(1)
தமிழ்நாடு வடநாடு, தென்னாடு என்று பிரிக்கப்படும்,
மீண்டும் இவை ஒன்று சேரக் கூடிய வாய்ப்பு இல்லை என்று இப்போது சொல்ல முடியாது. மதுவிலக்கு-விலக்கு போல வரும்.
(2)
கொடநாடு தமிழ்நாட்டிலிருந்து அகற்றப்பட்டு
வடநாடு ஆகும்.
(3)
தமிழர்களே! தமிழர்களே! என்னும் தொடர் தமிழ்த்தாய்
வாழ்த்தோடு, சேர்க்கப்படும், அனைவரும் கரகரவென பாராமல் மனப்பாடமாகச் சொல்லவேண்டும்.
(4)
5ஜி ஒப்பந்தம் போட ஏர்டெல், மாறன் வீட்டுக்குத்தான்
வரவேண்டு மென்பதில்லை, ஊட்டியிலும் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.
(5)
தமிழ்வழிக்கல்வியின் பெயர் கனிமொழிக்கல்வி
என்று மாற்றப்பட்டு, ராகுல்ஜி வந்து இந்தியில் அறிவிப்பார்..
(6)
தமிழ் வெளிநாட்டில் வளர்க்கப்படும். உள்நாட்டில்
ஆங்கிலமும் பேர(ன்)நாடுகளில் இந்தியும் “நான் இருக்கும்வரை” இருக்கும்.
(7)
அதிமுகவிலிருந்து தாய்க்கழகம் திரும்பிய
நற்றமிழ் நங்கை நமீதா தலைமையில் 1,76,000 பேருக்கு வரிசையாக கலைமா மணி பட்டம் மரியாதையாக
வீசப்படும்.
(8) ஆறுமுறை முதல்வரான கலைஞரின் ஆற்றலை போற்றும்
வகை, ஆறு என்னும் எண்ணை சமூக வளைத்தளங்களில் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சுக்கு
நீதி 6பாக நூல் 600ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 600ரூபாய்க்கே 6,66,666பேர்க்கு மட்டும்
தரப்படும். ஆறுஆறு சரியா வரணும். அமாவாசை அன்று விழா நடக்கும், திரையுலகம் நடத்தும்.
(9)வாக்காளர்க்கு பணம் கொடுப்பது சட்டபூர்வமாக்கப்படும்.
ஆனால், பெற்றுக் கொண்டதும் கழகநிதி தர வேண்டும்.
(10) அறிவாலய மாடியில் கலைஞராலயம் அடிக்கல் நாட்டப்படும்.
(11) இந்தப் பக்கம் மோடிஜி, அந்தப்பக்கம் சோனியாஜி நிற்கணும்.
(12) மஞ்சள் துண்டு மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.
(13) அனைத்து அம்மா வழக்குகளும் பட்டிமன்றத்தில் மட்டுமே வாதிடப்படும்.
திண்டுக்கல் லியோனியிடம் வாதாடித் தோற்ற முன்னாள் நீதிபதி குமாரசாமி, கழகத்தில் இணைந்து எந்நாளும் நீதிபதியான லியோனியின் தலைமையில், கழகப் பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்.
(14) உடன்பிறப்பே கடிதத்தில் அரசுஆணை
பார்த்தும் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பயிற்சி முடிக்காத ஆசிரியர்க்கு இமான் அண்ணாச்சி
பயிற்சியளிப்பார். சன் டிவி இதை ஒளிபரப்பும்.
(15) கவர்னர் அன்பழகன், முதல்வர் கலைஞர் முன்னிலையில், மக்களின் முதல்வர் ஸ்டாலின்
பிறந்தநாளில் வாழ்த்தும் விழாவில், துணை முதல்வர்கள் கனிமொழி, அருள்நிதி, உதயநிதி ஆகியோர் இட-ஒதுக்கீடு-
வாக்குவாதத்தில், அழகிரி சத்தம் வெளியில் கேட்காமலிருக்க பொன்முடி தந்த சத்தத்தில்
தயாநிதி தடுக்கிவிழ, கலாநிதி கடுப்பாக, ராசாத்தியம்மா சிரிக்க, தயாளு அம்மா தகிக்க, ஐந்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் மயக்கமானதை யாரும் கவனிக்கவில்லை.
-------------------------------------------------------------
இதற்கு முந்திய பதிவு -
அம்மா மீண்டும் முதல்வரானால்...
பார்க்காதவர்கள் பார்க்க
ஒரு குடும்பம்
பதிலளிநீக்குஒரே ஆட்சி........
கலக்கல் கற்பனை ஐயா! உண்மையாகவும் வாய்ப்பு உண்டு
பதிலளிநீக்குஅருமையான கற்பனை ஐயா
பதிலளிநீக்குசெம
பதிலளிநீக்குசெம கற்பனை. ரசித்தேன் ஐயா.
பதிலளிநீக்கு13 கலக்கல்..........
பதிலளிநீக்குஆஹா கற்பனை அருமை ஐயா.
பதிலளிநீக்குரசிக்க வைத்த கற்பனை! நற்றமிழ் நங்கை நமீதா! ரசித்துச் சிரித்தேன்.
பதிலளிநீக்குநல்ல வேடிக்கை.
பதிலளிநீக்குஅடுத்த பதிவு " விஜயகாந்த் முதல்வரானால்" எதிர்பார்க்கிறேன் அய்யா.
மிக அருமையான கற்பனை.உண்மையில் அப்படித்தான் நடந்தாலும் நடக்கும்.எதிர்பார்க்கக் கூடியதே.நன்றி தோழரே.
பதிலளிநீக்கு