சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்திக்குட்டி!


சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்திக்குட்டி!
நமது பழைய பதிவு ஒன்றில் நான் எழுதியது 
இன்று நடந்துவிட்டது...
வழக்கம்போல ஸ்பூர்த்தி மிக அருமையாகப் பாடினாலும் பாடலில் வரிகளைக் காட்டிலும் வர்ணமெட்டுகளே அதிகமிருந்தன.. ராக பாவ ஆலாபனையே அதிகரித்திருந்தது. ஆனால், அதே வர்ணங்களுடன், ஜதிசேர்த்து, கொன்னக்கோல் எல்லாம் தானே போட்டுக் கொண்டு “பாட்டும்நானே“ பாடலை அற்புதத் திறனோடு பாடி அசத்திய பரத் “சபாஷ் சரியான போட்டி“ என்று பேச வைத்தான்.
எப்போதும் மிகச்சிறந்த பாடல்வரிகளையும் இசைநுணுக்கத்தையும் கொண்ட வித்தியாசப் பாடல்களை எடுத்து அருமையாகப் பாடி அசத்தும் அனுஷ்யா இறுதிப் பொதுமேடையில் எடுத்துக் கொண்ட பாடலே அவளது திறமை முழுவதையும் காட்டுவதற்கான பாடலாக எடுத்துக்கொள்ளவில்லை என்றதுமே இறுதிப் போட்டியில் அவள் இல்லை என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன்.. மேலே படிக்க...
20-02-2015 இரவு
இறுதிப்போட்டி காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வின் பொறியியல் கல்லூரித்திடலில் அமர்க்களமான மிகப்பெரிய அளவில் நடந்தது.
(நேரலையாக ஒளிபரப்பான பொதுநிகழ்வில் இசை விற்பன்னர்கள் குவிந்திருந்தனர். புகழ்பெற்ற பாடகர் உன்னிகிருஷ்ணன், பத்மஸ்ரீ சுதாரகுநாதன் (?) முதலானவர்களைக் கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லையே ஏன்?) 
இதில் தனுஷ், அனிருத், சிவ.கார்த்தி போலும் பிரபல திரைக்கலைஞர்களிடம் நேர்முக வர்ணனையாளர்கள் பாவனா, மகாபா(?) மற்றும் பிரியங்கா மூவரும் கேட்ட கேள்விகள் வாந்தியெடுக்க வைத்தன. அதிலும் ஒவ்வொரு குழந்தையும் அற்புதமாகப் பாடி முடித்ததும் தனுஷிடம் “பாடல் பற்றி சொல்லுங்க தனுஷ்“ என்று கேட்டதும் நமக்கே எரிச்சலாக இருந்தது.. அவரும் பொறுக்கவே முடியாதது போல, “ராங் கொஸ்டின்.. இவ்ளோ இசைமேதைகள் இருக்கும்போது என்னிடம் கேட்பது ராங்னு நினைக்கிறேன்“ என்று பலமுறை தனுஷே மூக்கை உடைத்தும் இந்த வர்ணனைக் கிளிகளுக்கு உறைக்கலையே?!
எதிர்பார்த்தது போலவே தனக்கான சரியான வைரமுத்துவின் “பனைமரக்காடே பறவைகள் கூடே“ பாடலை எடுத்து அதில் “தோல்வி நிலையென நினைத்தால்..“ வரிகளைக் கலந்து பாடியது நெஞ்சைப் பிழிந்தது.. இதுவே அந்தச் சிறுமி ஜெசிகா ஜூட் இரண்டாமிடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.. அரிப்பிரியாவும் மிக அருமையாகத்தான் பாடினார்..மூன்றாமிடம்.
மேலே படியுங்கள்..

-----இதிலிருந்து பழைய பதிவு-----
பத்து வயது இருக்குமா இந்தச்சிறுமிக்கு? என்று நினைத்தேன், ஏ.ஆர்.ரகுமான் கேட்டபோது ஒன்பது வயது என்று சொன்னாள்!  என்ன ஒரு கம்பீரக் குரல்! இசைஞானம்! வர்ணஜாலம்! உணர்ச்சிமிகுமுகபாவம்! மழலைமாறாமல், கைத்தாளத்துடன் அனாயாசமாக அப்படிப் பாடுகிறாள்?!! 

விழிகள் மீனோ”  பாடலைக்கேட்டு -
இந்தச் சிறுமியின் சின்னத் தொண்டைக்குள் இருந்தா இவ்வளவு அழகாய் ராக ஆலாபனை  வழிகிறது என்று வியந்து நெகிழ்ந்து எஸ்.பி.பி.யே அருகில் அழைத்து, அணைத்து வாழ்த்தியபின் வேறென்ன பரிசு வேண்டும்

ஸ்பூர்த்தியின் தாய்-தந்தை-தம்பி அடைந்த மகிழ்ச்சியில் கண்ணீர் வந்தது பெரிதல்ல.. எஸ்.பி.பி.யின் கண்களும் கலங்கியது கண்டு நம் கண்ணும் கலங்கியதே? ஏன்? அதுதான் வயதை மீறிய திறமை என்று அவரே சொன்னாரே! அதுதான்.. ஒன்று நிச்சயமய்யா.... 

வளராத அரைகுறைகள்தான் ஈகோ பார்த்து,  அடுத்தவர் திறமையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும். நிறைகுடம் கண்டு இன்னொரு நிறைகுடம்தான் நெஞ்சு தளும்பும்!

ஸ்பூர்த்திக்குத் தமிழ் தெரியவில்லை. அதனால் என்ன? மழலைத் தமிழில் கடிஜோக் சொல்லுகிறாள்...! 

     நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன் -
  தமிழ்த்திரை இசையில் கொடிகட்டிப் பறந்த டி.எம்.எஸ், சுசிலாம்மா, இப்போதும் பாடிக்கொண்டிருக்கும் சின்னக்குயில் சித்ரா முதலான பலருக்கும் தாய்மொழி தமிழல்லல என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? அவர்கள் சொல்லித்தராத தமிழ் உச்சரிப்பையா நாம் (தமிழாசிரியர்கள்?) சொல்லித்தந்து விட்டோம்? இப்போதெல்லாம் இசையமைப்பாளர் சிலர் தமிழரைக் கொண்டே இசைத் தமிழைக் கொல்கிறார்களே!

எனவே, அது ஒரு பொருட்டல்ல என்பதை அழகாகப் பாடும் இந்தச் சிறுமி உணர்த்திவிட்டாள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் வந்தும் தேர்வுபெறவில்லை. நடுவர் அனைவரும் தமிழைத் தாய்மொழியாக்க் கொண்டிராதவர்தாம் என்பதால் இது நிகழவில்லை, என்பதும் உண்மை. அல்லது நான் ஏற்கெனவே எழுதிய ஒரு பதிவில் சொன்னதுபோல வயதை மீறிய காதல்- பாடல்களை பாவ(?)த்துடன் தம் பிள்ளைகள் பாடப் பிடிக்காமலும் இருக்கலாம்.

மன்னவன் வந்தானடிபாடலை இவள் பாடிய போது, அந்தப் புகழ்பெற்ற பாடலுக்குத் திரையிசையில் கடம் வாசித்த இசைப்பெரியவரே வந்து பார்த்துப் பாராட்டியதுடன்,வீணை காயத்ரி, சுதா ரகுநாதன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் முதலான கர்நாடக இசைக்கலைஞர்கள் புகழ்ந்துசொல் வார்த்தை இல்லைஎன்று அருகில் அழைத்து அணைத்துக் கொண்டதும், ஸ்பூர்த்தியும் அசராமல் வாழ்த்தியவர்கள் காலில் எல்லாம் பணிந்து விழுந்து எழுந்ததும்...அட போப்பா! 

ஆனால், என்ன.. கர்நாடக இசைமேதைகள் சாதாரண மக்களுக்குப் பாடுவதில்லையே! இவர்களிடம் பாராட்டுப் பெறும் ஸ்பூர்த்தி, வரும் காலத்தில் தனது இசைமேதைமையை நம் மக்கள் மகிழ மட்டுமல்ல, மாறவும் பாடிப் புகழ்பெற்றால் நல்லது என்பதே என் ஆசை!

31-12-2014 இரவு சீனியர் சங்கர சுப்பிரமணியன் பிரமாதமாகப் பாட, அலட்சியமாக எதிர்கொண்ட லாவகம் ஸ்பூர்த்தியின் வயதை மீறிய திறமை என்பதில் சந்தேகம் இல்லை!

ஸ்பூர்த்தி இப்போது இறுதிப் போட்டிக்கு வந்த நால்வரில் ஒருவராக இருக்கிறார். இறுதிப் போட்டிக்கு வருவார் என்றே நம்புகிறேன். இறுதிவெற்றி பெற வேண்டும் என்றும் விரும்பி நெஞ்சார வாழ்த்துகிறேன். வாழ்த்துவோம்!

இறுதி வெற்றியை இவர் வெல்கிறாரோ இல்லையோ தமிழ்மக்களின் மனங்களை வென்றுவிட்டார் 

பலகோடி புரளும் இசைவணிகத்தில் இதுபோலும் குழந்தைகள் கூட ஒரு விளம்பரம்தான் என்பதுதான் வருத்தமானது!

புல்லுக்கு இரைக்கும் நீர், வாய்க்கால் வழியோடி,
நெல்லுக்கும் ஆங்கே நிறையட்டும்! (புரியுதா?)
---------------------------------------------
கேட்காதவர்கள் கேளுங்கள்ஸ்பூர்த்தியின் அபாரத் திறமையைப் பார்க்காதவர்கள் பாருங்கள் – 
(கேட்டவர்களும் திரும்பக் கேட்டு ரசிக்கலாம்)

விழிகள் மீனோ ….மொழிகள் தேனோ..

போவோமா ஊர்கோலம் 

மின்சாரக் கண்ணா 

மன்னவன் வந்தானடி 

கண்ணோடு காண்பதெல்லாம் 

நன்றி  கூகுள் தேடுபொறி ,   www.youtube.com
------------------------------------------------------------------------- 
இதை எழுதி வெளியிட்டபின் 
02-01-2015 - செய்தி -
நம்ம ஸ்பூர்த்தி பலத்த போட்டிக்கிடையே --
இறுதிப்போட்டிக்கு வந்த மூவரில் ஒருவராக வந்துவிட்டாள்.
பின்னே சும்மாவா..? கடந்த சூப்பர் சிங்கரில் மாமா..மாப்ளேஎனும் புகழ்பெற்ற பாடலை மிகஅருமையாகப் பாடி,  ஜானகியம்மாவே உச்சிமோந்து பாராட்டி 
அவர்கையால் அவரது  நூறுரூபாயைப் பெற்று 
முதலிடமும் பெற்ற திவாகரையே 
இப்போது சமன்செய்து பெற்ற வெற்றியாக்கும்....
ஸ்பூர்த்தியின் வெற்றிப் பயணம் 
தொடர வாழ்த்துவோம்! 
- பதிவுஎழுதிய நாள் 01-01-2015. 
-------------------------------------------------------------- 
திருத்திய பதிவு--இன்று 21-02-2015 காலை 10-00
சூப்பர் சிங்கர் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் பிற நிகழ்ச்சிகள் தொடர்பாக நான் எழுதிய சில பதிவுகளைப் பார்க்கவும் படிக்கவும் சொடுக்குக -

சூப்பர் சிங்கர் ஜூனியர் – குழந்தைகள் எங்கே? --

http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post.html
---------------------------------------------

விஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சி”--

http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_12.html

---------------------------- 

விஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை?

http://valarumkavithai.blogspot.com/2014/01/blog-post_15.html
-------------------------------------------

தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்தது தவறு...

http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_24.html
-----------------------------------------------------------------  

18 கருத்துகள்:

