பணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…

18-12-1980 அன்று  பணியில் சேர்ந்த நான்,  31-5-2014 இன்று, 

நினைவலைகளில் மனம் தளும்ப ஓய்வு பெறுகிறேன்,
34ஆண்டுகள்! பதவிஉயர்வில் செல்லாத ஒரே பணி! 
நான் விரும்பி ஏற்ற தமிழாசிரியப் பணி!  

இந்தப் பணிக்காலத்தில்

நல்ல நிகழ்வுகள் மிகுதியாக

கசப்பான நிகழ்வுகள் குறைவாக

வாய்க்கப்பெற்றது என் பெறுபேறு!

 

எத்தனை வகையான மாணவர்கள்!

எத்தனை வகையான பெற்றோர்கள்!!

எத்தனை வகையான ஆசிரியர்கள்!!!

எத்தனை வகையான அலுவலர்கள்...!  

எத்தனை வகை-வகையான மக்கள்!... அடடா!

(இவர்களைப் பற்றியெல்லாம் அவ்வப்போது சிறுகதை,கட்டுரை கவிதைகள் எழுதியிருந்தாலும் இன்னும் எழுத ஏராளமுண்டு) 

பத்தாம் வகுப்புக்குப் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியராக (தமிழாசிரியராக) 18-12-1980இல் பணியில்சேர்ந்த நான், அதே நிலையிலேயே  31-05-2014 இன்றுஓய்வு பெறுகிறேன். 

“இந்தப் பணி மூப்பிற்கு, 2000ஆம் ஆண்டிலிருந்து 2014வரை, அடுத்தடுத்து முதுகலை ஆசிரியர் உ.நி.,பள்ளி மே.நி.பள்ளித் தலைமை ஆசிரியர் மாவட்டக் கல்வி அலுவலர் / ஆகி முதன்மைக்கல்வி அலுவலருக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும், நீ இப்படி வெட்டியாத் திரியிறியேஎன்று திட்டிய நண்பருண்டு.

ஆசிரியப் பணியிலிருக்கும் மனநிறைவு

அலுவரானபின் இருக்காது என்பதில் நான்

இப்போதும் தெளிவாகவே இருக்கிறேன்.

எந்த வேலையாக இருந்தாலும் தன்னார்வமாய் அதைச் செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு, பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப் பெருமையில் நிச்சயம் கிடைக்காது.

எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது, இஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்” எனும் என் அனுபவத்தையே என் மாணவர்க்கும் சொல்லியிருக்கிறேன்.

எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,

முனைவர் நா.அருள்முருகன்அவர்கள் போல்வார்,

மாநிலம் முழுவதும் தேடினாலும் கிடைப்பார்களா என்பதும் அரிதே!

இவர் விதிகளை மாற்றக்கூடிய விதிவிலக்கு, சத்திய வார்த்தை! 

நல்லவன் வாழ்வான் படத்தில் எம்.ஆர்.ராதா, “பணக்காரனா இருந்தும் எப்பிடிடா ஜேம்சு நீ நல்லவனா இருக்கே?! என்று கேட்பது போல,

அதிகாரியாக இருந்தும் அன்பும், அறிவும் ஒருங்கே அமைவது அரிது! தொடர்வது அரிதினும் அரிது. 

இதுபற்றி ஒரு நகைச்சுவைக் கதையே சொல்வார்கள்!

நமது இன்றைய அரசு அமைப்பில்,

தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால்

ஊரே திரண்டு வருமாம்,

தாசில்தாரே செத்துப்போனால்

ஒரு நாய்கூட வராதாம்!

இதுதான் பதவியின் தற்காலிகப் பெருமை!

என் தனிப்பட்ட பணியால் வரும் பெருமை நிரந்தரமானது!

இதை வேறு யாரும் பறித்துவிட முடியாது!

ஆனால்

இன்னும் எனக்குள் ஒரு பெரும் குறை உள்ளது.

இந்த மக்களுக்காக,ஏழை மாணவர்க்காகப் பணியாற்றினேன்” என்னும் பெருமை எனக்குள் இருந்தாலும், ஒரு பெரும் குறை!

அது, தனிப்பட்ட நான் பொருளாதாரத்தில் வளர்ந்த அளவிற்கு என் ஏழை மக்கள் உயரவில்லையே எனும் குறை.

அதற்கு என் பணி பயன்படவில்லையோ எனும் ஆற்றாமை!

1980இல், நான் வேலையில் சேர்ந்தபோதுமிதிவண்டி விலை 500ரூபாய்! அப்போது அது நான் வாங்கிய மொத்தச் சம்பளம் : அடிப்படைச் சம்பளம்-ரூ450+ அகவிலைப்படிரூ20+ ஊரக அரசு ஊழியர் ஊக்க ஊதியம் (RSIA) ரூ10.,  ஆக, மொத்தச் சம்பளமேரூ.480தான்) எனவே, ரொக்கம் தந்து வாங்கமுடியாமல் மாதம் ரூ.50 வீதம்(!) செலுத்துவதாக ஆவுடையார் கோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று, புதிய மிதிவண்டி வாங்கினேன்!

இப்போது ஓய்வு பெறும் முன், 60,000ரூபாய்க்கு மேல் விற்கும் “ஆக்டிவா“ இருசக்கர வாகனத்தை, வங்கிக் கடன் வாங்காமலே என் மாதச்சம்பளத்திற்குள் வாங்கியிருக்கிறேன்!

இதுதான், எனது அரசுப்பணியின் 34ஆண்டுக்கால பொருளாதார வரலாற்றின் சுருக்கம்!

போராட்டத்தில் விளைந்த கவிதைகள் -

இந்த ஊதிய வளர்ச்சி யாருடைய கருணையாலோ, பெருந்தன்மையாலோ கிடைத்துவிட வில்லை! 

1985-86, 89,2003ஆம் ஆண்டுகளில் லட்சக் கணக்கில் அரசுஊழியர்களும் ஆசிரியர்களும் வீதியில் இறங்கிப் போராடி, மாதக் கணக்கில் சிறையிருந்து, பெற்ற உரிமை! 

1985 “ஜேக்டீ“ போராட்டடத்தில் புதுக்கோட்டைச் சிறையில் 50நாள்களுக்குமேல் சிறையிருந்த அரசுஊழியர் ஆசிரியர்களில் நானும் ஒருவன்! அப்போது தீபாளியன்று உண்ணாவிரதம் இருந்து, நடத்திய சிறைக் கவியரங்கில் நான் தலைமையேற்று நடந்த கவியரங்கில் நான் பாடிய “ஏணிகளே தோணிகளே இங்கு வந்த ஞானிகளே, அந்தோணி கையிலே அகப்பட்ட பிராணிகளே!” என்ற வரிகள் சிறையைத் தாண்டியும் பிரபலமானது! (போராட்டம் முடிந்து, தேர்வு நடத்திக் கொண்டிருந்த போது, பார்வையிட வந்த மா.க.அ. “உங்க பேரு?” என்று கேட்க, நான் சொல்ல, “ஓ...! ஏணிகளே தோணிகளே! நீங்க தானே?” என்று கேட்டார்!

சிறைக் கவியரங்கில் நான் வாசித்த “எங்கள் கிராமத்து ஞானபீடம்” கவிதை சில மாதங்கள் கழித்து, கல்கி வார இதழின் கடைசி முழுப்பக்கக் கவிதையாக வெளிவந்தது – 

(2-3-1986 கல்கி வார இதழின் கடைசிப் பக்கத்தில்
முழுப்பக்கக் கவிதையாக வெளிவந்த எனது கவிதை,
எனது இயற்பெயரிலேயே வெளிவந்தது!)  
------------------------------------------- 
இந்தக் கவிதை  வெளிவந்த அட்டைப்படம் கீழே உள்ளது:இன்னொரு அரசியல் கவிதையும் 

“கல்கி”வார இதழிலேயே சற்றே முன்னர் வந்திருந்தது. 

இவை எனது போராட்டக்கால இலக்கியங்கள்-

அந்தக் கவிதை இதோ -

(இவை இரண்டும் 1993ஆம் ஆண்டு சிவகங்கை கவிஞர் மீரா அவர்களின் அன்னம்பதிப்பக வெளியீடாக வந்த எனது முதல் வெளியீடான       புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது.

இந்தத் தொகுப்பு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் மாணவர்க்கான பாடநூலாக 1995-2015 ஆண்டுகளில் இடம் பெற்றது. இதற்குக் காரணமான பேரா.முனைவர் இரா.மோகன் அவர்களுக்கு நன்றி.

இந்த நூலை இரண்டாம் பதிப்பாக 2015இல் வெளியிட்ட அன்னம்பதிப்பக உரிமையாளர் தம்பி மீரா.கதிர் அவர்களுக்கும் எனது நன்றி)

இந்தக் கவிதை வெளிவந்த

கல்கி இதழின் அட்டைப் படம் கீழுள்ளது :இவை எனது போராட்டக்கால இலக்கியங்கள்!

எனினும் -?

இனி என் ஓய்வூதியம் 

பாதிச் சம்பளமே எனினும்

முன்னிலும் அதிகமாக 

மக்களுக்கு நான் செய்ய வேண்டிய 

பணியின் -அவசியத்தை உணர்கிறேன்..

இன்னும் படிப்பேன், எழுதுவேன், பேசுவேன்,

உடலில் சக்தியிருக்கும்வரை உழைப்பேன்.

இதுதான் எனது பணிஓய்வு நாள் செய்தி.

என் நண்பர்கள் -

இப்போதும் என்மேல் அன்புடன் இருக்கிறார்கள்,

இதுதான் நான் சரியானவன் என்பதன் அடையாளம்!

என் எதிரிகள் -

இப்போதும் என்மேல் கோபத்தில் இருக்கிறார்கள்,

அதுதான் நான் நேர்மையானவன் என்பதன் அடையாளம்!

கடந்த 34ஆண்டுகளாக நான் பணியாற்றிய பள்ளிகளில், அமைப்புகளில், இணைந்து இயங்கிய “அறிவொளி இயக்கம்” போலும் மக்கள் இயக்கங்களில், கலந்து கொண்ட போராட்டங்களில், இருந்த சிறைகளில், என் பணிகளுக்குப் பக்க பலமாக இருந்த ஆசிரிய நண்பர்கள், தலைமைஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் பிற அரசுத் துறை நண்பர்கள் அனைவர் கைகளையும் குலுக்கி, பணிவும் கனிவும் கலந்த நன்றிப் பூக்களைத் தூவுகிறேன்...

நன்றி வணக்கம், மற்றவை நேரில்...

-----------------------------------------

சரி சரி அதுக்காக, ஒரு தேநீர் விருந்துகூட இல்லையா என்று உரிமையுடன் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு முன்செய்தி

வரும் சூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் எனது நூல்கள் சிலவற்றின் வெளியீட்டு விழாவுடன் எனது பணிஓய்வுச் சிறுவிருந்தும் நடைபெறும். தவறாமல் அனைவரும் வந்து வாழ்த்துங்கள்.

நன்றி வணக்கம்.

------------------------------------------------ 

பின் குறிப்பு – 

இந்தப் பதிவு பல்லாண்டுகளாக எனது வலைப்பதிவுகளில் 

லட்சக்கணக்கானோர் படித்து, 

பின்னூட்டம் இட்டதில் முதலிடத்தில் உள்ளது.

எனவே, இதன் அவசியம் கருதி, 

போராட்டக் காலக் கவிதைகள் எனும் பகுதியை 

இன்றைய அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 

சங்கத்தின் தேவை குறித்துச் சொல்ல வேண்டிய 

அவசியம் உள்ள சூழலைக் கருதி 

பின்னர் சேர்த்திருக்கிறேன்.  

இதைப் படிக்கும் 

அரசு ஊழியர், ஆசிரியர் தலைவர்கள் 

தாம்படித்ததோடு 

இன்றைய இளைஞர்களுக்கும் 

பகிர வேண்டுகிறேன்.

------------------------------------------------ 

143 கருத்துகள்:

 1. தற்போதைய பணியிலிருந்து ஓய்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள். இனி மனம் போல (அதே பணிகளை வேறு விதமாக நீங்கள் தொடர வேண்டும் என விழைகிறேன்.. இணையத்தில் பலருக்கு தமிழ் கற்றுத் தாருங்கள். சுவையில் திளைத்த அரிய பாடல்களுக்கு / நூல்களுக்கு எளிய உரை எழுதிடுங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அய்யா. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துககும் நன்றி 'பணிகளை வேறு விதமாக நீங்கள் தொடர வேண்டும்' - அதுதான் எனது நோக்கமும் நண்பரே.
   இப்போது தான் நினைவிற்கு வந்தது. எனது கட்டுரை ஒன்றில் - திருப்பூர் ஜோதிஜி அவர்களின் பதிவில் இட்டிருந்த – தங்களின் பின்னூட்டக் கருத்தை மேற்கோள் காட்டி எழுதி இருந்தேன். தாங்கள் சுட்டிக்காட்டியபடி எனது பணியை ஏற்கெனவே தொடங்கி, பத்தாண்டுகளாக நிறைவு பெறாமல் தொடர்கிறது!! “கவிதையின் கதை” எனும் எனது அந்தப் பெருநூல் தமிழ்க்கவிதையின் முழுமையான வரலாறாக அடுத்த ஆண்டு வெளிவரும், தொடர்ந்து இணைந்திருப்போம் தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
   தங்களின கருத்தை மேற்கோளிட்ட எனது கட்டுரையின் சுட்டி இதோ - http://valarumkavithai.blogspot.com/2014/04/blog-post_3.html நன்றி வணக்கம்.

   நீக்கு
 2. பள்ளியில் படிப்பித்தலுக்குத் தானே
  ஓய்வு என்றீர்...
  ஊர் ஊராகப் படிப்பிக்க
  லியோனி ஐயா உங்களை இழுப்பாரே...
  வலைப்பூ வாசகர்களுக்குப் படிப்பிக்க
  நாம இருக்கிறோம்
  நடைபேசியில் கதைபோட்டு இழுப்போமே...
  ஐயா! - நீங்க
  ஓய்வு பெற்றது பள்ளிக்கே
  படிப்பித்தலுக்கு இல்லையே...
  ஏழைக்கு எழுத்தறிவித்தவன்
  இறைவனாவான்...
  தங்கள் பணியைத் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடைபேசியில் கதைபோட்டு இழுப்போமே...
   ஐயா! - நீங்க
   ஓய்வு பெற்றது பள்ளிக்கே
   படிப்பித்தலுக்கு இல்லையே... - ஆமாம் அய்யா நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி நண்பரே. உங்களின் பல கருத்துகள் எனக்கு மகிழ்ச்சிதரும் மாற்றுச் சிந்தனைகளாகவே இருப்பதறிந்து வியந்திருக்கிறேன். தொடர்ந்து இணைந்திருப்போம் நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. நன்றி சாமிநாதா, தமிழில் எழுத முயற்சி செய்ய வேண்டுகிறேன்

   நீக்கு
 5. //இந்தப் பணிக்காலத்தில், நல்ல நிகழ்வுகள் மிகுதியாக, கசப்பான நிகழ்வுகள் குறைவாக வாய்க்கப்பெற்றது என் பெறுபேறு!//
  இப்படி சொல்வர் மிக சிலரே.
  ஆசிரியப் பணியில் இருக்கும் நிறைவு வேறு எந்தப் பணியிலும் இருக்காது என்பது உண்மை. நீங்கள் பணியாற்றிய 34 ஆண்டுகளில் சமூக சிந்தனையை மாணவர்களிடையே விதைத்திருப்பீர்கள். தமிழார்வத்தை தூண்டி இருப்பீர்கள். உங்களிடம் படித்த மாணவர்கள் உயர் நிலையை அடைவார்கள் மற்றவரையும் உயர்த்துவார்கள்.
  நான் எழுதிய ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் என்ற ஆசிரியர் கவிதை உங்களுக்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும் நம்புகிறேன். அதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
  உண்மையான ஆசிரியர் இப்படித்தான் இருப்பாரோ?

  ஆசிரியப்பணியில் இருந்து ஒய்வு பெற்றாலும் தமிழ்ப் பணியில் இருந்து உங்களால் ஒய்வு பெற நீங்கள் நினைத்தாலும் இயலாது என்பதே உண்மை.
  தொடரட்டும் உங்கள் சேவைகளும் ஆலோசனைகளும்.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி எல்லா நேரமும் இணையமே !இமயமாய் உயர்ந்து நிற்க வாழ்த்துக்கள் !

   நீக்கு
  2. கவிதை பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்தேன் முரளிஅய்யா. என்ன ஒரு அழகான கவிதை! நாமிருவரும் ஆசிரியப்பணியை விரும்பி ஏற்பவர் என்னும் கருததில் சகோதரராகிவிட்டோம்! தங்களைப்போன்றோர் நட்பு என் வாழ்க்கையில் பெரியபெரிய நம்பிக்கைகளைத் தருகிறது. மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.
   அடுத்து பகவானே. முடிந்தவரை இணையத்தில் இருப்போம் தங்கள் வாழ்த்திற்கு நன்றி வணக்கம்.

   நீக்கு
  3. பகவானே, உங்களைப் போல எல்லா நேரத்திலும் சிரிக்க வைக்க என்னால் இயலாது ஒப்புக்கொள்கிறேன் சாமி! எனினும் உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நன்றி.

   நீக்கு
 6. பணி ஓய்வு – மன்னிக்கவும்! அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் மக்கள் பணி ஆற்ற விரும்பும் ஆசிரியர் கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்! தங்களது நூல் வெளியீட்டு விழாவினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி அய்யா. அண்மையில் கிடைத்ததென்றாலும், தங்களின் நட்பைப் பெருமையாக நினைக்கிறேன். நன்றி

   நீக்கு
 7. வணக்கம்
  ஐயா.

  பாடசாலையில் ஆசிரியராக இருந்த காலத்தில் ஆசிரியராக மட்டுமல்ல நல்ல தமிழ் சேவகனாகவும் இருந்துள்ளீர்கள்.... அதைப்போல வலைப்பூக்களிலும் தங்களின் தமிழ்ப்பணிச்சேவை தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா....
  தங்களை இன்று இரவுக்கு சந்திக்கிறேன்.... நேரில் பேசுவதற்கா....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல தமிழ் சேவகனாகவும் இருந்துள்ளீர்கள்.... - உண்மைதான் ரூபன், கற்பிக்கும்போதே கற்பவனாக ( LEARNING BY TEACHING) இருந்ததால், இன்னும் தாகம் அடங்காமல் திரிகிறேன்.நன்றி.

   நீக்கு
 8. ஆசிரியப்பணியிலிருந்து தான் ஓய்வே தவிர, எழுத்துப் பணியில் ஓய்வு இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். தொடரட்டும் ஐயா தங்களது தமிழ் பணி.

  பதிலளிநீக்கு
 9. இன்னும் படிப்பேன், எழுதுவேன், பேசுவேன்,
  உடலில் சக்தியிருக்கும்வரை உழைப்பேன்.
  இதுதான் எனது பணிஓய்வு நாள் செய்தி.

  தங்களின் உழைப்பும் நற்பணியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி சரவணன் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்

   நீக்கு
 10. என் நண்பர்கள் -
  இப்போதும் என்மேல் அன்புடன் இருக்கிறார்கள்,
  இதுதான் நான் சரியானவன் என்பதன் அடையாளம்!

  நான் தங்களின் நண்பர்களில் ஒருவன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா மிக்க மகிழ்ச்சி. பணியுமாம் என்றும் பெருமை - குறள். தங்கள் நட்பே என் பெருமை. நன்றி அய்யா

   நீக்கு
 11. தங்களின் பணி ஒய்வூக்காலம் ஆரோக்கீயமான ,மன அமைதிகொண்ட , சமூகப்பணியோடும் நீண்ட ஆயுளொடு கூடியதாகவும் அமைய வாழ்த்துகிறேன் ! ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தோழரே! தங்கள் வாழ்த்துக்கு இதயம் நெகிழ்ந்த நன்றி.

   நீக்கு
 12. குலன் அருள் தெய்வம் கொள்மை மேண்மை
  கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
  நிலம் மலை நிறைகோல் மலர் நிகர்மாட்சியும்
  உலகியல் அறிவோடு உயர்குணம் யாவும்
  அமைபவன் நூலுறை ஆசிரியனே

  என்னும் நன்னூல் பாட்டிற்கேற்ப ஆசிரியராய் சிறந்தோங்கிய தங்களுக்குப் பணி ஓய்வென்பது ஏது, மலை மலையாய் வேலைகள் காத்துக் கிடக்கின்றன,
  மாணவர் பணியாற்றிய தங்களுக்கு, இனி
  சமூகப் பணி காத்திருக்கிறது.
  வாழ்த்த வணதில்லை, வணங்கி மகிழ்கின்றேன் ஐயா
  நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கின்றேன் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைப் போன்றோரின் அன்புநீர் பாய்ச்சித்தானே இந்தப் பயிர் வளர்கிறது! நம் பணிகளைத் தொடர்ந்து செய்வோம் அய்யா நன்றி

   நீக்கு
 13. நிறைவான பணியாற்றி ஓய்வு பெறும் தங்களின் ஓய்வுக் காலம் பிறருக்கு மிகவும் பயன் விளைக்கும் வகையில் கழியும் என்பதில் ஐயமில்லை! அமைதியான, ஆரோக்கியமான வாழ்வு தொடர வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வாழ்த்திற்குத் தகுதியுடையவனாக நீடிக்க முயல்வேன் அய்யா நன்றி.

   நீக்கு
 14. ஒய்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரா ! என்ன மனக்குறை தங்கள் ஒருவரால் மட்டும் மாற்றியமைக்க முடியுமா என்ன தங்கள் மனம் நிறைய முழுதும் முயற்சி எடுத்துள்ளீர்கள், ஏனையவை ஆண்டவன் கையிலும் உள்ளதல்லவா? ஆகையால் கவலை வேண்டாம் தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள் எல்லாம் தன்னால் நடக்கும். ( தனிப்பட்ட நான் பொருளாதாரத்தில் வளர்ந்த அளவிற்கு என் ஏழை மக்கள் உயரவில்லையே எனும் குறை.
  அதற்கு என் பணி பயன்படவில்லையோ எனும் ஆற்றாமை! ) ( உடலில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்) கேட்கவே மகிழ்ச்சியாய் உள்ளது. தங்கள் சேவை அனைவருக்கும் தேவை. நன்றி வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னால் மட்டும் முடியாது என்பது தெரிந்தது தான். என் சம்பளம் வளர்ந்த அளவிற்கு என் பணியின் விளைச்சல் வளர்ந்திருக்கிறதா என்னும் சந்தேகம் எப்போதுமே உண்டு சகோதரி. அதைத்தான் குறிப்பிட்டேன். மற்றபடி இதயசுத்தியுடன் என் பணிகளைச் செய்து வந்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். அமைப்பு ரீதியாகத் திரண்டு போராடி இந்தச் சம்பளம் வந்திருப்பது இப்போது வருவோர்க்குத் தெரியாது, ஆனாலும் அமைப்பற்றவர்கள் ( ) இன்னும் அடித்தட்டில் கிடப்பதையும் கண்முன் பார்க்கத்தானே செய்கிறோம்? அந்த ஆதங்கத்தின் வெளிப்பாட்டைச் சொன்னேன் தங்களின் வாழ்த்துக்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 15. காலையில் தான் உங்கள் தங்கை சொன்னாள். அண்ணே பணி ஓய்வு அல்லவா என்று.
  ஒரு சிறு விழாவிற்கு கூட நம்மை அழைக்காமல் எப்படி ஆகியிருப்பார்? அதெல்லாம் இல்லை. என்றாலும் கொஞ்சம் உதைத்தது..
  உங்கள் பணி நிறைவு விழா விரைவில் என்று சொல்லியிருகிறீர்கள். அதேமாதிரி இன்னொரு விசயமும் சொன்னீர்கள் மறக்காமல் இருப்பீர்கள் என்று நினைக்கேன்..
  வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணிநிறைவு என்ன மது? கழுதை வயதாகிவிட்டது என்று பிறந்த நாள் சொல்கிறதல்லவா? அதை இந்த ஆண்டுமட்டும் அரசுவிதி சொல்லியிருக்கிறது.அதனால் அதை நான் கொண்டாடுவதும் இல்லலை, அதைநினைத்துத் திண்டாடுவதும் இல்லை. ஆயினும் உங்களைப்போல், என் தங்யையைப் போல அன்பானவர்களின் கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்கான விழாவை எனது சில புத்தகங்களின் வெளியீட்டு விழாவாக்கலாம் என்று திட்டம். விரைவில் நடத்துவோம் - நல்ல எழுத்தாளர்களை அழைத்து. நன்றி

   நீக்கு
 16. wish you all the best to re-invent yourself in your post-retirement life.

  பதிலளிநீக்கு
 17. பணிநிறைவிற்குப் பாராட்டுகள். அதுவும் நூல் வெளியீட்டு விழாவில் சந்திக்க அழைப்பு விடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி காத்திருக்கிறோம்நூல்களின் அணிவகுப்பிற்காக

  அன்புடன் மு.பழனியப்பன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அய்யா, தாங்கள் இல்லாமல் எனது நூல்வெளியீட்டு விழாவா, எனது கணினி ஆசானே? உறுதியாய்த் தெரிவிப்போன் அய்யா. பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
 18. வாழ்த்துக்கள் சார்.மேலும் உங்களது பணி உலகளாவிய அளவில் சிறக்க வாழ்த்துக்கள்!
  http://bullsstreetdotcom.blogspot.in

  பதிலளிநீக்கு
 19. உங்களின் சேவை எங்களுக்கும் தேவை ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா... இது நாங்கள் உங்களைப்பார்த்துச் சொன்ன வாசகம் அல்லவா? வாழ்த்துக்கு நன்றி வலைச்சித்தரே!

   நீக்கு
 20. மதிப்பிற்குரிய திரு. முத்துநிலவன் ஐயா! வணக்கம்.

  முதலில் வாழ்த்துக்கள் ஐயா. வள்ளுவன், பாரதி ஆகியோர் வரிசையில், தமிழ் வளர்த்த பெருமைக்காக வரலாற்றில தங்களது பெயரும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

  பணி ஓய்வு பற்றி தாங்கள் குறிப்பிட்டதும், முன்னாள் பாரத பிரதமரின் சொல்லாடல் ஒன்று நினைவிற்க்கு வருகிறது. ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்த திரு. மன்மோகன் சிங்கை மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமராய் நீடிக்கச் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததை கண்ட மன்மோகன், திருமதி சோனியாவிடம் தனது விருப்பமின்மையை தெரிவித்திருந்தார். ஏன் என அதற்க்கான காரணத்தை கேட்ட சோனியாவிடம் அவர் அளித்த பதில் இதுதான்: "It is better to leave when people ask you "Why are you leaving??" than "When are you leaving?".

  மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “வள்ளுவன், பாரதி ஆகியோர் வரிசையில்“ - அய்யா இதெல்லாம் கொஞ்சம் (இல்ல இல்ல ரொம்பவே) ஓவருங்கய்யா.. ஆனால், பின்னால் படிதத்தபின்தான் தெரிந்தது அழகான கிண்டல் என்று . எனினும் தங்கள் வாழ்த்துக்கு நன்றி

   நீக்கு
 21. அந்தப் பணியில் இருந்துதான் ஓய்வு. மற்றபடி நம்முடைய வாழ்க்கையில் எதாவதொரு வேலை இருந்துகொண்டேதான் இருக்கும். இனி பதிவு எழுதுவதை முக்கியப்பணியாகக் கொள்ளவும்:-)))

  மனம் விரும்பியபடி நேரம் செலவழிக்கலாமில்லையா???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் விரும்பியபடி நேரம் செலவழிக்கலாமில்லையா? - ஆமாம் இதுவரை என் நேரத்தினைத் திட்டமிட எனக்குப் பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைத்ததில்லை. இனிமேல் அப்படிச் சொல்ல் இடமின்றித் திட்டமிட்டுப் பார்க்க முயற்சிசெய்வேன்.

   நீக்கு
 22. தங்களின் உழைப்பும் நற்பணியும் தொடரட்டும். வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கு வயது ஏது நண்பரே? தங்களின் அன்பான வாழ்த்தை ஏற்று அன்போடு வணங்குகிறேன். நன்றி.

   நீக்கு
 23. ஓய்வு என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது அல்ல

  ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மாற்றுவது....

  வாழ்த்துக்கள் ஐயா. மாற்றுப்பணி தான் உங்களிடன் உள்ளதே இனி என்னாளும் எங்களுடன் இயங்கிடுவீர் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பர் இ.ஆரா. தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி

   நீக்கு
 24. ஐயா வணக்கம்
  தங்களின் பணிநிறைவு பதிவு எனது மனதைக் கொஞ்சம் கணக்க வைத்து விட்டது ஐயா. மாணவர்கள், பணிபுரிந்த பள்ளிச்சூழல் தன்னை விட்டு பிரிவதாக உணரும் போது ஒரு ஏற்படும் வலி ஏற்படுமே! அதையும் தாண்டி ஏழை மக்களின் வளர்ச்சிக்கு இன்னும் உதவ முடியவில்லையே எனும் தங்கள் ஆற்றாமை மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டு. பணி ஓய்வு என்பது அகவை வந்திட்டதால் வந்த ஒரு நிகழ்வு. உங்கள் பணிக்கு ஓய்வு ஏது ஐயா? தொடர்ந்து இந்த தமிழ் சமூகத்திற்கும் தமிழுக்கும் தங்களின் எண்ணங்கள் எழுத்துகளாவும், பல மேடைகளை அலங்கரிக்கவும் தயாராகி விட்டது என்பது தானே உண்மை! நூல் வெளியீட்டு நிகழ்வை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். நன்றீங்க ஐயா. நேரில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாண்டியன். தங்களின் திருமணத்தின் பின்னர் இந்த நூல் வெளியீட்டு விழாப்பற்றிப் பேசுவோம். திருமண வேலைகளைத் திடடமிட்டுச் சிறப்பாகச் செய்யுங்கள். வாழ்த்துகள்.

   நீக்கு
 25. ஐயா,
  வணக்கம் . சிறந்த தமிழசிரியர்கள் அணி ஒன்றை நீங்கள் உருவாக்கி விட்டுள்ளீர்கள். முனை மழுங்கிக் கிடந்த தமிழாசிரியர்கள் பலரை ஒன்றின்ணைத்து, ஊக்ககப்டுத்தி, அவர்களை பட்டை தீட்டியிருக்கிறீர்கள். அப்படி உருவானவர்களுள் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தங்களின் தடங்கள் எங்களின் ஆசிரியப் பணிக்கு அவசியம் ஊன்றுகோலாய் அமையும். இன்னும் எங்களின் பணித்திறன் மேம்பட த்ங்களின் மேலான ஆலோசனைகள், செயல்பாடுகள், வேண்டும் ஐயா. உங்களுக்காக ஒரு தமிழாசிரியர் கூட்டம் எப்போதும் உண்டு. தாங்கள் வல்லமை பெற்று புதுயுகம் படைக்க தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி குரு. நமது படைப்பாற்றல் நம் இயக்கத்திற்கும், அதன்வழி இந்தச் சமூகத்திற்கும் கிடைக்கப்பணிசெய்வதே நம் அனைவரின் நோக்கமும். தகுதிவாய்ந்த இளைஞர்கள் கையில் நமது புதுகை மாவட்டத் தமிழாசிரியர் கழகம் வந்ததற்கு நானும் என்சிறுபங்குப் பணியைச் செய்ய முடிந்ததற்கு மகிழ்கிறேன். இப்போதும் ஒரு கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொள்ளும் இளைய -ஆசிரியர்-சமூகம் நிறைய வநதிருக்கிறார்கள். அவர்களை இயக்கத்தின்பால் ஈர்த்து இந்த நம்பணியை அவர்களும் தொடரச் செய்யுங்கள். செய்யத் தொடங்கிவிட்டால் நம்மைவிடச் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் இளைஞர்களிடம் உள்ளது என்பதை உங்களையும் மகா.சுந்தரையும் பார்த்தே தெரிந்துகொண்டென். பணி தொடர்வோம் அய்யா. தங்களின் அன்பில் நெகிழ்ந்தேன். நன்றி.

   நீக்கு
 26. ஐயா,
  வணக்கம். கற்கின்ற காலத்திலும், கற்பிக்கின்ற காலத்திலும் பிரிவுபசார விழாவின் போது பேசமுடியாமல் கண்கலங்கித் தொண்டையடைத்துப் போய் ஓய்வுபேறும் ஆசிரியர்களைக் கண்ணுற்றிருக்கிறேன். தங்களின் நிஜங்களை வகுப்பறைகளில் விட்டு நிழலாய் வெளியேறுபவர்களின் பதற்றமும் பரிதாபமும் தோற்றுவிக்கும் பல முகங்கள்...! அரசு அனுமதித்தால் ஊதியமற்றும் தம்பணி செய்ய அவர்களுள் பலரும் தயாராக இருந்தனர். அனுபவித்துப் பார்த்தவனுக்குக் கற்பித்தல் ஒரு போதை! மாணவரின் விழிகள் விரிய விரிய அவர்களுக்குக் கொள்வோன் கொள்வகையறிந்து கொடுக்கும் சுகம் பால்நினைந்தூட்டும் தாய்கொள்ளும் சுகத்தினும் பெரிது. தம்மின் தம்மக்கள் அறிவுடையராயக் காணும் பொழுதைய பெருமிதம் வேறுபணியில் வாய்த்தல் அரிது. அவர்களின் துயரம் இவற்றை இழப்பதனால் இருந்திருக்கலாம்.
  நீங்களென்ன நான்கு சுவர்விட்டு உலகிற்கு வந்திருக்கறீர்கள்...!
  நெஞ்சு களனாக நிறையக் கொள்ள எங்களைப் போன்ற நிறைய மாணவர்கள் காத்திருக்கிறோம் ஐயா!
  பணித்தொடச்சிக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, ஓர் ஆய்வுக் கட்டுரையின்வழி நம் நட்பு பிறந்தது. தங்களின் தமிழறிவு கண்டு நான்தான் உங்களைத் தேடிப்பிடித்தேன். அன்று முதல் உங்களிடம் நான்தான் நிறையக் கற்றுக்கொண்டு வருகிறேன். வயதில் இளையவராயினும் அறிவில் ஆழ்ந்த முதியவர் என்பதால் “பணியுமாம் என்றும் பெரமை“க்கு அடையைாளமாக உள்ளீர்கள். எனினும் மாணவரிடமும் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் உண்டு என்பதால் நீங்கள் முந்திக்கொள்கிறீர்கள். இன்னும் கற்போம், இணைந்து கற்போம், பணிதொடர்வோம் அய்யா. நன்றி

   நீக்கு
 27. அன்பின் முத்து நிலவன் - பணியில் எவ்வித குறையுமின்றி பணீ நிறைவு செய்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - சந்திக்க முயல்கிறேன். நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா கரந்தையார் எழுதியதிலிருந்தே தங்களைச் சந்திக்க மிக்க ஆவலுடன் உள்ளேன் அய்யா. இந்தப்பக்கம் -மதுரை-தஞ்சை வழி வரும்போது தெரிவியுங்கள் ஓடோடி வந்து சந்திப்பேன். நன்றி.

   நீக்கு
 28. உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 29. நேரமின்மையினால் செய்யாமற் போனவற்றைச் செய்யும் நேரம் வந்தது.
  பணி ஓய்வு கிடைத்தது;பணி தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அய்யா. என் நேரம் இதுவரையிலும் எனதில்லை என்றே இருந்தது. இனிமேல் திட்டமிட்டுச் செய்ய முயல்வேன். வாழ்த்துக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி.

   நீக்கு
 30. வணக்கம் ஐயா.. தங்களது புதுப் பணியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.. காத்திருக்கிறேன்....நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுப்பணியெல்லாம் இல்லை மா. ஏற்கெனவே பணியிற் சேருமுன்னிருந்து செய்துவந்த பகுதிநேர வேலைதான். இப்போது முழுநேரமாகச் செய்யப் போகிறேன். அதாவது பகலில் பள்ளியில் பாஸ்கர-சூரிய-னாகவும், இரவில் இலக்கிய உலகில் நிலவாகவும் திரிந்த நான் இனி முழுநேரமும் நிலவனாக உலாவருவேன். உங்களைப் போலும் இளைய தமிழாசிரியர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் அம்மா.. சங்கத் தமிழிலிருந்து சமகால பாரதி தொடர்ந்து இன்றைய எழுத்தாளர் வரை அறிந்து, அடுத்தகட்ட வாழ்க்கை உயர்வுக்கு நம் தமிழ் பயன்பட என்ன வேண்டுமோ அதைச் செய்யவேண்டும். அது பற்றி யோசித்து,செயலாற்றினால் அதுவே என் கனவு. நன்றிமா.

   நீக்கு
 31. வாழ்த்துக்கள் அய்யா.ஓய்வு அரசு பணிக்குத்தானே தவிர சமுதாயப்பணிக்கல்லவே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழரே! உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நம் பணி, முன்னிலும் பன்மடங்கு தொடரும். நன்றி

   நீக்கு
 32. ஆசிரியப்பணி ஓய்வளித்தாலும் அயராத தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 33. தங்களைப் போல் மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.பள்ளி மாணவர்கள் உங்களை இழக்கின்றனர் என்பது வருத்தமான ஒன்று.ஆனால் நீங்கள் சமூக அக்கறையுள்ளவர் என்பதால் எந்த வழியிலும் உங்களின் பணி தொடரும் என்பதில் அய்யமில்லை.எப்போதும் எங்களின் வழிகாட்டியாக உங்களைப் பெற்றதில் பெருமைப்படுகின்றோம் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கவிஞரே. தங்கை ரேவதிக்குச் சொன்னதை உங்களுக்கும் சொன்னதாக ஏற்க வேண்டுகிறேன். நன்றி நன்றி.

   நீக்கு
 34. ”அடுத்தகட்ட வாழ்க்கை உயர்வுக்கு நம் தமிழ் பயன்பட என்ன வேண்டுமோ அதைச் செய்யவேண்டும்” கண்டிப்பாக இந்த வார்த்தைகளை என்றும் மறவேன் ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் தமிழ்த்தாய் வாழத்தைப் போல, “செயல்மறந்து“ வாழ்த்தாமல் செயல்புரிந்து வாழ்த்த வேண்டும் தங்கையே! நம் பலமும் பலவீனமும் தமிழை வணங்குவதுதான்.. உனக்காகவும் உன்போல் செயல்துடிப்பு மிகுந்திருந்தும் என்ன செய்வது எப்படிச் செய்வது என்பதில் செம்மையான செயல்திட்டம் தேவையென நினைப்பவர்க்காகவும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன் விரைவில் வெளியிடுவேன். உன்போலும் இளைய தமிழாசிரியர்களிடம் எனது எதிர்பார்ப்பு அதுதான்..மா. விரைவில் வெளியிடுவேன். நன்றிம்மா.

   நீக்கு
 35. ஐயா பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளீர்கள்.
  ஆகவே, தங்களிடமுருந்து இன்னும் இலக்கிய
  பங்களிப்புகளை அதிகமாய் எதிர்பார்க்கலாம்
  என்ற செய்திதான் இந்தப் பதிவின் வெளிப்பாடு.
  வரவேற்கிறோம் ஐயா...

  பதிலளிநீக்கு
 36. தமிழ் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் ஒருபோதும் ஓய்வில்லை. கொண்ட பணியில் மட்டுமே ஓய்வு பெற்றுவிட்டீர்கள்; கொள்கைப் ப(பா)ணியில் அல்ல. உங்கள் எழுத்துக்களால் தமிழன்னையின் கூந்தலுக்கு மென்மேலும் மலர்ச்சரம் தொடுக்க வேண்டுகிறோம். ஆசிரியர் பணி ஓய்வு; முழுநேர தமிழ்ப்பணி ஆரம்பம்...

  மேலும் எழுதுங்கள்; பேசுங்கள் - எங்களுக்காக.

  நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “ஆசிரியர் பணி ஓய்வு; முழுநேர தமிழ்ப்பணி ஆரம்பம்...
   மேலும் எழுதுங்கள்; பேசுங்கள் - எங்களுக்காக“ - உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே. சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். நன்றி அய்யா.

   நீக்கு
 37. வணக்கம் ஐயா,

  வலைப்பூவுக்கு புதியவனான நான் இன்றுதான் உங்களின் வலைப்பூவினை காண நேர்ந்தது !

  உங்களின் பணி ஓய்வினை படித்தபோது எனக்கு, நான் மிகவும் மதித்து நேசிக்கும் எனது ஆசிரியர் " மைக்கேல் ஜோசப் " அவர்களின் ஞாபகம் வந்துவிட்டது.

  அன்னை, பிதாவுக்கு பிறகு, குழந்தைகளின் கைபிடித்து வாழ்க்கையை பயிற்றுவிக்கும் ஆசிரிய பணி நிச்சயமாய் நல்வரம் ! அந்த நல்வரத்தை மானுடம் சிறக்க பயன்படுத்தும் நீங்கள் வாழ்க பல்லாண்டு !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு நல்ல மனிதரின் வாழ்விலும், அவரைப் பாதித்த ஆளுமைகளின் பட்டியலில் நிச்சயமாக ஓர் ஆசிரியருக்கு இடம் இருக்கும். அவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகவோ, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகவோ கல்லூரி ஆசிரியராகவோ இருக்கலாம். அந்தவகையில் நம் வாழ்க்கை அமைந்ததில் எனக்கு மெத்தவும் நிறைவு அதைத்தான் வெளியிட்டேன். தங்கள் பதிவையும் பார்த்துப் பின்னூட்டமிட்டேன். நன்றி

   நீக்கு
 38. அன்புத் தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நமக்கெல்லால் பணி நிறைவு ஏது!! இனிதான் நீர் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன!
  மேலும்,மேலும் தங்கள் பணி தொடர்க! வளர்க! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அ்யயா. உண்மைதான் அய்யா. தங்களின் பணிகளைப் பார்த்தே நானும் கற்று வருகிறேன் அய்யா. தொடர்ந்து நம் பணிகளை இணைந்தும் செய்வோம் தங்கள் வாழ்த்து எனக்கு மிகவும் மகிழ்வளித்தது நன்றி அய்யா.

   நீக்கு
 39. இத்தனை நாள் கழித்து உங்கள் பக்கத்திற்கு வந்து இந்த பதிவை படிக்கையில் மனம் நெகிழ்கிறது அண்ணா.
  இத்தனை நிறைவோடு பணியை நிறைவு செய்யும் வாய்ப்பு நினைக்கிலேயே சிலிர்கிறது. teaching is my passion என சொல்லித்திரியும் என்போலும் பணிப்பைத்தியங்களுக்கு நீங்களும், உங்கள் பணிகளும் முன்னோடிகள் ( பெரிய வார்தைகள் என ஜகா வாங்கதீங்க). இனி படைப்புலகம் உங்களை பயன்படுத்திக்கொள்ளும்!!டீ பார்டிக்கு வெய்டிங் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடல்நலம் எப்படிம்மா இருக்கு? உன் வாழ்த்தைக் கஸ்தூரி வழியாகவும் கேட்டுக்கொண்டேன். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதற்கு மாறாக, Yes I Love My Profession என்று திமிறோடே சொல்வது என் வழக்கம். இனி அது முடியாதே! தொடர்வோம்.

   நீக்கு
  2. but still you are in profession of making us do our things even more perfect. நீங்க என்னைக்குமே குரு தான் அண்ணா, மிக்கநலம். தாங்களும் நலம் என நம்புகிறேன்.

   நீக்கு
 40. வழக்கம் போலவே தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழரே. இனிமேல் நிறையப் படிக்கலாம் என்றாலும், நண்பர்கள் “என்ன ஆச்சு பணிஓய்வு விழா?“என்று கேட்டுக் கொண்டிருப்பதால் அடுத்த மாதப் புத்தக வெளியீட்டு விழாவிற்கான வேலைகளை இன்று தொடங்கியிருக்கிறேன்.

   நீக்கு
 41. எந்த வேலையாக இருந்தாலும் தன்னார்வமாய் அதைச் செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு, பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப் பெருமையில் நிச்சயம் கிடைக்காது.

  சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே. தங்களைப் போலச் சுறுசுறுப்பாகவும் சிறந்த செய்திகளையும் வலையில் தரக் கூடுதலாக உழைப்பேன்.

   நீக்கு

 42. தங்கள் தொடர் பதிவுகள் மூலம்
  பதிவுலகம் இனி புதுப் பொலிவு பெறும்
  என நினைக்கிறேன்
  வாழ்த்துக்களுடன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதலில் முடிந்தவரை சிறப்பாக எழுத முயற்சி செய்வேன் அய்யா. (மதுரையில் பதிவர் திருவிழாவாமே அ்யயா? சிறப்பாகத் திட்டமிட்டுச் சிறப்பாகவே நடத்துவோம் அ்ய்யா, எனக்கும் ஏதாவது வேலை தாருங்கள்!)

   நீக்கு
 43. வணக்கம் தோழரே, வாழ்த்துக்கள் பணி நிறைவிற்கு. பகுதி நேரமாகச்செய்ததை முழு நேரமாகச்செய்யப்போகின்றேன் என்று சொல்லியிருக்கின்றீர்கள். நல்ல செய்தி.வகுப்பறை, இலக்கியம், இயக்கம் எனப் பல தளங்களில் பணியாற்றியிருக்கின்றீர்கள். அத்தனை அனுபங்களையும் முடிந்தவரை எழுத்தில் கொண்டு வர நேரம் கிடைக்கும். கொண்டு வாருங்கள். தோழியர் மல்லிகாவிற்கும், குடும்பத்திற்கும் கொஞ்சம் நேரம் அதிகம் இனி ஒதுக்கலாம். ஒதுக்குங்கள். தமிழைக் கற்றுக்கொள்வது, கற்றுத்தருவது சார்ந்து ஒரு புத்தகம் கொண்டு வாருங்கள், அனுபவத்தின் அடிப்படையில் .பேரா. மாடசாமி அவர்களின் 'எனக்குரிய இடம் எங்கே ' என்னும் புத்தகம் என்பது எனக்கு மிகப்பிடித்த புத்தகம். அவர் தனது அனுபவத்தை, முதலில் ஆசிரியராக செய்யத்தவறியதை, பின்பு செய்ததை மிக அருமையாக சொல்லியிருப்பார். உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள். ஓய்வு பெறுவோர் பலர் செய்யும் தவறு அது. நிறையச்சொல்லி விட்டேனோ, அதிகம் எனில் பொறுத்துக்கொள்ளுங்கள். மீண்டும் வாழ்த்துக்களுடன், தோழமையுடனும்
  வா. நேரு, மதுரை,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு மாடசாமி அவர்களும் இதையே நேரில் சொன்னார். அவரளவிற்கு ஞானமில்லை என்றாலும் அனுபவம் இருக்கிறது. அவர் பணியாற்றிய அதே அறிவொளிப் பணயிலும் இருந்திருக்கிறேன் என்பதால் தொடர்ந்து எழுதுவேன். நன்றி தோழரே. எனது புத்தக வேலை முடிந்ததும் தங்களைப் போலும் நண்பர்களின் அரிய புத்தகங்களை வலையில் அறிமுகம் செய்யும் வேலையைத் தொடர்வேன். நன்றி தோழரே நன்றி.

   நீக்கு
 44. அன்புள்ள ஐயா

  வணக்கம். பணிநிலை என்பதும அதில் ஓய்வு என்பதும் நாம் அணிந்துகொண்ட ஒப்பனைகளே. ஆனாலும் ஒப்பனைக்குள்ளும் உண்மையான தொண்டனாக இயங்கியவர் நீங்கள். உங்களின் பணி என்றைக்கும் ஓயாது.

  ஆசிரியப் பணியாற்றி அன்புடனே
  அனைவருக்கும் இனிய கல்வி புகட்டி
  திகட்டாத தமிழின் மேன்மையுரைத்தவரே
  திசையெங்கும் பறந்துசென்று
  சலிக்காத அயராது தமிழின் சுவையின்பம்
  தாய்போல் ஊட்டியவரே
  நிலவென ஒளிரும் முததைப் பெயராக்கிய
  முத்து நிலவரே
  உங்களின் இன்பப் பணி என்றைக்கும்
  தொடரும் அது தமிழின் ஏற்றமிகு
  செல்வங்களை எங்கும் விதைக்கும்

  மனத்தின் அடியாழத்தில் பூத்திருக்கும்
  விருப்புடன் வாழ்த்துகிறேன்
  என்றைக்கும் தமிழும் சுவையுமாய்
  வாழ்ந்திடவேண்டும்..


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய பெரிய வார்த்தைகளால் வாழ்த்திய உங்கள் அன்பிற்கு என் தலைதாழ்ந்த நன்றி அய்யா. மிக்க நன்றி தொடர்வோம்.

   நீக்கு
 45. ,dpa Njhoikf;F tho;j;Jf;fs;!!
  vspa kf;fSf;F rl;lg;gbahd gzpfisr; nra;J jUk; xU tha;g;Ng muRg;gzpahFk;. muR Copau; vd;gJ kf;fSf;fhd CopaNu jtpu gy mwptpypfs; epidg;gJ Nghy; ahUf;Fk; Kjyhspfs; (v[khdu;fs;) my;yu; Kjyhspfs; vd;w epidg;gpy; muRg; gjtpapy; ,Ug;gtu;fNs gzpepiwT ehis vz;zp vz;zp kdk; cile;J Nghtu;.
  ehk; epidg;gij KOikahf ntspapl muRg;gzp xU jilahfTk; mikAk;.
  Mdhy; gzp epiwT vd;gJ xU tpLjiy czu;itj; jUfpwJ!
  vijANk jd;dpr;irahfTk; Jzpr;rYlDk; vLj;Jf; $wyhk;.
  mt;tifapy; gzp epiw ngw;wikf;F ,dpa tho;j;Jf;fs;!

  --md;Gld;…
  f.NtoNte;jd;.

  பதிலளிநீக்கு
 46. இனிய தோழமைக்கு வாழ்த்துக்கள்!!
  எளிய மக்களுக்கு சட்டப்படியான பணிகளைச் செய்து தரும் ஒரு வாய்ப்பே அரசுப்பணியாகும். அரசு ஊழியர் என்பது மக்களுக்கான ஊழியரே தவிர பல அறிவிலிகள் நினைப்பது போல் யாருக்கும் முதலாளிகள் (எஜமானர்கள்) அல்லர் முதலாளிகள் என்ற நினைப்பில் அரசுப் பதவியில் இருப்பவர்களே பணிநிறைவு நாளை எண்ணி எண்ணி மனம் உடைந்து போவர்.
  நாம் நினைப்பதை முழுமையாக வெளியிட அரசுப்பணி ஒரு தடையாகவும் அமையும்.
  ஆனால் பணி நிறைவு என்பது ஒரு விடுதலை உணர்வைத் தருகிறது!
  எதையுமே தன்னிச்சையாகவும் துணிச்சலுடனும் எடுத்துக் கூறலாம்.
  அவ்வகையில் பணி நிறை பெற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள்!
  --அன்புடன்…
  க.வேழவேந்தன். ( தாங்கள் பாமினியில் அனுப்பியிருந்ததை நான் http://www.suratha.com/reader.htm தளத்திற்குப்போய் தமிழ் யுனிகோடு எழுத்துருவிற்கு மாற்றித் தந்திருக்கிறேன். நீங்களும் கூட அவ்வாறே செய்யலாம். என்எச்எம் ரைட்டர் பயன்படுத்தினால் இந்தச் சிக்கல் வராதே. தாங்கள் எமது இணையத் தமிழ்ப்பட்டறைக்கு வந்திருக்கலாம்... பரவாயில்லை இனியும் கற்கலாம்..)
  -- மிக்க நன்றி வேழவேந்தன். மிகத் தெளிவான கருத்து. நன்றி.

  பதிலளிநீக்கு
 47. தங்களின் தமிழாசிரியர் பணி ஓய்வால் கல்வித்துறைக்கு பெரும் இழப்பு என்றாலும், ஓரு சமூக அக்கறையுள்ள ஆசிரியனாகத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலைத் தவறிக் கெட்டு பாழ்பட்டு நிற்கும் பெரும்பான்மை பாமர மக்களின் விழிப்புணர்வுக்கான தங்களின் பணி இனிதான் விரிந்து பரவி பெருவீச்சுப் பெறும் என்பதில் என்னைப் போன்றவர்களுக்கு தங்களின் அரசுப் பணி நிறைவில் மட்டற்ற மகிழ்ச்சிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாவலரே தங்கள் அன்பிற்கு நன்றி.
   “கல்வித்துறைக்கு இழப்பா?” நல்ல நகைச்சுவை!
   என்னை கல்வித்துறை பயன்படுத்தியிருந்தால் அல்லவா, இழப்பதற்கு? என்னைப் புரிந்து கொண்டு வேலைவாங்கிய மாவட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத் அவர்களுக்குப் பிறகு, பல்லாண்டுகள் கழித்து அய்யா அருள்முருகன் வந்தார். அவர் என்னைப் பயன்படுத்துமுன் நான் அவரைப் “படுத்தி“விட்டேன் என்னும் மனக்குறையுடனே கல்வித்துறையை விட்டு விடுதலையாகிவிட்டேன். கசப்பான அனுபவம் எனக்குக் கல்வித்துறையில்தான் அதிகம். இனிப்பான கல்வி அனுபவம் பிறதுறையில்தான் கிடைத்தது.. ஏதோ என்ஆர்வத்தில் நானாகப்போய்(பெரியார் சொன்ன சில வார்த்தைகளுக்காக) பொதுவாழ்வில் சுயமரியாதை பார்க்காமல், ஓடிப்போய் நின்றபோது எல்லாம் எதையோ எதிர்பார்த்து வந்தவனைப் போல் இழிவு படுத்திய கல்வித்துறை என்னை எங்கே பயன்படுத்திக்கொண்டது? அறிவொளி இயக்கத்தில் நான் செய்த பணிகளைக் கிண்டல் செய்த தலைமை ஆசிரியப் பெருமக்களை நான் அறிவேன். ஆனாலும் என் பணிகள் தொடரும் அதுவேறு சரி விடுங்களய்யா... வேலை நிறைய உள்ளது. தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. (நமது நெடுநாள் திட்டத்தை -தமிழ்ப்பாட நூல்களின் செய்யுள் பகுதிக்கு இசையமைப்பதை- எப்போது தொடர்வது?)

   நீக்கு
  2. """"தமிழ்ப்பாட நூல்களின் செய்யுள் பகுதிக்கு இசையமைப்பதை- எப்போது தொடர்வது?""""
   கவிஜர் பொன். கருப்பையா மறந்தாலும் நீங்க விடுராப்ல இல்ல?

   நீக்கு

 48. வணக்கம்!

  ஓய்வும் ஒழிவும் உமகில்லை! ஒண்டமிழ்
  ஆய்வுக் குமைஇங் களித்துள்ளோம்! - தோய்வின்றித்
  தொண்டாற்ற காலம் கனிந்ததுவே! துாயவரே!
  கொண்டாட்டம் கொள்க குளிா்ந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெண்பாவில் பின்னூட்டம் இட்டு விரைந்தூக்கும்
   நண்பா! உமக்கென்றன் நன்றி,உங்கள் - அன்பால்
   தொடர்வோம் பணிகளைத் தொய்வின்றி நாளும்
   படர்வோம் உலகில் பரந்து.

   நீக்கு
 49. உங்கள் பதிவின் மேல்புறத்தில் தமிழ் மணப்பட்டை காட்சி அளிக்கிறதே கவனித்தீர்களா? கடந்த வாரமே இணைத்துவிட்டேன். இனிமேல் தமிழ்மணத்தில் இணைப்பதற்கு பட்டையை க்ளிக் செய்து உங்கல் கடவுச் சொல் இட்டு எளிதில் இணைத்து விடலாம். தங்கள் பதிவிற்கு விரும்புகிறவர்கள் வாக்களிப்பார்கள். அந்த எண்ணிக்கை அதில் காண முடியும்.பிடிக்காதவர்கள் எதிர்வாக்களிக்கவும் முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகாகா... மிக்க நன்றி முரளி அய்யா. டாட்.இன்.னை மாற்றி டாட்.காம் ஆக்கியவுடன் சற்றே பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிததிருப்பதாகத்தான் தோன்றுகிறது. அதற்கும் நன்றி. நேற்றைய உங்கள் பதிவின் வழி எனது வலைப்படைப்புகள் அனைத்தையும் நகலெடுத்து வைததிருக்கிறேன். மிக அரிய யோசனை அதற்கும் நன்றி அய்யா. தங்கள் நட்பு என் பெருமை!

   நீக்கு
 50. Ignore those fools.Past is past. Time lost is lost .

  utilize the present and enjoy doing whatever you like now

  Think cheerful,act cheerful, you will be cheerful. OK

  பதிலளிநீக்கு
 51. ஐயா ....நெகிழ்வாக உள்ளது.! எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க நீங்கள் காட்டும் ஆர்வம்!. அச் செயல் முடியும் வரை தொடரும் உழைப்பு!. என்னைப்போன்ற சிறியவர்களின் கருத்துக்கும் தாங்கள் அளிக்கும் மதிப்பு!லாபநட்டக் கணக்குப் பார்க்காமல் நிகழ்வின் வெற்றிக்காக முயளும் தங்களின் தனிச் சிறப்பு...! இவைகளையெல்லாம் நான் தங்களிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்..! தங்களின் பணிக்காலத்தில் இலக்கியத்திலும் இணையத்திலும் ஆர்வமுள்ள இளைஞர் குழாமை அடையாளம் கண்டு அவர்களை ஆர்வப்படுதியிருக்கிறீர்கள்..! 'ஏழை மக்களின் இன்னல் தீர என்ன செய்தோம்.?' என்ற தங்களின் ஏக்கம் தான் உங்களின் சுயம். இந்த நோக்கத்தோடு ஒவ்வொரு ஆசிரியரும் உழைக்கவேண்டும். இன்று விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் ஏங்குகிற மனநிலை அதிகமாகிவிட்டது. இது மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்.."என் பகைவர்கள் என் மீது இன்னும் கோபத்தில் இருக்கிறார்கள் "....அப்படியென்றால் நீங்கள் மிகச் சரியாக இருக்கிறீர்கள் ஐயா!.நீங்கள் பயணிப்பதற்காக, சமூக,கல்விப் பாதைகள் காத்துக்கிடக்கின்றன...தடைகள் இனி உங்களுக்கு இல்லை. வெடித்துக்கிளம்புங்கள்..!
  நீங்கள் செல்லும் வழிஎல்லாம் வெல்லும் வழி ஆகட்டும்!!!. வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி அய்யா.
   தோளோடு தோள்சேர்த்துத் தொடர்வோம் நம் பயணம்.

   நீக்கு
 52. தங்களை வாழ்த்த வயதில்லை எமக்கு ஆகவே தொடர்ந்து.... தமிழ்த்தொண்டாற்ற எமது கோரிக்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே, தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
   தொடர்ந்து இணைந்து தொடர்வோம்.

   நீக்கு
 53. ஐயா வணக்கம். ஆசிரியரைப் பார்த்துத் தான் மாணவன் செதுக்கப்படுகிறான். என் ஆசிரியரைப் பார்த்துத் தான் எனக்குத் தமிழாசிரியர் பணி மீது காதல் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மதிப்பீட்டு முகாமில் முதல் முறை உங்களைச் சந்தித்த பின்பே எனது பணியில் ஒரு முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. நீங்கள் அளித்த ஊக்கமே என்னைச் சமச்சீர்க் கல்விக் குழுவில் இடம் பெறச் செய்தது. உங்களைப் பார்த்துத் தான் நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தலைதூக்கியது. உங்களுடன் உழைத்த ஒவ்வொரு கணமும் எனக்குப் பொன்னானவை. திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த பின் எனக்குள் உங்களையும் நம் புதுகைத் தமிழாசிரியர்களையும் பிரிந்த ஆற்றாமை மீண்டும் புதுகை போகச் சொல்லி அழுங்க வைக்கிறது.
  நீங்கள் பணியில் ஓய்வு பெறவில்லை. தமிழ் ஆசிரியர் பணியில் நிறைவு பெற்றுள்ளீர்கள். இனி நீங்கள் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்குச் சாரதியாகவும் சமூகத்திற்குப் பாரதியாகவும் இருந்து நீடூழி தொண்டாற்ற வாழ்த்துகள் ஐயா. இந்தக் கருத்துப் பதிவைத் தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெகிழ வைக்கிறீர்கள் கோபி.
   ஆனாலும், இந்தப் பாத சமர்ப்பணம் எல்லாம் வேண்டாம். ஏனெனில், நான் உங்கள் நண்பன்.உங்களிடமிருந்தும் நான் நிறையக் கற்றுக்கொள்கிறேன் கோபி. எல்லாருக்கும்தான் என்னால் இயன்றதை -அவரவர்க்குத் தேவையானதை -சொல்கிறேன். எல்லாரும் எடுத்துக் கொள்வதில்லையே! நீங்கள் இன்னும் இன்னும் உயர்ந்த இடங்களுக்குச் சென்று இன்னொரு உ.வே.சா. இன்னொரு தி.வே.கோ. ஆவீர்கள் ஆக வேண்டும். விரைவில் வரவிருக்கும் பதவி உயர்வும், அடுத்தடுத்த உயர்வுகளும் உங்கள் இலக்கணத் தமிழப்பணிக்கு இடையூறில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அதுவே என் அன்பான வேண்டுகோள். அதற்கேற்ப நண்பர்களையும் பணிச் சூழலையும் அமைத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. திரு ஜோசப் விஜூ அவர்களின் http://oomaikkanavugal.blogspot.in/ “உரைச்சுத்தியில் உடைபடும் சொற்கள்“ எனும் இலக்கணக் கட்டுரையைப் படித்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். (உங்கள் தேர்வுக்குப் பின் பொறுமையாகச் செய்தால் போதும்) நன்றி. என்றும் உங்கள் நண்பன்- நா.மு.

   நீக்கு
 54. வணக்கம் ஐயா..எப்படியிருக்கிறீர்கள்? என்னது ஓய்வு பெற்றுவிட்டீர்களா? இல்லை.. இனிமேல் உங்கள் பணி அதிகமாகப் போகிறது..ஓய்வே கிடைக்கப் போவதில்லை..ஆம் சமுதாயத்திற்காக அதிக நேரம் செலவிடப்போகிறீர்கள்..உங்கள் ஓய்வுக்காலத்தை தமிழுக்காகவும் சமுதாயத்திற்காகவும் செலவிடப்போகிறீர்கள் என்பது சரியா?... என் போன்றோரின் ஆர்வமும் ஆசையும்..மிக்க மகிழ்ச்சி ஐயா..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மது. எப்படி இருக்கிறீர்கள்? உங்களின் 90டிகிரி குறும்படம் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேடையேறிய நான் பேசத்தடுமாறியதை மறக்க முடியுமா? அடுத்த வலைப்பதிவர் சந்திப்புக்காகக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கும், முதல்வருகைக்கும் நன்றி. தொடர்வோம்.

   நீக்கு
 55. முடிவு என்பது மற்றொன்றின் தொடக்கம் தான் என்பது உங்களின் பதில்களில் இருந்தே தெரிகிறது முத்து நிலவன் ஐயா.

  வணங்கி வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தி வணங்குகிறேன் மா. தங்கள் அன்பிற்கு வேறென்ன சொல்ல முடியும்?

   நீக்கு
 56. தாங்கள் பணி ஓய்வு பெறவில்லை. பணி நிறைவு பெற்றுள்ளீர்கள்.உங்களைப் போல சமுதாய உணர்வு உள்ள பெருமக்களுக்கு ஓய்வு என்பதேது? உங்களுடைய பிரியாவிடை பதிவின் மூலமாக உங்களின் மென்மையான மனதையும், உங்களின் ஆதங்கத்தையும் எங்களால் உணரமுடிகிறது. சமுதாய நலனுக்காகத் தாங்கள் தொடர்ந்து பணியாற்றி இன்னும் செயற்கரிய சாதனைகள் புரிவீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்களுடைய பேச்சை, எழுத்தைத் தொடர ஆவலோடு காத்திருக்கிறோம். உங்களின் மூலமாக பல புதியனவற்றைத் தெரிந்துகொள்ளவும், எங்களை நெறிப்படுத்திக்கொள்ளவும் அவை உதவுகின்றன. மாறுபட்ட சிந்தனை உள்ளவர்களை சமுதாயம் பார்க்கும் கண்ணோட்டம் வேறு என்பதற்குத் தங்களைப் போன்றோரே உதாரணம். தங்களைச் சந்திக்கும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. தங்களின் அன்பில்,“பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” (குறள்-978) தான் நினைவிற்கு வருகிறது. இணைந்து தொடர்வோம் அய்யா.

   நீக்கு
 57. best wishes for second innings. enjoy with ur frineds and fly. LIVE YOUR LIFE

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகங்களும் நம் நண்பர்கள்தானே? அப்படியெனில், நீ சொல்வது சரிதான் மனோ! இப்போது எங்கே யுஎஸ்ஆ? மும்பையா? அம்மா அப்பாவுக்கு என் அன்பைச் சொல்லவும்.

   நீக்கு
 58. ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று சமூகப் பணியினை தொடர்ந்து செய்யப்போகும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே, வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, வழிவிட்டு நிற்கமாட்டீரல்லவா? வாருங்கள் இணைந்து நடப்போம். நன்றி.

   நீக்கு
 59. வயதிற்கு வேண்டுமானால் ஓய்வு ..... இளமைக்கும் எண்ணத்திற்கும் இன்னும் ஓய்வு என்று சொல்லமுடியாது. தாங்கள் 100 ஆண்டுக்கும் மேல் செயலாற்றி தமிழ்ப் பணி புரியவேண்டும் என்று எல்லாம் வல்ல கிருஷ்ண பரமாத்மாவை இறைஞ்சி வேண்டி கொள்ளுகிறேன் முத்துநிலவரே !!!!
  என்றும் அன்புடன் ஜெயராமச்சந்திரன் முதல்வர்
  சாந்தி மிசான் மேனிலை பள்ளி ,பீகார் மாநிலம்
  தொடர்புக்கு
  smabariyahi@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அய்யா. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அடேயப்பா.. பீகார் மாநிலத்திலா இருக்கிறீர்கள் ? உங்கள் கல்வி மற்றும் சமூக அனுபவங்களை எழுதலாமே உங்கள் தளத்தில் விவரம் ஏதும் கிடைக்கவில்லையே தொடர்பில் இருப்போம் நன்றி

   நீக்கு
  2. தாங்கள் காட்டிய வழிதான்.கங்கை நதி தீரம் பீகார் மாநிலம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்தது ... மக்கள் மைதிலி மொழியும் போஜ்புரியும் பேசுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளம் வந்து புரட்டிபோடும் அது அடுத்த மாதம் ஆரம்பம் ஆகும் .வாழைபழம் கிடைக்கிறது மிக மெல்லிதாக ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது. லிட்சிபழம் இங்கு அதிகம் ,அது பீகாரில் மட்டுமே கிடைக்கும் அரிய பழம். மாம்பழம் கிடைக்கிறது. மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். லஞ்சம் அதிகம்.கல்வி குறைவு. படித்த மக்கள் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஏழையை விவசாயியை கவனிக்க யாரும் இல்லை. ஆங்கிலம் என்பதே இங்கு இல்லை. ஒரு விசயத்தில் இவர்களை பாராட்டலாம் ..என்னவெனில் ஹண்டி மொழியில் ஆங்கிலம் கலப்பு இல்லை .நம் தமிழர்கள் போல ஆங்கிலத்தை hindiy இல் கலப்பது இல்லை.அந்த விசயத்தில் இவர்களை பாராட்டியே ஆக வேண்டும்..ஆங்கிலம் தெரியாது என்பது வேறு ...அதனால் கலப்பு இல்லை என்பதே உண்மை..மற்றபடி 10 அடியில் இனிப்பான சுவை உள்ள நல்ல நீர் கிடைக்கிறது. எல்லாம் கங்கா மாதாவின் கடாக்ஷம் ....ஹம்கோ அன்கேரேசி நஹி ஆத்தா ஹாய்l மாணவர்கள் அங்கு உள்ளது போலவே இங்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் நல்ல உடற்க்கட்டு இல்லை. காரணம் maalnutrition தான். சத்தான உணவு இல்லை .சப்பாத்தி தான் எங்கும் ...வேறு எதையும் நான் பார்க்கவில்லை .நம் தமிழகம் உணவில் variety அதிகம். இங்கு vairiety இல்லை ...மின்சாரம் 4 மணிநேரம் முழுமையாக வந்தால் ஆச்சரியம்.சுத்தம் என்பதே எங்கும் இல்லை. நகராட்சி தெருகூட்ட பணம் ஒதுக்கவில்லை போல.தமிழகம் சொர்க்கபூமி ..சாலைவசதி ரொம்ப மோசம்.போக்குவத்து அதவிட ரொம்ப மோசம் .ரயில்பயணம் மட்டுமே பேருந்து சொற்பமே.ஆனால் pollution குறைவு ....இணையம் பயன்பாடு மிக மிக குறைவு.அரசு பள்ளிகளின் நிலை மிக மோசம். ஆங்கிலம் என்பதே அறவே இல்லை.நாமெல்லாம் எவளவோ தேவலை ..புண்ணியம் செய்தவர்கள்.இன்னும் எழுதுகிறேன்...நேரம் கிடைக்கும் போது...நான் ஹிந்தி 1978 இல் படித்தேன் அதனால் தப்பித்தேன். இதற்க்கு முன் நான் ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல்வராக பணியாற்றினேன். அங்கு சம்பளம் குறைவு. எனவே இங்கு வந்தேன். மீண்டும் இங்குஇருந்து குஜராத் மாநிலத்தில் பணியாற்ற விருப்பம். பார்ப்போம்.நண்பர் கண்ணன் கூட tnptf கமெண்ட் போட்டு இருக்காப்ல ...பார்த்தேன்.மீண்டும் எழுதுகிறேன் நண்பரே

   நீக்கு
  3. விடுபட்டது. தங்கள் புகைப்படம் மிக அருமை. தெய்வீக சிரிப்புடன் காட்சி அளிக்கிறீர்கள். திருஷ்டி பட்டுடும் போல இருக்கு.ஒருமுடி கூட நரைக்கவில்லை...மை மாயமோ
   மையா........ மையா....... பாடல் நினைவிற்கு வருகிறதோ

   நீக்கு
  4. என் பள்ளியில் ஆன் பெண் இருபாலரும் 1500 மாணவர்கள் படிக்கிறார்கள். 40 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஆங்கிலம் பேசும் ஆசிரியரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் மாணவர்கள் நன்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். எனக்கு கற்பித்தல் பணி ஏதும் இல்லை. ஒருசில சமயம் உற்சாகத்தில் நானே ஆங்கிலம் கற்பிக்க மனமுவந்து செல்வேன். பள்ளி நேரம் 2 மணியுடன் முடிந்து விடும் மாலை நேரத்தில் தனிபயிற்சிர்சி வகுப்புகள் எடுக்கலாம் நிறைய பணம் கிடைக்கும். ஆனால் என்னோவோ தெரியல அதில் எனக்கு மனம் நாட்டம் இதுவரை இல்லை .ஆனால் மனம் மாறலாம் பணத்தேவை ஏற்படும்போது. மேலும் அரசு பணியில் இருந்தபோது நான் நிறைய சிரமப்பட்டேன் பணத்தேவைக்காக . தற்போது அதைவிட கூடவே சம்பாதிக்கிறேன்.மனம் நிறைவு உள்ளது.ஓய்வூதியமும் வருகிறது.பணி சவாலாக இருந்தாலும் த்ரில்லிங் உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாய் சிந்திக்கிறேன்.ஏதேனும் இந்த மாணவர்களுக்காக செய்ய வேண்டும் என என் மனம் விழைகிறது. கொஞ்சம் சிந்திதித்து புதமையை புகுதலாம் என்று நினிக்கிறேன். ஒரு சில மாணவர்கள் தமிழ் கற்றுகொள்ள ஆசைபடுகிறார்கள்.அ தையும் விரைவில் நிறைவேற்றுவேன்.
   எனக்கென்று தனி வீடு உள்ளது கம்பெனி ஒதுக்கியது.சமையல் அறையும் உள்ளது. சமைக்கிறேன்.சாப்பிடுகிறேன் விதம் விதமாக. நல்ல முதல்வராக உள்ளேனோ இல்லையோ நல்ல சமையல் நிபுணராக ஆகிவிடுவேன் போல இருக்கிறது.தோசை .செய்கிறேன். நல்ல சாம்பார் செய்வேன்.இன்னும் வடை மட்டுமே பாக்கி. சாதம் (மல்லிகைபூ )வடிப்பேன். இன்றும் கூட நன்கு அறைதுகறைத்து விட்ட வெங்காய சாம்பார் தான். அவ்வோபோது அடையும் செய்வேன். ரசம் செய்ய கற்று கொள்ளவில்லை.அதை இந்த வாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
   கம்பெனி ஒதுக்கிய வண்டியை நான் பயன்படுத்துவது இல்லை. எனது சொந்த வாகனம் pulsar பயன்படுத்துகிறேன்.
   மேறேபாஸ் அப்பனா காடி ஹாய். இசிளியே முஜ்ஹே . முஷ்கில் நஹி ஹாய்...
   வாழ்த்துக்கள்.அன்பரே. தமிழில் பேச ஒரு ஆள் கூட இங்கு இல்லை நான் மட்டுமே இங்கு தமிழன்.அது ஒன்றே எனக்கு குறை.

   நீக்கு
  5. அடேயப்பா! எவ்வளவு அனுபவங்களோடு இருக்கிறீர்கள்? ஓரிருநாள் ஊரைவிட்டுப் போனாலே ஒடிந்துபோகும் என்னைப் போல்வார்கள் உ ங்களைப் பார்த்து அசந்து போவதில் வியப்பு என்னஉள்ளது உங்கள் தளங்களைப் பார்க்கும்போது இன்னும் வேறு பல வேலைகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது (கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுத்தலைவர் உதயகுமாரின் இளமை அனுபவங்களை நினைவு படுத்துகிறீர்கள்) உங்கள் அனுபவங்கள் கல்விக்கும் தமிழுக்கும் பயன்பட வேண்டும் நிறைய எழுதுங்கள் அய்யா. “லிட்சிபழம் இங்கு அதிகம் ,அது பீகாரில் மட்டுமே கிடைக்கும் அரிய பழம். மாம்பழம் கிடைக்கிறது. மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். லஞ்சம் அதிகம்.கல்வி குறைவு. படித்த மக்கள் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஏழையை விவசாயியை கவனிக்க யாரும் இல்லை” எனும் உங்கள் வரிகள் ராகுல்ஜியை நினைவூட்டுகின்றன அனுபவங்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். .உங்கள் தொடர்பிற்கு நன்றியும் வணக்கமும்.

   நீக்கு
 60. இன்று தான் உங்கள் பணி நிறைவு செய்தி முகநூல் மூலம் அறிந்தேன் வாழ்த்துக்கள் அய்யா.தொடரட்டும் உங்கள் இடை விடாத தமிழ் பணி,சமூகப்பணி.அன்புடன் தி.கண்ணன் TNPTF.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவரும் எங்கள் இனிய நண்பருமான உங்களுக்குச் சொல்லாமலா நான் விழா நடத்தப் போகிறேன் நீங்கள் வந்துதானே நடத்தித்தர வேண்டும்? தங்கள் அன்பில் நெகிழ்ந்தேன். தொடர்ந்து செல்வோம் தோழா!

   நீக்கு
 61. வாழ்த்துகள் ஐயா. உங்களை ஆசிரியராகப் பெற்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், நல்லதொரு சமுதாயம் படைக்க வித்திட்டு நிறைவாய் ஓய்வு பெரும் உங்களுக்கு என் வணக்கங்கள்.
  உங்கள் தமிழ்ப் பணி தமிழ் போல இனிமையாய் தொடரட்டும், கேட்டும் படித்தும் இன்புற ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் மாணவர்கள்தான் என் பெருஞ்செல்வம். யார் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளா விட்டாலும் என் மாணவர்கள் என்னை அறிவர். அதுபோதும் எனக்கு. சகோதரி உடல்நலத்தைப் பார்த்துக்கொண்டே பதிவிட்டால் போதும். உஙக்ள் பணி வேதியியல் மாற்றம் போல ஆரவாரமானதன்று, இயற்பியல் போல ஆழமானது.நிச்சயமாக அது தமிழரிடையே வேதிமாற்றங்களை நிகழ்த்தும். நம் பணி தொடரட்டும் சகோதரி

   நீக்கு
  2. உஙக்ள் பணி வேதியியல் மாற்றம் போல ஆரவாரமானதன்று, இயற்பியல் போல ஆழமானது.நிச்சயமாக அது தமிழரிடையே வேதிமாற்றங்களை நிகழ்த்தும். நம் பணி தொடரட்டும் சகோதரி
   Enna varigal vairam pola...aha...arputham thozhar.

   நீக்கு
  3. உங்கள் பெரும்பணியை மாணவர்களும் அறிவர், நாங்களும் அறிவோம் ஐயா. இயற்பியல் போல் ஆழம் என்றும் வேதிமாற்றங்களை நிகழ்த்தும் என்றும் இனிமையாய் வாழ்த்தியதற்கு உளமார்ந்த நன்றி ஐயா. Principal SMA அவர்கள் சொல்லியிருப்பது போல அருமையான வரிகள் ஐயா. உங்கள் அறிமுகம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியுடன் பதிவுகளைத் தொடருவேன். நன்றி ஐயா.

   நீக்கு
 62. கோடைகாலத்தில் கடுமையான வெயிலும் மழை காலத்தில் வெள்ளமும் பணிகாலத்தில் மைனஸ் குளிரும் இங்குவாடிக்கை....வீட்டுக்கு ஒரு மரம் போல ஒருவீட்டுக்கு 4 எருமை மாடுகள் உண்டு...பால் மிக கெட்டியாக இருக்கும் ....நல்ல சுவை ...தயிர் ரொம்ப கெட்டி. பாலாடை கட்டி இல் ஒரு இனிப்பு செய்வார்கள். நல்ல சுவை. யாதவ குல மக்கள் அதிகம்...கிருஷ்ணா பக்தியும் அதிகம்.பிராமணர்களும் அதிகம் vasikkiraargal jha endra surname அதிகம்.adepola ஷக்த்ரியர்களும் அதிகம்.மலைவாழ் பழங்குடியும் சரிபாதி .ஏழ்மை enavey மாவோயிஸ்ட் iyakkam வலுவாக உள்ளது . வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் சட்டம் olungu பூஜ்யம் .நிஜ துப்பாக்கி இங்கு அதிகம் ... தென் இந்திய மக்களை மதிக்கிறார்கள்.avargalin ஒரே வருத்தம் என்னவென்றால் நாம் இந்தி பேசாமல் manguniyaga இருபதுதான்.அவர்கள் vaatham என்னவென்றால்.. இந்தி இந்திய மொழி. அதைபடிகாமல் ஏன் நீ இந்தியன் என்று சொல்லுகிறாய் ? அந்நிய மொழி ஆங்கிலம் ...தமிழ் மொழி போல இந்தியையும் படியேன்.என்பதே அவர்கள் vaatham ....அதையே நான் திருப்பி போடmudiyavillai..... ..

  பதிலளிநீக்கு
 63. வாரம் ஒரு பதிவு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் தோழர்

  பதிலளிநீக்கு
 64. You may write on how the rural poor can benefit from education.

  Educated people (literates) do not read. Reading first step to knowledges. Various thinking processes essential for extracting knowledge from what we read hear taught.

  Internalizing. In mind essential for using when required.

  http://www.free-ebooks.net/

  பதிலளிநீக்கு
 65. தொடர்பு கொண்டமைக்கு நன்றிசகோதரி.
  உங்கள் தளம் பார்த்தேன் தமிழில் எதுவும் இல்லையா?
  தமிழில் தந்தால் நமக்குப் பெரிதும் பயன்படுமல்லவா?
  அப்படிச் செய்தால், என் நண்பர்களுக்கும் சொல்வேன்.
  அன்பு கூர்ந்து செய்துதர வேண்டுகிறேன்.
  தொழில்நுட்பமும் தமிழும் அறிந்த உங்களைப் போலும் நல்லுளத்தார் அன்றி வேறு யார் இதைச் செய்ய முடியும்?
  எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.. அன்பு கூர்நது செய்க.
  அன்புடன், நா.மு.

  பதிலளிநீக்கு
 66. இந்தப்பதிவினை இன்றுதான் என்னால் பார்த்து ரஸித்து ருசித்துப் படிக்க நேர்ந்தது. ஒவ்வொன்றையும் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  //எந்த வேலையாக இருந்தாலும் தன்னார்வமாய் அதைச் செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு, பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப் பெருமையில் நிச்சயம் கிடைக்காது. ”எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது, இஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்“ //

  வெகு அருமை. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பணி ஓய்வினால், தாங்கள் மேலும் முழுநேர இலக்கியச்சேவைகள் செய்ய ஏதுவாகும் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே !

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுலகின் முன்னோடி மற்றும் மூத்த பதிவர்க்கு வணக்கம்.
   தங்கள் வாழ்த்து எனக்கு என் பணிகளுக்கு உற்சாகமூட்டுகிறது.
   தங்கள் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம் அய்யா.

   நீக்கு
 67. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு
 68. இன்று வலைச்சரத்தில் வை.கோபாலகிருஷ்ணன் தங்களைப் பற்றி விவாதித்துள்ளார். வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைப்பூ பக்கங்களுக்கு வருக.
  http://ponnibuddha.blogspot.com/
  http://drbjambulingam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 69. அன்புடையீர்,

  வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/13.html

  பதிலளிநீக்கு