இணையத்தமிழில் இணையற்ற ஜனநாயகம் - பயிற்சியில் முதல்நாள்

இணையற்ற ஜனநாயகம் 
இணையத்தமிழில் கிடைக்கிறது
இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறையில் 
திருச்சிப் பேராசிரியர் 
முனைவர் பா.மதிவாணன் பேச்சு
இணையத்தமிழ்ப்பயிற்சிப் பட்டறையில், சர்மாவின் “எளிய தமிழ்த்தட்டச்சு முறை“ கையேடடை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருன் வழங்க, ஆசிரியரும் எழுத்தாளருமான மு.கீதா பெற்றுக்கொள்கிறார். அருகில் முனைவர் பா.மதிவாணன், முனைவர் மு.பழனியப்பன், கல்லுரி நிர்வாகிகள் ஆர்.எம்.வீ.கதிரேசன்,பி.கருப்பையா, முதல்வர் கலியபெருமாள், மற்றும் நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------

      புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த “இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறை“ வகுப்பில் சிறப்புரை யாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன், “வெளியில் கிடைக்காத பேச்சுரிமை, எழுத்துரிமை ஜனநாயகம் இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறது“ என்றார்.
      விழாத்தலைமை ஏற்ற புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன், “இரண்டுநாளில் சர்மாவின் தமிழ்த்தட்டச்சு கற்கலாம்எனும் சிறிய கையேட்டை பயிற்சியாளர்களாக வந்திருந்த ஆசிரியர்கள், மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கித் தலைமையுரையை வழங்கினார்.
முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தனது தலைமை உரையில், “வேகமாக வளர்ந்து வரும் உலகில் தகவல் தொழில்நுட்பத்தைத் தனது தாய்மொழியில் கற்றுக்கொள்வது அவசியமாகிறது. அதிலும் ஆசிரியர்கள். எழுத்தாளர் களுக்கு அது மொழி வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக் கருவியாகவும் பயன்படுகிறது. தனது வலைப்பக்கத்தில் என்ன எழுதலாம் என்பதைச் சமூக உணர்வோடு சிந்திக்கும் ஒருவர், எப்படி எழுதலாம் என்னும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. அதிலும் எளிதாகத் தமிழ்த் தட்டச்சைக் கற்றுக்கொண்டால் எவரும் தனது கவிதை,கதை, கட்டுரை போன்ற படைப்புகளை மட்டுமல்லாமல், பிறரது படைப்புகளின் மீதான தனது கருத்துகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும், இந்த பயிற்சியில் கலந்துகொண்டு  வலைப்பக்கம்  உருவாக்கியுள்ள ஆசிரியர்களையும், எழுத்தாளர்களையும் நான் பாராட்டுகிறேன்என்று பேசினார்.
சிறப்புரையாற்றிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும் பலநூறு “ஆய்வறிஞர்-பி.எச்.டி- பட்டதாரிகளை உருவாக்கிய தமிழறிஞருமான முனைவர். பா.மதிவாணன் பேசும்பொது, மேலும் குறிப்பிட்டதாவது –
“பாரதிதாசன் எழுதிய புரட்சிக்கவி காவியத்தின் மூல நூலான பில்கணீயம் பெரும்பாலும் பாலியல் நூலாகவே இருக்கிறது. பாரதிதாசன் அதைத் தமிழில் தந்த போது, தமிழர்க்குத் தேவையான புரட்சிகரமான கருத்துகளையே காவியமாக்கினார். அதுபோல,இணையத்தில் பாலியல் தொடர்பான எழுத்துகளே விரிவாக்க் கிடக்கின்றன என்பதற்காக தமிழின் உயர்ந்த ஜனநாயகத் தளமாகத் திகழும் இணையத்தின் பயனை நாம் இழந்துவிடக் கூடாது. நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, மக்களுக்குத் தேவையானதைத் தருவதற்கு எழுத்தாளர்களும் ஆசிரியர்களும் முன் வரவேண்டும். எழுத்துப் பிழை வருமே என்று அஞ்சி, எழுதாமலே இருந்துவிடக் கூடாது. எழுத்துப் பிழையை விடக் கருத்துப் பிழைதான் ஆபத்தானது. ஆபாசத்தைவிடவும் தவறான கருத்துப் பரவலதான் சமூகத்தைப் பெரிதும் பாதிக்கிறது. விளம்பரத்தின் வழியாக நம் இந்தியர்கள் அனைவரும் கருப்பாக இருப்பதற்கு வெட்கப்படுவதுபோலும் கருத்தைத் திணிப்பதும், அதை நகைச்சுவையாக்கிப் பேசுவதும்தான் மிகுந்த ஆபத்தானது. ஒரு சமூகத்தின் நம்பிக்கையையே மாற்றி பலவீனப் படுத்தும் இதுபோலும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துச் சிந்தனைகளை நல்ல எழுத்தாளர்களும், ஆசிரியர்களும்தான் நமது இளைய சமூதாயத்திற்குத் தர முடியும். அதற்கு இணையத்தமிழ்ப் பயிற்சி மிகவும் பயன்படும். பயன்படுத்தி நல்ல தமிழையும், சமூகத்தையும் உருவாக்க வேண்டும்“
விழாவில் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்விக்குழுமத்தின் தலைவர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன், தாளாளர் பி.கருப்பையா, கல்லூரி முதல்வர் கலியபெருமாள், ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பயிற்சி வல்லுநராக வந்திருந்த சிவகங்கைப் பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன், சர்மா சொல்யூசன்ஸ் வாசுதேவன் ஆகியோர் பயிற்சியளித்தனர். சுமார் ஐம்பது எழுத்தாளர்களும் ஆசிரியர்களும் கல்ந்துகொண்ட பயிற்சிக்கு, கல்லூரியைச் சேர்ந்த கற்பூர சுந்தர பாண்டியன் தலைமையில் வல்லுநர்கள் உதவி செய்தனர். தமிழில் மின்னஞ்சல் தருவது எப்படி? வலைப்பக்கம் உருவாக்கி- தமது கதை, கவிதை, கட்டுரைகளைப் படங்களோடு இணையத்தில் எற்றுவது எப்படி, இரண்டே நாளில் தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்வது எப்படி? மற்றும் புகழ் பெற்ற இணைய இதழ்கள், வலைப்பூக்கள், கணினித் தமிழ் நூலகங்களைப் பயன்படுத்தித் தரவுகளைப் பெறுவது எப்படி உள்ளிட்ட பல சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். பயிற்சிமுகாமிலேயே இருபது எழுத்தாளர்கள் வலைப்க்கம் உருவாக்கினர். மேலும் இருபது எழுத்தாளர்-ஆசிரியர்கள் தமது வலைப்பக்கத்தை மேன்மேலும் மெருகூட்டக் கற்றுக்கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை “வளரும்கவிதை“எனும் வலைப்பக்கம் வைத்து எழுதிவரும் கவிஞர் நா.முத்துநிலவன் தலைமையில், எழுத்தாளர்களும்-ஆசிரியர்களுமான கு.ம.திருப்பதி,ச.கஸ்தூரிரங்கன்,இரா.ஜெயலட்சுமி,சி.குருநாதசுந்தரம்,அ.பாண்டியன்,ராசி.பன்னீர்செல்வன், ஸ்டாலின்சரவணன், உள்ளிட்டோர் செய்திருந்தனர். தொடக்க விழாவில் மகா.சுந்தர் வரவேற்க, மு.கீதா நன்றியுரையாற்றினார்.
இப்பயிற்சியில் வந்து கலந்துகொண்ட புதுக்கோடடை நண்பர்களோடு, திருச்சியிலிருந்து வந்திருந்த தமிழறிஞர் ஜோசப் விஜூ, வலைப்பதிவர் தி.தமிழ்இளங்கோ தஞ்சை வலைப்பதிவர்கள் கரந்தை ஜெயக்குமார், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களை உள்ளிட்ட நண்பர்கள் அன்புகலந்த நட்பைப் பகிர்ந்து கொண்டது நெகிழ்வான தருணம்.
-----------------------------------------------------------
17,18-05-2014 அரங்கில் கற்றுக்கொண்டதை உடனடியாக நடைமுறைப்படுத்தி வலைப்பக்கம் தொடங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முனைவர்.பா.மதிவாணன்-http://inithuinithu.blogspot.in,தமிழறிஞர்.ஜோசப்விஜூ http://oomaikkanavugal.blogspot.in, (இருவரும் திருச்சி), இதனைத் தனது வலைப்பக்கங்களில் மகிழ்வோடு எழுதி, தனது புதிய இணையக் கல்வியை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டிருக்கும் நண்பர்கள் அ.பாண்டியன்http://pandianpandi.blogspot.com/ மு.கீதாhttp://velunatchiyar.blogspot.in மற்றும்தான்உண்மையாகஉணர்ந்ததை உரைத்தமதுவுக்கும்  http://www.malartharu.org/  திருச்சியிலிருந்து இரண்டுநாளும் வந்து கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துத் தள்ளியதோடு, அவற்றை அழகாகத் தொகுத்தும் பதிவிட்டஅய்யா தமிழ்இளங்கோhttp://tthamizhelango.blogspot.com/2014/05/blogspost_19.html அவர்களுக்கும் வணக்கம் கலந்த நன்றி. இந்தப் பட்டியல் இன்னும் தொடரும், தொடரட்டும்.
-----------------------------------------------------------   
(செய்தி வெளியிட்ட நாளிதழ்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றிகள் பல -தினமலர்-18.05.2014, தினமணி,தினகரன்,தி.இந்துதமிழ்-19-05-2014,(திருச்சிப்பதிப்புகள்), செய்தியாளர்கள் - திரு.திருநாவுக்கரசு, திரு.மோகன்ராம், திரு.கண்ணன், திரு.சுரேஷ் ஆகியோர்க்கும்,புகைப்படம் எடுத்த- டீலக்ஸ் ஞானசேகர் அவர்களுக்கும் நன்றி)
---------------------------------------------------------- 

18 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ள பயிற்சி நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா வணக்கம்! தங்கள் முயற்ச்சியால் பயிற்சி பெற்றவர்களுள்நானும்
    ஒருத்தி என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி கற்றுக்கொள்ள ஏராளம் இருந்தது (அறுசுவைவிருந்து காட்டிஇதில்ருசிமட்டும் பாருங்கள் என்றதால் கொஞ்சம் ஏக்கமாக இருந்து) பயனுள்ளதாக இருந்தது
    அனைவரையும் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்ததோடு நண்பர்களும்
    கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நானும் இதில் இணைந்திருப்பதில்மட்டற்றமகிழ்ச்சி மிக்கநன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    தங்களின் தமிழ்ப்பணியை கண்டு என்மனம் உவகைகொண்டது... பயிற்சிப்பட்டறை நடத்திய தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் தமிழர்கள் வாழட்டும் தமிழ்மொழி சிறக்கட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்திய அய்யா கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு நன்றி! இதுபோன்ற பயிற்சிப் பட்டறை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா. புதுக்கோட்டை நகரில் சரித்திரம் படைக்கும் புதுமைகள் அரங்கேறி வருகின்றன. பயனுள்ள - அதிலும் மொழி ஆசிரியர்களுக்கும் இன்றைய தலைமுறைக்கும் அவசியமான பயிற்சி. பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா
    தங்களின் சீாிய முயற்சியாலும் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலோடும் நண்பர்களின் ஒத்துழைப்போடும் மாநிலம் தழுவிய இப்பயிற்சி பலருக்கும் பயன்பட்டு இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி ஐயா. குறிப்பாக விக்கிபீடியாவில் எழுத கற்றுக்கொண்டேன். இந்நிகழ்ச்சி மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணம். பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  7. தேவையான முயற்சி.
    இந்தப் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற துணைநின்ற அன்புள்ளங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்" என்ற சொல்லுக்கேற்ப தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு எளிய வகையிலும் புரியும் வகையிலும் சொல் முறையில் மட்டும் இல்லாமல் செயல்முறையிலும் நடத்தி காட்டி அசத்தி விட்டீர்கள். பயனுள்ள வகையில் நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் பணி...

    பதிலளிநீக்கு
  9. இன்று இணையம் என்பது நம்முடன்இணக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்கிணங்க ஆசிரியா்களும் அதில் இணைந்து செயல்படவேண்டுமென்று தாங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் அய்யா. நானும் அதில் பங்கு கொண்டமைக்குப் பெரிமிதம் அடைகிறேன். இது போன்ற பயிற்சிகளை இன்னும் எதிர்ப்பார்க்கிறேன் அய்யா....

    பதிலளிநீக்கு
  10. அய்யா1 நானும் எனது பங்கிற்கு புதுக்கோட்டை இணையப் பயிற்சி குறித்து ஒரு பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  11. இணையத்தில் தங்கள் இணையற்ற செயல்கள் என்னை ஆச்சரியப் பட வைக்கிறது நல்லெண்ணங்களை வளர்த்துக்கொண்டு அவற்றை செயலிலும் ஆற்றிக் கொண்டு வருவது என்பது எல்லோருக்கும் சாத்தியமாகாது. அதையே தங்கள் வாழ்க்கையாகவும் கொண்டு வாழ்ந்து வருவது தலை வணங்கவே செய்கிறது.அநேகருக்கு தங்கள் சேவை அவசியமே.தாங்கள் தமிழுக்கு ஆற்றும் தொண்டும் அளப்பரியது. ஆண்டவன் அருளோடு மேன் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்....! தங்களின் நட்பு என் பாக்கியம்.!

    பதிலளிநீக்கு
  12. நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
    இந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்
    உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.
    நிகழ்வை நடத்தியோர்
    நிகழ்வின் பங்காளிகள் என
    எல்லோருக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  13. தங்களின் பெருமுயற்சி பாராட்டத்தக்கது. துறை தொடர்பானவர்களை ஊக்குவிக்கவும், நண்பர்களை ஒன்றுசேர்க்கவும், அண்மைக்கால அறிவியல் சாதனங்களை நன்முறையில் தெரிந்துகொண்டு பயன்படுத்தவும் இப்பயிற்சி உதவும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டதன் மூலமாக பல புதிய நுட்பங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. தங்களுக்கும், இப்பணி சிறக்க பல்லாற்றானும் உதவிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்களின் அடுத்த அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. இந்தப் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற துணைநின்ற அன்புள்ளங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    “இரண்டுநாளில் சர்மாவின் தமிழ்த்தட்டச்சு கற்கலாம்” எனும் சிறிய கையேடு இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள முடியாத என் போன்றொருக்கு கிடைக்க வழி இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமையான முயற்சி..நடைமுறைபடுத்திய உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு முயற்சி...நீங்கள் எடுக்கும் ஒவ்வொருமுயற்சியும் பயனடைய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு