பள்ளிக்கூடம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?!! |
சென்னை
அண்ணாநகரில் உள்ள ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்கம் (SBIOA) நடத்திவரும்
பள்ளியில் இன்றுமுதல் ஐந்துநாள் கல்விக் கருத்தரங்கம்
அதில்பே சக் குறிப்புகள் தேடியதில் ஆனந்த விகடன் இதழில் வந்திருந்த ஒரு கல்விக்கட்டுரை முகத்தில் அறைந்து சில உண்மைகளைச் சொன்னது ….
அதை நம்
நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்பதால் இங்குப் பகிர்கிறேன் – நா.மு.
பள்ளிக்கே சென்றதில்லை. ஆனால் அவர் நான்கு மொழிகள் சரளமாக பேசுவார், புகைப்படம் எடுப்பார், பல நிறுவனங்களுக்கு இணையதள பக்கங்களை வடிவமைத்து தருகிறார். அது மட்டுமல்லாமல், இந்த கல்விமுறை, பாடத்திட்டம் மீது நம்பிக்கை இல்லாமல், தன் குழந்தைகளையும் அவர் பள்ளிக்கு அனுப்புவதில்லை. கெளதம் எனக்கு இவ்வாறாகதான் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். இந்த காரணங்களே அவரை சந்திக்க தூண்டுவதற்கு போதுமானதாக காராணங்களாக இருந்தன. ஆனால், எதிர்பாராத கோடை மழையின் போது, ஒரு மலை அடிவாரத்தில், பாலகாட்டில் உள்ள கொங்காட்டில் அவரை சந்தித்த பிறகுதான் தெரிந்தது, இவை மட்டும் அல்ல அவரும் அவர் குடும்பமும் என்று.
ஆம். கெளதம் சாரங்கும் அவர் குடும்பமும் கலை, சூழலியல், இயற்கை விவசாயம், மாற்றுக் கல்வி, பொருளாதாரம் என்று பல தளங்களில், கடந்த முப்பது வருடமாக மிக கடுமையாக, மன்னிக்கவும், நிச்சயம் கடுமையான என்ற சொல்லை அவர்கள் விரும்பமாட்டார்கள். மிக காதலோடு வேலை பார்க்கிறது.
இந்த கல்வி முறையால் எந்த பயனும் இல்லை :
இந்த கல்வி முறையால் எந்த பயனும் இல்லை :
கோபாலகிருஷ்ணன் - விஜயலட்சுமி தம்பதி கேரளாவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். விவசாயி தன் பிள்ளைகளும் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்பமாட்டான் என்பதற்கு, இவர்கள் பெற்றோரும் விதிவிலக்கல்ல. இருவரும் ஆசிரியர் பணியில், 1979 ம்
ஆண்டு சேருகிறார்கள். வயநாட்டில் ஒரு பள்ளியில் வேலை. பழங்குடிகள் அதிகம் உள்ள பகுதியில் அந்த பள்ளி இயங்குகிறது. இவர்கள் பள்ளியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே, அந்த பள்ளியில் எந்த ஆசிரியரும் வேலை பார்ப்பதில்லை. ஏன்... பல ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்பதை பார்க்கிறார்கள். பிற ஆசிரியர்களும், இவர்களிடம்... “இந்த பசங்களுக்கு பாடம் கற்பிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை... வந்தோமா சம்பளத்தை வாங்கினோமான்னு இருங்க... உங்களை நீங்களே கஷ்டப்படுத்திகாதீங்க...” என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால், விவசாய பின்னணியில் உழைத்து வாழ்ந்த அவர்களுக்கு, உழைக்காமல் சம்பளம் வாங்குவதில் உடன்பாடில்லை. சில முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால், அது எந்த பயனையும் தரவில்லை. பயன் தராவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு உள்ளூரில் பல எதிரிகளை உண்டாக்குகிறது.
