வைகறையின் ஜெய்குட்டி வாழட்டும் பல்லாண்டு!

கவிஞர் வைகறை நினைவஞ்சலி கூட்டம்

அவன் போய்விட்டான்...
அகாலத்தில் அவன் போய்விட்டான்!
யாரும் எதிர்பாராத நேரத்தில்,
35வயதிலேயே
அவன் போய்விட்டான்!

அவனது குழந்தையாக நாம் தவிக்கிறோம்!
குழந்தை ஜெய்குட்டியைப் போல!

நம் இணைந்த கைகள் அவனைக் காக்கும்!
வாருங்கள் நண்பர்களே!

கடந்த 26ஆவது வீதிக் கூட்டம் 
அவன் பொறுப்பில் நடந்தது,
வரும் 27ஆவது கூட்டம் அவனுக்காகவும்,
அவனது குடும்பத்திற்காகவுமே!

இதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது!

காலம் எனும் கொடியவன்,
அந்தக் கவிஞனின் குழந்தையை
அவனிடமிருந்து பறித்து,
நம்மிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்...

வாருங்கள் நண்பர்களே! 
செயல்பட வேண்டிய நேரமிது...

4.5.16 அன்று புதன்கிழமை மாலை 5.30 மணி 
ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரி 
[புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடி] 

 முக்கியமான நம் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்,கூடுதலான நண்பர்களின் வருகையை எதிர்பார்த்தும்... 
கடந்த சனிக்கிழமை நடக்க இருந்த கூட்டம்
04.05.2016 புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 நல்ல நோக்கத்திற்காக இம்மாற்றம்... 

கூட்டத்தில் கலந்து கொண்டு நமது கவிஞர் வைகறையின் நினைவுகளை நெஞ்சாரப் 
பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றோம்.

35வயதில் மறைந்ததால், பணிக்காலக்குறைவால் ஓய்வூதியமும் இல்லாத அவரது இளம்மனைவி, மற்றும் ஆயுள்காப்பீடு கூட இல்லாத நிலையில் வைகறையின் 5வயதுக் குழந்தைக்கு நாம் செய்யக்கூடிய உதவியை அதிகபட்சமாக நிர்ணயித்து, அதை நிறைவேற்றும் பணியில் வைகறை இணைந்து பணியாற்றிய 
புதுக்கோட்டையின் வீதி மற்றும் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் முழுமூச்சாகக் களம் இறங்கி உள்ளோம். கைகொடுங்கள் நண்பர்களே! 

இலக்கியம் வாழ வைக்கும் 
என்பதை உணர்த்தவேண்டிய 
அவசியம் வந்திருக்கிறது...

இதோ பதிவர் விழாவில் நம் வைகறை...

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் 
நடத்திய பதிவர் திருவிழாவில், 
வைகறையின்  
“நந்தலாலா” இணைய இதழை
“விக்கிப்பீடியா” திட்ட இயக்குநர் 
திரு இரவிசங்கர் அவர்கள் தொடங்கியபோது
அருகில் புதுக்கோட்டை நண்பர்களோடு,
பொள்ளாச்சி நண்பர்கள்
கவிஞர்கள் அம்சப்பிரியா, பூபாளன்


 திரு இரவிசங்கர் அவர்களுக்கு
நம் வைகறை நினைவுப்பரிசளிக்கிறார்...



பதிவர்விழாவின் சிறப்பு விருந்தினர்
எழுத்தாளர் எஸ்.ரா.அவர்களுக்கு
நம் வைகறை நினைவுப் பரிசளிக்கிறார்..

கவிதையையே உயிராய் நேசித்த 
அந்தக் கவிஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி... 

“ஜெய்குட்டி” க்கு வைகறையை தர இயலாது
ஆனால் அவனுக்கு அவரளிக்க நினைத்த வாழ்க்கையைத் தர முயற்சி செய்வோம்.. 
கவிஞர் வைகறை
தன் உயிர்க்கவிதை
“ஜெய்க்குட்டி”யுடன்
 உங்களின் வார்த்தையோ, வரவோ சிறு துளிகூட 
அவனது வாழ்வில் வசந்தத்தைத் தரட்டும்..

 உதவிடும் கைகளை வரவேற்று 
அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொள்ள 
அன்புடன் அழைக்கின்றோம்

4 கருத்துகள்:

  1. மனம் கனக்க வைத்த பதிவு. மற்றவை நேரில்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனையோ பேரின் இதயத்தை கொள்ளை கொண்ட வைகறையை காலம் கொள்ளை கொண்டு போனதை தடுக்க முடியவில்லையே.

    பதிலளிநீக்கு
  3. சில நிகழ்வுகள் மனதை கலங்கடிப்பது எத்தனை நிஜம்!

    பதிலளிநீக்கு