"செம்மொழிப் பட்டிமன்றம்" காண நேரில் வருக!

வணக்கம்.

எத்தனையோ பட்டிமன்றம் 

பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்!

இப்படி ஒரு தலைப்பில்

யாரும் பேசிப் பார்த்தது உண்டா?

வாருங்கள்!

நம் அன்னைத் தமிழை

நம் இளைய தலைமுறைக்கு

அறிமுகம் செய்வோம்!

தமிழ் வளர்க!

----------------------------------------------------- 

புதுக்கோட்டை – புத்தகத் திருவிழா

டிசம்பர்-01, 2026,  செவ்வாய்க் கிழமை 

மாலை 7.00 மணி, நகர்மன்றம்

“செம்மொழிப் பட்டிமன்றம்”

தலைப்பு:

‘செம்மொழித் தமிழ்’ நூல்களின்

சிறப்புக்குக் காரணம்

அறவியலா?   பொருளியலா? 

அழகியலா?   களவியலா?

அறவியலே என:

 முனைவர் மு.பாலசுப்பிரமணியன் எம்.ஏ., பி.எச்டி.,எம்.எட்.,

(பேராசிரியர், ஸ்ரீபாரதி கலைக்கல்லூரி, கைக்குறிச்சி)

பொருளியலே என:

 புலவர் கும.திருப்பதி எம்.ஏ. ,எம்.எட்.,

(செயலர், திருக்குறள் பேரவை, புதுக்கோட்டை)

அழகியலே என

 கவிஞர் மு.கீதா எம்.ஏ., எம்.ஏ., எம்..ஃபில். , எம்.எட்.

ஒருங்கிணைப்பாளர் - வீதி கலைஇலக்கியக் களம்)

களவியலே என

 முனைவர் மகா.சுந்தர் எம்.ஏ, பி.எச்டி.,  எம்.எட்

(செயலர், புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம்)

நடுவராக :

 கவிஞர் நா.முத்துநிலவன் எம்.ஏ., பிஎட்.,

(மாநிலத் துணைத்தலைவர் - தமிழ்நாடு முற்போக்கு

எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுக்கோட்டை)



வாய்ப்பிருப்போர் நண்பர்களுடன் வருக!

------------------------------------

வாய்ப்பில்லாதோர்

புதுக்கோட்டை நண்பர்களுக்குப் பகிர்க!

----------------------------------------------  

பின் குறிப்பு:

அது என்ன செம்மொழிப் பட்டிமன்றம்?

நம்மொழியாம் தமிழ்மொழி

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக

அறிவிக்கக் காரணமான  அந்த 41நூல்கள்:

எட்டுத்தொகை -08,

பத்துப் பாட்டு -10

கீழ்க்கணக்கு -18

இவற்றுடன்

தொல்காப்பியம், சிலம்பு, மேகலை,

முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்

ஆக 

இந்த 41 பழந்தமிழ் நூல்களே,

தமிழின் செம்மொழி நூல்கள்!

இந்த நூல்களே நமது

உலகு புகழும்

தமிழ்ப் பண்பாட்டின் குருதிச் சான்றுகள்!

பழந்தமிழ்ச் பெருமைக்குரிய சொத்துகள்!

இவற்றைப் பற்றிய

அரிய செய்திகளை அறிந்து கொள்ள

நிகழ்ச்சிக்கு நேரில் வருக!

-----------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக