இவர்கள் அ-மனிதர்கள்!

இவர்கள் அ-மனிதர்கள்!
சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ? என்று பாடினார் நம் கண்ணதாசன். பின்வருவன போலும் மனிதகுலப் பேரழிவுகள் அந்த சிந்தனையைத்தான் நமக்குள் எழுப்புகின்றன..
அர்த்தமற்றவர்களின் கையிலிருக்கும் ஆயுதமே இவர்களை அழித்துவிட மாட்டாயா?” என்று கதறத் தோன்றுகிறது!

ஒன்றுக்கொன்று கால-தூர-நோக்கத்தால் வேறுபட்ட இந்த நிகழ்ச்சிகளுக்குள் ஓர் ஒற்றுமை உண்டு!, அது-
மனிதத் தன்மையை அழிக்கும் நோக்கம்! எனவே இவர்களை மனிதர்கள் எனலாகாது, “அ-மனிதர்கள்“ என்பதே சரி.

1990இல் நான் ஒரு கவிதை எழுதினேன்-
இலங்கையிலே செத்ததுவும் மனிதர், அஸ்ஸாம்
                        எரிந்ததிலே செத்ததுவும் மனிதர், பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதர், டெல்லிக்
                        கலவரத்தில் செத்ததுவும் மனிதர், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதர், பாபர்
                        கோவிலிலே செத்ததுவும் மனிதர், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
                        மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!
காரணம் என்னவோ அச்சுறுத்தல், ஆதிக்க வெறி.. ஆனால் அதில் இறந்ததெல்லாம் அந்தந்த நிகழ்வுகளுக்கு நேரடித் தொடர்பில்லாத அப்பாவி மனிதர்களும் தானே?

அப்படியெனில், இதைச் செய்தவர்களை எப்படி மனித இனத்தில் சேர்க்க முடியும்? எனவேதான் இவர்களை மனித இனத்தில் சேராத “அ-மனிதர்கள்“ என்போம்! இதை நம் வள்ளுவப் பாட்டன், “மக்களே போல்வர் கயவர்“ என்பாரே?
இதையே நம் ஊர்க்கிழவியின் சொலவடையில் சொன்னால்-
நக்குற நாய்க்கு செக்குஎன்ன? சிவலிங்கம் என்ன?” ஆமாம்! எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் இடத்தையெல்லாம் நக்குகிற நாய்க்கு வித்தியாசம் தெரியுமா? அ-மனிதர்க்கும் நாய்க்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது, நாய் உயர்ந்தது என்பதே! வேறென்ன சொல்ல?   இதோ அந்தச் சில மறக்கவியலா நிகழ்வுகள்-
------------------- (மேலுள்ள படம்-1)
(1) இதுபோலும் அ-மனிதர் கும்பல் ஒன்று, வடக்கு இராக்கின் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பழம்பெருமை வாய்ந்த அரிய சிலைகள் பலவற்றை உடைத்து நொறுக்குவதைக் காட்டுகின்ற ஒளி-ஒலிக் காட்சியை இஸ்லாமிய அரசு(ISIS) இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துவுக்கு முன் 9ஆம் நூற்றாண்டுக் காலத்தின் அஸ்ஸிரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றது. பொய்ச் சிலைகள் என்று அவற்றை விவரிக்கும் படங்களுடன்,  முகமது நபி அவற்றை அழிக்க உத்தரவிட்டிருந்தார் என்ற வாசகங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 
ஆதாரங்களுக்குப் பார்க்க -http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150226_mosul
-------------------------------------------
 (2) இந்தியாவில் 1992-டிசம்பர்-6 அன்று சுமார் 600ஆண்டுப் பழமை வாய்ந்த, பாபர் மசூதியை இடித்து நொறுக்கியது இந்து அடிப்படை வாத கும்பல்.  (படம்-2)
பாபர் அந்த மசூதியைக் கட்டுவதற்குப் பலயுகங்களின் முன், அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார்! என்று, (“எங்கள்ட்ட பர்த் சர்ட்டிஃபிகேட்கூட இருக்குன்னு தான் சொல்லலையே தவிர) அத்தனை வரலாற்றுத் திரிபுகளையும் செய்தது ஒரு கும்பல்! இதை மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள இந்தியர் அனைவரும் ஒரு கருப்பு தினமாக நினைக்கிறோம்! இதையே எங்கள் ஊர்க் கவிஞர் ரமா.ராமநாதன்,
ஆறுகளில்
மிகவும் அழுக்கானது
அந்த டிசம்பர் ஆறுஎன்று சரியாகவே சொன்னார்!
இப்போதும் அந்தக் கதை வேறுபல ஊர்களில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது
ஆதாரங்களுக்குப் பார்க்க -
---------------------------------------
(3) உலகப் போலீஸ்காரனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு அப்பாவி நாடுகளையெல்லாம் அடகுபிடித்துக்கொண்டும் (பிந்திய ஈராக் போலும்) ஆற்றா நாடுகளை அடித்துப் பிடுங்கிக் கொண்டும் வந்த அமெரிக்காவுக்கு, அதுவரை சிம்ம சொப்பனமாக இருந்த USSR (சோவியத்து ஒன்றியம்) எனும் நாடு, கோர்பச்சேவ் என்னும் கிறுக்கனின் ஆட்சியில் அழிவுத் திசைக்குத் திரும்பியது. சமத்துவ வாழ்வைச் சாதித்துக் காட்டி உலகின் உண்மையான முதல் புரட்சித்தலைவராக வாழ்ந்த விலாடிமீர் இலியீச் உலியனோவ் லெனின் (எ) மாமனிதர் லெனின் சிலையை உடைத்து நொறுக்கியது ஒரு கும்பல்! (படம்-3)
http://en.wikipedia.org/wiki/Fall_of_the_monument_to_Lenin_in_Kiev
-------------------------------------------
(4) யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை  இனப் பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31, நள்ளிரவுக்குப் பின்னர்  சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒருமிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது (படம்-4)
  இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன்  தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய  நூலகமாகத் திகழ்ந்தது .  இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர்  காமினி திசாநாயக்கா  உட்பட வேறு பல அப்போதைய சிங்கள  அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்
- தகவல் - விக்கிப்பீடியா. 
மேலும் பார்க்க - http://ta.wikipedia.org/s/dx5
-------------------------------------- 
'இடிப்பது' எளிது! 
'கட்டுவது' அரிதினும் அரிது!-
பேருந்துப் பயணமாயினும்,
வாழ்க்கைப் பயணமாயினும்!
“செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கரிய செய்கலா தார்“  (குறள்-26)

கனவு நிறைவேறும் காலமிது!

சென்னையில் 38ஆண்டுகளாக...மற்றும் ஈரோடு,மதுரை, திருப்பூர், பெரம்பலூர், காரைக்குடி, இராமநாதபுரம், நெல்லை, நெய்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை என அனேகமாகத் தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் எல்லாம் பல்லாண்டுகளாக ஆண்டுதோறும் நடந்து வருகின்றன புத்தகத் திருவிழாக்கள்! மக்கள் கோவில் திருவிழாவுக்கு வருவதுபோல வந்து குவிகிறார்கள்.... 

கோவில் -
கண்ணை மூடச்சொல்லும்!
புத்தகம் -
கண்ணைத் திறக்கச் சொல்லும்!

பல்லாயிரக்கணக்கில் புத்தக விற்பனை நடக்கிறது.
தமிழ்நாடு நல்வழியில் நடைபோட 
இதுபோலும் புத்தக விழாக்கள் வழிவகுக்கும்!

இந்தத் தலைமுறை இளைஞர்க்குப் படிப்பதில் கவனமில்லை, பொழுதுபோக்குக்குத் தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த கதை மலையேறுவதை இவை பறைசாற்றி வருகின்றன

இந்த நம்பிக்கையை அங்கெல்லாம் திரளும் இளைஞர் கூட்டம் எனக்கு உணர்த்தியது... ஆனாலும் என் குற்றவுணர்வு தீரவில்லை...

இவற்றில் பலவற்றில் நான் போய்ப் பேசியுமிருக்கிறேன். அப்படிப் போகும்போதெல்லாம்... எனக்குள் அந்தக் குற்ற உணர்ச்சி மேலெழும்!

“கூரையேறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானாம்!எனும் பழமொழியும் நினைவுக்கு வந்து அலைக்கழிக்கும்..குற்றவுணர்வு மீதூறும்! இந்த உணர்வே அனேகமாகப் புதுக்கோட்டையின் இலக்கிய வாதிகள் அனைவர்க்குமே இருந்ததை அவர்களுடன் பேசியபோதெல்லாம் உணர்ந்தேன். நமது முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் உட்பட...

குறிப்பாக இனிய நண்பரும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மனிதநேயக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க இளைய கவிஞருமான தங்கம் மூர்த்தியுடன் அண்மையில் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் இந்தப் பேச்சு வராமல் இருந்ததில்லை.
எனவே.. அந்த
“அனைவரின் கனவு“
நிறைவேற வழி கண்டோம்.. இதோ..
“புதுக்கோட்டை – புத்தகத் திருவிழா“
ஊர்கூடித் தேர்இழுப்போம் வாருங்கள்!
--------- o o o o ----------
இது அறிவுத் தேர்..புத்தகத் திருவிழாத் தேர்!

இதைப் படியுங்கள்! வந்து ஒரு கைபிடியுங்கள்!
மற்றவை நேரில்...! 
----------------------- 

வணக்கம் அம்மம்மா பிறந்தநாள் செய்திகள் வாசிப்பது..

கராத்தே வீரர் ஹூசைனி  இப்படிச் செய்தது ஏன்?
விளக்கம் உள்ளே... 
வணக்கம். அம்மம்மா பிறந்தநாள் செய்திகள்...வாசிப்பது... 
5000 பால்குட வரிசை நெரிசலில் சிக்கி, பால்வாங்க முடியாமல் காலைக் காப்பியை தியாகம் செய்த பாரதசாரி, சாரி பாதசாரி.

இனி விரிவான செய்திகள் -

சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்திக்குட்டி!


சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்திக்குட்டி!
நமது பழைய பதிவு ஒன்றில் நான் எழுதியது 
இன்று நடந்துவிட்டது...
வழக்கம்போல ஸ்பூர்த்தி மிக அருமையாகப் பாடினாலும் பாடலில் வரிகளைக் காட்டிலும் வர்ணமெட்டுகளே அதிகமிருந்தன.. ராக பாவ ஆலாபனையே அதிகரித்திருந்தது. ஆனால், அதே வர்ணங்களுடன், ஜதிசேர்த்து, கொன்னக்கோல் எல்லாம் தானே போட்டுக் கொண்டு “பாட்டும்நானே“ பாடலை அற்புதத் திறனோடு பாடி அசத்திய பரத் “சபாஷ் சரியான போட்டி“ என்று பேச வைத்தான்.
எப்போதும் மிகச்சிறந்த பாடல்வரிகளையும் இசைநுணுக்கத்தையும் கொண்ட வித்தியாசப் பாடல்களை எடுத்து அருமையாகப் பாடி அசத்தும் அனுஷ்யா இறுதிப் பொதுமேடையில் எடுத்துக் கொண்ட பாடலே அவளது திறமை முழுவதையும் காட்டுவதற்கான பாடலாக எடுத்துக்கொள்ளவில்லை என்றதுமே இறுதிப் போட்டியில் அவள் இல்லை என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன்.. மேலே படிக்க...

நேற்று நடந்ததும், நாளை நடப்பதும்..

நேற்று  -12-02-2015- நடந்தது...


நடுவில் 
கோபி ஆண்டவர் கல்விக்குழுமத் தலைவர் திரு சிராஜூதீன், 
கோபி மாவட்டக் கல்வி அலுவலர் திரு சிவாஜி மற்றும் பலர்.  
(ஒளிப்பதிவு கிடைத்ததும் இடுவேன்)
தொடர்ந்து படிக்க...

விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!

இன்று விநோதினி நினைவு நாள்

விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!
தினமும் காலையில் பத்திரிகை படிக்கத்தான் செய்கிறோம்.
13-02-3013 இன்றைய செய்தி ஒன்று ரொம்ப பாதித்துவிட்டது.
அமிலவீச்சில் காயமடைந்த விநோதினி சாவு– (தினமணி-13-02-2013) என்பதுதான் அந்தச் செய்தி.

கேள்வி நான் பதில் நீங்க....

(யோசிக்கிறாங்களாமாம்..)

நீங்கள் கல்லூரி பள்ளியில் ஆசிரியராக இருந்தால் இதை உங்கள் மாணவர்களிடம் சோதித்துப் பார்க்கலாம்.
இன்றைய மாணவர்கள் இதுபோலும் விளையாட்டுகளை மிகவும் விரும்புவார்கள். என்பதோடு, விளையாட்டு முறைக் கல்வியில் அவர்கள் இதுபோல நிறைய விளையாட்டுகளைக் கைவசம் வைத்திருப்பார்கள்.. அவற்றை அப்படியே வகுப்பில் ஒரு சுற்று விட்டால் அப்புறம் வகுப்பே கலகலப்பு நிறைந்ததாகிவிடும்ல?
(என்ன..? அந்தந்த வகுப்புக்கேற்ப உங்கள் கேள்விகளுக்கான விடைகள் அவர்களுக்குப் பாதி தெரிந்தும் மீதி தெரிந்துகொள்ளத் தூண்டும் வகையிலும் இருப்பது முக்கியம். சரி விளையாடலாமா?)

சாதிச் சங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

 (மேடையில் திருச்சி நந்தலாலா, முனைவர் சுந்தரவள்ளி)
“எல்லாச் சாதிச் சங்கத்தினர்க்கும் எனது அன்பான வேண்டுகோள் ஒன்றை வைக்க விரும்புகிறேன் -
அனைத்துச் சாதிச் சங்கத்தலைவர்களும்,அவரவர் சாதி முன்னேறப் பாடுபடும் இதரப் பெருமக்களும் “நம் சாதிக்காரர்கள் நன்றாக இருக்கவேண்டும்“ என்று உண்மையிலே விரும்பும் அனைவரும், எனது இந்தச் சிறிய வேண்டுகோளை ஏற்று, அவரவர் சாதி முன்னேற்றத்தில் உள்ள அக்கறையை வெளிப்படுத்திட அன்போடு வேண்டுகிறேன் –

“மூடிஜி“ ஆகிறார் நம்ம மோடிஜி!

    “ந.மோ. ந.மோ.“ என்று துதிபாடிகள் பஜனை பாடும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான பிறகு பல மூடு விழாக்களை நடத்தியிருப்பதால் அவருக்கு “மோடிஜி“ என்பதைவிட “மூடிஜி“ என்பதே சரியான பெயராகும்.
அவரால் மூடுவிழா கண்ட /  
மற்றும் காணவிருக்கும் பட்டியல் –
1.ஏழைகளின் ஒரே ஆறுதலான ரேஷன்கடை
2. நடுத்தர வர்க்கப் பெண்களின் வரப்பிரசாதமான எரிவாயு.
3.விவசாயிகளின் உயிரை நிறுத்தி வந்த உரமானியம்.
4.விவசாயிகளின் விளைபொருள் கொள்முதல்.
5.விவசாயிகளுக்கான வரித்தள்ளுபடியே தள்ளுபடியாவது!
6.அப்புறம் இருக்கிறது “இந்தியாவின் கோவில்கள்“ என்று ஜவகர்லால் நேரு சொன்ன பொதுத்துறை நிறுவனங்கள்..
7.ஆயுள்காப்பீட்டுக்கழகம் (பலலட்சம்கோடிலாபம்தருவது)
8.தொலைத் தொடர்புத் துறை (வோடஃபோன், நோக்கியா வுக்கு பல ஆயிரம் கோடி சலுகை, தள்ளுபடி தரும்) மோடி சாரி மூடி அவர்கள், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள B.S.N.L. எந்த விதத்திலும் மீண்டுவிடாத அளவு கோமாவில் தள்ளி மூட முயல்வது...(பட்டியல் தொடரும்)

ச உச்சரிப்பு CHA வா? SA வா? என்பது குறித்து...


மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச்சிறந்தது மொழியின் பயன்பாடுதான். ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் வாழ்முறைக்கேற்ப மொழிகள் உருவாகி தேவைக்கேற்பவே வளர்ந்தும் தேய்ந்தும் வருகின்றன. நம் தமிழர் ஆர்வக்கோளாறில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி“ என்று சொல்வது “உலகிலேயே சிறந்த தாய் என் தாய்தான்“ எனும் “செண்டிமெண்ட்“ சார்ந்த மிகை என்பதால் அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் உலகின் மிகச்சிறந்த மொழிகள் சிலவற்றில் நம் தமிழும் ஒன்று என்பதற்கு யாரிடமும் போய்ச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியமும் இல்லை.
இதுபோல சில“செண்ட்டிமெண்ட்“களைத்தாண்டி யோசித்தால், தமிழின் உயர்வு தமிழர்களின் உயர்வுக்கானதே என்பது –மொழிவெறி தாண்டியும்- புரியும். இதில் இந்த மொழி உயர்ந்ததா? அந்த மொழி உயர்ந்ததா என்னும் கேள்விக்கே இடமில்லை. இந்தி எதிர்ப்பின் போது, “தமிழ்த்தாயை அழிக்க வரும் இந்திப்பேய்“ என்ற முழக்கம் உணர்ச்சிவசப் பட்டவர்களின் வாயில் உதிர்ந்த தவறான முழக்கம்தான். அப்போதைய திராவிட அரசியலுக்கு அது தேவைப்பட்டது. ஆனால், எதார்த்தம் என்ன வெனில்... இந்தி எதிர்ப்புப் போரின்போது நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி –

தமிழ்மணம் தரவரிசை சரிதானா?

தமிழ் வலைப்பூக்களை உலகத்தமிழர்களிடம் உடனுக்குடன் கொண்டுசேர்க்கும் “தமிழ்மணம்“ திரட்டியின் பணிக்குத் தலைவணங்குகிறேன். ஆனால், அவர்களின் தரவரிசை (BLOG TRAFFIC RANK) சரியானது தானான்னு என எனக்குத் தெரியல... மூத்த பதிவர்கள்தான் சொல்லணும்.

தொடர்ந்து சிறப்பாக எழுதிவருவதோடு, லட்சக்கணக்கான வாசகரோடு, ஆயிரக்கணக்கில் தொடர்நட்பும்(ஃபாலோயர்) வைத்திருக்கும் நமது பிரபல வலை நண்பர்களான மூங்கில்காற்று தி.ந.முரளிதரன் (தமிழ்மணத் தரவரிசை எண்-378),  திண்டுக்கல் தனபாலன் (தமிழ்மணத் தரவரிசை எண்-95),  மதுரைத் தமிழன் (தமிழ்மணத்தரவரிசை எண்-24) ஆகியோரின் தரவரிசை எண் சரிதானா? 

அழுது அழவைத்த அனுஷ்யாவுக்கு வணக்கம் வணக்கம் வணக்கம்...!


அழுவது கோழைகளின் செயல் என்று யார்சொன்னது?
கோபத்தின் முதலீடாகவும் அழுகை இருக்கமுடியும் என்பதை முகத்தில் அறைந்து ஒரு சிறுமி சொல்லிவிட்டாள்!

அன்று பார்க்க முடியாத இந்த நிகழ்ச்சி
இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது... 
பார்த்தேன்- அழுதுகொண்டே! 
தொடர்ந்து படிக்க...

"குழந்தை மொழியை அறியாதவர்களால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது'

ஆசிரியர் பயிற்சியில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-பிப்.1 குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் நடத்தும் பாடங்களை விரும்பிப் படிப்பார்கள், ஒருவேளை ஆசிரியர்கள் வெறுக்கும்படி இருந்தால் அந்தப் பாடத்தையும் குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவர்.எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஆசிரியர்களாக இருப்பது முக்கியம்என்று சொன்னார் கவிஞர் நா.முத்துநிலவன்.
சென்னை யுரேகா பார்க்ஆசிரியப் பயிற்சி மையமும், புதுக்கோட்டை மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் சங்கத்தினரும் இணைந்து புதுக்கோட்டையில் உள்ள பாரிபள்ளியில் சனிக்கிழமை நடத்திய ஆசிரியப் பயிற்சிமுகாமில் மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார்.
பயிற்சி முகாமிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.அண்ணாத்துரை தலைமை தாங்கினார். சங்கஆலோசகர் டி.சேகர் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளின் உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் திருமதி ஆர்.ஜெயலட்சுமி பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து படிக்க...