இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - 2014 - புதுக்கோட்டைவணக்கம். புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ப் பயிற்சி முகாம் ஒன்றைக் கடந்த அக்டோபர் 05,06, 2013  தேதிகளில்   நடத்தினோம். அதில் பெண் ஆசிரியர் 17பேர் உட்பட மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர். 
பயிலரங்கில் உந்தப்பெற்ற பலர், வலைப்பக்கம் மற்றும் முகநூல் தொடங்கி எழுதியும் வருகின்றனர். மேலும் இணையப்  பயிற்சிபெற ஆர்வமுடன் இருக்கும் பலரும் அதுபற்றிக் கேட்டுக் கொண்டே இருப்பதால், அடுத்த பயிற்சிப் பட்டறை இதோ...

பயிற்சியைத் தலைமை தாங்கித் தொடங்கி வைக்க, 
நமது மதிப்பிற்குரிய  தமிழறிஞர் 
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் 
இசைந்திருக்கிறார்கள்.
(புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்)

நாள்  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி --- மாலை5மணி)       
இடம்-புதுக்கோட்டைகைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி.   
           

சிறப்புக் குறிப்புகள் -
(1)பங்கேற்பாளர் அனைவரும் 
15-05-14 தேதிக்குள் 
பதிவுசெய்தல் வேண்டும் 
இயன்றவரை 
பின்வரும்  விவரங்கள் 
விடுபடாதவாறு 
மின்னஞ்சலிலேயே அனுப்பவேண்டுகிறோம்.   
       
     
1.பெயர் / பாலினம் /  வயது / கல்வித்தகுதி / பணி
2.அஞ்சல்முகவரி /  அலைபேசி எண் -
3.மின்னஞ்சல்முகவரி -     
4.வலைப்பக்கம் இருந்தால் குறிப்பிடவும் 
5.தமிழ்த்தட்டச்சு அறிந்தவரா? எந்த முறையிலான தட்டச்சு?
6.ஏற்கெனவே கணினிப் பயிற்சி பெற்றவரா? முற்றிலும் புதியவரா
7.இணையத் தொடர்புடன் மடிக்கணினி உள்ளதா.
8.வீட்டில் சொந்தமாக மேசைக்கணினி உள்ளதா?
9.முதல்நாள் இரவுத்தங்க ஏற்பாடு செய்ய வேண்டுமா? எனும் விவரம்.
10.கலை-இலக்கியம் (அ) பிறதுறை ஈடுபாடு பற்றிய சுருக்கம்

(2)பங்கேற்பாளருக்குக் கட்டணம் ஏதுமில்லை. அவரவர் சொந்தப் பொறுப்பில் வந்து போகவேண்டும். பயிற்சி பெறுவோர்க்கு TA, DA, OD  தர இயலாது.               (வெளியூரிலிருந்து வருவோர், புதுக்கோட்டை நண்பர்களின் வீடுகளில் 17-05-2014 இரவுமட்டும்   தங்கிக்கொள்ளக்  கேட்டுக்கொள்ளப்படுவர்)