கோபாலகிருஷ்ணன், “அப்போது அந்தப் பகுதி முழுவதும் மர மாஃபியாக்கள் கையில் இருந்தது. அந்த எளிய பழங்குடி மக்களுக்கும் அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. நாங்கள் மாணவர்களுக்கு கல்வி புகட்ட முயற்சிகள் எடுப்பதை அந்த மாஃபியா கும்பல் விரும்பவில்லை. எங்களுக்கு எதிராக பல வதந்திகளை பரப்பியது...” என்கிறார்.
அவர் மேலும், “அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் உணர்ந்தோம். கல்வி புகட்டுவதில் மட்டும் சிக்கல் இல்லை. அடிப்படையாக இந்த பாடத்திட்டதிலேயே பிரச்னைகள் இருக்கிறது என்று. ஆம், இந்த கல்வி மட்டும் ஒழுக்கத்தை, நியாயத்தை கற்பித்திருந்தால், நன்கு படித்த எங்கள் சக ஆசிரியர்கள் எங்களிடம், 'நீங்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குங்கள்' என்று சொல்லி இருக்கமாட்டார்கள் அல்லவா...? ஆக அடிப்படையாக கல்வியிலேயே ஏதோ சிக்கல் இருக்கிறது. இது அறத்தை போதிக்கவில்லை என்பதை உணர்ந்தோம்".
கோபாலகிருஷ்ணன், “அப்போது அந்தப் பகுதி முழுவதும் மர மாஃபியாக்கள் கையில் இருந்தது. அந்த எளிய பழங்குடி மக்களுக்கும் அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. நாங்கள் மாணவர்களுக்கு கல்வி புகட்ட முயற்சிகள் எடுப்பதை அந்த மாஃபியா கும்பல் விரும்பவில்லை. எங்களுக்கு எதிராக பல வதந்திகளை பரப்பியது...” என்கிறார்.
அவர் மேலும், “அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் உணர்ந்தோம். கல்வி புகட்டுவதில் மட்டும் சிக்கல் இல்லை. அடிப்படையாக இந்த பாடத்திட்டதிலேயே பிரச்னைகள் இருக்கிறது என்று. ஆம், இந்த கல்வி மட்டும் ஒழுக்கத்தை, நியாயத்தை கற்பித்திருந்தால், நன்கு படித்த எங்கள் சக ஆசிரியர்கள் எங்களிடம், 'நீங்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குங்கள்' என்று சொல்லி இருக்கமாட்டார்கள் அல்லவா...? ஆக அடிப்படையாக கல்வியிலேயே ஏதோ சிக்கல் இருக்கிறது. இது அறத்தை போதிக்கவில்லை என்பதை உணர்ந்தோம்".
இப்போது விஜயலட்சுமியும் உரையாடலில் இணைந்து கொள்கிறார். “உண்மையான
கல்வி என்பது சுதந்திரத்தை போதிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் இந்த கல்வி, நிறுவனங்களுக்கான அடிமைகளைதான் உற்பத்தி செய்கிறது என்பதை உணர்ந்தோம். அதை கண் கூடாக பார்க்கவும் செய்தோம். அடிமை இந்தியாவில் அடிமைகளுக்கு எஜமானர்களால், முன்மொழியப்பட்ட ஒரு கல்வி வேறு எப்படி இருக்கும்...? இதை மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பி இருந்து கொண்டே போராடி பார்த்தோம்... ஆனால், எங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை. குறைந்தபட்சம், இந்த கேடு கெட்ட கல்வியை எங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க கூடாது என்று முடிவு செய்தோம். எங்களையும் இந்த கல்வி முறையிலிருந்து விடுவித்துக் கொண்டோம். வேலையை ராஜினாமா செய்தோம் ”
தொடர்ந்து பேசிய கோபாலகிருஷ்ணன், “இந்த கல்வி முறை நுகர்வை கற்பிக்கிறது. நுகர்வில் மட்டும் சந்தோஷம் அடையுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறது. ஏனெனில், இது நிறுவனத்தின் கைக்கூலியால் (East India Company) வடிவமைக்கப்பட்ட கல்வி முறை. இதை மாற்றாமல் உண்மையில் விடுதலை இல்லை என்பதை உணர்ந்து, அட்டப்பாடியில் 'சாரங்' என்ற மாற்றுப் பள்ளியை துவங்கினோம். இந்த முயற்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, எங்கள் மகன் கெளதம் வளர துவங்கிவிட்டான். அவனும் அங்குதான் படித்தான். எங்களது பாடத்திட்டங்கள், போதிக்கும் முறை அனைத்தும் முற்றாக வேறாக இருந்தது. உள்ளூர் பிரச்னைகள், சூழலியல் சார்ந்த விஷயங்கள், விவசாயம், ஒவியம், நாடகம் என கற்பித்தோம்.
முதலில் உள்ளூர் மக்களுக்கு எங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் மனசித்திரத்தில் கல்வி என்பது வேறாக இருந்தது. எங்களின் பாடத்திட்டம், கற்பிக்கும் முறையை துவக்கத்தில் அவர்கள் சந்தேகப்பட்டாலும், பின்னர் குழந்தைகளிடம் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் எங்களை நம்ப துவங்கினர். உண்மையில்
அது பள்ளியாகவே இல்லை, ஒரு குடும்பம் போல்தான் செயல்பட்டோம். அது மட்டுமல்லாமல், அந்த மலையில் தண்ணீர் சேமிப்புக்காக சில தடுப்பணைகளயும் கட்டினோம். ஆனால், பொருளாதார சிக்கலால் மூன்றாண்டுகளுக்கு மேல் எங்களால் அந்த பள்ளியை நடத்த இயலவில்லை. இது மட்டும் அல்லாமல், அந்த மலையில் இருந்த பழங்குடி பிள்ளைகள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு விற்கப்பட்டார்கள். எங்களால் அதை தடுக்கவும் முடியவில்லை." என்றார்.
கெளதம் என்னும் காட்டுமரம்:
அவர்கள் பள்ளி செயல்படாமல் போனாலும், அவர்கள் முன்பு எடுத்த முடிவில் மிக தெளிவாக இருக்கிறார்கள். ஆம் கெளதமை எந்த பள்ளிக்கும் அவர்கள் அனுப்பவில்லை. கெளதமை சுதந்திரமாக சிந்திக்க விடுகிறார்கள். அவனுக்கு பிடித்ததை படிக்க அனுமதிக்கிறார்கள். கெளதம் தற்காப்பு கலை பயில்கிறார், ஓவியம், புகைப்பட கலை, வாகனம் ஓட்டுதல், இணைய வடிவமைப்பு, கட்டட கலை என தனக்கு பிடித்ததை பயில்கிறார். அதை தாண்டி மாற்று கல்வி தளத்தில் மிக ஆர்வமாக வேலை
பார்க்கிறார். மாற்று பள்ளியாக இருந்த அவர்களின் கனவு, இப்போது கிராமிய பல்கலைக் கழகமாக வளர்ந்து இருக்கிறது. இதை தாண்டி, கெளதமும் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
கெளதமுடனான உரையாடலில் இருந்து....
நீங்கள் முன்வைக்கும் கல்விமுறையை குருகுல கல்வி முறை என்று சொல்லலாமா...?
நீங்கள் முன்வைக்கும் கல்விமுறையை குருகுல கல்வி முறை என்று சொல்லலாமா...?
இல்லை. அப்படி சொல்லாதீர்கள். குருகுல கல்வி முறையில் உயர்ந்த பிரிவினர், பணக்காரர்கள் மட்டும் படித்தார்கள். ஆனால், நாங்கள் அனைவருக்குமான கல்வியை முன்வைக்கிறோம். நாங்கள் கல்விக்கோ, பள்ளிகளுக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், இந்த கல்வி, பள்ளி முறை உங்களை சுதந்திரமாக சிந்திக்க விடாது என்கிறோம். இந்த கல்வி முறையை கொண்டு நம் சந்திக்கும் உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வை காண முடியாது. அதனால், நம் பாடத்திட்டத்தையும், கல்வி முறையும் உள்ளூர் மயமாக்க வேண்டும் என்கிறோம்.
இதை கொஞ்சம் விளக்க முடியுமா...?
இதை கொஞ்சம் விளக்க முடியுமா...?
நம் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று கொஞ்சம் பாருங்கள். தென் அமெரிக்க காடுகள், நெப்போலியன் படை எடுப்பு பற்றியெல்லாம் மிக விரிவாக இருக்கிறது. ஆனால், நம் மேற்கு தொடர்ச்சி மலை பற்றி, அதில் உள்ள அரிய தாவரங்கள், உயிரினங்கள் பற்றி எதுவும் இல்லை. நம் முன்னோர்கள் தண்ணீரை சேமிக்க பயன்படுத்திய முறைகள் பற்றி எதுவும் இல்லை. இது எப்படி நல்ல கல்வியாக இருக்க முடியும். ஒரு வேளை இதை எல்லாம் கற்பித்து இருந்தால், இப்போது மோசமான தண்ணீர் பிரச்னையை சந்தித்து இருக்கமாட்டோம். அது மட்டுமல்ல, கற்பிக்கும் முறையும் மிக மோசமானதாக இருக்கிறது.
இது மட்டும்தான் பிரச்னையா...?
இது மட்டும்தான் பிரச்னையா...?
இப்போதுள்ள கல்வி முறையில், பாடத்திட்டத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது உங்களின் இயல்பான சிந்தனைகளை சிறை வைப்பது. அதாவது உங்கள் இயல்பில், உங்களை
சிந்திக்க விடாமல் தடுப்பது. உங்களது முதலாளிகளுக்கு தேவையானவாறு உங்களை வடிவமைத்து, உங்கள் சுயத்தை அழிப்பது. இதையெல்லாம் தாண்டி, இந்த பாடத்திட்டத்தில் எந்த அறமும் இல்லை. அது ஒழுக்கத்தை சிறிதளவும் கற்று தரவில்லை.
நீங்கள் சொல்வது எதார்த்ததிற்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது... நாம் பண்டமாற்று சமூகத்தில் வாழவில்லை... இந்த அமைப்பில் வாழ பணம் தேவை. உங்கள் விஷயத்திலேயே உங்கள் கனவு பள்ளியை கட்டி முடிக்க பணம் இல்லாமல்தான் தடுமாறுகிறீர்கள். பணமே பிரதானமான ஒரு சமூகத்திற்கு ஏற்றவாறு தான் கல்வி இருக்கும். அதை எப்படி புறக்கணிக்க முடியும்...?
ஒத்துக் கொள்கிறேன். இந்த அமைப்பில் வாழ பணம் தேவைதான். அதனால்தான் அமைப்பையே மாற்ற வேண்டும் என்கிறேன். அதற்காக மாற்று கல்வியை முன்வைக்கிறேன். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால், நாங்கள் முன் வைப்பது உள்ளூருக்கு தேவையான கல்வி, நுகர்வை முன்மொழியாத கல்வி. உங்களை உங்கள் இயல்பில் சிந்திக்க வைக்க, உங்களுக்கு பிடித்தமானவற்றை கற்க உதவும் கல்வி, பணம் அதிகம் தேவைப்படாத கல்வி.
நீங்கள் சொல்வது எதார்த்ததிற்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது... நாம் பண்டமாற்று சமூகத்தில் வாழவில்லை... இந்த அமைப்பில் வாழ பணம் தேவை. உங்கள் விஷயத்திலேயே உங்கள் கனவு பள்ளியை கட்டி முடிக்க பணம் இல்லாமல்தான் தடுமாறுகிறீர்கள். பணமே பிரதானமான ஒரு சமூகத்திற்கு ஏற்றவாறு தான் கல்வி இருக்கும். அதை எப்படி புறக்கணிக்க முடியும்...?
ஒத்துக் கொள்கிறேன். இந்த அமைப்பில் வாழ பணம் தேவைதான். அதனால்தான் அமைப்பையே மாற்ற வேண்டும் என்கிறேன். அதற்காக மாற்று கல்வியை முன்வைக்கிறேன். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால், நாங்கள் முன் வைப்பது உள்ளூருக்கு தேவையான கல்வி, நுகர்வை முன்மொழியாத கல்வி. உங்களை உங்கள் இயல்பில் சிந்திக்க வைக்க, உங்களுக்கு பிடித்தமானவற்றை கற்க உதவும் கல்வி, பணம் அதிகம் தேவைப்படாத கல்வி.
ஆனால், நடைமுறையில் உள்ள கல்வி முறை உங்கள் பணத்தேவையை அதிகமாக்குகிறது. இந்த அமைப்பில் ஒரு குழந்தையை எல்.கே.ஜியில் சேர்க்க மூன்று லட்சம் ரூபாய் செலவழிக்கிறார்கள். பிறகு அந்த குழந்தைக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இதை நீங்கள் சரி என்கிறீர்களா...? மூன்று வயது குழந்தையின் முதுகில் இவ்வளவு சுமையை ஏற்றும் இந்த முறையை மாற்ற வேண்டாமா...?
இந்த மாற்றங்கள் வரும் வரை ‘ஹோம் ஸ்கூலிங்கே’ (Home Schooling) சிறந்தது என்கிறீர்கள். ஆனால், இது குழந்தை சமூகத்தில் கலப்பதை தடுக்கிறது அல்லவா...?
இப்போது மட்டும் குழந்தை சமூகத்தில் கலக்கிறது என்கிறீர்களா...? குழந்தை காலையில் எழுந்து கிளம்பி, பள்ளிக்கு
பள்ளி வாகனத்தில் செல்கிறது. புதிதாக எந்த அனுபவமும் இல்லாத அதே சக மாணவர்கள். பள்ளியிலும் புதிய சிந்தனைகளை தூண்டாத கல்வி முறை. மாணவர்களுடன் அதிகம் கலக்காத ஆசிரியர்கள். இதில் எங்கு சமூகத்தில் கலப்பது இருக்கிறது...? நாங்கள் ஹோம் ஸ்கூலிங்கில் சொல்வது, குழந்தைகளை பொது பேருந்தில் அழைத்து செல்லுங்கள் என்கிறோம். அங்கு அந்த குழந்தை எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கும்... எவ்வளவு விஷயங்களை கற்கும்...! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பள்ளியில், பாடத்திட்டதில் உள்ளது மட்டும் கல்வி அல்ல... அது சமூகத்தில் இருக்கிறது.
நீங்கள் கற்பித்த கல்வியை படித்த பிள்ளைகள்தான், பொருளாதார மந்த நிலையின்போது தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின்பும் ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்... கேரளாதான் இந்தியாவில் அதிகம் கற்ற மாநிலம் என்கிறார்கள். ஆனால், இங்குதான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகம் இருக்கிறது. மோசமான கற்பழிப்புகள் நடக்கிறது...
நீங்கள் கற்பித்த கல்வியை படித்த பிள்ளைகள்தான், பொருளாதார மந்த நிலையின்போது தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின்பும் ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்... கேரளாதான் இந்தியாவில் அதிகம் கற்ற மாநிலம் என்கிறார்கள். ஆனால், இங்குதான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகம் இருக்கிறது. மோசமான கற்பழிப்புகள் நடக்கிறது...
நடைமுறையில் இருக்கும் இந்த கல்வி முறைக்கும் இந்த பிரச்னைகளுக்கும் தொடர்பில்லை என்கிறீர்களா...? குழந்தைகளை அதன் போக்கில் விடுவது ஆபத்தானது இல்லையா...? அதை கடைசி வரை கற்காமல் போய்விட்டதென்றால்...?
அனைத்து குழந்தைகளின் டி.என்.ஏ விலியே தேடல் என்பது இருக்கிறது. எனக்கு
யாரும் இணையதள பக்கங்கள் வடிவமைப்பது, அதற்கு கோடிங் எழுதுவதை கண்டிப்பாக படித்தே தீர வேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்தவில்லை. எனக்கு அதில் விருப்பம் இருந்தது. அதை கற்றேன். அது போல் ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொன்றில் விருப்பம் இருக்கும். அதன்
இயல்பில் விட்டால், அதற்கு
விருப்பமானதைஅது கற்றே தீரும்.
உங்கள் மனைவி இதையெல்லாம் புரிந்து கொள்கிறாரா...?
அனு இதை புரிந்து கொள்வது மட்டுமல்ல... இது சார்ந்த பயிற்சி வகுப்பையும் அவளே ஒருங்கிணைக்கிறாள். நிச்சயம் அவளது பங்களிப்பு இல்லை என்றால் சில விஷயங்கள் சாத்தியமாகி இருக்காது.
உரையாடலின் முடிவில், கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து கொண்டார். “நாங்கள் கெளதமை பள்ளிக்கு அனுப்பாதபோது, எல்லாரும் எங்களுக்கு அறிவுரை கூறினார்கள். நாங்கள் ஏதோ தவறான முடிவை எடுத்துவிட்டதாக, குழந்தையின் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டதாக எங்களை குற்றம் சுமத்தினார்கள். ஆனால், அந்த நிலை இப்போது இல்லை. பல பெற்றோர்கள் நடைமுறையில் இருக்கும் கல்வியில் உள்ள பிரச்னைகளை புரிந்து கொள்ள துவங்கிவிட்டார்கள். மாற்றத்தை தேட துவங்கிவிட்டார்கள்.
உரையாடலின் முடிவில், கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து கொண்டார். “நாங்கள் கெளதமை பள்ளிக்கு அனுப்பாதபோது, எல்லாரும் எங்களுக்கு அறிவுரை கூறினார்கள். நாங்கள் ஏதோ தவறான முடிவை எடுத்துவிட்டதாக, குழந்தையின் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டதாக எங்களை குற்றம் சுமத்தினார்கள். ஆனால், அந்த நிலை இப்போது இல்லை. பல பெற்றோர்கள் நடைமுறையில் இருக்கும் கல்வியில் உள்ள பிரச்னைகளை புரிந்து கொள்ள துவங்கிவிட்டார்கள். மாற்றத்தை தேட துவங்கிவிட்டார்கள்.
சமீபத்தில் திருவனந்தபுரத்திலிருந்து 20 பெற்றோர்கள் எங்களை சந்திக்க வந்தார்கள். அவர்கள் எல்லாம் விளிம்பு நிலை மக்கள். அவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை பல ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பாமல் ஹோம் ஸ்கூலிங்கில்தான் பயிற்றுவிக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கனவு கண்ட மாற்றம், நிகழ துவங்கிவிட்டது... நிச்சயம், பெரிய அளவில் மாற்றம் வரும். எத்தனை நாள் மனிதர்கள் அழுத்தத்திலேயே வாழ முடியும்...?” என்றார்
ஆம். மாற்றம் வரத்தான் வேண்டும்...!
பெய்திருந்த மழையால் காற்றெங்கும் செம்மண் வாசனை பரவி இருந்தது. இரை தேட சென்ற பறவை தன் கூட்டிற்கு திரும்பியது. அழுத்தமான கைக்குலுக்களுடன், நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம்.
- மு. நியாஸ் அகமது
- மு. நியாஸ் அகமது
நாள்: 09/05/2016 - விகடன்கட்டுரை - இணைப்பிற்கு-
-----------------------------------------------
சென்னை அண்ணாநகர் SBIOA பள்ளியின் கடந்த ஆண்டுக் கல்விக் கருத்தரங்கின் காணொளி காண இங்குச் சொடுக்குக - http://valarumkavithai.blogspot.com/2015/06/3.html
இந்த ஆண்டு, சென்னை அண்ணாநகர் SBIOA பள்ளியில்...
30-05-2016 - 03-6-2016 ஐந்துநாள் புதிய கல்விக்கான கருத்தரங்கு.
மருத்துவர் கு.சிவராமன், பொருளியல் அறிஞர் வெ.பா.ஆத்ரேயா,
திரைக்கலைஞர் ரோகிணி, விஞ்ஞானி ராமானுஜம், ஊடகவியலர் சமஸ், ஆண்டாள் பிரியதர்ஷினி, அரசு அதிகாரிகள் வெ.இறையன்பு, ஷைலேந்திரபாபு, எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஞானி, பாரதி கிருஷ்ணகுமார்.அ.வெண்ணிலாவுடன் நானும் பங்கேற்கிறேன்.
---------------------------------------------
01-06-2016 அன்று
சென்னைப் புத்தகக் கண்காட்சியில்
சந்திப்போம்!
மாலை 4 மணிமுதல் 5மணிவரை
அன்னம்-அகரம் ஸ்டால் எண்:132-133
மாலை 6மணிமுதல் 7மணிவரை
“அகநி” ஸ்டால் எண்: 624
-----------------------------------------------------
பிற்பகல் 2மணி முதலே அங்குதான் சுற்றிக்கொண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரிவேன். முன்னதாகவே வரும் நண்பர்கள் தொடர்பு கொள்ள -94431 93293
பதிலளிநீக்குஆகச்சிறந்த பதிவு....உங்கள் எண்ணம் போலவே நிகழும் ஒரு பணியை வெளிச்சமிட்டிருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குபுத்தகக்கண்காட்சியில் உங்களோடு சுற்றவும் ஆசை...
ஆனாலும் என்ன ஆசையிருக்கு தாசில் பண்ண...கதைதான்..
முயற்சிக்கிறேன் அய்யா...உங்கள் கருத்தரங்கம் வெல்ல வாழ்த்தும் வணக்கங்களும்....
காலத்துக்கு ஏற்ற பதிவு ஐயா.
பதிலளிநீக்குஆனால், பொருளுக்காகவே வாழப் பழகிக் கொண்ட மக்களுக்குப் புரிவதும், புரியவைப்பதும் கொஞ்சம் கடினம்தான்.
அருமையான பகிர்வு ஐயா...!!
பதிலளிநீக்கு//அவளது பங்களிப்பு இல்லை என்றால் சில விஷயங்கள் சாத்தியமாகி இருக்காது...//
பதிலளிநீக்குகாயத்ரி மந்திரம்...?!!! (What's app - ல் உங்களின் கருத்துரை சரி தான் அய்யா...)
வணக்கம் ஐயா.நல்ல பயனுள்ள பதிவு ஐயா.கௌதம் அவர்கள் கூறுவது மிகையே.இன்றைய கல்வி முறை எங்களை சிந்திக்க விடுவதில்லை.மனப்பாடம்,தேர்ச்சி மட்டுமே விரும்புகிறது.எனது சக நண்பர்களே கல்வியில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலையிலே இருக்கிறார்கள்.நமது நாடு விடுதலைப் பெற்று கிட்டத்தட்ட 69 வருடங்களான போதும் அவர்கூறியபடி நாம் அனைவரும் கற்பது கிழக்கிந்திய கம்பெனி வடிவமைத்த கல்வி முறையை தான.அது மட்டுமா இல்லை நேற்றைய மற்றும் இறந்து போன பாடத்தை தான் கற்று வருகிறோம்.வரலாறு முக்கியம் தான்.ஆனால் இந்நிலை மாறாவிட்டால் மாணவ சமுதாயத்தில் மாற்றங்கள் வராது.அவர்கள் கல்வி என்றால் சுமை என்றும் பெற்றோர்கள் எனது பிள்ளைகள் பட்டம் பெற்றால் போதும் என்றும் கல்வி நிறுவனங்கள் இலாபம் ஈட்டினால் போதும் என்றும் நினைக்கின்றனர்.மாணவர்கள் படித்து முடித்து வேலைக்கான நேர்முகத் தேர்வில் நான் பாடம் தொடர்பில் அறிவில்லாமலும் பாடத்தை கடந்த அறிவும் இல்லாமல் அவர்கள் தோற்றுவிடுக்கின்றனர்.அப்போது மட்டும் இலாபம் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் பட்டதாரிகளிடம் திறமையை எதிர்ப் பார்க்கின்றனர்.எங்களுக்கு திறமை வளரும் காலத்தில் வளர விடாமல் தேவைப்படும் நேரத்தில் எதிர்ப்பார்த்தால் எப்படி..??
பதிலளிநீக்குநமது கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.எங்களை சிந்திக்கவும் செயலாற்றவும் விட வேண்டும்.மாணவர்களுக்கு பிடித்ததில் படிக்க வேண்டும்.மாற்றம் ஒன்றே மாறாது என்ற உண்மைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் வேண்டும் ஐயா.எனது கருத்து நீண்டு செல்வதால் முடிக்கிறேன் ஐயா.கல்வி குறித்த விழிப்புணர்வும் வேண்டும்.
நேரம் பயனுள்ளதாக அமைந்தது நன்றிகள் ஐயா.
அருமையான பதிவு..பகிர்வு. இது கிட்டத்தட்ட தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி முறை போல் இருக்கிறது இல்லையா ..மாற்றம் வர வேண்டும் ஆனால் இது போன்ற கல்வி முறையை வணிகம் சார்ந்த இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டுவிடுமா? கொஞ்சம் கடினம்தான்..
பதிலளிநீக்குகவைக்கு உதவாத கல்வி முறையில் மனனம் செய்து மதிப்பெண்கள் பெறும் நிலை மாறி, தான் வாழும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடும் சமூக வாழ்வியல் கல்வி முறை உருவானால் பலமாற்றங்கள் நிகழும் என்பது அப்பட்டமான உண்மை.
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வு ஐயா........
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. அதே சமயம் அதிகம் சிந்திக்கவைத்துவிட்ட பதிவு. நன்றி.
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா
பதிலளிநீக்குமாற்றம் வரத்தான் வேண்டும்
வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் பெற்று அந்த மதிப்பெண் அடிப்படையில் வேலை வாங்கி இயந்திர வாழ்வை அமைத்துக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டப்பழக்கும் இன்றைய கல்விமுறை குறித்த கௌதம் சாரங்கின் கருத்து முற்றிலும் சரியே.. குழந்தைகளுக்கு இயற்கை வாழ்வியல் பயிற்சி அளிப்பதை விட்டுவிட்டு இயந்திர வாழ்வியல் பயிற்சிதான் அளித்துக்கொண்டிருக்கிறோம். சிந்தனை தூண்டும் பகிர்வுக்கும் சிறப்பான மனிதர்களை அறிமுகப்படுத்தியமைக்கும் மிகவும் நன்றி அண்ணா.
பதிலளிநீக்குநல்லதொரு முன்னோடியாக இருக்கிறார்கள்! அருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பதிவு தங்களின் முயற்சி வெல்லட்டும்.
பதிலளிநீக்கு