“மூடிஜி“ ஆகிறார் நம்ம மோடிஜி!

    “ந.மோ. ந.மோ.“ என்று துதிபாடிகள் பஜனை பாடும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான பிறகு பல மூடு விழாக்களை நடத்தியிருப்பதால் அவருக்கு “மோடிஜி“ என்பதைவிட “மூடிஜி“ என்பதே சரியான பெயராகும்.
அவரால் மூடுவிழா கண்ட /  
மற்றும் காணவிருக்கும் பட்டியல் –
1.ஏழைகளின் ஒரே ஆறுதலான ரேஷன்கடை
2. நடுத்தர வர்க்கப் பெண்களின் வரப்பிரசாதமான எரிவாயு.
3.விவசாயிகளின் உயிரை நிறுத்தி வந்த உரமானியம்.
4.விவசாயிகளின் விளைபொருள் கொள்முதல்.
5.விவசாயிகளுக்கான வரித்தள்ளுபடியே தள்ளுபடியாவது!
6.அப்புறம் இருக்கிறது “இந்தியாவின் கோவில்கள்“ என்று ஜவகர்லால் நேரு சொன்ன பொதுத்துறை நிறுவனங்கள்..
7.ஆயுள்காப்பீட்டுக்கழகம் (பலலட்சம்கோடிலாபம்தருவது)
8.தொலைத் தொடர்புத் துறை (வோடஃபோன், நோக்கியா வுக்கு பல ஆயிரம் கோடி சலுகை, தள்ளுபடி தரும்) மோடி சாரி மூடி அவர்கள், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள B.S.N.L. எந்த விதத்திலும் மீண்டுவிடாத அளவு கோமாவில் தள்ளி மூட முயல்வது...(பட்டியல் தொடரும்)

இப்படி அன்னார் செய்த மற்றும் செய்யவிருக்கும் “மூடு“விழாக்கள் தொடர்ந்து கொண்டே போவதால்.. 'மோடி (எ) ந.மோ.' அவர்களை, 'மோடி' என்பதற்குப் பதிலாக, ஏன் “மூடிஜி“ என்று சொல்லக் கூடாது?

ஒருவேளை மோடிஜி (a) நமோஜி என்பது மாதிரி 'ரைமாக'வரணும் என்று கேட்டால் மூடிஜி(a)நாமஜி என்பது என் பரிந்துரை. என்ன சரிங்களா?
இவரது உண்மையான சலுகைகள் அல்லஅல்ல நேரடியாக வெளிநாட்டுக்கே அழைத்துப் போய் கொடுத்த முதலாளி அதானி (அவர்தான் இவர் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தனிவிமானம் தந்து உதவிய பரம ஏழை) மற்றும் வருமானத்தில் மட்டுமன்றி வரிஏய்ப்பிலும் முதலாக நிற்கும் அம்பானி  முதலானவர்களின் “வறுமை“ கண்டு கொதித்துப் போய் இருக்கிறார். எனக்கென்னமோ, ராஜபக்ஷே மாதிரி இவரும் தனது பிரதமர் பதவியை அதிபர் பதவியாக உயர்த்திக் கொள்வார் என்று தோன்றுகிறது! இப்ப 10லட்சம் மதிப்புள்ள கோட் போட்டவர் அப்ப 10கோடி மதிப்புள்ள கோட் போட்டு இந்த ஏழை நாட்டை உயர்த்த முடியும்! 

அப்படியே நம்ம “மூடிஜி“க்கு ஒரு சின்ன யோசனை!
இப்படிச் சின்ன சின்னதாய் பொதுத்துறை நிறுவனம், ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து என்று தனித்தனியாய்த் தனியார் மயமாக்குவதற்குப் பதிலாக, நம்ம ராணுவம், எல்லைப்பாதுகாப்பு, இஸ்ரோ, உள்நாட்டு போலீஸ், அப்படியே நம்ம தாதாக்கள் எல்லாத்தையுமே வெளிநாட்டு முதலாளிகளுக்கு 999வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டால் நல்லது! 

கூடக் காசு தர்ரவங்களுக்கு நம்ம பார்லிமெண்டையும் இலவச இணைப்பாக் குடுத்துடலாம்... இப்பவே அப்படி வந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து, எல்லாரையும் அப்படி நினைச்சுடக் கூடாது பாருங்க.. மொத்தமா விக்கும்போதுதான் நினைக்கணும்..!சரியா?

சரி வாங்க சத்தமாச் சொல்லணும் எங்க பாக்கலாம்..
நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
-------- மூடிஜி கீ ஜெய்! ராம் ராம் ஜி! -------- 

8 கருத்துகள்:

 1. நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)

  நான் நிறையதடவ சத்தமா சொல்லிட்டேன்.. நல்லா பார்துதுகுங்க

  பதிலளிநீக்கு
 2. இரவு 2 மணிக்கு பதிவு போட்டு நாட்டுக்காக உழைக்கிறீங்க ஆனா அந்த மோடி நாட்டையே விற்று விற்று போகப் பாக்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படீனா...... அதுல என்னையும் சேர்த்து வித்துறுவாங்களோ..... ?

   நீக்கு
 3. நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!-
  தம 2

  பதிலளிநீக்கு
 4. நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  நம பாரத தேச பதே! நமோ மூடிஜி கீ ஜே!- (2)
  ஹ்ம்ம்:((((((((

  பதிலளிநீக்கு
 5. ந(ம்)ம பாரத தேச பதே ! நமோ மூடிஜி கீ ஜே !- (2)
  ந(ம்)ம பாரத தேச பதே ! நமோ மூடிஜி கீ ஜே !- (2)
  ந(ம்)ம பாரத தேச பதே ! நமோ மூடிஜி கீ ஜே !- (2)

  தமிழ் மணம் - 4

  பதிலளிநீக்கு
 6. நமோஜி... இப்ப நாமஜி ஆயிட்டாரே....
  ஆஹா... வளரும் கவிதைகள் தங்கள் படத்துடன் பாரதியும் சேர கலக்கலாய் இருக்கு ஐயா...

  பதிலளிநீக்கு