--------------- அழைப்பிதழ் ------------------- 

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை
 புதுக்கோட்டை- அழைப்பிதழ்
நாள்  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி --- மாலை5மணி)
இடம்-புதுக்கோட்டைகைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி.
தலைமை 
       முனைவர் நா.அருள்முருகன்                        
முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
கல்லூரித்தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன்,  
       தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமி, திரு பி.கருப்பையா                   முதல்வர் எஸ்.கலியபெருமாள்
 ------------------------------------------------   
    பயிற்சியளிக்கும் வல்லுநர்கள்
அறிஞர் பொ.வேல்சாமி, நாமக்கல்
முனைவர் பா.மதிவாணன், திருச்சி
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி - 
http://muelangovan.blogspot.in/
முனைவர் மு.பழனியப்பன், சிவகங்கை - 
http://manidal.blogspot.in/
திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
தி.ந.முரளிதரன், சென்னை
http://tnmurali.blogspot.com/
பிரின்சுஎன்னாரெசுப்பெரியார்-விக்கி-தமிழ் 
http://princenrsama.blogspot.in/  
இரண்டேநாளில்தமிழ்த்தட்டச்சுசர்மா,புதுக்கோட்டை  
sarmapress123@gmail.com
பட்டறையில் என்ன செய்யப் போகிறோம்?
மின்னஞ்சல் தொடங்க / கடவுச்சொல் மாற்றல்
வலைப்பக்கம், முகநூல், ட்விட்டர் தொடங்கும்-தொடரும் வழிமுறைகள், 
விக்கிப்பீடியாவில் தமிழில் பதிவேற்ற-திருத்தக் கற்றல்,
தமிழ்த்தட்டச்சை ஓரிரு நாளில் கற்றுக் கொள்ளும் எளியமுறைகள், 
வலைப்பக்கத்தைத் திரட்டிகளில் இணைப்பது, அதிக வாசகரை ஈர்ப்பது, 
புகழ்பெற்ற இணைய இதழ்கள்,வலைப்பக்கங்கள் அறிமுகம், 
வலையுலகில் எதைச் செய்யலாம் செய்யக் கூடாது?
தமிழ்வளர, நல்ல கலை-இலக்கியம் வளர, கணினித் தமிழ்வழி முன்னேற இணையத்தில் எவற்றை எழுதலாம்?  நேரடிவிளக்கம் ஐயம் களைதல்  
-அமைப்புக்குழு 
  நா.முத்துநிலவன், கு.ம.திருப்பதி, இரா.ஜெயலட்சுமி, ச.கஸ்தூரிரெங்கன், 
சி.குருநாதசுந்தரம், மகா.சுந்தர்,  முனைவர் சு.துரைக்குமரன்,  ராசி.பன்னீர்செல்வன்  
மு.கீதா, செ.சுவாதி,  ஸ்டாலின் சரவணன், அ.பாண்டியன்
தொடர்பிற்கு 
 மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com     அலைபேசி- 94431 93293
--------------------------------------------- 
ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
------------------------------- 

38 கருத்துகள்:

 1. சமூகத் தளங்களில் பகிர்ந்து விட்டேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. ஆகா... இதுதாங்க DDங்கறது!
  வருவதற்கு முன்பே பயிற்சியை ஆரம்பித்து விட்டீர்களே? (இந்த சமூக வளைத்தளங்களில் பகிர்வது எப்படி என்பதை எனக்கு மட்டுமல்லாமல், நம் நண்பர்கள் அனைவர்க்கும் கற்றுத்தர முன்னதாகவே வருகைதரக் கேட்டுக்கொள்கிறேன்)
  நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஐயா
  பயிற்சிக்கான அறிவிப்பு நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இரண்டு நாள் பயிற்சியும் சிறப்பாக நடைபெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்த தங்களுக்கும் இசைவு தந்த முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரியும் நம் வலை நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா. இப்பயிற்சி புதிய வலைப்பக்கங்கள் உருவாகவும், தமிழில் படைப்புகள் வளரவும் உறுதுணையாக இருக்கப் போவதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா. நேரில் சந்திப்போம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணையத்தால் இணைவோம்.
   இதயத்தால் தொடர்வோம். நன்றி பாண்டியன்..

   நீக்கு
 4. தங்களது அளப்பரிய பணிக்கு தொடரட்டும். இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இணைய நண்பர்கள் அனைவரும் இணைய வரவேண்டும். தகவல்களை அறியச் செய்ய வேண்டும். அவரவரும் வலையிலும், முகநூல், ட்விட்டரில் பகிரவேண்டும். நன்றி நண்பரே.

   நீக்கு
 5. இப்போதே ஆர்வமாக உள்ளது. பகிர்கிறேன் நானும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கவிஞரே.. தனி மின்னஞ்சலிலும், அலைபேசிக் குறுஞ்செய்திகளிலும் தெரிவிக்க வேண்டும். முகவரியிருந்தால் அஞ்சலிலும் அழைப்பிதழ் அனுப்பலாம்...
   காலமோ சிறிது... கடமையோ பெரிது...தொடர்வோம் இனிது.

   நீக்கு
 6. நல்ல முயற்சி .... இன்னும் கொஞ்ச நாளில் எங்க ஊர்க்காரங்க யாரேனும் வலைப்பதிவு எழுத ஆரம்பித்துவிடுவார்கள் .

  ஆமா கதிரேசன் அண்ணேன் கவிஞரா ? பங்காளியாவே பார்த்து பேசி இருக்கேன் ....

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் நண்பரே, ஏன் உங்கள் ஊர் பற்றி இப்படி ஒரு கருத்து? ஊரைச் சொலலுங்கள்.. கொஞ்சப் பேரையென்ன? நிறைய கவிஞர்களை வலைப்பக்கம் இழுத்துவிடுவோம். கதிரேசன் அய்யா பேச்சைக் கேட்டதிலலையா? எங்காவது ரோட்டரி, லயன்ஸ் கூட்டத்தில் கவிதைகள் கேட்டால் அது அனேகமாக கதிரேசன் அவர்களின் குரலாகத்தான் இருக்கும் என்பது புதுக்கோட்டைக்கே தெரியுமே? சந்தேகமிருந்தால் 17ஆம் தேதி வந்து பாருங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. தங்களது பணி இனிதே சிறப்புற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா இந்த மாதம் நான் அரசுப்பணியிலிருந்து (11-05-2014முதல்) ஓய்வு பெறுகிறேன்... இனிமேல் முழுமூச்சாக இந்தப் பணிகளைச் செய்யமுடியும் என்று நம்புகிறேன்.. செய்வோம். நன்றி.

   நீக்கு
 9. அய்யா, தங்களது அளப்பரிய பணிக்கு தொடரட்டும்.

  இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்..!

  பிரியாமதி,
  http://www.tnguru.com/

  பதிலளிநீக்கு
 10. தங்களின் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா
  கூகுள் ப்ளஸ் மற்றும் முக நூலில் பகிர்ந்துள்ளேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா, மிக்க நன்றி. அழைப்பிதழும் வரும். வாய்ப்பிருந்தால் வருகை தந்தால், மிகவும் மகிழ்வோம்.

   நீக்கு
 11. பயனுள்ள முயற்சி நண்பரே. இந்த செய்தியை நன்றியுடன், என் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.
  பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே, மிக்க நன்றி. (ஓரிரு நாளில் கற்கும்படி, ஒன்பதே பொத்தான்களில் தமிழ்த்தட்டச்சு முறையை இந்த வகுப்பில் சொல்லித்தரப் போகிறோம்)

   நீக்கு
  2. தமிழில் கணினி என்று தேடும்போது, உங்கள் வலைப்பக்கப் படமும் சிக்கியது நண்பர் குணா நன்றி.

   நீக்கு
 12. ஆர்வத்துடன் தக்க முன்னேற்பாடுகள் செய்வது அறிந்து மகிழ்ந்தேன்.ஐயா
  பட்டறை அழைப்பை என் முகநூல் பக்கத்திலும் மகிர்ந்திருக்கிறேன்.
  முடிந்தவரை இரண்டு நாட்களுமே கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா, மிகவும் நன்றி. தாங்களும், திண்டுக்கல் தனபாலன் அய்யாவும் இரண்டுநாளும் இருந்து, செய்முறை விளக்கங்களோடு நேரடி ஐயம்களையும் பணியையும் செய்துதரவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.-கைகூப்பிய நன்றியுடன்.

   நீக்கு

 13. தங்கள் முயற்சிகளுக்குப் பாராட்டும் வாழ்த்தும் கூறுவதோடு, எனது தளத்திலும் இதனைப் பகிர்ந்துள்ளேன்.


  புதுக்கோட்டையில் இருந்து உலகெங்கும் வரை…
  http://yarlpavanan.wordpress.com/2014/05/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன் அய்யா. மிகவும் நன்றி. தங்களைப்போன்றோரின் அன்பினால் இன்னும் இ்ன்னும் கூடுதலாக உழைக்க உற்சாகம் பிறக்கிறது. உழைப்போம். நாளைமுதல் இன்னும் கூடுதல் உரிமையோடும் கடமையோடும்... நன்றி.