 1. நான் பார்ப்பதில்லை...
  இருப்பினும் ஸ்பூர்த்திக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் நிறைய பாலிடிக்ஸ் இருப்பதாகச் சொல்கிறார்கள் நண்பர்குமார் அவர்களே! ஆனால் மிகப்பெரிய வணிகயுக்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதுபற்றித் தனியாக விரிவாக எழுதவேண்டும். தங்கள் முதல் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. அருமையான பாராட்டு மழை நண்பரே
  ஒரு சந்தேகம் திரு.டி.எம்.எஸ் அவர்கள் தமிழர் இல்லையா ?
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை ஏன் கேட்கிறீர்கள் நண்பர் கில்லர்ஜி?!!!
   அழகிய தமிழ் உச்சரிப்புக்கு எனது (மூனுசுழி ரெண்டு சுழி) பதிவில் எடுத்துக்காட்டிய டிஎம்எஸ் சௌராஸ்ட்ர மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பி.சுசிலா, ஜானகி, எஸ்பிபி, மனோ, முதலான பலரும் தெலுங்கு. சின்னக்குயில் சித்ரா, சுபா மலையாளம்.. இதுபோலப் பார்த்தால் திரைக்கலைஞர்கள் பலரும் தமிழல்ல.. (தமிழரல்ல என்பதும் வேறு நான் அப்படி நினைக்கவில்லை) இதுபற்றியும் தனியாக எழுதுமளவுக்குச் செய்திகள் உள.
   இப்போதும் சூப்பர் சிங்கரில் வெற்றிபெற்ற ஸ்பூர்த்தி கன்னடம், இறுதிச்சுற்றுக்கு வந்த அனுஷ்யா பாண்டி, பரத் மலையாளம், அரிப்ரியா தெலுங்கு, ஜெசிகா ஜூட் புலம்பெயர் ஈழத்தமிழர்.. ஆனால் நிகழ்ச்சியின் பெயர் “தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்...” இது எப்புடீ?

   நீக்கு
  2. நண்பரே தமிழ் திரையுலகை ஆட்டிப்படைப்பது 90 சதவீதம்பேர் தமிழர்கள் இல்லை 80 எனது நெடுங்கால ஆதங்கம், கோபம் இதனை வலியுறுத்தியே இவ்வருட எனது முதல் பதிவு (எமனேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்) எழுதினேன் இன்று தங்கள் மூலமே அவரு’’ம் தமிழர் அல்ல 80தை அறிந்து கொண்டேன் தங்களது மூனுசுழி பதிவு நான் காணவில்லையென்று நினைக்கிறேன் போய் காண்கிறேன்.

   “தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்...” இது எப்புடீ?
   தங்களது கேள்வியின் ஆதங்கம் புரிகிறது. ஏமாறுபவர்கள் வாழும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

   நீக்கு
 3. விஜய் டீவி நிகழ்ச்சிகள் வணிக தந்திரம் என்பதில் மாற்று கருத்தில்லை! அதே சமயம் திறமையானவர்களை அடையாளம் காட்டியதில் அந்த டீவிக்கு நிறைய பங்குண்டு! வெற்றி பெற்ற ஸ்பூர்த்திக்கு பாராட்டுக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. ஆம் அண்ணாஎன்ன அற்புதமா?,என்னதன்நம்பிக்கையா?அசால்ட்டா
  அவ்வளவுபெரியவங்க முன்னாடி....முதலாவதாகவந்தது ஞாயம்தான்ஆனாஅரிபிரியாவும் பரத்தும்2அல்லது3ற்குள் வருவார்களென்றுநான்நினைத்தேன் ஆரம்பத்தில் இருந்தே நன்றாகப் பாடியவள் ஸ்ரீஷா, அனுஷா பறை பாடலுக்கு பிறகுதான் கவனிக்கப்பட்டாள். ஆனால் ஜெசிகா ஜுட்டின்தந்தை அந்தமேடையிலேயே அவளுக்குக் கிடைத்த 1கிலோ தங்கத்தையும்
  அனாதை குழந்தகளுக்கும் இலங்கைத்தமிழர்களுக்கும் கொடுப்போம் என்றுகூறியதுபோற்றத்தக்கது.

  பதிலளிநீக்கு
 5. ஸ்பூர்த்தி அபார திறமை கொண்டவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஓட்டு என்கிற பெயரில் விஜய் தொலைக்காட்சி செய்யும் அக்கப்போர்கள் தான் சகிக்கவில்லை. நடுவர்கள் முடிவிற்கு விட்டிருக்க வேண்டும் அல்லது மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதற்கு ஒரு பட்டமும், நடுவர்களின் தீர்ப்பின் படி ஒரு பட்டமும் என்ற முறையில் இருவருக்கு பட்டம் வழங்கியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 6. ஹைய்யோ மு.. நி.... சாமி வாக்கு பலிச்சிடுமோ!
  பதிவுலகில் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து வைத்திருந்தாலும்
  மற்ற (பதி)வர்கள் மனம் கோணக்கூடாது என்(ற) பகுத்தறிவு சிந்தை மு நி சாமி சொன்ன ஆருடம் பலித்து விடுமோ என்று கொஞ்சமே கொஞ்சம் பயமாயும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாயும் இருக்கு.. ஸ்ஸ் ஸ்.. ப்ப் பூ ... ர்.... தி
  அய்யா இது என் நேற்றைய பதிவு
  குட்டிப்பதிவு என்றாலும் இதுவும்
  சாதகம் தான்
  தாங்கள் சொன்னதும்
  சாதகம்தான்.
  தம +1

  பதிலளிநீக்கு
 7. நானும் குடும்பத்தோடு அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஜெசிகா முதலில் பாடிய பாட்டு என்னவெனத் தெரியவில்லை. (நாங்கள் ௮ மணிக்கு மேல்தான் நிகழ்ச்சியை வைத்தோம்). ஆனால், இரண்டாவது பாட்டைப் பாட வந்த அவர் "இந்தப் பாட்டை ஈழத் தமிழர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்று சொன்னதும் நாங்கள் எல்லோரும் "விடை கொடு எங்கள் நாடே" பாடலைப் பாடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர் "தோல்வி நிலையென நினைத்தால்" எனப் பாடத் தொடங்கியவுடன், "ஆகா! இதுவா? இதுவும் ஈழத் தமிழர்களுக்குக் காணிக்கையாக்கச் சிறந்த தேர்வுதான்" என்று பாராட்டினோம். அந்தப் பாடலை அதற்குண்டான இயல்பான சுருதியில் எடுக்காமல் ஒரு சுருதி இறக்கி இன்னும் உருக்கமாக அவர் பாடியது நெகிழ வைத்தது. ஆனால், திடீரென இடையில் "விடை கொடு எங்கள் நாடே" என்று அவர் தொடங்கியதும் தூக்கி வாரிப் போட்டது. நிகழ்ச்சியை நேரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாடகி சுபா வாயைப் பொத்திக் கொண்டு விட்டார்.

  தமிழைக் கூறு போட்ட "கொலைவெறி" பாடலைப் பாடியது, அதற்காகத் தமிழினப் படுகொலையாளி மன்மோகன் கொடுத்த விருந்தை ஏற்றது, தமிழினத்தை அழித்த காங்கிரசார் கொடுத்த தேசிய விருதை ஏற்றது போன்ற காரணங்களால் தனுஷ் மீது மிகவும் வெறுப்பு இருந்தது. ஆனால், இந்தப் பாடலைக் கேட்டு அவர் அங்கேயே அழுதது கண்டு 'இவருக்கும் உள்ளம் இருக்கிறதப்பா' என்று தோன்றியது. அதிலும், தனுஷ் தன் பாராட்டில் நல்லதொரு கருத்தைக் கூறினார், "இந்த மேடையில் நீ எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்திருக்கிறாய் என உனக்குத் தெரியவில்லையம்மா" என்று. நூற்றுக்கு நூறு சரி!

  இராசபட்ச தோல்விக்குப் பின் உலகளவில் ஈழப் பிரச்சினை பற்றிய உணர்வு கொஞ்சம் குறைந்து விட்டதாகப் பலரும் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் உங்கெங்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில், இப்படியொரு பாடலைப் பாடி மீண்டும் நடந்த கொடுமையை நினைவூட்டி உணர்ச்சி பொங்க வைத்து விட்டார் அந்தச் சிறுமி. தமிழச்சியாகப் பிறந்ததற்குத் தான் செய்ய வேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றி விட்டார். வாழ்க நீடூழி!

  பதிலளிநீக்கு
 8. ஸ்பூர்த்தியை உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம் .

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோ...இந்த போட்டியை நான் பார்ப்பதில்லை...சிறு குழந்தைகள் தன் வயதுக்கு மீறி பாடுவதும்,சரியான பாவனை இல்லையென நடுவர்கள் கூறுவதும்,தோல்வியடைந்த குழந்தைகளும் பெற்றோர்களும் அழுவதை பின்னணி இசையுடன் வியாபாரமாக்குவதும் மனதிற்கு ஏற்புடைத்தாக இல்லையென்பதால்...ஆனால் திறமை எங்கிருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் ஸ்பூர்த்திக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா.
  அருமையாக பாராட்டி எழுதியுள்ளீர்கள் இறுதி நிகழ்ச்சிமட்டும் அல்ல சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பது வழக்கம் 20-2-2015 அன்று நடந்த இறுதிப்போட்டியை நான் முழுமையாக பார்த்தேன் எல்லாப்பிள்ளைகளும் நன்றாக பாடினார்கள். அதில் பூர்த்தி மிகஅருமையாக பாடினால்... பூர்த்திக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் என்ற தலைப்பை விட
  இந்தியாவுக்கான செல்லக்குரல் தேடல் என்ற தலைப்பு வைத்திருந்தால் சரி...

  தங்களின் கருத்து கணிப்பீடும் நடுவர்களின் கணிப்பீடும் சரியாக உள்ளது பூர்த்தி வென்றபோது தங்களின் நினைவுதான் வந்தது... பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. இன்று மறுபடியும் ஒளிபரப்பு செய்வார்கள் என்று நினைக்கிறேன்... சில பகுதிகளை மறுபடியும் ரசிக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 12. சார்

  ஸ்ரீஷா என்ற இளம்பெண்ணை மறந்துவிட்டீர்களே ! அந்தப் பெண்ணும் மிக அழகாக பாடினாள். அந்தப் பெண்ணாவது சுத்தத் தமிழரா?

  பதிலளிநீக்கு
 13. இதுவரை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கவில்லை என்றாலும், அதை பார்க்கும் பல உறவினர்கள் "ஒரு நாளாச்சும் அதை பாரேன், அந்த ஸ்பூர்த்தி செய்றதெல்லாம் நம்ம மகி மாதிரியே இருக்கு என்பார்கள். உங்கள் பதிவிலும் அவளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். ஏனோ இறுதிப்போட்டியை மட்டும் விடியவிடிய அத்தையும் மகியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் நிகழ்ச்சி தொடங்கும் போதே உங்களையும், சில நண்பர்களையும் குறிப்பிட்டு என் அத்தையிடம் சொல்லிவிட்டேன் ஸ்பூர்த்தி தான் இந்த முறை வெல்லப்போகிறாள் என்று:))

  தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் இம்முறை உலக அளவில் என்றுதானே சொல்லிகொண்டிருந்தார்கள்????

  பதிலளிநீக்கு
 14. அண்ணா சூப்பர் சிங்கரை அலசி ஆராய்ந்து விட்டீர்கள் போல..நான் பார்க்கவில்லை, இருந்தாலும் பலர் ஷ்பூர்த்தி பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவளுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. நல்லாவே அல்சியிருக்கீங்க ஐயா! ஏற்கனஏ உங்களின் ஸ்பூர்த்தி பற்றிய பதிவு வாசித்துள்ளோம். இன் நிகச்சிய பாக்கறது இல்லை என்றாலும் தங்களின் விமர்சனத்தில் வரும் சுட்டியை கேட்டிருக்கின்றோம். உங்கள் கேள்வி தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேர்வில் தமிழர் யாருமில்லை என்பது வருத்தத்திற்கு ஒன்றே! இசைக்கு அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதோ அவரது தாய் மொழியோ முக்கியமில்லை என்றாலும்...என்னக் கொடுமை சரவணா...!!? ஓட்டு வாங்குவதில் பல தில்லுமுல்லுக்கள்....ம்ம் எல்லாமே பணமும், விளம்பரமும் என்றாகிப் போனதால்...

  ஸ்பூர்த்திக்கு வாழ்த்துக்கள் எல்லா குழந்தைகளுக்குமே வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு