கனவு நிறைவேறும் காலமிது!

சென்னையில் 38ஆண்டுகளாக...மற்றும் ஈரோடு,மதுரை, திருப்பூர், பெரம்பலூர், காரைக்குடி, இராமநாதபுரம், நெல்லை, நெய்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை என அனேகமாகத் தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் எல்லாம் பல்லாண்டுகளாக ஆண்டுதோறும் நடந்து வருகின்றன புத்தகத் திருவிழாக்கள்! மக்கள் கோவில் திருவிழாவுக்கு வருவதுபோல வந்து குவிகிறார்கள்.... 

கோவில் -
கண்ணை மூடச்சொல்லும்!
புத்தகம் -
கண்ணைத் திறக்கச் சொல்லும்!

பல்லாயிரக்கணக்கில் புத்தக விற்பனை நடக்கிறது.
தமிழ்நாடு நல்வழியில் நடைபோட 
இதுபோலும் புத்தக விழாக்கள் வழிவகுக்கும்!

இந்தத் தலைமுறை இளைஞர்க்குப் படிப்பதில் கவனமில்லை, பொழுதுபோக்குக்குத் தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த கதை மலையேறுவதை இவை பறைசாற்றி வருகின்றன

இந்த நம்பிக்கையை அங்கெல்லாம் திரளும் இளைஞர் கூட்டம் எனக்கு உணர்த்தியது... ஆனாலும் என் குற்றவுணர்வு தீரவில்லை...

இவற்றில் பலவற்றில் நான் போய்ப் பேசியுமிருக்கிறேன். அப்படிப் போகும்போதெல்லாம்... எனக்குள் அந்தக் குற்ற உணர்ச்சி மேலெழும்!

“கூரையேறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானாம்!எனும் பழமொழியும் நினைவுக்கு வந்து அலைக்கழிக்கும்..குற்றவுணர்வு மீதூறும்! இந்த உணர்வே அனேகமாகப் புதுக்கோட்டையின் இலக்கிய வாதிகள் அனைவர்க்குமே இருந்ததை அவர்களுடன் பேசியபோதெல்லாம் உணர்ந்தேன். நமது முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் உட்பட...

குறிப்பாக இனிய நண்பரும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மனிதநேயக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க இளைய கவிஞருமான தங்கம் மூர்த்தியுடன் அண்மையில் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் இந்தப் பேச்சு வராமல் இருந்ததில்லை.
எனவே.. அந்த
“அனைவரின் கனவு“
நிறைவேற வழி கண்டோம்.. இதோ..
“புதுக்கோட்டை – புத்தகத் திருவிழா“
ஊர்கூடித் தேர்இழுப்போம் வாருங்கள்!
--------- o o o o ----------
இது அறிவுத் தேர்..புத்தகத் திருவிழாத் தேர்!

இதைப் படியுங்கள்! வந்து ஒரு கைபிடியுங்கள்!
மற்றவை நேரில்...! 
----------------------- 

29 கருத்துகள்:

 1. புதுக்கோட்டையில்
  புத்தகத் திருவிழா
  அரங்கேறட்டும் ஐயா
  தங்களின் முயற்சி வெற்றி பெறட்டும்
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. விழா சிறக்க எமது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே..அனேகமாக நீங்களும் அப்போது இங்கு வருவீர்கள்தானே?

   நீக்கு
 3. உங்கள் மற்றொரு பொன்னான தமிழ்ப்பணி!!! வழக்கம் போல கலக்குங்க அண்ணா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ச்சும்மா உடக்கூடாதுப்பா.. மது கூட வந்து தக்க ஆலோசனைகள் சொல்லணும், உதவிகள் செய்யணும், முக்கியமா அதில் வெளியிடப் போகும் அனேகமாகப் பத்துநாளும் தினமும் ஓரிரு நூல்களில் உன் நூல் வரணும் பா.

   நீக்கு
 4. சந்தோஷமான விஷயம் ஐயா...
  சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு நண்பரே, உங்கள் நூலை எப்போது வெளியிட உத்தேசித்து உள்ளீர்கள்? அந்த நாள்களில் (னேகமாக ஜூலை கடைசி அல்லது ஆகஸ்டு முதல் வாரம் ) இங்கு வருவதாகச் சொன்னீர்களே? அடுத்த வாரமே நமது வலைப்பதிவர் விழாவையும நடத்திடப் பேசி வருகிறோம்..

   நீக்கு
  2. விரைவில் அதற்கான வேலையை ஆரம்பிப்போம் ஐயா..
   வலைப்பதிவர் விழாவில் கலந்துக்க முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. கலந்துக்கிறோம்..வேலைகளைப் பகிர்ந்துக்குறோம்..தொடர்ந்து இயக்கமாகப் பணி தொடர்கிறோம்..நடத்துகிறோம்...அதில் உங்கள் அடுத்த நூலையும் வெளியிடுகிறோம்...சரியா?

   நீக்கு
 6. ஐயா!உங்கள் சிந்தனைகளும் செயல் பாடுகளும் ஓய்வதில்லை என்று உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல பணி! தங்கள் மனம் போலவே சிறக்கும் என்பதில் ஐயமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி முரளி. இது அனேகமாக ஜூலை கடைசி அல்லது ஆகஸ்டு முதல் வாரம் நடத்த எண்ணியிருக்கிறோம் .அடுத்த ஓரிரு வாரங்களில் நம் வலைப்பதிவர் திருவிழாதான்.. அதுபற்றிப் பேசி வருகிறோம்.. அடுத்த மாதம் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்வோம் நீங்கள், டிடி யுடன் சென்னை, மதுரை, தஞ்சை, திருச்சி நண்பர்களுடன் புதுகை நண்பர்கள் முதலில் சந்தித்துப் பேசுவோம்..தனி அஞ்சலில் விரிவாக எழுதுவேன்.

   நீக்கு
  2. அப்ப நாங்கள்ளாம் வேணாமா? சாமி ..

   நீக்கு
  3. அய்யா மன்னியுங்கள்..விழா ஏற்பாட்டுக்கு உதவக்கூடிய யாரும் கலந்துகொள்ளலாம். தொலைவுகருதியே அனைத்து மாவட்ட நண்பர்களையும் குறிப்பிடவில்லை. அன்புடன் வரக்கூடிய உங்களை வேணாம்னு சொல்வோமா நண்பரே? ஒரு பொதுப்பதிவே போட்டுவிடுகிறேன் சாமி..வர வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள், இதுவும் ஊர்கூடித் தேரிழுக்கும் வேலைதானே நண்பா?

   நீக்கு
 7. பதில்கள்
  1. நன்றி மா. அங்கிருந்து நீ வாழ்த்தலாம்.. வர முடியாதில்ல..? வலைப்பதிவர் திருவிழாவுக்கும் வர..?

   நீக்கு
 8. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  மறுபடியும் தளம் .in என்று மாறியிருக்கிறது... எப்படி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் முரளிக்கு எழுதியதைத் தங்களுக்கும் நகலிடுகிறேன்...
   ஆமா வலைச்சித்தரே.. டாட்.இன் ஆயிருச்சு.. பக்க வடிவமைப்பில் வண்ணத்தை மாற்றியதுதான் சிக்கலோ? மீண்டும் காம்.மாற்றி, தமிழ்மணத்தையும் வச்சித்தாங்க சாமி.

   நீக்கு
 9. வாசிப்பு என்னை நெறிப்படுத்தியதை நான் உணர்கின்றேன். எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எங்களது இல்ல நூலகத்தைக் காண்பித்து அவர்களும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். வாசிப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா.. நூறு விழுக்காடு சரியாகச் சொன்னீர்கள். விழாவில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன். அருகிலுள்ள மாவட்டங்களைச் சார்ந்த நம் வலையுலக நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவேன். வருக, வருக!

   நீக்கு
 10. ஐயா சென்னையில் இருப்பதால் என்னால் உடனே வந்து கலந்து கொள்ள முடியுவில்லை. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் மறக்காமல் பதிவிடுங்கள். பொருளாதார ரீதியாக வெற்றி பெற என்னால் முடிந்தவைகளைச்செய்ய தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் பிரபல நிறுவனங்களிடமிருந்து விளம்பர ஒத்துழைப்பை பெற்றுத்தர முயற்சிக்கிறேன். நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த புத்தக வாசிப்புதான் என்னை வெற்றி பெற வைத்திருக்கிறது. இது புதுக்கோட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் நடக்க வேண்டும் . நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உனது இதயப் பூர்வமான அஞ்சல்கண்டு ரொம்ப மகிழ்ச்சி வரது! இன்றே நீ வந்திருந்தால் மகிழ்ச்சி இன்னும் கூடுதலாகி இருக்கும். பரவாயிலலை. இன்று மாலை முடிவுகளை ஒட்டி நாளை உன்னுடன் பேசுவேன். இது நம்ம விழா..நம்ம புதுகை மண்ணிற்கு நாம் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்.. இணைந்துசெய்வோம் இயன்றதெல்லாமே செய்வோம் வா!

   நீக்கு
 11. அய்யா,
  வணக்கம். “ எண்ணிய எண்ணியாங்கெய்தும் திண்மை கனவுகளை மெய்படுத்தும் என்பது“ தங்களிடையே நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
  இன்னுமொன்று, எடுத்த காரியத்தைச் செயல்படுத்துதற்குத் தங்களின்
  மெய்வருத்தம் பாரா எக்கணமும் அதுவே சிந்தை செய்து ஒருங்கிணைக்கும் மனப்பாங்கு....!
  புதுகையின் புத்தகத்திருவிழா புதிய சாளரங்களைத் திறக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
  தமிழ் மணம்....???
  அடிக்கடிக் காணாமல் போய்விடுகிறதே????
  நன்றி

  பதிலளிநீக்கு
 12. புத்தகவிழா..ஆஹா...விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு