பள்ளியில் உள்ளது கல்வி அல்ல... அது சமூகத்தில் இருக்கிறது. (சாரங் மலைப் பள்ளி )

பள்ளிக்கூடம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?!!
சென்னை அண்ணாநகரில் உள்ள ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்கம் (SBIOA) நடத்திவரும் பள்ளியில் இன்றுமுதல் ஐந்துநாள் கல்விக் கருத்தரங்கம்  
அதில்பே சக் குறிப்புகள் தேடியதில் ஆனந்த விகடன் இதழில் வந்திருந்த ஒரு கல்விக்கட்டுரை முகத்தில் அறைந்து சில உண்மைகளைச் சொன்னது ….
அதை நம் நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்பதால் இங்குப் பகிர்கிறேன் – நா.மு.

தேர்தல் முடிவுக்கு முன்னால், 'கண்டெய்னர்' முடிவை அறிவியுங்கள் மிஸ்டர் தேர்தல் ஆணையம்!


திருப்பூரில் பறிமுதலான கண்டெய்னர்
யாரிடமிருந்து யாருக்கு?
தேர்தல் ஆணையத்திடம் பத்துக் கேள்விகள்-
(1) மளிகைக் கடை நாடாரிடமும், வட்டிக்கடைச் செட்டியாரிடமும் சிலலட்ச ரூபாய்களைப் பறிமுதல் செய்ததாக அறிவித்த தேர்தல் ஆணையம், ஒரே இடத்தில் ரூ.570கோடி பறிமுதல் செய்து 5நாளாகியும் யாருடைய பணம் என்று அறிவிக்காமல் குழப்புவது ஏன்?

(2)சான்றுகள் சரியாக இருந்தால்ரைட்  போ’  என்று அங்கேயே அனுப்பியிருக்க வேண்டும், இல்லையென்றால் பறிமுதல் செய்த கையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு -வழக்குப் போட்டு நிறுத்தாமல்- கண்டெய்னர்களை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்குப்போட்டு நிறுத்தக் காரணம் என்ன?

(3)கோவை ஸ்டேட் வங்கிக் கிளையில் எடுத்த பணம் என்பது தெரிகிறது, அது யாரால் எடுக்கப் பட்டது என்பதை சொல்ல மறுத்தால், குற்றத்திற்கு உடந்தையான வங்கியும் குற்றவாளி தானே? (பணத்தை எடுத்தது யார் என்பதில் பொய் சொல்ல முடியாதே? உங்கள் பணம்தான் எனில் சான்றுகளில் ஏன் குழப்பம்?)

(4)நாங்கள் காரில் செல்லும்போது நிறுத்தும் தேர்தல் ஆணையம், அப்படியே “மூவிங் விடியோ கேமரா”வுடன் வந்து முதலில் வாகன எண்ணில் தொடங்கி, உள்ளே யார் இருப்பதுஎன்பதில் தொடர்ந்து, அப்படியே –கேமராவை ஆஃப் செய்யாமலே- “டிக்கி”யைத் திறக்கச் சொல்லிப் படம் பிடிக்கிறார்கள். அப்படிப் பிடித்த படத்தை உடன் வெளியிடாமல் “கைலியோடு வந்த போலீஸ்” என்றும், மூவரில் ஒருவர் தப்பிவிட்டார் என்றும் செய்தியைக் கசிய விட்டது ஏன்?


(5)கரூர் எஸ்.பி.வந்திதா ரூ.4கோடி பறிமுதல் செய்ததை அடிப்படையாக வைத்தே அரவாக்குறிச்சி தேர்தல் நிறுத்தப்பட்டது, அதுபோல திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் திருமிகு விஜயகுமார் உண்மையில் நேர்மையான அலுவலராக இருக்க வேண்டும். எனில் கோவை தேர்தல் நிறுத்தப்படாமல் நடத்தப்படக் காரணம் என்ன? 4ஐவிட 570பெரிதல்லவா?
 
4கோடி பறிமுதல் செய்த கரூர் காவல் கண்காணிப்பாளர் வந்திதா
(ஆனால் திருப்பூரில் 3கண்டெய்னர் பறிமுதல் செய்த விஜயகுமார் படம் எந்தப்பத்திரிகையிலும் வரவில்லையே ஏன்?)
(6) முதல் லாரியில் - 60, இரண்டாவது லாரியில் - 65, மூன்றாவது லாரியில் - 70. மூன்று லாரிகளிலும் மொத்தம், 195 மரப்பெட்டிகளில் பணம் இருந்தது. எங்கள் ஊர்களில் ஸ்டீல் பெட்டிகளில் தான் பணம் எடுத்துச்செல்லப்படும். அதுவே விதி என்கிறார்கள். இதுஎன்ன புதிய முறை என்றாவது ஸ்டேட் வங்கி அறிவிக்க என்ன தாமதம்? இது தவறெனில் தேர்தல் ஆணையம் தாமதிக்க என்ன காரணம்?

(7)ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக அடுக்கினால் ஒரு கண்டெய்னரில் சுமார் 1200கோடி வரை அடுக்கலாம் என்கிறார்களே? ஆகமொத்தம் பிடிபட்டது சுமார் 5,000கோடி என்னும் சந்தேகத்திற்கு விடைஎன்ன?

(8)தேர்தல் பிரச்சாரத்தின்போது திரு வைகோ அவர்கள், “கொடநாடு பங்களாவில் 9கண்டெய்னர் மூலமாகப் பல்லாயிரம் கோடிரூபாய் கடத்தப்பட இருக்கிறது“என்று பகிரங்கமாகச் சொன்னாரே? அவர் சொன்னது உண்மையாகி விட்டது என்று ஒப்புக்கொள்ளலாமா?

(9) சிலலட்ச ரூபாய்க்கே துப்பாக்கிப் போலீஸ் காவல் வருவதைப் பார்த்திருக்கிறோம், எனில் 570கோடிக்கு ஐந்தாறு பேராவது போய் இருக்க வேண்டுமே? அதுவும் காவலர் வண்டியில் அல்லாமல் தனி இன்னோவா போகக் காரணம் என்ன? அது யாருடைய இன்னோவா? அதன்உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதா என்ன?


(10)உடன் பிடிபட்டவை 3 இன்னோவா கார்கள் எனில் இரண்டுதான் லாரிகளோடு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த இன்னொன்னு எங்கே? (ஆக மொத்தம் தமிழ்நாட்டு மக்களுக்கு, கரகாட்டக்காரன் செந்தில் “அந்த இன்னொன்னு தான்”ணே இது” என்று சொன்னமாதிரி பதில் தரப்படுகிறது என்பது மட்டும் தெரிகிறது)

4கோடி பறிமுதல் செய்யப்பட்ட அரவாக்குறிச்சித் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது நியாயம் தான். எனில், சுமார் ஐயாயிரம் கோடி என்று சந்தேகத்திற்கு ஆளான பின் அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வைக்காமல் தேர்தல் நடத்தியிருக்கக் கூடாது. குறைந்த பட்சம் இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும்வரை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்பதே என் கருத்து.
---------------------------------------------------------------
நன்றி - படங்கள் இணையம்.

முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

- நா.முத்துநிலவன் -
(கடிதஇலக்கியம்)
என் அன்பு மகளுக்குஉன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும்உன் வகுப்பு  நண்பர்களும்உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.              
அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம் என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.

கலைஞர் மீண்டும் முதல்வரானால்…!!?!! (அவருக்கு மட்டும்தான் கற்பனை வருமா?)


(1)  தமிழ்நாடு வடநாடு, தென்னாடு என்று பிரிக்கப்படும், மீண்டும் இவை ஒன்று சேரக் கூடிய வாய்ப்பு இல்லை என்று இப்போது சொல்ல முடியாது. மதுவிலக்கு-விலக்கு போல வரும்.
(2)  கொடநாடு தமிழ்நாட்டிலிருந்து அகற்றப்பட்டு வடநாடு ஆகும்.
(3)  தமிழர்களே! தமிழர்களே! என்னும் தொடர் தமிழ்த்தாய் வாழ்த்தோடு, சேர்க்கப்படும், அனைவரும் கரகரவென பாராமல் மனப்பாடமாகச் சொல்லவேண்டும். 
(4)  5ஜி ஒப்பந்தம் போட ஏர்டெல், மாறன் வீட்டுக்குத்தான் வரவேண்டு மென்பதில்லை, ஊட்டியிலும் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.
(5)  தமிழ்வழிக்கல்வியின் பெயர் கனிமொழிக்கல்வி என்று மாற்றப்பட்டு, ராகுல்ஜி வந்து இந்தியில் அறிவிப்பார்..
(6)  தமிழ் வெளிநாட்டில் வளர்க்கப்படும். உள்நாட்டில் ஆங்கிலமும் பேர(ன்)நாடுகளில் இந்தியும் “நான் இருக்கும்வரை” இருக்கும்.
(7)  அதிமுகவிலிருந்து தாய்க்கழகம் திரும்பிய நற்றமிழ் நங்கை நமீதா தலைமையில் 1,76,000 பேருக்கு வரிசையாக கலைமா மணி பட்டம் மரியாதையாக வீசப்படும். 
(8) ஆறுமுறை முதல்வரான கலைஞரின் ஆற்றலை போற்றும் வகை, ஆறு என்னும் எண்ணை சமூக வளைத்தளங்களில் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சுக்கு நீதி 6பாக நூல் 600ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 600ரூபாய்க்கே 6,66,666பேர்க்கு மட்டும் தரப்படும். ஆறுஆறு சரியா வரணும். அமாவாசை அன்று விழா நடக்கும், திரையுலகம் நடத்தும்.
(9)வாக்காளர்க்கு பணம் கொடுப்பது சட்டபூர்வமாக்கப்படும். ஆனால், பெற்றுக் கொண்டதும்  கழகநிதி தர வேண்டும்.
(10) அறிவாலய மாடியில் கலைஞராலயம் அடிக்கல் நாட்டப்படும்.
(11) இந்தப் பக்கம் மோடிஜி, அந்தப்பக்கம் சோனியாஜி நிற்கணும்.
(12) மஞ்சள் துண்டு மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.
(13) அனைத்து அம்மா வழக்குகளும் பட்டிமன்றத்தில் மட்டுமே வாதிடப்படும். திண்டுக்கல் லியோனியிடம் வாதாடித் தோற்ற முன்னாள் நீதிபதி குமாரசாமி, கழகத்தில் இணைந்து எந்நாளும் நீதிபதியான லியோனியின் தலைமையில், கழகப் பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்.
(14) உடன்பிறப்பே கடிதத்தில் அரசுஆணை பார்த்தும் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பயிற்சி முடிக்காத ஆசிரியர்க்கு இமான் அண்ணாச்சி பயிற்சியளிப்பார். சன் டிவி இதை ஒளிபரப்பும்.
(15)  கவர்னர் அன்பழகன், முதல்வர் கலைஞர் முன்னிலையில்,  மக்களின் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் வாழ்த்தும் விழாவில், துணை முதல்வர்கள் கனிமொழி, அருள்நிதி, உதயநிதி ஆகியோர் இட-ஒதுக்கீடு- வாக்குவாதத்தில், அழகிரி சத்தம் வெளியில் கேட்காமலிருக்க பொன்முடி தந்த சத்தத்தில் தயாநிதி தடுக்கிவிழ, கலாநிதி கடுப்பாக, ராசாத்தியம்மா சிரிக்க, தயாளு அம்மா தகிக்க, ஐந்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் மயக்கமானதை யாரும் கவனிக்கவில்லை.
------------------------------------------------------------- 
இதற்கு முந்திய பதிவு -
அம்மா மீண்டும் முதல்வரானால்...
பார்க்காதவர்கள் பார்க்க 

அம்மா மீண்டும் முதல்வரானால்……..…!!!!!!!!! (சும்மா ஒரு கற்பனைதான்!)

(1)  தமிழ்நாடு அம்மா நாடு என்று பெயர்மாற்றம் பெறும்.
(2)  தமிழர் நெற்றிகளில் அம்மா ஸ்டிக்கர் இலவசமாக ஒட்டப்படும்!
(3)  அனைவருக்கும் வேலைவாய்ப்பு - ஸ்டிக்கர் ஒட்டும் துறையில்
(4)  அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்படாத பொருள்கள் தடைசெய்யப்படும்.
(5)  அம்மா வீடுகளைச் சேர்ந்த அம்மா பள்ளிகளில் படிக்கும் அம்மா பிள்ளைகள் அனைவரும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அம்மா புத்தகங்களை அம்மா புத்தக மூட்டையில் வைத்து, அம்மா சைக்கிளில் ஏறி, அம்மா ரோட்டில் வருவதை அம்மா ஆசிரியர்கள் வரவேற்க, அம்மா வகுப்பில் அம்மா கணினியில் அம்மா தேர்வெழுத, அம்மா மதிப்பெண் சும்மா தரப்படும்.

மதுபான அரசியல்! காணொலிப் பதிவு!

நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும், தி.மு.க. முதல் கையெழுத்திலேயே மது ஒழிக்கப்படும் என்றும் தம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே பலமுறை மதுவை ஒழித்தவர் கலைஞர் என்பது அனைவர்க்கும் தெரிந்தது என்பதால் அதை யாரும் நம்பவில்லை.
அ.தி.மு.க.முதன்முறையாகச் சொல்கிறது… 
ஆனால் முடியுமா?
முடியாது என்பதே என் கருத்து.

மதுபான வளர்ச்சியில் ஆளும் வர்க்கங்களுக்கு இரண்டு நன்மை!
1.மதுவால் மூவழியில் தமக்கும் கட்சிக்கும் ஆட்சிக்கும் வருமானம்.
2.போதையால் “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இதுவென அறியாத நிலைமையில் கிடப்பார்கள்” நேரடி மோதல் இல்லை!

இந்த காணொளித் தொகுப்பைப் பாருங்கள் –

நன்றி – சத்யம் தொலைக்காட்சி
படங்களுக்கு நன்றி – நண்பர் புதுவை ராம்ஜி

இதனால், மதுவை ஒழிக்கவே முடியாது என்பதில்லை! முதன்முதலாக 1937இல் மதுவிலக்கு கொண்டுவரப்பட்ட மாநிலம் தமிழகம்தான்!

இப்போதும் பீகாரில் நிதிஷ்குமார் ஒழித்துவிட்டார். கேரளாவில் முயற்சி தொடங்கியிருப்பதைப் பார்க்கும்போதே வெற்றிதோன்றுகிறது! இதற்கு அரசியல் உறுதியே காரணமாக இருக்க முடியும்.

எனது 61ஆம் பிறந்த நாளும், சகாயம் அய்யாவின் பெயரில் தவறாக வந்த முகநூல் பகிர்வும்!

11-05-2016 இன்று 
எனக்கு 
60வயது முடிந்து 
61தொடங்குகிறது!
அதாவது நான் 
மூத்த குடிமகன் 
ஆகிவிட்டேனாம்!
(இனிமேல் தொடர் வண்டியில் 
முக்கா டிக்கெட்!,  வங்கியில் சில சலுகைகள்!! வேறென்ன?)
எனக்கு 60வயது முடிவதால் 
வேறென்ன நடந்துவிடப்போகிறது!

அவன் போய்விட்டான், அவன் கவிதையும் குடும்பமும் வாழட்டும்!எங்கிருந்தோ வந்தான்,
இரண்டாண்டுக்கும் குறைவாகவே எங்களோடு இருந்தான்,
இருந்தவரை வீதி கலை-இலக்கியக் களத்தோடும்
புதுகை கணினித் தமிழ்ச்சங்கத்தோடும்,
முழுநிலா முற்றத்தோடும் இரண்டறக் கலந்திருந்தான்..
ஒரு முழுநிலா நாளில் சொல்லாமலே போய்விட்டான்!

இது “சிக்ஸர்” கூட்டணி மச்சீ!! -புதிய (18+)வாக்காளர்களுக்கு ஓர் அழைப்பு


ஹாய் மச்சி! அருமைத் தோழி! அன்பான என் பங்கு!
ஹலோ ப்ரோ! நீங்க தானே இந்தத் தேர்தல் கிங்கு?!!!

முதன் முதலாக ஓட்டுப் போடும் பங்கு பங்கு! – நல்ல
முடிவெடுங்க! நீங்கதானே இந்தத் தேர்தல் கிங்கு!
முகநூலில் ‘வாட்சப்’பில் ‘ப்ரோ’வுக்கெல்லாம் சொல்லு!
முந்தும் ‘சிக்ஸர்’ கூட்டணிக்கே ‘லைக்’ போட்டு அள்ளு! -இப்ப
முந்தும் ‘சிக்ஸர்’ கூட்டணிக்கே ‘லைக்’ போட்டு அள்ளு!!

