்னை மதுரை போலும் விழாக்களை நடத்திய முன்னோடிகள், நடுவர்கள், பத்திரிகையாளர், விரும்பிக் கேட்டவர்கள். 

மற்ற 400பேர்? பதிவுலகில் கால்பதிக்காத புதியவர்! இவர்களில் 50பேர் வந்தாலே பெரிது! ஆனாலும் இந்தப் பதிவுலகச் செய்தி அவர்களைப் பொறுத்தவரை அழைப்பாக வந்தால்தான் தெரியும், புரியும்.

அழைப்பிதழ் கொடுக்கப் போகும்போது, இதுபற்றிப் பலரும் வியப்பாக்க் கேட்டபோதுதான் பதிவுலகைப் பற்றி அறிமுகப் படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

கடைசியாக அறிவித்த போட்டி பற்றி - 
“ஏன் இப்படி அவசர கதியாக, ஒரு போட்டி? 
“முடிவுத் தேதியை மாற்ற என்ன அவசியம்?“ 
“விழாக் குழுவில் என்ன குழப்பம்?” என்று நமது மூத்த பதிவர் ஒருவரே கேட்டபோதும், இந்த விளக்கத்தைத்தான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்- 
வெளியில் நிற்கும் பலலட்சம் படித்த இளைஞர்களை நமது பதிவுகளை -இலக்கியப் போட்டி எனும் பெயரில்- படிக்க வைக்கவே இந்தக் கடைசிப்போட்டி. இதில் நாங்கள் பெரிய வெற்றி பெற்றுவிடுவோம் என்று சொல்ல வரவில்லை. ஆனாலும், இப்படித்தானே முயற்சி செய்யவேண்டும்?

அதுவுமில்லாமல், 
மின்னஞ்சல் மட்டும் இருந்தால் கூடப் போதும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்று சொன்னதும், வந்து பார்த்து, படித்து, வியந்து, அடுத்த கட்டமாக அவர்கள் பதிவர்களாக மாற வாய்ப்புக் கிடைக்குமல்லவா? எனும் நப்பாசைதான் காரணம். 

போட்டிக்கு எழுதப்பட்ட படைப்புகளைச் சிலநூறு பேராவது பார்த்துக் கருத்துக் கூறுவதும் பிடித்திருந்தால் தொடர்வதும்தானே படைப்பை எழுதியவருக்கான பெரியபரிசு? பரிசும் கிடைத்தால் அது ஊக்கப்பரிசு! சரியா?

எனவே, இதுவரை பார்த்த விழாக்களில் இந்த விழா வித்தியாசமா இருக்கே! இந்த உலகம் தனி உலகமாக இருக்கே! நாமும் உள்ள நுழைஞ்சு பாக்கலாம் போலயே!?” என்று பதிவுலகிற்கு அப்பாலிருக்கும் பலரை அருகில் அழைத்துப் பதிவராக்க முயலும் முயற்சியின் ஒரு கட்டம்தான் இநத அச்சு அழைப்பும், “விமரிசனப் போட்டி“ அறிவிப்பும் என்பதை நமது பதிவர்கள் புரிந்துகொள்வர் என்று நம்புகிறேன்.


தேவையெனில் அவர்களது முகவரி தாருங்கள் நாங்களே அச்சிட்ட அழைப்பை அனுப்புகிறோம். அவர்கள் விழாவுக்கு வந்துவிடுவார்கள் என்று நம்பியல்ல..! நமது விழாவைப் பற்றிய விவரம் தெரிந்து ஒவ்வொருவரும் பத்துப் பேரிடமாவது சொல்வார்களல்லவா?

தமிழுலகிலேயே இதுஒரு “புதூஉ-உலகம்“ என்பதைத் தமிழுலகம் இனியாவது அறிந்து கொள்ளட்டும். 

இந்த விழா அதற்கொரு திறவுகோலாக இருக்கட்டும். முடிந்தவரை ஊடக, நட்புவழிச் செய்திகள் பரவட்டும். 

ஒவ்வொருவரும் பத்துப் பேருக்காவது மின்னஞ்சல் அனுப்புங்கள் 
பதிவுலகம் புதியவர்களால் நிரம்பட்டும். 
அதுதானே நம் நோக்கம்?
-------------------------------------------------

31 கருத்துகள்:

 1. அய்யா... வணக்கம்...

  தெளிவான விளக்கங்கள்... நன்றி...

  பாட்டு பாடி ரொம்ப நாளாச்சி...! இதோ :-

  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
  வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...

  போட்டி படைப்பை வாசிப்போம்...
  வானம் அளவு யோசிப்போம்...
  முயற்சி என்ற ஒன்றை மட்டும்...
  மூச்சைப் போல சுவாசிப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட அட அட.. அந்த ஒரிஜினல் பாட்டை விட இது நல்லாருக்கே! (அப்படியே ஒரு பாட்டுப் போட்டி அறிவிக்கலாமா தலைவா?)

   நீக்கு
  2. பாட்டு போட்டி அறிவிச்சு அதில் கண்டிப்பாக தன்பாலைனை பாட வையுங்கள் விட்டுவிடாதீங்க ஆனா ஒரு கண்டிஷன் அவர் புதுபாட்டும் மட்டும்தான் பாடனும்

   நீக்கு
  3. ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
   வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

   ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
   வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
   ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
   கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

   நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
   பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
   மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
   அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

   உள்ளம் என்றும் எப்போதும்
   உடைந்து போக கூடாது...
   "என்ன இந்த வலைப்பூ...?" என்ற
   எண்ணம் தோன்றக் கூடாது...

   எந்த வலைப்பூ பதிவில்
   கருத்தில்லை சொல்லுங்கள்...
   காலப்போக்கில் கருத்தெல்லாம்
   மாறி போகும் மாயங்கள்...!

   கருத்து தாங்கும் பதிவுகள் தானே
   முன்னணி பதிவில் நிலையாகும்...
   எதையும் தாங்கும் உள்ளம் தானே
   நிலையான நட்பு காணும்...

   யாருக்கில்லை போராட்டம்...?
   பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
   ஒரு கனவு கண்டால்...
   அதை தினம் பகிர்ந்தால்...
   ஒரு நாளில் நிஜமாகும்...!

   மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
   அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

   ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
   வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

   வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
   வானம் அளவு யோசிப்போம்...
   பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
   பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...

   லட்சம் பதிவுகள் கண்ணோடு...
   லட்சியங்கள் நெஞ்சோடு...
   நம்மை வெல்ல யாருமில்லை...
   உறுதியோடு போராடு...!

   பதிவரே... உன் மனதை கீறி
   பதிவு போடு மரமாகும்...
   கருத்துரை மறுமொழி
   எல்லாமே நட்பாகும்...

   பதிவுகள் இன்றி வலைப்பூவா...?
   நேரம் ஏனில்லை என் தோழா...?
   ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
   வலைப்பூ வானில் சிறகடிக்கும்...

   மனமே ஒ மனமே நீ மாறிவிடு
   அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

   ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
   வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

   ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
   வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
   ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
   கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

   நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
   பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
   மனமே ஓ மனமே நீ மாறிவிடு
   அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

   நீக்கு
  4. டிடி அண்ணா, முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். உங்கள் அனுமதியோடு தளத்தில் பதியப் போகிறேன். நன்றி :)

   நீக்கு
  5. உங்கள் அனுமதியில்லாமல் எனது தளத்தில் பதிந்துவிட்டேன் ஒரு செய்தி நம்மை மனம் மகிழ் செய்கிற்தோ அல்லது அதை பாராட்ட அனுமதி எல்லாம் எதிர்பார்க்கமாட்டேன்

   நீக்கு
 2. நீங்கள் சொல்வது மிகவும் சரி. புதியவர்கள் வந்தால்தான் பதிவுலகம் விரிவடையும். எனக்கு வரவேண்டும் என்று மிகவும் ஆசை. இது மதுரையில் நடந்தபோதே வரவேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை பெரும்பாலும் சோம்பேறித்தனம் வயது காரணமாக சற்று முடியாமை. பதிவராக ஆகவேண்டும் என்ற நினைப்பும் உள்ளது. ஆனால் தொடர்ந்து எழுத முடியுமா என்ற தயக்கம் நிறைய உள்ளது. உங்களைப்போன்றவர்களை பார்த்தால் ஒரு ஊக்கமும் தன்னம்பிக்கையும் வரும் என்று நினைக்கிறேன். எப்படியாவது இந்த விழாவுக்கு வர முயற்சி செய்கிறேன். நன்றி வணக்கம்.
  துரை எஸ். ஜெயச்சந்திரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியாவது இந்த விழாவுக்கு வர முயற்சி செய்கிறேன்
   அவசியம் வாருங்கள் நண்பரே.

