ஆசிரியர் பயிற்சியில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-பிப்.1 “குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் நடத்தும்
பாடங்களை விரும்பிப் படிப்பார்கள், ஒருவேளை ஆசிரியர்கள் வெறுக்கும்படி இருந்தால் அந்தப் பாடத்தையும்
குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவர்.எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஆசிரியர்களாக இருப்பது முக்கியம்“ என்று சொன்னார்
கவிஞர் நா.முத்துநிலவன்.
சென்னை “யுரேகா பார்க்“ ஆசிரியப் பயிற்சி மையமும், புதுக்கோட்டை மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள்
சங்கத்தினரும் இணைந்து புதுக்கோட்டையில் உள்ள பாரிபள்ளியில் சனிக்கிழமை நடத்திய
ஆசிரியப் பயிற்சிமுகாமில் மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார்.
பயிற்சி முகாமிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.அண்ணாத்துரை
தலைமை தாங்கினார். சங்கஆலோசகர் டி.சேகர் முன்னிலையில், புதுக்கோட்டை
மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளின் உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் திருமதி
ஆர்.ஜெயலட்சுமி பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து படிக்க...
சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று 3,4,5ஆம் வகுப்பு
நடத்தும் நர்சரி ஆசிரியர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் “யுரேகா பார்க்“ பயிற்சி
நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஏ.ரவிசங்கர் பயிற்சியின் நோக்கம் மற்றும்
விளக்கம் தந்து உரையாற்றினார். கவிஞர் மு.முருகேஷ் அறிமுகவுரையாற்றினார். கொளரி, மொ.சீனிவாசன், எஸ்.தோதாத்ரி ஆகிய திட்ட
இயக்குநர்களுடன், சுமதி, ரகுச்சந்திரன், சங்கர், லட்சுமிகாந்த், செந்தில்,
அருணகிரி, அருண் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்ட கவிஞர் நா.முத்துநிலவன்
மேலும் பேசியதாவது -“குழந்தைகளின் மொழியே தனியானது. அவர்களிடம் த்த்துவம் பேசமுடியாது.
6வயது முதல் 9வயது வரையான குழந்தைகளின் மொழியிலேயே கொஞ்சிக் கொஞ்சிப் பேசி, அவர்கள் சொல்வதைக்
காதுகொடுத்துக் கேட்டு, அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆனபின்னரே அவர்களை அறியாமல் பாடல், கதைகளின் வழியாகத்
தான் அவர்களின் மனசுக்குள் நுழைய முடியும்.
குழந்தைமொழியை அறியாத யாரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது.
குழந்தைகள் உலகம் அழகானது. கற்பனை மிகுந்தது. குட்டிக் குட்டிக் கதைகள், பாடல்களை நிறையத்
தெரிந்து வைத்து, அவர்களிடம் சொல்லிக்கொண்டே, பாரதியார்-பாரதிதாசன் பாடல்களைப் பாடிக் கொண்டே அவர்களைக் கவர்ந்து, பின்னரே கற்பிக்க
வேண்டும். எல்லாக் குழந்தைகளும் கற்பனை உலகை ரசிப்பார்கள். அதன் வழியே
செல்லும்பொழுது மட்டுமே அவர்களின் உலகம் திறக்கும். ஒவ்வொருவருக்கும் செல்லப்
பெயர்வைத்தும், அவர்கள் வெளிப்படுத்தும் திறன்களைப் பாராட்டி “வெரிகுட்“ சொல்லியும் “நன்று“ “மிகவும் நன்று”என்று அவர்களின் ஏடுகளில் போட்டும், உற்சாகப்
படுத்தினால் அவர்கள் வெகுவிரைவில் அந்தத் திறமையை வளர்த்துக் கொண்டு மேலும் மேலும்
ஆர்வமாகக் கற்பார்கள். கற்பதும் இனிமையாகும்.
மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர், தானே முதலில்
முன்னுதாரணமாகப் பிழையின்றி உச்சரிக்கவும், தவறின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டுவது மிகவும் முக்கியமாகும்.
தவறாக உச்சரிக்கும் தொலைக்காட்சித் தொகுப்பாளரிடமிருந்து நம் குழந்தைகளை
மீட்டெடுத்து, நல்ல மொழி வளம் மொழி ஆர்வம் மிக்க மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள்
அவ்வாறே பேசவும் எழுதவும் தெரிந்திருப்பது அவசியம்.
பள்ளி மாணவர்களிடம் சமூகம் எதிர்பார்க்கும் திறமை, பெரிய கவிஞராகவோ
காவியம் படைப்பவராகவோ வரவேண்டும் என்பதில்லை. அது பள்ளிப் பருவம் முடிந்தபின்
அவர்களாக ஆர்வப்பட்டு வளர்க்கும் திறனாகும். நர்சரிக் குழந்தைகளிடம் முதலில்
தாய்மொழியைப் பிழையின்றி உச்சரிக்கவும், தவறின்றி எழுதவும் கற்றுக்கொள்வதே அடிப்படையாகும். இதற்குப்
பாடத்திட்டத்தை நம்பியிருப்பதை விடவும் ஆசிரியர்கள் தாமே முன்னுதாரணமாக இருப்பது
முக்கியம்.
எனவே, இந்தப் பயிற்சி முகாமில் தாய்மொழி ஆர்வத்தின் அடிப்படை, குழந்தைகளின்
பிழையற்ற எழுத்தும் பேச்சுமே என்பதை உணர்ந்து பயிற்சி பெற்று, அதனை மாவட்டம்
முழுவதும் உள்ள நர்சரிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் நல்ல வாய்ப்பைப்
பயன்படுத்தி, குழந்தைகளிடம் பிழையின்றித் தமிழ் எழுத, அழகாக உச்சரிக்க்க்
கற்பிப்பதே ஆசிரியர்கடமை“
மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை சங்கச் செயலர் கே.ரமணன் வரவேற்க, சங்கத்தின்
பொருளாளர் விஜயசாரதி நன்றி கூறினார். மாவட்டம் முழுவதும் இருந்து 3,4,5ஆம் வகுப்பு
நர்சரிவகுப்பு நடத்தும் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்ஆசிரியர்கள் (படம்) கலந்து
கொண்டு பயிற்சி பெற்றது குறிப்பிடத் தக்கது.
------------------------------------------------
நன்றி - தினமணி, தீக்கதிர் -01-02-2015 திருச்சிப்பதிப்பு
செய்தியாளர்கள் --
திரு இரா.மோகன்ராம், தினமணி, புதுக்கோட்டை,
திரு சு.மதியழகன், தீக்கதிர், புதுக்கோட்டை
திரு இரா.மோகன்ராம், தினமணி, புதுக்கோட்டை,
திரு சு.மதியழகன், தீக்கதிர், புதுக்கோட்டை
புகைப்படம் - டீலக்ஸ் ஞானசேகரன், புதுக்கோட்டை
------------------------------------------------
"குழந்தைகளின் மொழியே தனியானது. அவர்களிடம் த்த்துவம் பேசமுடியாது. 6வயது முதல் 9வயது வரையான குழந்தைகளின் மொழியிலேயே கொஞ்சிக் கொஞ்சிப் பேசி, அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டு, அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆனபின்னரே அவர்களை அறியாமல் பாடல், கதைகளின் வழியாகத் தான் அவர்களின் மனசுக்குள் நுழைய முடியும்." என்ற உளவியல் நோக்கிலான வழிகாட்டலை ஆசிரியர்கள் எல்லோரும் பின்பற்றுதல் வேண்டும்.
பதிலளிநீக்குமதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html
//ஆசிரியரைப் பிடித்தால்தான்
பதிலளிநீக்குஆசிரியர் நடத்தும் பாடமும் பிடிக்கும்///
என் பள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த உண்மை ஐயா
ஒரு ஆசிரியரால் எனக்கு வேதியியல் என்ற ஒரு பாடமே பிடிக்காமல் போய்விட்டது, இன்றளவும் அந்நிலை தொடர்கிறது
நன்றி ஐயா
அனைத்தும் உண்மை ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இந்தக்காலத்து பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டி பதிவு.. தொடரட்டும் தங்களின் சேவை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விழா ரொம்ப அருமையா நடந்திருக்கும் போலவே!!! ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா, நம் மேதமை எல்லாம் குழந்தைகளிடம் காட்டுவதாக நினைப்பதே பேதைமை தானே. இல்லையா அண்ணா:) அம்மாவையும், உங்களையும் இந்த புகைப்படத்தில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது:)
பதிலளிநீக்குசிறப்பான உரை.
பதிலளிநீக்கு//பள்ளி மாணவர்களிடம் சமூகம் எதிர்பார்க்கும் திறமை, பெரிய கவிஞராகவோ காவியம் படைப்பவராகவோ வரவேண்டும் என்பதில்லை. அது பள்ளிப் பருவம் முடிந்தபின் அவர்களாக ஆர்வப்பட்டு வளர்க்கும் திறனாகும். நர்சரிக் குழந்தைகளிடம் முதலில் தாய்மொழியைப் பிழையின்றி உச்சரிக்கவும், தவறின்றி எழுதவும் கற்றுக்கொள்வதே அடிப்படையாகும். இதற்குப் பாடத்திட்டத்தை நம்பியிருப்பதை விடவும் ஆசிரியர்கள் தாமே முன்னுதாரணமாக இருப்பது முக்கியம்.//
மிக சரியான வார்த்தைகைள் நரசரி பள்ளிகள் மட்டுமல்ல அரசு பள்ளிகளுக்கும் பொருந்துவனவாகும்
அய்யா வணக்கம்.
பதிலளிநீக்குஆசிரியர் பயிற்சியில் மொழி கற்பித்தல் குறித்து ஓராண்டில் படிக்க வேண்டிய தகவல்களை ஒரு பதிவில் ஒரு பொழிவில் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள்.
பழைய நினைவுகள் புதிதாய் இன்னொரு முறை வந்து போயின.
பகிர்விற்கு நன்றி!
தமிழ் மணம் ???
பதிலளிநீக்குகுழந்தைகள் உலகில் உள்ள விதிமுறைகளை கற்றுக்கொண்டு பயிற்றுவிக்க உங்களைப்போன்ற
பதிலளிநீக்குவளரும் (அ) வளர்ந்து ஓய்வு பெற்ற மிகச்சில குழந்தைகளால் மட்டுமே முடியும் அய்யா
அருமையான பேச்சு ஐயா...
பதிலளிநீக்குகுழந்தைகள் உலகம் அலாதியானது... கற்பனை நிறைந்தது....
அருமையாச் சொல்லியிருக்கீங்க...
சிறந்த உரையைக் கேட்டு மகிழ்ந்தேன். குழந்தை மொழி என்பதானது நம்மை அவர்களுடைய உலகிற்கு அழைத்துச்செல்வதோடு நம்மையும் முழுமையாக அவர்களுடைய நடவடிக்கைகளில் ஈடுபட மிகவும் உதவி செய்யும். விழா நிகழ்வினை நாங்களும் பயனுறும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு“குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் நடத்தும் பாடங்களை விரும்பிப் படிப்பார்கள், ஒருவேளை ஆசிரியர்கள் வெறுக்கும்படி இருந்தால் அந்தப் பாடத்தையும் குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவர்.எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஆசிரியர்களாக இருப்பது முக்கியம்“ // அருமை அருமை!
பதிலளிநீக்குகுழந்தைமொழியை அறியாத யாரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது. குழந்தைகள் உலகம் அழகானது. கற்பனை மிகுந்தது. குட்டிக் குட்டிக் கதைகள், பாடல்களை நிறையத் தெரிந்து வைத்து, அவர்களிடம் சொல்லிக்கொண்டே, பாரதியார்-பாரதிதாசன் பாடல்களைப் பாடிக் கொண்டே அவர்களைக் கவர்ந்து, பின்னரே கற்பிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளும் கற்பனை உலகை ரசிப்பார்கள். அதன் வழியே செல்லும்பொழுது மட்டுமே அவர்களின் உலகம் திறக்கும்//
பள்ளி மாணவர்களிடம் சமூகம் எதிர்பார்க்கும் திறமை, பெரிய கவிஞராகவோ காவியம் படைப்பவராகவோ வரவேண்டும் என்பதில்லை. அது பள்ளிப் பருவம் முடிந்தபின் அவர்களாக ஆர்வப்பட்டு வளர்க்கும் திறனாகும். நர்சரிக் குழந்தைகளிடம் முதலில் தாய்மொழியைப் பிழையின்றி உச்சரிக்கவும், தவறின்றி எழுதவும் கற்றுக்கொள்வதே அடிப்படையாகும்.//
உயரிய கருத்துக்கள் ஐயா! அருமைய் அருமை! எங்கள் எண்ணங்களும் இதுவே!!! மிகச் சிறந்த உரை ஐயா!
அருமையான சீரிய கருத்துக்கள்!
மிகச் சிறப்பான வாழ்த்துரை. வருகைத் தந்து சிறப்பு செய்தமைக்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.
பதிலளிநீக்கு