“வீதி-50” பொன்விழாவில் சிறு மாற்றம்…


புதுக்கோட்டை வீதி கலைஇலக்கியக் களத்தின் 50ஆவது விழா -பொன்விழா- ஏற்பாடாகியுள்ளது.
வரும் 29-4-2018 ஞாயிறு காலை 9.30 மணி
புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில்

 நடைபெறவுள்ளது.
வீதிக்கு விதையூன்றிய தமிழறிஞர் 
  முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்  
தலைமை தாங்குகிறார்கள். 
வீதி-50ஐ ஒட்டி, வீதி நண்பர்கள் 
மற்றும் நண்பர்களின் நண்பர்கள் 50பேர் 
உடல்தானம், கண்தானம் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களின் ஒப்புதல் படிவத்தைப் பெற்று, வாழ்த்துரையும் வழங்குகிறார்கள்.
(அந்தப் பட்டியலை அடுத்த பதிவில் வெளியிடுவேன்)
 

“வீதி-50” விழா அழைப்பு
---------------------------------------------------
அண்டை மாவட்ட
அன்பு நண்பர்கள்
அவசியம் வருக!
“உண்மைத் தமிழனாயிருந்தால்” என்று சிலர் மிரட்டுவது போலன்றி,
உங்கள் G+, சுட்டுரை, முகநூல் 
வலைப்பக்கப் பதிவுகளில்

பகர்ந்து உதவுங்கள்
என்று
அன்புடன் வேண்டுகிறேன்
தொடர்புக்கு
நா.முத்துநிலவன்
ஒருங்கிணைப்பாளர் –
வீதி – கலைஇலக்கியக் களம்
புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293

--------------------------------------------------------

நாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா?

-------------------------------------
ரயில் பின்னோக்கி ஓடினதுக்கே

7பேரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கீங்க!

உடல்தானம் படிவம் (BODY DONATION FORM)


உடல் தானம் செய்யும் படிவம் (BODY DONOR FORM)

புதுக்கோட்டை “வீதி-50” நிகழ்வையொட்டி, 50நண்பர்கள் உடல்தானம் மற்றும் கண்தானம் செய்வதென்று முடிவெடுத்து, படிவம் தேடி, அலைந்து, இறுதியாக திருச்சி தோழர் அரசெழிலன் அனுப்பினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அதே படிவம்தான் என்றும், நகலெடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.
இனி யாரும் உடல்தானப் படிவம் தேடி அலையக் கூடாது என்ற உறுதியில் இதோ யாரும் நகலெடுக்கும் விதமாக அதனை கூகுளாரிடம் ஒப்படைத்து, கேட்போருக்கெல்லாம் வழங்குக என்று கேட்டுக் கொள்கிறேன்…  
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்!”
இணைப்பில் படிவங்கள் மற்றும் விதிமுறைகள் –