பெத்தவங்க உசுரு உன்னை நினைச்சு உருகுது!  - ஆனா
மத்தவங்க பார்வையில் ஏன்உன்  நிலைமை கருகுது?
அம்பது வருசம் ‘அவுங்க இவுங்க’ அடிச்ச கூத்துல – உன்
ஆசைக் கனவும் ஊசலாடுது ஆடிக் காத்துல! -உன்
ஆசைக் கனவும் ஊசலாடுது ஆடிக் காத்துல!  -- (ஹாய் மச்சி!...

சிகரம் ஏறத் திறமையிருந்தும் சிரமத்துல ஏன் கிடக்குறே? -அந்தச்
சந்திரனேஉன் கைப்பிடிதான்!  ‘சைக்கிள’ ஏன் மிதிக்கிறே?
சில்லறையா நினைச்சு உன்னை ஏலம் போட்டது யாரு? - இந்தத்
தேர்தலில் நீ முடிவெடுத்தா எல்லாம் மாறும் பாரு! -மச்சீ
தேர்தலில் நீ முடிவெடுத்தா எல்லாம் மாறும் பாரு! --- (ஹாய் மச்சி!...

எங்க பாரு லஞ்சம் ஊழல்! மோசடி! கொள்ளை!! - அட
இங்கும் அங்கும் துதிபாடும் அரசியலால் தொல்லை
இலவசம் சுய விளம்பரங்கள் எல்லாம் அவர் பையில் - இதோ
வாய்ப்புவருது! மக்கள்நல அரசே உந்தன் கையில்! - ஒரு
வாய்ப்புவருது! மக்கள்நல அரசே உந்தன் கையில்!! - நல்ல
வாய்ப்புவருது! மக்கள்நல அரசே உந்தன் கையில்!!!

பாடல் – நா.முத்து நிலவன்,
இசைக்கோவை – புதுகை கிளாஸிக் புவனர்,
பாடியவர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
ஆக்கத்தில் உதவி - கவிஞர்கள் மகா, மீரா.செல்வக்குமார்.
இதன் இசைவடிவைக் கேட்க விரும்புவோர்
+91 94431 93293 எனும் காண்செவி எண்ணில் வருக
----------------------------------------------
இதுசிக்ஸர்கூட்டணி மச்சீ!!
 -புதிய (18+)வாக்காளர்களுக்கு ஓர் அழைப்பு 

நான் பேசிய பட்டிமன்றக் காணொளிப் பதிவு


எனது முந்திய பதிவில் தெரிவித்திருந்தது போல,
மே-1ஆம் தேதி நான் பேசிய பட்டிமன்றக் காணொளிப் பதிவு கிடைத்துள்ளது.

- பார்க்க -
 
  கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றம்

சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை
மனித உழைப்பா?            அறிவியல் வளர்ச்சியா?
- நடுவர் - 
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் .லியோனி
மனித உழைப்பே!                             அறிவியல் வளர்ச்சியே
சென்னை விஜயகுமார்                 திண்டுக்கல் சிவக்குமார்
காரைக்குடி சர்மீளி                        தேனி தமிழ்ச்செல்வி
புதுகை நா.முத்துநிலவன்          கோவை கவிஞர் தனபால்
     (அணித்தலைவர்)                           (அணித்தலைவர்)

(நிகழ்ச்சியில் பேசும் வரிசையில் பெயர் உள்ளது)
-------------------------------------- 
விளம்பர இடைவேளை இன்றி மொத்தம் 1மணி,11நிமிடம்
(எனது பேச்சு 47முதல் 56ஆம் நிமிடம் வரை)
பார்த்துக் கருத்திடுக
திறந்த மனத்துடன் 
தங்கள் கருத்துகளுக்காகக் 
காத்திருக்கிறேன்

------------------------------------------------------------------------------

பெண்ணால் முடியும் என்று காட்டிய முண்ணாறு பெண்கள்!

குளுமை நகரமாக அறியப்படும் மூணாறு -இதனை கேரளாவில் முண்ணாறு என்றும் சொல்வதுண்டு! இந்தக் குளுமையான நகரில் இப்படியொரு சூடான போராட்டத்தை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, ‘ எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஒன்றுமறியாப் பெண்கள்எனக் கருதப்பட்ட அவர்கள் வீதிக்கு வருவார்கள் என்பதையும் பிடிவாதமாய்ப் போராடி வெற்றியும் பெறுவார்கள் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தொடர்ச்சியாக 9 நாட்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துவிட்டது நகரமே!

வைகறையின் ஜெய்குட்டி வாழட்டும் பல்லாண்டு!

கவிஞர் வைகறை நினைவஞ்சலி கூட்டம்

அவன் போய்விட்டான்...
அகாலத்தில் அவன் போய்விட்டான்!
யாரும் எதிர்பாராத நேரத்தில்,
35வயதிலேயே
அவன் போய்விட்டான்!

அவனது குழந்தையாக நாம் தவிக்கிறோம்!
குழந்தை ஜெய்குட்டியைப் போல!

நம் இணைந்த கைகள் அவனைக் காக்கும்!
வாருங்கள் நண்பர்களே!

கடந்த 26ஆவது வீதிக் கூட்டம் 
அவன் பொறுப்பில் நடந்தது,
வரும் 27ஆவது கூட்டம் அவனுக்காகவும்,
அவனது குடும்பத்திற்காகவுமே!

இதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது!

காலம் எனும் கொடியவன்,
அந்தக் கவிஞனின் குழந்தையை
அவனிடமிருந்து பறித்து,
நம்மிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்...

வாருங்கள் நண்பர்களே! 
செயல்பட வேண்டிய நேரமிது...

4.5.16 அன்று புதன்கிழமை மாலை 5.30 மணி 
ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரி 
[புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடி] 

 முக்கியமான நம் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்,கூடுதலான நண்பர்களின் வருகையை எதிர்பார்த்தும்... 
கடந்த சனிக்கிழமை நடக்க இருந்த கூட்டம்
04.05.2016 புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 நல்ல நோக்கத்திற்காக இம்மாற்றம்... 

கூட்டத்தில் கலந்து கொண்டு நமது கவிஞர் வைகறையின் நினைவுகளை நெஞ்சாரப் 
பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றோம்.

35வயதில் மறைந்ததால், பணிக்காலக்குறைவால் ஓய்வூதியமும் இல்லாத அவரது இளம்மனைவி, மற்றும் ஆயுள்காப்பீடு கூட இல்லாத நிலையில் வைகறையின் 5வயதுக் குழந்தைக்கு நாம் செய்யக்கூடிய உதவியை அதிகபட்சமாக நிர்ணயித்து, அதை நிறைவேற்றும் பணியில் வைகறை இணைந்து பணியாற்றிய 
புதுக்கோட்டையின் வீதி மற்றும் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் முழுமூச்சாகக் களம் இறங்கி உள்ளோம். கைகொடுங்கள் நண்பர்களே! 

இலக்கியம் வாழ வைக்கும் 
என்பதை உணர்த்தவேண்டிய 
அவசியம் வந்திருக்கிறது...

இதோ பதிவர் விழாவில் நம் வைகறை...

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் 
நடத்திய பதிவர் திருவிழாவில், 
வைகறையின்  
“நந்தலாலா” இணைய இதழை
“விக்கிப்பீடியா” திட்ட இயக்குநர் 
திரு இரவிசங்கர் அவர்கள் தொடங்கியபோது
அருகில் புதுக்கோட்டை நண்பர்களோடு,
பொள்ளாச்சி நண்பர்கள்
கவிஞர்கள் அம்சப்பிரியா, பூபாளன்


 திரு இரவிசங்கர் அவர்களுக்கு
நம் வைகறை நினைவுப்பரிசளிக்கிறார்...பதிவர்விழாவின் சிறப்பு விருந்தினர்
எழுத்தாளர் எஸ்.ரா.அவர்களுக்கு
நம் வைகறை நினைவுப் பரிசளிக்கிறார்..

கவிதையையே உயிராய் நேசித்த 
அந்தக் கவிஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி... 

“ஜெய்குட்டி” க்கு வைகறையை தர இயலாது
ஆனால் அவனுக்கு அவரளிக்க நினைத்த வாழ்க்கையைத் தர முயற்சி செய்வோம்.. 
கவிஞர் வைகறை
தன் உயிர்க்கவிதை
“ஜெய்க்குட்டி”யுடன்
 உங்களின் வார்த்தையோ, வரவோ சிறு துளிகூட 
அவனது வாழ்வில் வசந்தத்தைத் தரட்டும்..

 உதவிடும் கைகளை வரவேற்று 
அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொள்ள 
அன்புடன் அழைக்கின்றோம்