   நீக்கு

  2. துரை எஸ். ஜெயச்சந்திரன். பதிவு எழுதுவதை ஒரு பொழுது போக்கா நினைத்து எழுதிவாருங்கள். அப்படி எழுதிவந்தால் நிச்சயம் நீங்கள் எழுதுவதை நிறுத்த மாட்டீர்கள் இது என் அனுபவம்

   நீக்கு
  3. திரு ஜெயச்சந்திரன் எனது நெடுநாளைய நண்பர். மூத்த பொறியாளர். வணிக நிர்வாகத்தில் முது நிலைப்பட்டம் பெற்றவர். அமெரிக்க நாட்டில் பலகாலம் பணி புரிந்து தற்போது மதுரையில் ஓய்வில் இருப்பவர். அவர் இத்தளத்தில் பதிவிட்டது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. சிறந்த சிந்தனையாளர், புதிய பரிமாணங்களில் சிந்தனை செய்பவர். அவர் பதிவுலகம் வர விருப்பம் தெரிவித்திருப்பது மிக வரவேற்கத்தக்கது தான். தங்களைப்போன்ற மூத்த பதிவர்கள் இவரை ஊக்குவிக்க வேண்டும். இறைவனுக்குச் சித்தமானால் இவரை புதுக்கோட்டை விழாவிற்கு அழைத்துவர முயற்சிக்கிறேன். நன்றி.

   நீக்கு
 3. அய்யா!
  தினமணி ஆசிரியர் அல்லது அவர்கள் REPRESENTATIVE- கள் வருவதாக ஒரு செய்தி. அவர்களுக்காக அசைவம் சாப்பாட்டில் இல்லையா? பாலும் அசைவம் தானே! அதை போடும்போது மீதி எல்லாவற்றையும் போட்டால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில் அன்பை வைத்துக்கொண்டு, இப்படி ஆடுமாடுகளின் மேல் அன்பில்லாமல் இருப்பது (?) நியாயமாரே? நாங்க வள்ளலார் வழி. ஒரு செய்தி தெரியுமோ? “நல்ல சைவச் சாப்பாடு சாதாரண அசைவச் சாப்பாட்டை விட நல்லாவும் இருக்கும், கொஞ்சம் காஸ்ட்லியாவும் இருக்கும்!“என்கிறார் எங்கள உண(ர்)வுக்குழுத் தலைவர் சகோதரி இரா.ஜெயலட்சுமி! வந்து பாருங்க!

   நீக்கு
  2. பெயரில் அன்பு இருப்பதால் தான் நான் பசுவிடம் இருந்து [திருடும்] பால், மோர் அவைகளைக் கூட உண்பதில்லை. ஆடு, மாடு கோழி, பன்னி சாப்ப்டுவனுக்கு குழந்தைக்கு {கன்று} வைத்துள்ள அம்மாவின் (பசு) பாலை திருடுபவன் அயோக்கியன்.

   ஒன்றுக்கும் உதவாதா அடி மாட்டை சாப்பிடுபவ்ன் யோக்கியன் . உங்க ஜெயலட்சுமி அம்மா பசுவிடம் இருந்து திருடாத பால் மற்றும் மோர் சமையாலா?

   நீக்கு
  3. அய்யா! சாமிகளே! விட்டா காய்கறியக் கூடச் சாப்பிட விட மாட்டீங்க போல! ஆமா ஆடும் மாடும்தான் உயிரினமா? காய்கறி செடிகொடி மரம் எல்லாம் என்னவாம்? அவையும் “உயிரினம்தான்“ அதாவது “ஓரறிவுயிரினம்தான்“ என்று கண்டு சொன்னதற்காகத்தானே நம்ம போஸ் நோபல்பரிசு வாங்கினார் அதைத்தானே நம்ம தொல்காப்பியரும் அப்பவே சொன்னாரு? அப்பறம் எதத்தானய்யா சாப்பிடுறது? மண்புழு மாதிரியா?

   நீக்கு
  4. என்ன சாப்பாடு ஒரு பிரச்சனையா என்ன? இங்க சாப்பிடுவதற்காக யாரும் வரவில்லையே? இந்த சைவ சாப்பாட்டை குறை சொல்லுபவர்கள் மாலையில் அவர்கள் செலவிலேயே அசைவ உணவிற்கு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்குமே

   நீக்கு
 4. தங்களின் நீண்ட - மறுபடியும் பொறுப்பான - பதிலுக்கு நன்றி நண்பா. முகமூடிகள் எல்லாருமே தவறானவர்கள் அல்லர் என்பதற்கு ராபின்உட் கதை தொடங்கி விக்ரம் கந்தசாமி தொடர மதுரைத்தமிழன் வரை சான்றுகள் உண்டு. நீங்கள் சொல்லும் காரணத்தை நான் 100ஏற்கிறேன் அதனால்தான் தங்களின் நட்பை மதிக்கவும், மதிப்புக்குரிய தங்களின் கருத்துக்கு மதிப்பளித்து மிகுந்த பொறுப்போடு பதில் சொல்லவும் முயல்கிறேன். நிற்க. தங்களின் இருப்பிட தூரம், அவசரத்திற்கு வரமுடியாத சோகம் இரண்டும் எங்களைப் போலும் நண்பர்களுக்கும் மிக்க வருததம் தருவதுதான். தங்கை மைதிலி சொல்வதுபோல நீங்கள் இங்கு வரும்போது சொல்லுங்கள் ஒரு மினி மாநாடு போட்டுடுவோம்.(அய்...பூனைக்குட்டி வெளியில வந்துடுச்சு போல...! நம்ம விசு விழாவுக்கு வேலூரு வந்தது உங்க ஆள்னு முன்னர் சொன்னதைச் சொல்கிறேன்.. அப்ப இங்கயும் ஒரு “ஆள்“வருவாராக்கும்.) பி.கு. நகைச்சுவையாக மட்டும்தான் உங்களுக்கு எழுத வரும்னு நெனைச்சேன்...உங்களின் சில வரிகளைப் படித்தவுடன் இப்படி, எழுதவே தடுமாற வச்சிட்டிங்களேய்யா.. சென்னைப் பதிவர் விழாவில் நமது நண்பர் மதுமதியின் 90டிகிரி குறும்படத்தைப் போட்டுக்காட்டிவிட்டு, அந்த சோகச் சூடு மாறுவதற்குள் என்னைச் சிறப்புரை(?)யாற்ற அழைத்தபோது தடுமாறியதுதான் நினைவுக்கு வருகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோ ! பொதுவாக கலாய்த்தே எழுதிப் பழக்கப் பட்ட தங்கள் பதிவுகட்கிடையில் இந்த சீரியசான பதிவு கண்டு நெகிழ்ந்து போனேன். கண்கள் உண்மையில் கலங்கிதான் விட்டன. தங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. பரவாய் இல்லை சகோ நாங்கள் இங்கிருந்தே பார்த்து மகிழ்வோம். இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும். அப்போது ஜமாய்க்கலாம். ஹா ஹா ....
  அதான் நிலவன் அண்ணா சொல்லிட்டாரே அப்புறம் என்ன?

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோ தங்கள் நோக்கமும் செயலும் வெகு சிறப்பு. அனைத்தும் சிறப்புற வாழ்த்துக்கள் அண்ணா ...!வாழ்க தமிழ் !

  பதிலளிநீக்கு
 7. அண்ணா மிகப்பெரிய அலசல் அதுவும் பலகேள்விகளுக்கு பதில் சொல்லும் பதிவு. பதிவர்கள் தங்கள் பதிவென்றாலே இன்னும் என்ன அதிர்ச்சி காத்திருக்கும் என்ற நோக்கிலே விரைவாக இங்கு வருகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா பாத்தும்மா பார்த்து அடிக்கடி அதிர்ச்சியான பதிவுகளை படித்து அட்டாக் ஏதும் வந்திடப் போவுது,முத்துநிலவன் சகோக்களை மதில் கொண்டு இனிமேல் அதிர்ச்சியான பதிவுகளை வெளியிட வேண்டாம் ஒகேவா

   நீக்கு

 8. நல்ல முயற்சி நல்ல விளக்கம்

  ஆரம்பம் முதலே புதுகை பதிவர் சந்திப்பு
  நிர்வாகிகள் அனைத்துத் தரப்பினரையும்
  அரவணைத்துச் செல்வதில் மிக அக்கறையாக
  இருப்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது

  இந்த விளக்கம் கூட அதற்கொரு அத்தாட்சி

  வாழ்த்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
 9. பதிவர்களோடு இணையம், வலைப்பதிவு இல்லாத தமிழார்வலர்களும் இத்தகு விழாக்களில் கலந்து கொள்ளும் நிலை உருவானால்தான் தமிழ் மின்னணு வழி எந்த அளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை உணர்த்த முடியும்.

  பதிலளிநீக்கு
 10. ##பதிவர் விழாவுக்கு, பதிவர் அல்லாதாரை அழைப்பதும், பதிவுலகத்தை மற்றவர்க்கு அறிமுகப் படுத்துவதும் அவசியமல்லவா? ## உண்மைதாங்க நானும் அதனால் தான் என் தோழியையும் இந்த விழாவிற்கு அழைத்து வருகிறேன்.....

  பதிலளிநீக்கு
 11. உங்களின் தலைமையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்து மிகப் பெரிய விழா ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அதை முழுவதுமாக படிக்க நேரமின்மை இருந்தாலும் செய்திகள் அறிந்து கொண்டே தான் இருக்கிறேன். குழுவினர் அனைவரின் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. நல்லதொரு விளக்கம்! தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கோயில் பணிகள் இருப்பதால் யாரும் உதவ மறுத்த விட்டதாலும் இந்த முறை விழாவுக்கு வர முடியாத சோகம் என்னை கவ்விக் கொண்டுள்ளது. போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் போய்விட்டது! வருந்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 13. விளக்கவுரைக்கு நன்றி தமிழ் மணம் 33

  பதிலளிநீக்கு
 14. அண்ணா, பதிவுலகம் அடுத்தக் கட்டத்திற்கு உயர்கிறது.அதை நடத்திக் காட்டிய பெருமையெல்லாம் உங்களையே சேரும்! (டிடி அண்ணாவின் பாட்டைப் பார்த்தவுடன் எனக்கும் பாட்டு வருகிறது :) )
  போட்டிக்கான என் படைப்புகளைப் பார்த்து உற்சாகமடைந்த தோழி ஒருத்தித் தானும் வலைத்தளம் துவங்கவேண்டுமென்று ஆவலாக இருக்கிறாள்..மகிழ்ச்சி அண்ணா
  விழாக்குழுவினருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா நான் கலாய்ப்பதற்காகவே இன்னொரு ஆடு ரெடியாகுதா சரி வரட்டும் வரட்டும் மறக்காமல் அந்த ஆடு தொடங்கும் தளத்திற்கான லிங்கை எனக்கு அனுப்பி வைக்கவும்

   நீக்கு
 15. வணக்கம்.

  எல்லா நிலைகளிலும் நின்று யோசித்துச் செயலாற்றும் தங்களின் பாங்கு வியப்பிற்குரியது.

  கடந்த ஆண்டு நீங்கள் சொல்லித்தான் வலைப்பூ என்ற ஒன்றையே அறிந்து, உங்களின் வழிகாட்டுதலால் அதனைத் தொடங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற வலைத்தளம் பற்றி அறிந்திராத ஏராளமானவர்கள் பயனுற உங்களின் செயல்பாடுகள் அமைகின்றன என்பதைக் காணப் பெருமகிழ்வே.

  எல்லாம் உங்களால் கூடிற்று.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. காலையிலேயே படிச்சுட்டேன். கருத்திட்ட நேரம் இல்ல. இப்போ வந்து பார்த்தா பின்னூட்டமே பதிவு அளவு தமிழன் சகாவும், டி.டி அண்ணாவும் என்னமா கலக்கியிருக்காங்க!! நிலவன் அண்ணா மனம் வைத்தால் நடக்காததும் ஒன்னு உண்டா!! எல்லாம் உங்க மேஜிக் டைச்!!

  பதிலளிநீக்கு