எனது வலைப் பக்கத்தின் 1000ஆவது பதிவு!

எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பு!

எனது வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.

உங்களால் இது நடக்கிறது, 

உங்களுக்கு என் முதல் வணக்கம்

    தமிழறிஞராகவும், அப்போதைய எங்கள் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியாற்றிய எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் தூண்டுதலில், கடந்த 2011இல்,  20,30பேர்  இணையத்தில் எழுதும் ஆர்வத்தில் வலைப்பக்கம் தொடங்கினோம். இப்போது பலரும் – பலரும் என்ன, அனேகமாக எல்லாருமே – இதைத் தொடராத போதும் நான் மட்டும் வலைப்பக்கத்தில் எதையாவது எழுதிக் கொண்டே – அல்லது இதழ்களில் வெளிவரும் எனது படைப்புகளை எடுத்துப் பதிவிட்டுக் கொண்டே இருந்தேன்...!

      பிறகு பார்த்தால் ... இதில் எழுதியவற்றையே நூலாக வெளியிடலாம் என்று நண்பர்கள் அவ்வப்போது தூண்டியதுண்டு.

அடுத்து 2014இல் நான் பணிஓய்வு பெற்றபோது, பணிஓய்வு விழாவை விரும்பாத நான், அதையும் எனது வலைப்பக்கத்தில் எழுத, அதுதான் இன்று வரையும் எனது வலைப்பக்கத்திலேயே அதிகம் பேர் பார்த்த பதிவாக –சுமார் 3லட்சம்+பேர்- பார்த்ததாக இப்போதும் உள்ளது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. 2015இல் அதுவரை எழுதியதைத் திரட்டி 3நூல்கள் கொண்டு வந்தேன். அதை வெளியிட்டதும் அண்ணன் கவிஞர் மீரா அவர்களின் மகன், நண்பர் கதிர்.மீரா அவர்கள்தான்

நன்றி, எனது வலைப்பக்கமே!

இந்த வலைப்பக்கம் இல்லாவிட்டால் இவ்வளவு நூல்கள் எழுதியிருப்பேனா என்று தெரியவில்லை. தோன்றாத் தூண்டலாக இது திகழ்ந்து வருகிறது என்பது உண்மைதான்.

வாசகர்கள் அதிகரித்திருப்பதால் இதில் விளம்பரம் போடலாம் என்றும் சொன்னார்கள். நான் அதை விரும்பவில்லை.

1993இல் புதிய மரபுகள்” எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பை அண்ணன் மீரா அவர்கள் தனது அன்னம் வெளியீடாக வெளியிட்டார்கள். அதுமுதலே 15ஆண்டுக்கும் மேலாக அந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முதுகலை தமிழ் வகுப்புக்குப் பாடமாக இருந்தது. என்னை முன்பின் அறியாத பேரா.முனைவர் இரா.மோகன்தான் இப்படிச் செய்திருக்கிறார் என்பது பின்னால் புரிந்தது.

புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு நான் வெளியிட்ட படைப்புகள் எல்லாம், எனது இந்த வலைப்பக்கத்திலிருந்து எடுத்த தொகுப்புகள் தான்!

இந்த வலைப்பக்கத்தின் 1000ஆவது பதிவு இது! 

இந்த வலைப்பக்கத்தில் எழுதி, அல்லது வேறுசில இதழ் வெளியீட்டுக்காக எழுதி, பிறகு இந்த வலைப்பக்கத்தில் இட்ட பதிவுகள்! இப்போது புதிய நூலாகி அதன் வெளியீட்டு விழா அழைப்பிதழ்தான் எனது 1000ஆவது பதிவு என்பதால் இந்த எனது  வலைப்பக்கம் என் நன்றிக்குரியது தானே?

இதோ நமது அன்பு நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப (எனது 70ஆவது பிறந்த நாளையொட்டி - பிறந்த நாளை அந்த அழைப்பிதழிலேயே கொண்டு வராமல்)   நூல்வெளியீடு மற்றும் எனது படைப்புகள் பற்றிய ஆய்வரங்கமாகவே அழைப்பிதழ் வந்திருப்பது எனக்கு நிறைவைத் தருகிறது. 

இதோ அந்த அழைப்பிதழ்!

அருகில், வரக்கூடிய தூரமும் - நேரமும் உள்ள நமது நண்பர்கள் வந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன? எனது அன்பான அழைப்புடன் அந்த அழைப்பிதழையே 1000ஆவது பதிவாக இடுவதில் இரட்டை மகிழ்ச்சி அடைகிறேன்.



விழாவில் வெளியிட உள்ள நூல்கள் :

(முன்னுரை - கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்)
--------------------------------------------------------------------------------

(முன்னுரை - முனைவர் வீ.அரசு அவர்கள்)
------------------------------------------------------------------------- 
நூல் வெளியீடுகளில் பங்கேற்க வருகை தரும் பெருமக்கள்-

அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள்
---------------------------------------------------------------- 
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்
---------------------------------------------------------------- 

நாடாளுமன்ற உறுப்பினர் 

திருமிகு எம்.எம். அப்துல்லா அவர்கள்


அண்ணன் செந்தலை ந.கவுதமன் அவர்கள்,


கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்


புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
மருத்துவர் திருமிகு வை.முத்துராஜா அவர்கள்

கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் 
தோழர் மா.சின்னதுரை அவர்கள்

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
கவிச்சுடர் இரா.சு.கவிதைப் பித்தன் அவர்கள்

என்றும் எனதன்பிற்குரிய
தோழர் 'பூபாளம்'  பிரகதீஸ்வரன் அவர்கள்
மற்றும்
மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியின்

மேனாள் மாவட்டச் செயலர் கவிஞர் கவிவர்மன் அவர்கள்

இந்நாள் மாவட்டச் செயலர் தோழர் அ.சங்கர் அவர்கள்

புதுக்கோட்டை மாநகராட்சி உறுப்பினர்களும்

என் அன்பு மகள்களுமான

செந்தாமரை பாலு அவர்கள், 

அன்புமேரி முத்தால் அவர்கள்

மற்றும்

தோழமைச் சங்கங்களின் அன்புத்தலைவர்கள்

உள்ளிட்ட 

சான்றோர் பெருமக்கள் அனைவரையும்

வணங்கி வரவேற்கக் காத்திருப்பது

'வீதி' கலைஇலக்கியக் களம்,

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்.

-----------------------------------------------------------------------

இதிலும் தன்வீட்டு வேலை போல இதை எடுத்துச் செய்துகொண்டிருக்கும் 

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

வீதி கலை-இலக்கியக் களம் ஒருங்கிணைப்பாளர்

கவிஞர்  மு.கீதா அவர்கள்

தமுஎகச மாவட்டத் தலைவர்

கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் அவர்கள்

தமுஎகச மாவட்டச் செயலர்

கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்கள்

இவர்களோடு இயங்கி என்னையும் இயக்கிவரும்

இந்த அமைப்புகளின் உற்சாகத் தோழர்கள்

இவர்களால் இந்த விழா ஏற்பாடு களைகட்டி வருகிறது!

இவர்களோடு

என்னைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே 

உறவு பாராட்டும் தங்கைள், மகள்கள், தம்பிகள்

 இவர்களால் நான்  இருக்கிறேன்!

நம் தோழர்கள், நண்பர்கள்

எனது அன்பான குடும்பத்தினர் என

வருகை தரும் அனைவரையும்

அன்பால் நெகிழ்ந்து வரவேற்கிறேன்.

வாழும் காலத்தில் 

உள்ளுரில் விழா நடப்பது போல

ஒரு படைப்பாளிக்கு

வேறென்ன வேண்டும்? 

வருக! வணக்கம்

------------------------------------------------------- 

ஒரு முக்கியமான பின்குறிப்பு.-

அப்பாடா! 

'ஆயிரம் பதிவாச்சே ஆயிரம் பதிவாச்சே!

சொக்கா!'  என்றும்,

''ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி'' 

என்றும் யாராவது 

பதிவு போட்டீங்க..? 

போட மாட்டிங்க 

என்பதற்கும்

இப்போதே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

--------------------------------------- 

13 கருத்துகள்:

  1. சிறப்பு சிறப்புங்க ஐயா

    பதிலளிநீக்கு
  2. ஆயிரம் பதிவுகள்.
    மிகப் பெரும் சாதனை ஐயா.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாவெள்ளி, மே 09, 2025

    ஆயிரம் பதிவுகள் அண்ணா பொற்காசுகள் உங்களுக்கே... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாவெள்ளி, மே 09, 2025

    வணங்குகிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாவெள்ளி, மே 09, 2025

    வாழ்த்துகள் தோழர்

    பதிலளிநீக்கு
  6. அருமை தோழர், 1000 ஆம் பதிவுக்குப் பாராட்டு.
    புதிய நூல்களுக்கு வாழ்த்து, நூலின் தலைப்புகள் அருமை.
    நான் எழுதினாலும் என் பதிவுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
    உங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அவற்றை வலைப்பூவில் தொகுக்கப் போகிறேன், சிறப்பு. நன்றி

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாஞாயிறு, மே 11, 2025

    தமிழய்யாவுக்கு தமிழ் வாழ்த்துக்கள் தோழர்.தங்களின் எழுத்து தலைமுறை கடந்து தமிழ் இலக்கண இலக்கிய வரலாற்று உணர்வை பறைசாற்றி கொண்டே இருக்கும் மகிழ்வுடன் வாழ்த்துக்கள் தோழர். 🙏❤️🙏

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாஞாயிறு, மே 11, 2025

    1000வது பதிவு, புத்தக வெளியீடு பிறந்த நாள் விழா அழைப்பிதழாக அமைந்துள்ளது சிறப்பு ஐயா. உங்கள் தமிழ்பணிச் சிறக்கட்டும். வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. முனைவர் வா.நேருஞாயிறு, மே 11, 2025

    நிறைய விடயங்களில் முன்னத்தி ஏராக இருக்கிறீர்கள்.பெரும் மகிழ்ச்சி தோழர்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திட இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு