சாதிச் சங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

 (மேடையில் திருச்சி நந்தலாலா, முனைவர் சுந்தரவள்ளி)
“எல்லாச் சாதிச் சங்கத்தினர்க்கும் எனது அன்பான வேண்டுகோள் ஒன்றை வைக்க விரும்புகிறேன் -
அனைத்துச் சாதிச் சங்கத்தலைவர்களும்,அவரவர் சாதி முன்னேறப் பாடுபடும் இதரப் பெருமக்களும் “நம் சாதிக்காரர்கள் நன்றாக இருக்கவேண்டும்“ என்று உண்மையிலே விரும்பும் அனைவரும், எனது இந்தச் சிறிய வேண்டுகோளை ஏற்று, அவரவர் சாதி முன்னேற்றத்தில் உள்ள அக்கறையை வெளிப்படுத்திட அன்போடு வேண்டுகிறேன் –
(பார்வையாளர்கள் - இடப்பக்கம்)



பின்வரும் 2வரித் தீர்மானத்தை உங்கள் சாதிச் சங்கத்தில் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டுகிறேன் –
              (பார்வையாளர்கள் - வலப்பக்கம்)
அதிகமில்லை ஜெண்டில்மேன், 
இரண்டுவரித் தீர்மானம்தான் –
தீர்மானம் வருமாறு -
“நமது சாதியைச் சேர்ந்தவர்கள், திருமணத்திற்கு, 
எந்த வடிவிலும் வரதட்சணை வாங்குவதில்லை 
என்று உறுதியேற்கிறோம்“
-------------
கூட்டமே ஆரவாரம் செய்து 
எனது இந்த வேண்டுகோளை ஆதரித்தது!
அரங்கத் தலைவர் கவிஞர் திருச்சி நந்தலாலா 
உடனே கேட்டார்-
“நீங்க என்ன, சாதிச் சங்கங்களை எல்லாம் கலைச்சுவிட மறைமுக ஏற்பாடு பண்ணுகிற மாதிரியில்ல தெரியிது..
நான் சொன்னேன் –
“சேச்சே.. 
நான் அப்படியெல்லாம் 
செய்வேனா தலைவரே?
என்னைப்பற்றி 
நல்லாத் தெரிஞ்ச நீங்களே 
இப்படிக் கேட்கலாமா? 
மறைமுக ஏற்பாடு ஏதும் கிடையாது. 
நேரடி ஏற்பாடுதான்..!
-------------------------------------------------- 

 --- நாள் 01-02-2015, மாலை, 
திருப்பூர் புத்தகத்திருவிழா ---
----------------------------------
(படங்களுக்கு நன்றி -திரு லெனின், திருப்பூர்)

29 கருத்துகள்:

  1. மிகக் சரியாகச் சொன்னீர்கள் ஐயா! அப்படியே சாதியை விட்டு ஒழிக்கவும் கோரிக்கை வையுங்கள் ஐயா. சாதிச் சங்கங்களே இருக்கக் கூடாது ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதிச்சங்கங்கள் ஒழிந்தால் சாதி அரசியல் ஒழியும். சாதி அரசியல் ஒழிந்துவிட்டால் அப்புறம் சாதி நெடுநாள் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இன்றைய தலைமுறைக்கு ஒரு விடயத்தைப் புரியவைத்துவிட்டால் போதும். மீதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.. பொதுவான சாதிவெறுப்பாளர்கள் அவ்வளவு பேர் இருக்கிறார்கள்.. அவர்களை சாதி மறுப்பாளர்களாக்கிவிட்டால் போதும்.

      நீக்கு
  2. அருமையான தீர்மானம்

    ஒரு கவிஞன் எழுதினான் இப்படி...
    ஓ,,, மனிதர்களே...
    ஜாதி மதம் ஒழிய
    ஜாதி விட்டு ஜாதி காதலியுங்கள்
    மதம் விட்டு மதம் காதலியுங்கள்
    ஜாதி, மதம் என்ற கொடிய நோய் ஒழியட்டும்
    இதுவும்கூட சாதியை ஒழிக்கும்

    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதியை ஒழிக்கும் இயற்கையான ஏற்பாடே காதல்தான். (அதனால்தான் காதலர் தினத்தை இந்துத்துவ வெறியர்கள் ஏற்கமறுத்துக் கலகம் செய்கிறார்கள்.. பாருங்கள் இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது.. பிப்-14 நிலவரத்தை அடுத்தநாள் செய்தித்தாளில் பார்க்கலாம்.. நன்றி நண்பரே.

      நீக்கு
  3. அப்படியே வீடியோ லிங்கை கொடுத்தா எல்லோரும் பார்த்து பயனடைவர் .

    நன்றி
    M. செய்யது
    Dubai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடியோ எடுத்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரும். தமுஎச மாநில மாநாடு அடுத்த மாதம் திருப்பூரில்தான் நடக்க உள்ளது. அனேகமாக அப்போது கிடைக்கலாம் நண்பரே. (கிடைத்தால் நம் வலையில் எற்றுவேன்)
      கடந்த சனவரி-15 பொங்கலன்று காங்கேயம் புத்தக விழாவில் நான் பேசியதை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் விரைவில் கொங்கு எஸ்.ஆர்.எஃப்.எம்.இல் ஒலிபரப்பாகும் அதையும் வாங்கி நம் வலையில் ஏற்றுவேன்) நன்றி நண்பரே

      நீக்கு
  4. பதில்கள்
    1. நல்லதே நடக்கும். ஆனால்..கந்தர்வன் கவிதை ஒன்றுள்ளது-
      “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய
      நான் நினைத்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்”
      மக்கள் நினைத்தால் மாற்றலாம். நினைக்காமல் வைத்துக்கொள்ளும் கேடுகெட்ட அரசியலைப் புரிந்து கொண்டால் நிச்சயம் மாற்றம வரும் என்று நம்புகிறேன்.
      ரொம்ப நாள் கழிச்சு வநத்திருக்க.. வீட்டில், குழந்தைகள ்எல்லாருக்கும் என் அன்பு விசாரிப்புகள் மா. நன்றிம்மா.

      நீக்கு
  5. அருமையான தீர்மானம் ஐயா
    வலைப் பூ வின் புதிய முகப்பு அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்பாராட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்
      அடுத்த பாராட்டு நண்பர் தி.ந.முரளி அவர்களைச் சாரும். நன்றி

      நீக்கு
  6. ஆம் ஒழியவேண்டியது ஜாதி அரசியல் மட்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாதி ஒழிந்தால் அரசியல் நேர்மையாக மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஜாதிமட்டும் தனியாக ஒழிய வாய்ப்பில்லை.. கொசு மருந்து அடிப்பதால் கொசு ஒழியாது...சாக்கடையை ஒழித்தால் கொசு ஒழியலாம்..நன்றி

      நீக்கு
  7. சிறப்பான தீர்மானம் மேலும் சிறக்கட்டும்...

    தெய்வீக புன்னகை ஐயா...

    பதிலளிநீக்கு
  8. இது நடக்குமா?ஆனா நடக்கனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்க இலக்கியப் பாடல்களைப் பற்றிச் சொல்லும்போது..
      “இது நடந்திருக்குமா?” என்று கேட்டு, “நடந்தால் நல்லதுதானே?” என்பார்கள் அல்லவா? அதுமாதிரி ஆனால் முற்றிலும் நடக்காது என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லைதானே? அதுதான்.. என் எண்ணஒட்டம்.

      நீக்கு
  9. ஆஹா!! அண்ணா செம ஐடியாவா இருக்கே:)) நாள்தோறும் ஒரு நவரசப்பதிவு!!! சூப்பர் அண்ணா! தொடர்ந்து கலக்குங்க:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும்போது கொட்டித் தீத்துற வேண்டும்தானே? கிடைக்கிற நேரமே குறைவு. (அடுத்தவாரம் 5,6 நாள் இணையப் பக்கமே வரமுடியாதுன்னு நினைக்கிறேன்...பார்க்கலாம்)

      நீக்கு
  10. அருமையாச் சொல்லியிருக்கீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  11. சாதியை வைத்துக்கொண்டுதான் பலர் தற்போது பிழைப்பே நடத்துகின்றார்கள். தாங்கள் அவர்களுக்கு அதிகம் தொல்லை தருவது போல் உள்ளது. இதற்காக உங்களை எதிர்ப்போர் சங்கம் ஆரம்பித்துவிட்டாலும் விடுவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு நான் பெரியமனிதன் அல்ல என்பதால் பிழைத்துக் கிடக்கிறேன்.
      சாதி மறுப்பாளர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கலாமா? என்று யோசித்து வருகிறேன்.

      நீக்கு
  12. எழுதுவதுதான் கவிதை என்றிருந்தேன். நீங்கள் பேசுவதும் கவிதையாக இருக்கிறதே. நம் மனிதர்கள் செய்யும் தவறுகளை இடிந்துரைக்காமல் இப்படி அழகாக எடுத்துரைத்தால் எல்லோருமே ஒரு நாள் மாறிவிடுவார்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையுமே பாசிடிவாகவே சொல்லிவிடவும் முடியாது. சொல்லக்கூடியவற்றைச் சொல்லித்தான் வருகிறேன். நன்றி வரது.

      நீக்கு
  13. நல்ல யோசனை. நல்லது நடந்தால் சரி.
    த.ம.6

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. இந்த ஆலோசனையை நான் ரொம்ப நாள்களாகத் தமிழ்நாட்டு மேடையில் சொல்லிவருகிறேன் மது. இப்ப இத இங்க நம்ம பதிவுல போடக் காரணமான சகோதரி கீதாவின் பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் பார்க்க வேண்டுகிறேன். நீங்கள் பார்த்து, பின்னூட்டமும் இட்டுள்ளீர்கள். எனது ப பின்னூட்டத்தை நீங்களும் நம் நண்பர்களுகம் சற்றே நேரம் ஒதுக்கிப் பார்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன் - நன்றி மது.
      http://thillaiakathuchronicles.blogspot.com/2015/02/Caste-Problems-In-Education-India-.html

      நீக்கு
  15. //நான் அப்படியெல்லாம்
    செய்வேனா தலைவரே?
    என்னைப்பற்றி
    நல்லாத் தெரிஞ்ச நீங்களே
    இப்படிக் கேட்கலாமா?
    மறைமுக ஏற்பாடு ஏதும் கிடையாது.
    நேரடி ஏற்பாடுதான்..!”//
    அட்டகாசம் ஐயா!
    சமயோசித அறிவு என்பதற்கு இதுதான் உதாரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முரளி. எவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் சர்வசாதாரணமாகப் பெரிய செய்திகளையும் ஜாலியாகச் சொலலிவிடும் உங்களைப் போலும் நண்பரகளிடம் கற்றுக் கொண்டதுதான்.. கல்வி கரையில கற்பவர் வாழ்நாள் உள.

      நீக்கு