   நீக்கு
 14. தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. நாங்களும் துணை நிற்போம். வாழ்த்துக்கள்.அழைப்பை முகநூல் பக்கத்தில் முன்பே பதிந்துவிட்டேன். அரங்கில் கலந்துகொள்கிறேன். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. தங்களையும கரந்தையாரையும் எதிர்பார்க்கிறேன். அழைப்பிதழை வீட்டு முகவரிக்கும் அனுப்பியிருக்கிறேன். 12ஆம் தேதி தஞ்சை வரும்போதும் சந்திப்பேன் அய்யா. வணக்கம்.

   நீக்கு
  2. அழைப்பிதழ் பெற்றேன். நேற்று சந்திக்க இயலவில்லை. புதுக்கோட்டையில் சந்திப்போம். நன்றி.

   நீக்கு
  3. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் அய்யா. மற்றவை நேரில். வணக்கம்.

   நீக்கு
 15. வலைத்தளங்களில் முறையான வழிகாட்டுநர்கள் இல்லாமல் தவித்துப்போயிருக்கும் பல நல்ல எழுத்தாளர்களும் இப்பயிற்சிப் பட்டறையால் பயனடைவார்கள் என்பது தெள்ளத்தெளிவு. இம்முயற்சிக்குப் பின்னாலிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அன்பான பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமது நண்பர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அய்யா ஏற்கெனவே அவரது வலையில் சிலபல முக்கிய வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறார். எனினும் நேர்முகப் பயிற்சி போல வராதில்லையா? அதனால்தான் அவரை உள்ளிட்ட “வலைவல்ல“ நண்பர்களை அழைத்திருக்கிறோம் சகோதரி. நனறி.நான்தான் முன்னால் தெரிகிறேன். ஆனால், பின்னாலிருந்து தொடர்ந்து பணியாற்றும் எமது நண்பர்களால் இது வெற்றிகரமாக நடக்கும் என்று உறுதியாக நண்புகிறேன்!(!)

   நீக்கு
 16. நானிலம் போற்றும் நம் தாய்த்தமிழை நல்லுலகோர் போற்றிட இணையம் வாயிலாக எல்லோருக்கும் எடுத்துரைத்திட இந்த பயிற்சி அவசியம் பயன்படும். பயிற்சி வகுப்புகள் சிறப்புடன் நிகழ்ந்தேற வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. யாம்பெற்ற இன்பமோ துன்பமோ பெறுக இவ்வையம் என்பதே எமது கடன்! நன்றி நண்பரே

   நீக்கு
 17. நற்பணி ! இது! நன்கு நடைபெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இன்னும் விரிவானதொரு நிகழ்வுக்குத் தாங்கள் வந்து நேரில் வழிகாட்ட வேண்டும் அய்யா. விரைவில் அது கைகூடும் என்று நம்புகிறேன்.வணக்கம்.

   நீக்கு
 18. கவிஞரின் அழைப்பிதழுக்கு நன்றி! தாங்கள் சொன்னபடி அழைப்பிதழை எனது பதிவினில் இணைத்துள்ளேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. அவசியம் வாருங்கள். சேர்ந்து கற்போம். இணைந்து வளர்வோம். வணக்கம்.

   நீக்கு
 19. வாழ்க ஐயா ... இதுபோன்று மதுரையில் சகாயம் ஐயா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் ’தொடுவானம்’ என்ற அமைப்பின் கீழ் 50 கிராமங்களில் இருந்து கற்க விரும்பும் உள்ளங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம் ... அதி நானும் ஒரு அணில் :) . எல்லாம் சிறக்க வாழ்த்துகள் .. நானும் கலந்துகொள்ள முயல்கிறேன்

  பதிலளிநீக்கு
 20. அன்பின் முத்து நிலவன் - நல்ல தொரு செயல் - மேன்மேலும் பயிற்சி சிறப்புடன் நடைபெற - மேன்மேலும் பலர் பயன் பெற - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு