இது “சிக்ஸர்” கூட்டணி மச்சீ!! -புதிய (18+)வாக்காளர்களுக்கு ஓர் அழைப்பு


ஹாய் மச்சி! அருமைத் தோழி! அன்பான என் பங்கு!
ஹலோ ப்ரோ! நீங்க தானே இந்தத் தேர்தல் கிங்கு?!!!

முதன் முதலாக ஓட்டுப் போடும் பங்கு பங்கு! – நல்ல
முடிவெடுங்க! நீங்கதானே இந்தத் தேர்தல் கிங்கு!
முகநூலில் ‘வாட்சப்’பில் ‘ப்ரோ’வுக்கெல்லாம் சொல்லு!
முந்தும் ‘சிக்ஸர்’ கூட்டணிக்கே ‘லைக்’ போட்டு அள்ளு! -இப்ப
முந்தும் ‘சிக்ஸர்’ கூட்டணிக்கே ‘லைக்’ போட்டு அள்ளு!!

பெத்தவங்க உசுரு உன்னை நினைச்சு உருகுது!  - ஆனா
மத்தவங்க பார்வையில் ஏன்உன்  நிலைமை கருகுது?
அம்பது வருசம் ‘அவுங்க இவுங்க’ அடிச்ச கூத்துல – உன்
ஆசைக் கனவும் ஊசலாடுது ஆடிக் காத்துல! -உன்
ஆசைக் கனவும் ஊசலாடுது ஆடிக் காத்துல!  -- (ஹாய் மச்சி!...

சிகரம் ஏறத் திறமையிருந்தும் சிரமத்துல ஏன் கிடக்குறே? -அந்தச்
சந்திரனேஉன் கைப்பிடிதான்!  ‘சைக்கிள’ ஏன் மிதிக்கிறே?
சில்லறையா நினைச்சு உன்னை ஏலம் போட்டது யாரு? - இந்தத்
தேர்தலில் நீ முடிவெடுத்தா எல்லாம் மாறும் பாரு! -மச்சீ
தேர்தலில் நீ முடிவெடுத்தா எல்லாம் மாறும் பாரு! --- (ஹாய் மச்சி!...

எங்க பாரு லஞ்சம் ஊழல்! மோசடி! கொள்ளை!! - அட
இங்கும் அங்கும் துதிபாடும் அரசியலால் தொல்லை
இலவசம் சுய விளம்பரங்கள் எல்லாம் அவர் பையில் - இதோ
வாய்ப்புவருது! மக்கள்நல அரசே உந்தன் கையில்! - ஒரு
வாய்ப்புவருது! மக்கள்நல அரசே உந்தன் கையில்!! - நல்ல
வாய்ப்புவருது! மக்கள்நல அரசே உந்தன் கையில்!!!

பாடல் – நா.முத்து நிலவன்,
இசைக்கோவை – புதுகை கிளாஸிக் புவனர்,
பாடியவர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
ஆக்கத்தில் உதவி - கவிஞர்கள் மகா, மீரா.செல்வக்குமார்.
இதன் இசைவடிவைக் கேட்க விரும்புவோர்
+91 94431 93293 எனும் காண்செவி எண்ணில் வருக
----------------------------------------------
இதுசிக்ஸர்கூட்டணி மச்சீ!!
 -புதிய (18+)வாக்காளர்களுக்கு ஓர் அழைப்பு 

5 கருத்துகள்: